பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 12-02-2012


முன்னுரை:  

பணியாளர்கள் நாம்; பகவான்கள் அல்ல.
பாட்டாளிகள் நாம்; முதலானவர்கள் அல்ல.
நோயாளிகள் நாம்; நோயற்றவர்கள் அல்ல.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இன்று பொதுக்காலம் 6ஆம் ஞாயிரை பொருளுணர்ந்து இயேசுவின் தியாகப்பலியை நிறைவேற்றிடவும், நமது பங்கில் உள்ள நோளிகள் நலம் பெற்றிடவும் செபிக்க அழைப்பு விடுக்கின்றது. தீட்டுப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தொழுநோளிகளை நம் இறைமகன் இயேசுகிறிஸ்து மனித மாண்பேடும், மதிப்போடும் தொட்டுக் குணமளிக்கின்றார். மருத்துவன் நோயற்றவருக்கு அன்று நோய்யுற்றவருக்கே தேவையென்று கூறி இவ்வுலகிற்குவந்த நம் இறைமகன் இயேசுவின் இப்பணி வெறும் உடல்சார்ந்த நோய்களை போக்குவதோடு நின்றுவிடாமல் ஆன்ம, உள்ள சமூக நலன்களை கொடுக்கின்ற பணியாக செய்துவந்தார். அப்படிப்பட்ட நாம் இறைவனிடம் செல்லும்போது நாம் குணம்பெறுவது நிச்சயம் எனவே யாருகெல்லாம் மருத்துவ மற்றும் பிற உதவிகள் அதிகமாக தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உயிர் வாழும் வரை கிடைப்பதற்கு வேண்டிய அருளைத் இறைவன் தந்தருள வேண்டுமென்று இத்திருப்பலியில் செபிப்போம்.


முதல் வாசக முன்னுரை:  தொழுநோயால் பீடிக்கப்பட்ட மக்கள் யாருடைய உதவியும் இன்றி தனிமையில் விடப்பட்டனர். அதேப்போன்று பாவம் செய்து இறைவனைவிட்டு பிரிந்து செல்பவர்களும் அத்தகைய தனிமையின் கொடுமையினை உணர்வார்கள் என்று மறைமுகமாக கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
லேவியர் நூலிலிருந்து வாசகம் (லேவி. 13:1-2,45-46)

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: "ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்." எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  முதல்வாசகத்திற்கு பதில் அளிக்கின்றவகையில் இன்றைய இரண்டாம் வாசகம் அமைகின்றது. நாம் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் இறைவனுக்காக செய்திடுவோம். திருச்சபையின் போதனைக்கு எதிராக நடக்காமல் இருந்தால் நாம் இறைவனின் மக்களாக, குழந்தைகளாக வாழ்வோம் இருப்போம் என்று புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலிருந்து வாசிக்க கேட்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1கொரி. 10:31,11:1)

அதற்கு நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:40-45)

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, " நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் " என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! " என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் " என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை: வெளியே தன்மையான இடங்களில் தங்கிவந்தார்.எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. மருத்துவர் நோயற்றவருக்கு அன்று நோயுற்றவருக்கே தேவை  என்று மொழிந்த எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும்  திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து நோயினாலும், பிணியாலும் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் உம் வல்லமையின் கரங்கள் அவர்கள் வழியாக வந்து மக்களை ஆசிர்வதிதத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எம் நாட்டை சிறந்த முறையில் வழிநடத்தி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல தேவையான அருளைத்தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நான் விரும்புகின்றேன் உமது நோய் நீங்குக என்று மொழிந்த எம் இறைவா, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும், நோயினாலும், பிணியினாலும் பாதிக்கப்பட்டு கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்து பராமரிக்க தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் இயங்கிவருகின்ற அன்பியங்கள் அனைத்தும் பிறர்நலனில் அக்கறைக்காட்டிடவும், பொருளாதாரவசதியின்றி மருத்துவசிகிச்சை பெறாமல் வாழ்ந்துவருகின்றவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அவர்களின் அன்பை பிறர்க்கு எடுத்துக்காட்டி சாட்சிய வாழ்வு வாழ தேவையான அருளைத்தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment