இறை இரக்கத்தின் ஜெபமாலை


இயேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு
ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும் இரக்கத்தின் கடலுமா
கவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டுபிடிக்க
முடியாத இறைவனின் இரக்கமே உலக முழுவதையும் உம்முள்
அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும்.
இயேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாக
வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம் மீது நம்பிக்கை
வைக்கிறேன். ( மும்முறை )

i) கர்த்தர் கற்பித்த ஜெபம்
ii) மங்கள வார்த்தை ஜெபம்
iii) விசுவாசப் பிரமாணம்

ஜெபமாலையின் பெரியமணியில் :

நித்திய பிதாவே! உமது நேசக்குமாரனாகிய எமது
ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின்/ உடலையும் உதிரத்தையும்,
ஆன்மாவையும், தெய்வீகத்தையும் எமது பாவங்களுக்காவும்,
அகில உலகின் பாவங்களுக்காகவும், பரிகாரமாக உமக்கு
ஒப்புக்கொடுக்கிறோம்.

ஜெபமாலையின் சிறிய மணியில் :

இயேசுகிறிஸ்துவின் வேதனை நிறைந்த பாடுகள்
வழியாக எங்கள் மீதும், அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்.

ஐம்பது மணி முடிந்தபின் :

தூய இறைவா, தூய எல்லாம் வல்லவரே, தூய
நித்தியரே, எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்.
(மூன்று முறை).

கடைசி ஜெபம் :
இரக்கமுள்ள இயேசுவே உம்மை நாங்கள் விசுவசிக்
கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்.
எங்கள் பலவீனத்திலும், இயலாமையிலும், எங்களுக்கு
உதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்
கப்படவும் செய்ய எங்களுக்கு வரம் தாரும்.
அனைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது
மகிமைக்காகவும், எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும்
உள்ள தீயசக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரமருளும்.
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு
உள்ளமே கர்த்தரின் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி, என்
ஆத்துமாவே கர்த்தரையே ஸ்தோத்தரி@ கர்த்தர் செய்த சகல
உபகாரங்களையும் மறவாதே.

திரித்துவப் புகழ்

பிதாவுக்கும்இ சுதனுக்கும்இ பரிசுத்த ஆவிக்கும் மகிமை
உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல/ இப்பொழுதும்/
எப்பொழுதும்/ என்றென்றும்/ இருப்பதாக - ஆமென்.

No comments:

Post a Comment