குடிலினில் பிறந்த இறை மகனை


குடிலினில் பிறந்த இறைமகனை
குழந்தையாக வந்தவனை (2)
விண்ணில் வாழ்பவர் புகழ்ந்து பாடுவார்
மண்ணில் வாழ்பவர் மகிழ்ந்து காணுவார் (2)

மன்னாதி மன்னரெல்லாம் எண்ணங்கள் கொண்டிருந்தார்
தம் வீட்டில் பிறப்பாரென்று (2)
மாளிகை தேவையில்லை மண்வீடு போதுமென்று
குடிலினில் பிறந்து வந்தார் (2)

விண்மீன் வழிசெல்ல முன் வந்த ஞானியர்கள்
குடில் தன்னை அடைந்தார்களே (2)
பொன் தூபம் வெள்ளைப்போளம் பரிசாகக் கொண்டுவந்து
பணிந்தங்கு வணங்கி நின்றார் (2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக