பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு இரண்டாம் ஆண்டு


முன்னுரை:
இயேசுவின வாழ்வு என்றுமே “உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் , ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்”  என்று கூறி நம்மைக் சிந்திக்க அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. தீய சக்திகளாகிய இருளாட்சியை, ஆதிக்கத்தை, அக்கிரமத்தை அழித்தொழித்து இறையாட்சியை நிலை நிறுத்தி செயலாக்கிட நம்மை அழைக்கிறார் நம் இறைமகன் இயேசு கிறிஸ்து. தீமையின் ஒட்டுமொத்த உருவமாயிருக்கின்ற சுயநலம், சுரண்டல், அடிமைத்தனம், சாதி, பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, அடக்கியாளும் அதிகாரம், பிளவுப்படுத்தும் எண்ணம், ஏழைப் பணக்காரன், போட்டி பொறாமை ஆகிய அனைத்தும் சிறிய பெரிய விதங்களில் நம்மையும், நமது குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஆட்டி அலைக்கழித்து வரும் இந்த தீய சக்திகளை எதிர்த்து வாழும்போது இறைவனுக்கு உகந்தவர்களாக, மகிமையானவர்களாக மாறுவோம். நாம் அத்தகைய மகிமையை அடைய இத்திருப்பலியிலம் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: இச 18:15-20
மனித மனம் அது ஒரு நிலம.  அங்கே விதைக்கப்படும் இறைவார்த்தைகள் அனைத்தும் தவறாது முளைக்கும.  அவ்வார்த்தையின்படி நடக்கிறவர்கள் சிறகடித்துப்பறப்பார்கள், அவ்விரைவார்த்தையின் படி நடவாதவர்கள் அனைவரையும் வேரறுப்பேனென்று கடவுள் இறைவாக்கினர் மோசேயிடம் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 1 கொரி 7:32-35
இல்லறம் என்பது இமயம் போன்றது. அதன் உச்சத்தை அடைய எண்ணற்ற தியாகங்களை செய்வதில் கணவனுக்கு மட்டும் என்று நின்று விடாமல் ஆண்டவரிடமும் பற்றுக்கொண்டு இருக்க வேண்டும் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:

  1. அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள,  குருக்கள,  கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சுதந்திரம், சமத்துவம,  சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நவீனம் என்னும் பெயரில் கலாச்சாரத்தையும,  பண்பாட்டையும் துளைத்து நிற்கும் இச்சமுதாயத்திற்காக மன்றாடுகிறோம். நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்துவாழவும், அவர்களில் உம் தரிசனத்தை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் குழந்தைகள் விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.