பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்கள்


மார்ச் 8 உலக மகளிர் தினத்தை நம் கல்லூரி சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கும் இந்நன்நாளிளே உங்கள் முன் சில கேள்விகள்.  பெண் என்பவள் இயற்கையில் சபிக்கப்பட்ட 2ஆம் தர ஜீவனா?ஆண் ஆதிக்கத்தினால் அடங்கி கிடக்கும் அடிமையா?  அல்லது சிந்தனைகளை மட்டும் அப்புறபடுத்திவிட்ட ஜடமா?

உலக வரலாறுகளில் முரண்பாடுகள் அரங்கேறுவது அதிசயம் தான்.இயற்கையில் வலிமை குறைந்த ஒன்றின் மேல் வலிமை வாய்ந்தவைகள் ஆதிக்கம் செலுத்தும்.சிங்கம் மானின் மீதும் தேனீக்கள்   பூக்கள் மேலும் ஆதிக்கம் செலுத்துவது இயற்கையே.மனித வரலாற்றில் சற்று முரணாக ஆணை விட சக்தி வாய்ந்தவளாக இன்றைய அறிவியாலும் கூறப்படும் பெண்கள் ஆண்களுக்கு கட்டுபட்டவர்களாம்…!

விவிலிய கூற்றுபடி பெண் என்பவள் ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்கபட்டவள். ஏன் கடவுள் ஆணின் தலையிலிருந்தோ காலிலிருந்தோ எலும்பெடுக்காமல் விலா எலும்பை தேர்வு செய்யவேண்டும்? பெண் என்பவள் ஆணுக்கு சமம் என்பதை உணர்த்தவே அவ்வாறு எடுத்ததாக சிலர் கூறுவர்.

இவ்வாறு படைக்கப்பட்ட பெண்கள் அடிமைபட்டு அடிமைபட்டு உணர்விழந்து உரிமை இழந்து உறவிழந்து வாழ்ந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைத்துள்ளனர்.

தனது சுட்டெரிக்கும் கவிதைகளால் பெண்ணடிமைதனத்தை பாரதி அவர்கள் “அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தராம்” என்று முழங்குகிறார். பெண்கள் மீது கொண்ட மதிப்பின் காரணமாக சுப்பிரமணியன் என்ற தம் பெயரை பாரதி என மாற்றி கொண்டார்.

அவரது அடிசுவடை பின்பற்றி வந்த பாரதிதாசன் பெண்ணடிமைதனத்தை “கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்கு கடைத்தேற விழியின்றி விழிக்கின்றார்கள்.புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரை புருஷர்கள்  உபயோகம் பெரிதென்கின்றீர்” என இடித்துரைக்கின்றார்.

ஆண்களின் சக்தியை விட பெண்களின் சக்தி வலிமைமிக்கது என்பதில் காந்தியடிகளும் முனைப்புடன் இருந்தார் எனவேதான் தன்னுடன் பல பெண்டீரை சேர்த்து அறப்போரட்டங்களில் ஈடுபட்டார்.

கணவனுக்கு ஆயுள் முடிந்தது பாவம் என்ன செய்வாள் அந்த கைம்பெண் அவளும் கணவனுடன் எரியுட்டப்பட வேண்டும் என்றது அந்த முடச்சமுகம் இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயரிட்டு வெளிப்படையாக கைம்பெண்களை கொலை செய்து வந்த சமுகத்தில் ராஜாராம் மோகன்ராய் என்பவரின் குரல் மட்டும் இந்த சதி என்ற முடபழகத்திற்கு எதிராக ஒலித்தது.   யூதசமுகத்தில் அன்று பெண்களும் குழந்தைகளும்மதிக்கப்படவேயில்லை. இயேசு தனக்கு பெண் சீடர்களை கொண்டதன் விளைவாக அவர்களும் சமுகத்தில் மதிக்கப்பட ஆரம்பித்தனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்ததாக சொல்லப்படும் உண்மையும் ஒரு பெண்ணின் வழியாகத்தான் இவ்வுலகிற்கு தெரியவந்தது.

இவர்கள் வாழ்ந்த உலகில்தான் நாமும் வாழ்கிறோம் ஆனால் இந்த காலகட்டத்தில் ஆடை இழக்கும் திரௌபதியாய் எந்த பெண்ணவது வையகம் காத்திடுவாய் கண்ணா என்று அழைத்தால் காத்திட எந்த கண்ணணும் வரமாட்டான் என்பது திண்ணம்.
  • இறுதியாக சாக்ரடீஸ் பேசினார்; சிந்தனை உலகம் சீர்பெற்றது.
  • கலிலியோ பேசினார்; அறிவியல் உயிர்த்தெழுந்தது.
  • அம்பேத்கார் பேசினார்; அடிமைதனம்ஆட்டம்கண்டது.
  • அபிரகாம் பேசினார்; ஆதிக்கம் அரசு மாறியது.
  • கரிபால்டி பேசினார்; இத்தாலியில் புரட்சி வெடித்தது.

நாமும் இங்கு பெண்களின் முன்னேற்றத்தை பற்றி பேசுகிறோம். இந்த மகளிர் தினத்தில் ஏதாவது சிறு முன்னேற்றம் என்ற நம்பிக்கையுடன் 

பெண்களே …..
பள்ளங்கள் தனியாக வெட்டப்படுவதில்லை அதை சுற்றியுள்ள பகுதிகள் மேடாகும் போது சமதளங்களும் பள்ளங்களாக தெரிகின்றன. அது போல உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ள வேண்டாம் மீண்டும் உங்களுக்காக ஒரு பாரதியோ பாரதிதாசனோ காந்தியடிகளோ இயேசுநாதரோ இந்த 21 நூற்றாண்டில் அவதரிக்க போவதில்லை.

உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்களே பாடுபடுங்கள் வெற்றிகள் உங்கள் வசமாகும். 

- Bro. Valanarasu, B.Sc. Visual Communication 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக