கிறிஸ்து பிறப்பு - பேராயர் புல்டன் சீன்

பேராயர் புல்டன் சீன் அவர்களி்ல் கிறிஸ்துவின் வாழ்வு என்ற நூலிலிருந்து 

உலகின் தலைமை மக்கள் தொகை கணக்காளரான அகுஸ்து சீசர், டைபர் நதிகரையில் அமைந்துள்ள தமது அரண்மனையில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் "உரோமை பேரரசின் உலகம்" என்று பெயரிடப்பட்ட வரைபடம் விரித்த வைக்கபட்டது. அவர் தமது பேரரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு உத்தரவைப் பிறப்பிக்க இருந்தார்; நாகரிக உலகின் அனைத்து நாடுகளும் ரோமை பேரரசுக்கு உட்பட்டிருந்தன. இந்த உலகில் ஒரே ஒரு தலைநகரம் இருந்தது ரோம்; ஒரே ஒரு அதிகாரபூர்வ மொழி: லத்தீன்; ஒரே ஒரு ஆட்சியாளர்: சீசர். அவரது ஆதிக்கத்திற்குட்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு ஆளுநருக்கும், உத்தரவு சென்றது: ரோமானிய பேரரசின் குடிமக்கள் அனைவரும் தம்தம் சொந்த ஊர்களில் பெயரை பதிவிட வேண்டும். பேரரசின் விளிம்பில், நாசரேத் என்ற சிறிய கிராமத்தில், அனைத்து குடிமக்களும் தங்கள் பூர்வீக ஊர்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை வீரர்கள் சுவரில் ஒட்டினர். 

தாவீதின் அரசனின் வழித்தோன்றலான தச்சரான யோசேப், தாவீதின் நகரமான பெத்லகேமில் தமது குடும்பத்தைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த ஆணையின்படி, மரியாளும் யோசேப்பும் நாசரேத் கிராமத்திலிருந்து எருசலேமின் மறுபுறத்தில் சுமார் ஐந்து மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பெத்லகேம் கிராமத்திற்கு புறப்பட்டனர். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த சிறிய கிராமத்தைப் பற்றி மீக்கா இறைவாக்கினர் இறைவாக்குரைத்திருந்தார்:

‘யூதா நாட்டுப் பெத்லகேமே,

யூதாவின் ஆட்சி மையங்களில்

நீ சிறியதே இல்லை; ஏனெனில்,

என் மக்களாகிய இஸ்ரயேலை

ஆயரென ஆள்பவர் ஒருவர்

உன்னிலிருந்தே தோன்றுவார்’   (மத்தேயு 2:6)

யோசேப்பு தன் பூர்வீக நகரத்திற்குள் நுழைந்தபோது, எதிர்பார்ப்போடு இருந்தார், மரியாளுக்கு, குறிப்பாக அவளுடைய நிலையின் காரணமாக, தங்குமிடங்களைக் கண்டுபிடிப்பதில் தனக்கு எந்த சிரமமும் இருக்காது என்று அவர் மிகவும் நம்பினார். யோசேப்பு வீடு வீடாகச் சென்றபோது எல்லா இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிநதன.  விண்ணையும் மண்ணையும் உடைய உடையவர் பிறக்கக்கூடிய ஒரு இடத்தை அவர் வீணாகத் தேடிக்கொண்டிருந்தார்.  படைத்தவர்  தம் படைப்புகளில்  தமக்கான ஒரு வீட்டைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம். செங்குத்தான குன்றில் ஒரு மெல்லிய ஒளி தென்பட யோசேப்பு அதில் ஏறினார்,  அங்கு, அவர் நிச்சயமாக தங்குவதற்காக ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பார். யூத மக்களை கொடூரமாக அடிமைப்படுத்திய ரோமானிய படைவீரர்களுக்கு சத்திரத்தில் இடம் இருந்தது; கீழை பணக்கார வியாபாரிகளின் மகள்களுக்கு இடமிருந்தது; அரசவையில் வாழ்ந்த மெல்லிய துணிகளை உடுத்தியவர்களுக்கு இடமிருந்தது; உண்மையில், சத்திரக் காப்பாளருக்கு கட்டணம் கொடுக்கும் எவருக்கும் இடமிருந்தது; ஆனால், உலகில் அன்பில்லா ஒவ்வொரு இதயத்திற்கும் சத்திரமாக வந்த மாபரனுக்கு இடமில்லை. இறுதியாக வரலாற்றின் ஏட்டு சுருள்கள் இறுதி வார்த்தைகளுடன் முடிக்கப்படும்போது, அவைகளிலும் சோகமான வரி இதுதான: "சத்திரத்தில் இடமில்லை." 

இறுதியாக மலைச்சரிவுக்கு அப்பால் மேய்ப்பர்கள் புயல் நேரத்தில் தங்கள் மந்தைகளை அடைக்கும் பட்டி போன்ற குகைக்கு யோசேப்பும் மரியாவும் தங்குவதற்காக சென்றனர். அங்கே, கடுங்குளிரில், அமைதியில், கைவிடப்பட்ட அக்குயைின் தரையில் விண்ணகத்தில் தாய் இல்லாமல் பிறந்தவர், மண்ணகத்தில் தந்தை இல்லாமல் பிறந்தார். 

தாயைப் போல பிள்ளை என்று உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கூறுவார்கள்.  ஆனால், தாய் குழந்தையை ஒத்திருப்பதாக சொல்லக்கூடிய முதல் நிகழ்வு இதுவாகும்.  தன் தாயையே உருவாக்கியது அக்குழந்தை, மேலும் தாயும் ஒரு குழந்தைதான் என்பது அழகிய முரண்பாடாகும்;  விணணகம் எங்காவது இருக்கும் என்பதை விட குழந்தை தனது கைகளில் இருந்தபோது, அங்குதான் சொர்க்கம் இருப்பதாக எவரும் நினைக்க முடியும் என்பது இந்த உலக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்,  மரியா இப்போது விண்ணகத்தைக் கீழே நோக்கினார். 

உலகின் மிக இழிந்த இடமாகிய பட்டியில்  தூய்மை பிறந்தது. விலங்குகளாக செயல்படும் மனிதர்களால் படுகொலை செய்யப்பட்ட அவர், விலங்குகளிடையே பிறந்தார். "விண்ணிலிருந்து வந்த உயிருள்ள உணவு " என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அவர் தொழுவத்திலுள்ள தீவன தொட்டியில் வைக்கப்பட்டார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் தங்க கன்றையும் கிரேக்கர்கள் கழுதையையும் வழிப்பட்டனர்.  கடவுளுக்கு முன்பாக செய்வது போல் மனிதர்கள் அவை முன் தலைவணங்கினர்.  எருதும் கழுதையும் பாிகாரம் செய்வதற்காக அப்பாவியாக கடவுளின் முன் தலைவணங்கின. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக