Sacraments லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sacraments லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நோயில் துன்புறுவோருக்கு நற்கருணை வழங்கல்

பணி : தந்தை மகன் தூய ஆவியார் பெயராலே - ஆமென்
பணி : ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக….
            உம்மோடும் இருப்பதாக (தீர்த்தம் தெளித்தல்…. )

மன்னிப்பு வழிபாடு
பணி : அன்புக்குரியவர்களே இந்த திருச்சடங்கில் நாம் தகுந்த உள்ளத்துடன் பங்குபெற நமது பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

பணி : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை மன்னித்து நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச்செல்வாராக.

இறைவாக்கு வழிபாடு

யோவான் எழுதிய நற்செய்திலிருந்து வாசகம் (6 : 54-55)
எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்.
-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

திருவிருந்து
பணி : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தபடி நாம் ஒருமித்து நமது சகோதரருக்காக மன்றாடுவோம்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே 
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக 
உமது ஆட்சி வருக 
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக. 
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். 
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தரதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

பணி : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.

மன்றாடுவோமாக: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா எம் சகோதரர்…. (சகோதரி… ) உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடலை உட்கொண்டுள்ளார். இது அவருடைய உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருந்தாகி நற்பயன் அளிப்பதாக. இதனால் இவர் விரைவில் உடல் நலம் பெற்று உமது திருவுளத்தை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

பணி : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
உம்மோடும் இருப்பாராக
பணி : எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை
நிறைவாக ஆசிர்வதிப்பாராக.  – ஆமென்.

குருத்துவம் - மறையறிவு


முன்னுரை:  ஓர் உடலாக விசுவாசிகளை ஒன்று சேர்க்கும்படி, அவர்களில் சிலரை ஆண்டவர் பணியாளர்களாக ஏற்படுத்தினார். அவ்வுடலில் உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. (உரோ.12 : 4) இப்பணியாளர்கள் விசுவாசிகளின் சமூகத்தில் குருத்துவ நிலையின் புனித அதிகாரத்தைக் கொண்டு பலி ஒப்புக் கொடுக்கிறார்கள், பாவங்களை மன்னிக்கிறார்கள், மேலும் குருத்துவ அலுவலை மக்களுக்கு கிறிஸ்துவின் பெயரால் வெளிப்படையாக நிறைவேற்றுகிறார்கள். ஆகவே, தந்தையால் தாம் அனுப்பபட்டது போல், கிறிஸ்து மறை தூதர்களை அனுப்பி வைத்தார்.

அதே மறைதூதர்களின் வழியாகவே அவர்களின் வழிவருபவர்களான ஆயர்களுக்குத் தம்முடைய அர்ச்சிப்பிலும் பணியிலும் பங்கு அளித்தார். ஆயர்களோடு சார்ந்து நின்று அவர்களது பணியில் குருக்கள் பங்கு கொள்கிறார்கள். இவ்வாறு குருத்துவ நிலையில் நியமிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவால் ஒப்படைக்கப்பட்ட மறைத்தூதுப் பணியைச் சரிவர நிறைவேற்றும் பொறுட்டு ஆயர் திருநிலையுடன் ஒத்துழைப்பவர்கள் ஆகிறார்கள்.

குருத்துவம் வழியே குருக்கள் தூய ஆவியின் பூசுதலால் ஒரு தனிப்பட்ட முத்திரை கொண்டு குறிக்கப்படுகிறார்கள். இவ்வாறு தலையாகிய கிறிஸ்துவின் பெயரால் செயல்படும்படி, அவர்கள் குருவாகிய கிறிஸ்துவின் சாயலைப் பெறுகிறார்கள். (குருக்களின் பணியும் வாழ்வும், 2) 

பொதுக் குருத்துவம்:  கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் கிறிஸ்துவின் பொது குருத்துவத்தில் பங்கு கொள்கிறோம். நமது சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க அழைக்கப்படுகிறோம். இப்பணிக்காக இறைவன் சிலரை தனிப்பட்ட முறையில் அழைக்கிறார்.இந்த அழைப்பை பெறுகிறவர்கள் இறைப்பணி செய்வதற்காக தங்கள் வாழ்கையை அர்ப்பணிக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் என்ற குடும்ப உறவைத் தவிர்த்து இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் பணிசெய்ய சிறப்பாக அழைக்கப்படுகிறார்கள். 

குருத்துவத்தின் மூன்று நிலைகள்:  இவ்வழைப்பில் மூன்று நிலைகள் உள்ளன. திருத்தொண்டர் (தியாக்கோன்), குரு, மற்றும் ஆயர். இந்திய திருநாட்டில் இறைப்பணி செய்வதற்கு அதிக பேர் முன்வருவதால் திருத்தொண்டர் பணிக்கென யாரும் தனியாகத் திருநிலைப்படுத்தப் படுவதில்லை. குருவாககப் பயிற்சி பெறும் அனைத்து குருமாணவர்களும் தங்களின் பயிற்சியின் இறுதி ஆண்டிற்கு முந்திய ஆண்டில் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படுகின்றனர். மேலை நாடுகளில் திருத்தொண்டர் பணிக்கென பயிற்சி பெற்று திருத்தெண்டர்களாக திருநிலைப்படுத்தப் படுகின்றனர். இத் திருத்தொண்டர்கள் திருமுழுக்கு, திருமணம், நோயில் பூசுதல் ஆகிய மூன்று திருவருட்சாதனங்களை நிறைவேற்றலாம். அவர்களின் முக்கிய பணி நற்செய்தி அறிவுப்புப் பணி. இவர்கள் பங்கு பணித்தள குருவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.

மறைமாவட்ட குருக்கள் :  குருக்களாக திருநிலைப்படுத்தப் படுகிறவர்கள் இரு விதமான வாழ்கை முறையை தெரிந்து கொள்ளலாம். மறைமாவட்ட குருக்களாக தங்களின் ஆயரின் வழிநடத்துதலில், கற்பு, கீழ்படிதல் வாக்குறுதியின் படி வாழ்வார்கள். பொதுவாக தங்களின் சொந்த மறைமாவட்டத்தில் பங்குகளில் அல்லது மறைமாவட்ட நிர்வாகத்தின் ஏதாவது பொறுப்புகளில் பணிபுரிவார்கள். தங்களுடைய ஆயருக்கு கட்டுப்பட்டவர்கள். 

சபை சார்ந்த குருக்கள்:  கத்தோலிகக திருச்சபையில் மறைமாவட்ட குருக்கள் தவிர சபை சார்ந்த குருக்களும் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இவர்கள் தங்கள் சபை எத்தகைய பணி வாழ்வை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டதோ அத்தகைய பணிவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களில் சபைத் தலைவருடைய வழிநடத்துதலின் கீழ் கற்பு, கீழ்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதியின் படி பொதுவாக இணைந்து(குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர்) பணிசெய்வார்கள். உதாரணமாக இயேசு சபை குருக்கள், தூய பிரான்சிஸ்கன் அஸிஸி, சலேசிய குருக்கள், பல்வேறு கல்வி, சமூக, நிறுவனங்களிலும், பங்குத் தளங்களிலும் பணிசெய்வதைக் காணலாம். இவர்கள் தங்கள் சபை தலைவருக்கோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பதிலி தலைவருக்கோ கட்டுப்பட்டவர்கள். 

குருக்களின் பணிவாழ்வு:  குருக்களின் பணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நற்செய்தி அறிவிக்கும் பணி, வழிநடத்தும் பணி, ஆளும் பணி. குருக்களின் நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது பணித்தளத்தில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதிலும் மற்ற அருட்ச் சாதனங்களை நிறைவேற்றுவதும் சிறப்பாக நற்செய்தியை போதிப்பதிலும் வாழ்ந்து காட்டுவதிலும் அடங்கியுள்ளது. வழிநடத்தும் பணியானது பணித்தள மக்களை ஆன்மீக, சமுக தேவைகளில் தலைவராயிருந்து மக்களை வழிநடத்துவதிலும், வழிகாட்டுவதிலும் அடங்கியுள்ளது. ஆழும் பணியானது பங்குத் தளத்தில் நிர்வாக ரீதியாக அவர் ஆற்றும் பணிகளை உள்ளடக்கியது.

ஆயர் நிலை:  குருத்துவத்தின் நிறைவு ஆயராக திருநிலைப்படுத்தப்படுதல். ஆயர் என்பவர் இயேசு கிறிஸ்துவின் நேரடி அப்போஸ்தலர்களின் வழிவந்தவர்கள். ஆயர் என்பவர் தம்முடைய பொறுப்பின் படி தம்மிடன் ஒப்படைக்கப்பட்ட மந்தையை காத்து, வழிநடத்தும் சிறப்புப் பணியைச் செய்ய அழைக்கப்படுகிறார். ஆயருக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணியும், வழிநடத்தும் பணியும் ஆளும் பணியும் முக்கியமான பணிகள். 

தேவ அழைத்தல்:   தேவ அழைத்தல் என்பது இறைவன் அருளும் கொடை. யாரும் அதைப் பெற உரிமை கொண்டாட முடியாது. இறைவன் அழைத்தாலன்றி யாரும் இப்பணிக்கு வர இயலாது அதில் நிலைத்து நிற்கவும் இயலாது. குருவாவதற்கு கிறிஸ்தவராகவும், நல்ல உள்ளம் கொண்டவராகவும் இறைப்பணிசெய்ய ஆர்வமுள்ளவராகவும் நல்ல உடல்நலத்தைக் கொண்டவராகவும் இருக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது கல்லூரி முடித்தவர்கள் சேரத் தகுதியுடையவர்கள். முதலில் இரண்டு வருடங்கள் தயாரிப்பாகவும் மூன்று வருடங்கள் தத்துவ இயலும் ஒரு வருடம் இடைநிலைப் பயிற்சியும் பின்னர் நான்கு வருடங்கள் இறைஇயலும் பயிலவேண்டும். ஆக மொத்தம் குறைந்தது பத்து வருட தயாரிப்பு தேவை. மேலும் விபங்களுக்கு உங்கள் பங்குத் தந்தையை அனுகலாம்: தக்க விபரம் தருவார்கள். 

"இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (மத்தேயு 10 :42) என்ற நம் ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப இறைஅடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய முற்பட வேண்டும். தேவ அழைத்தலுக்காகவும் குருக்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

திவ்ய நற்கருணை - மறையறிவு


கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை:  திருமுழுக்கு, உறுதிப் பூசுதல், நற்கருணை ஆகிய மூன்றும் புகுமுக திருவருள்சாதனங்கள். இவற்றின் வழியாகவே நாம் "இருளின் அதிகாரத்தினின்று விடுவிக்கப்பட்டு , கிறிஸ்துவோடு இறந்து, அவரோடு உயிர்க்கிறோம்: சுவிகாரப் பிள்ளைகளுக்கு உரிய ஆவியாரைப் பெற்றுக் கொள்கிறோம்: இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து ஆண்டவருடைய சாவு, உயிர்ப்பு இவற்றின் நினைவாகக் கொண்டாடுகிறோம்" (மறை அறிவிப்புப் பணி, 14)

திருப்பலி கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமும் கொடுமுடியுமாகும். அனைத்து மற்ற அருள்சாதனங்கள் இதோடு பிணைக்கப்பட்டுள்ளன. குருவானவர் திருப்பலி நிறைவேற்றும் போது கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் மெய்யாகவே இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறது என்பதே கத்தோலிக்க விசுவாசம். மற்ற திருவருள்சாதனங்களில் கடவுளின் கொடைகளை நாம் பெறுகிறோம். ஆனால் நற்கருணை என்னும் இத்திருவருள்சாதனத்தில் கடவுள் தம்மையே நமக்குத் தருகிறார்.

நற்கருணை என்னும் இத்திருவருள்சாதனம் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது: திருப்பலி, பலிப்பூசை, திருப்பலி கொண்டாட்டம், திருப்பலி வழிபாடு. திருமுழுக்கு நம்மை உயிருள்ள ஆலயத்தின் உயிருள்ள கற்களாக ஆக்குகிறது. அந்த ஆலயத்தில் கிறிஸ்துவையே இறைவனுக்குகந்த பலிப்பொருளாக ஒப்புக் கொடுப்பதே நற்கருணை வழிபாடு. கிறிஸ்துவே ஆலயம், அவரே குரு, அவரே பலிபீடம், அவரே செம்மறி! நாம் அவரோடு இணைந்து, அவரில் இத்தனையும் ஆகிறோம். 

அன்பின் பலி:  இயேசு கிறிஸ்து தம்மையே கல்வாரியில் பலியாக்கப் போவதின் முன் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இயேசு சிலுவையில் நமக்காக உயிர் தியாகம் செய்ததை இந்த திருப்பலியில் நினைவு கூர்கிறோம். ஏனெனில் தாம் சாவதற்கு முந்திய நாள் இரவில் அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூரியதாவது : "அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் எனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்" என்றார் அவ்வண்ணமே திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது: "அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்: ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார்.

எனவே திருப்பலி என்பது அன்பின் உன்னத பலி. பழைய எற்பாட்டின் பலிகள் அனைத்திலும் மேலான பலி. இயேசு கிறிஸ்துவின் மேலான அன்பை இதில் நினைவுகூர்கிறோம். இத்தகைய அன்பின் திருவிருந்தில் நாம் பங்குகொள்ளும் போது அவருடைய பலியில் நாமும் பங்குகொள்கிறோம். கிறிஸ்து தம்மையே வானகத் தந்தைக்கு பலியாகத் தந்தார். இந்த அன்புப் பலியில் நாமும் பங்குபெறும் போது நாமும் நம்மையே வானக தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுக்கிறோம். 

திருவிருந்தில் ஒருமைப்பாடு: மேலும் திருப்பலியின் பகுதியாகிய நற்கருணை விருந்தில் நாம் பங்கு பெறும் போது நாம் அனைவரும் கடவுளின் அன்புமக்கள் ஆகிறோம். எவ்வித வேறுபாடுமின்றி, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. திருப்பலி முடிந்ததும் "திருப்பலி முடிந்தது, இனி நமது வாழ்க்கைப் பலியைத் தொடர்வோம்" என்னும் அறைகூவலுக்கு ஏற்ப கிறிஸ்து காட்டிய அன்பை நமது என்றாட வாழ்வில் காட்ட அழைக்கப்படுகிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபையில் திருப்பலி என்னும் இந்த திருவருள்சாதனம் உலகம் முழுவதும் ஒரே முறையில் கொண்டாடப்படுகிறது. ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த மொழியில் திருப்பலி நடைபெற்றாலும், மொழி தெரியாவிட்டாலும் கூட அதில் முழுமையாகப் பங்குபெற முடியும். உலகம் முழுவதும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வாசகங்களுடன் குறிப்பிட்ட திருநாளாக இருந்தால் அதே வழிபாட்டுடன் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு நேரமாயிருப்பதால் உலகெங்ககும் எந்த ஒரு மணித்துளியும் விடாமல் திருப்பலி தொடர்ந்து கொண்டாடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

குருத்துவ அருள்பொழிவு கொண்டாட்டம்


சபை மன்றாட்டு

பணியாளரை அழைக்கும் இறைவா, பணிவிடை பெறவன்று பணிவிடை புரியவே உம் திருச்சபையின் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர். இன்று உம் மக்களுக்கு பணிபுரிய நீர் அழைத்துள்ள இவர்கள், இறை வேண்டலில் நிலைத்திருந்து, தங்கள் பணியில் ஈடுபாடும், சாந்தமும் கொண்டு வாழச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

1. இறை வார்த்தை வழிபாடு
  • முதல் வாசகம்: எரேமியா 1: 4-9
  • இரண்டாம் வாசகம்: 1திமோ 4: 12-16
  • நற்செய்தி: யோவான் 3: 25-30 
2. திருநிலைப்படுத்துதல் வழிபாடு
(ஆயர் அவர்கள் தனது ஆயத்த உடையோடு இருக்கையில் அமர்கிறார்)
Commentary: இன்றைய சிறப்பு வழிபாட்டின் இரண்டாவது நிகழ்வாக திருநிலைப்படுத்தப்படும் சடங்கு ஆரம்பமாகிறது. ஆண்டவர், சாமுவேலை அழைத்தபோது சாமுவேல் அதை ஏற்று ஆண்டவரே பேசும் அடியவன் கேட்கிறேன் என்று பதில் அளித்ததுபோல், இன்று சகோதரர்கள் தங்களது அழைப்புக்கு இதோ வருகிறேன் என்று சொல்லி முன் வருவார்கள். பின் ஆயர் அவர்கள் இவர்கள் இப்பணிக்கு தகுதி உள்ளவர்களா என்று இவர்களின் அதிபர் தந்தையிடம் கேட்டறிந்த பின் குருத்துவ பணிக்கு இவர்களை தேர்ந்து கொள்கிறோம் என்று சொல்வார். இதன் முடிவில் இறைமக்கள் அனைவரும் “இறைவனுக்கு நன்றி” என்று பதில் கூறுவோம்.

அழைப்பு விடுத்தல் - சோதித்தறிதல் - தேர்வு செய்தல்
அதிபர்: குருக்களாக திருநிலைப் படுத்தப்பட வேண்டியவர்கள் முன் வருக.
( பெயர் சொல்லி அழைத்தல். பதில் - இதோ வருகின்றேன் )

அதிபர்: பேரருள் தந்தையே, நம் சகோதரர் இவர்களைக் குருக்களாக திருநிலைப்படுத்த அன்னையாம் திருச்சபை தங்களைக் கேட்டுக் கொள்கின்றது.

ஆயர்: இப்பணிக்கு இவர்கள் தகுதியுள்ளவர்கள் என உமக்குத் தெரியுமா?

குரு: கிறிஸ்துவ மக்களை கேட்டறிந்ததிலிருந்தும் இவர்களுக்கு பயிற்சி அளித்தவர்களின் பரிந்துரைகளிலிருந்தும் இவர்கள் தகுதியுள்ளவர்கள் என சான்று பகர்கின்றேன்.

ஆயர்:  நம் ஆண்டவராகிய இறைவனிலும் நம் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் அருள்துணையிலும் நம்பிக்கை வைத்து நம் சகோதரர்கள் இவர்களைக் குருத்துவ நிலைக்கு தேர்ந்து கொள்கின்றோம்.

Commentary: அனைவரும் இறைவனுக்கு நன்றி என்று பதில் கூறுவோம்.
எல்: இறைவனுக்கு நன்றி

அறிவுரை ( மறையுரை )
ஆயரின் மறையுரைக்கு பின்

Commentary: இப்பொழுது குருவாக உயர்த்தப்பட இருக்கிற திருத்தொண்டர்கள் எழுந்து நிற்பார்கள். கிறிஸ்துவின் திருவுடலையும், திருஇரத்தத்தையும் வாழ்வாக்க தயாராய் இருக்கின்ற இவர்கள் குருவாவதற்கு இவர்களின் சம்மதத்தையும், விருப்பத்தையும் நேரடியாக இறைச் சமுகத்தின் முன் ஆயர் கேட்டறிகின்றார்.

(Afterwards the candidates stand before the Bishop who questions all of them together)

ஆய்வு - குருக்களாக திருநிலைப்படுத்தப்படுபவர்களிடம் ...

ஆயர்:  அன்பார்ந்த மக்களே, நீங்கள் குருத்துவ நிலை பெறுமுன் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்திருக்கின்றீர்கள் என்று இத்திருக்கூட்டத்திற்குமுன் எடுத்துரைப்பது பொருத்தமானதாகும். எனவே, நீங்கள் குருத்துவநிலையில் இருந்துகொண்டு ஆயர் நிலையில் இருப்போருக்கு உண்மையான உதவியாளர்களாக விளங்கி, தூய ஆவியாரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஆண்டவருடைய மந்தையை இடைவிடாமல் மேய்த்து உங்கள் பணியை நிறைவேற்ற விரும்புகின்றீர்களா?

பதில்: விரும்புகின்றேன்.

ஆயர்:  நற்செய்தியை அறிவிப்பது, கத்தோலிக்க விசுவாசத்தை விளக்குவது ஆகிய அருள்வாக்குப் பணியைத் தகுதியுடனும் ஞானத்துடனும் நிறைவேற்ற நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்: விரும்புகின்றேன்.

ஆயர்:  இறைவனின் மகிமைக்காகவும், கிறிஸ்துவ மக்களின் அர்ச்சிப்புக்காகவும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளை, சிறப்பாக நற்கருணைப் பலியையும் ஒப்புரவு அருள்சாதனத்தையும் திருச்சபையின் மரபுக்கேற்ப பக்தியுடனும் பிரமாணிக்கத்துடனும் நிறைவேற்ற நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்: விரும்புகின்றேன்.

ஆயர்:  இடையறாது செபிக்க வேண்டுமென்ற கட்டளைக்குப் பணிந்து, உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக எம்மோடு இணைந்து இறைவனின் இரக்கத்தை இறைஞ்சி மன்றாட நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்: விரும்புகின்றேன்.

ஆயர்:  நமக்காகத் தம்மையே தூய பலிப்பொருளாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்த நம் பெரிய குருவாகிய கிறிஸ்துவுடன் நீங்கள் நாளுக்குநாள் நெருங்கி ஒன்றித்து, மனிதரின் மீட்புக்காக அவரோடு உங்களையே கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்புகின்றீர்களா?

பதில்: இறைவனின் துணையை நம்பி நான் விரும்புகின்றேன்.

கீழ்ப்படிதல் வாக்குறுதி

Commentary : இப்பொழுது குருவாக திருநிலைப்படுத்தப்படவேண்டிய இவர்கள், ஆயர் முன் முழந்தாள்படியிடுவார்கள். இவர்கள் தங்களது கரங்களை ஆயரின் கரங்களில் ஒப்படைத்து கீழ்படிகின்றேன் என்று வாக்களித்து சம்மதம் தெரிவிப்பார்கள். 

(Then each one of the candidates goes to the Bishop and kneeling before him, places his joined hands between those of the Bishop. If this seems less suitable in some places, the Episcopal conference may choose another rite. If the Bishop is the candidate’s own Ordinary, he asks:)

ஆயர்:  எனக்கும், என் வழி வரும் ஆயருக்கும் நீர் வணக்கமும் கீழ்ப்படிதலும் தர வாக்களிக்கின்றீரா?

பதில்: வாக்களிக்கின்றேன்.

ஆயர்:  இந்த நற்செயலை உம்மிடம் தொடங்கிய கடவுள் அதை நிறைவுறச் செய்வாராக.

செபிக்க அழைப்பு

Commentary: குருக்களுக்காக செபிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. இயேசுவின் திருவுடலை ஏந்தும் அவர்களுடைய கரங்களும், திருஇரத்ததை அருந்தும் அவர்களுடைய உதடுகளும் கரைபடாமல் இருக்கவும், உலக பற்றற்றவர்களாக வாழ்ந்துகாட்டவும் நமது செபம் தேவை. அவ்வண்ணமே குருவாக திருநிலைபடுத்தபட இருக்கும் நம் சகோதரர்கள் ஆயர் முன் நிற்க ஆயர் இவர்களுக்காக செபிக்கிறார். நாமும் அமைதியாக செபிப்போம்.

(Then all stand. The Bishop faces the people without the mitre and with his hands joined, says:

 If the Bishop is the candidate’s own Ordinary, he asks:)

ஆயர்:  (எழுந்து நின்று) அன்புமிக்க சகோதரர்களே, சகோதரிகளே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன் தம் ஊழியர் இவர்களைக் குருத்துவ நிலைக்கு தேர்ந்துக் கொள்ள திருவுளமானார். அவரே இவர்கள் மீது தம் ஆசியையும் அருளையும் தயவாய்ப் பொழியுமாறு மன்றாடுவோம். 

Commentaryஇப்பொழுது திருப்பீடத்தில் திருத்தொண்டர்கள் முகம் குப்புறவிழுந்து கிறிஸ்துவின் ஒளியையும் அன்பையும் பிரதிபலிக்க இதோ வந்துவிட்டேன் என்று இறைவனிடம் சரணடைகின்றார்கள். நாம் அனைவரும் முழந்தாள் படியிட புனிதர்களின் மன்றாட்டு மாலை பாடி செபிக்கப்படுகின்றது.

(The Bishop kneels at his seat; the candidates prostrate themselves; all the rest kneel).

புனிதர்களின் பிராத்தனை (Litany of the saints)
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
புனித மரியாயே, இறைவனின் தாயே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மிக்கேலே,
இறைவனின் புனித தூதர்களே,
புனித சூசையப்பரே,
புனித ஸ்நானக அருளப்பரே,
புனித இராயப்பரே, சின்னப்பரே,
புனித பெலவேந்திரரே,
புனித அருளப்பரே,
புனித மரிய மதலேனம்மாளே,
புனித முடியப்பரே,
புனித லவுரேஞ்சியாரே,
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே,
புனித அஞ்ஞேசம்மாளே,
புனித பெர்பேத்துவா, பெலிசித்தம்மாளே,
புனித கிரகோரியாரே,
புனித அகுஸ்தீனாரே,
புனித அத்தனாசியாரே,
புனித பசிலியாரே,
புனித மார்த்தீனாரே,
புனித ஆசீர்வாதப்பரே,
புனித பிராஞ்சீஸ்குவே, சாமிநாதரே,
புனித பிராஞ்சீஸ்கு சவேரியாரே,
புனித வியான்னி மரிய அருளப்பரே,
புனித தெரேசம்மாளே,
புனித சீயன்னா கத்தரீனம்மாளே,
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே,
கருணைகூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
தீமை அனைத்திலுமிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
பாவம் அனைத்திலுமிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
நித்திய மரணத்திலிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது மனிதவதாரத்தினாலே, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது மரணத்தினாலும் உயிர்ப்பினாலும், எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
பரிசுத்த ஆவியின் வருகையினாலே, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது பரிசுத்த திருச்சபையை, ஆண்டு காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்...எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருச்சபைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும், திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்யவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
அனைத்துலக மக்களுக்கும், சமாதானமும் மெய்யான ஒற்றுமையும் தந்தருளவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
உமது புனித ஊழியத்தில், எங்களை உறுதிபடுத்திக் காத்தருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
தேர்ந்து கொள்ளப் பெற்ற இவர்களை, ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
தேர்ந்து கொள்ளப் பெற்ற இவர்களை ஆசீர்வதித்து, புனிதப்படுத்த வேண்டுமென்று 
உம்மை மன்றாடுகிறோம். . 
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவர்களை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, அர்ச்சிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். . 
உயிர் வாழும் கடவுளின் திருமகனாகிய யேசுவே, உம்மை மன்றாடுகிறோம்.. . 

கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும் (2)
கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும் (2)

Commentary : இப்போது குருவாக திருநிலைப்படுத்தப்பட இருக்கும் திருத்தொண்டர்களுக்காக ஆயர் அவர்கள் செபிக்கின்றார். செபத்தின் முடிவில் அனைவரும் ஆமென் என்று சொல்லவும்.

(Then the Bishop stands alone and, with his hands joined, sings or says in a loud voice)

ஆயர்: ஆண்டவரே, எம் இறைவா, எங்கள் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும். உம் ஊழியர் இவர்கள் மீது தூய ஆவியாரின் ஆசியையும், குருத்துவ அருளின் ஆற்றலையும் பொழிவீராக. நீர் அர்ச்சிக்குமாறு, உம் திருமுன் நாங்கள் கொண்டுவரும் இவ்வூழியர்களைக் கருணையுடன் நோக்கி உமது கொடைகளை எந்நாளும் இவர்கள் மீது நிறைவாய்ப் பொழிந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.
Commentary : அனைவரும் எழுந்து நிற்போமாக.

திருநிலைப்பாட்டு செபத்திற்கு முன்
Commentary: நம் திருத்தொண்டர்களை குருத்துவ நிலைக்கு உயர்த்துகின்ற மிகவும் உன்னதமான நேரம் இது. இப்பொழுது திருத்தொண்டர்கள் ஆயர் முன் முழந்தாள்படியிடுவார்கள் . அன்று இறைவனால் அழைக்கப்பட்டவர்களின் தலைகள் மீது கைவைத்து அருள்பொழிவு செய்தார்கள். இன்றும் அந்த புனிதமான சடங்கை நிறைவேற்ற நமது ஆயரும் தமது திருக்கரங்களை திருத்தொண்டர்களின் தலை மீது வைத்து அமைதியாக செபிப்பார். இதனைத் தொடர்ந்து அனைத்து குருக்களும் இவர்கள் தலை மீது தங்களது கரங்களை வைத்து செபிப்பார்கள்.

(Next, all the priests present, wearing stoles, lay their hands upon each of the candidates saying nothing. After the imposition of hands, the priests remain at the sides of the Bishop until the prayer of consecration is completed.)

திருநிலைப்பாட்டு செபம்

Commentary : இப்போது ஆயர் திருநிலைப்பாட்டு செபத்தை சொல்லி செபிப்பார் அப்போது இறைமக்களாகிய நாமும் அமைதியுடன் செபிப்போம்

(The candidates kneel before the Bishop. With his hands extended, he sings the prayer of consecration or says it in a loud voice:)

ஆயர்:  ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்குத் துணையாக வந்தருளும். மனித மாண்பின் ஊற்றும், அனைத்து அருள்கொடைகளின் வள்ளலும் நீரே. அனைத்தும் உம்மால் தோன்றுகின்றன. உம்மால் நிலைப்பெறுகின்றன. குருத்துவ மக்களினத்தைக் கிறிஸ்துவின் திருப்பணியாளர்களாய் உருவாக்க, தூய ஆவியாரின் ஆற்றலினால் அம்மக்களிலே வௌவேறு நிலைகளை ஏற்படுத்துபவர் நீரே. பழைய உடன்படிக்கையின்போதே, மறைபொருளாக அமைந்திருந்த அருள்சாதனங்கள் வழியாக ஏற்படுத்தப்பட்ட பணி நிலைகள் வளரலாயின. மக்களை ஆண்டு நடத்திப் புனிதப்படுத்த மோசேயையும் ஆரோனையும் நியமித்தபோது அவர்களுடன் தோழமை கொண்டிருக்கவும் அவர்களது பணியில் துணை நிற்கவும் நீர் பல்வேறு நிலையிலும் மாண்பிலும் மனிதர்களைத் தேர்ந்தெடுத்தீர். எவ்வாறெனில் பாலைவனத்தில் மோசேயின் மனநிலையை விவேகமுள்ள எழுபது பேருக்கு அளித்து, அவர்கள் வழியாக அது பரவச் செய்தீர். அவர்களை உதவியாளர்களாகப் பயன்படுத்தி மோசே உம் மக்களை எளிதாக வழி நடத்தினார். அவ்வண்ணமே வரப்போகும் நலன்களின் நிழல்போல் அமைத்திருந்த கூடாரப்பலிகள், குருக்களின் சட்ட முறைமைப்படி குறைவுபடாமல் நிகழ்ந்திட ஆரோனின் வழிவந்தோர் மீது அவர்தம் தந்தைக்குரிய நிறைவின் வளமையை வழிவழியாய்ப் பொழிந்தீர்.

தூயவரான தந்தையே, இறுதியாக உமது திருமகனையே இவ்வுலகுக்கு அனுப்பி வைத்தீர். அந்த இயேசுவையே தனிப்பெரும் திருத்தூதர் என்றும், தலைமைக்குரு என்றும் நாங்கள் அறிக்கையிடுகின்றோம். 

இவரே தூய ஆவியாரின் வழியாக மாசற்ற காணிக்கையாகத் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்தார். தம் திருத்தூதர்களை உண்மையினால் புனிதப்படுத்தித் தம் பணியில் பங்கேற்கச் செய்தார். அவர்களோடு மீட்புப் பணியை உலகெங்கும் அறிவிக்கவும் செயல்படுத்தவும் நீர் அவர்களுக்கு உதவியாளர்களைத் தந்தீர்.

இப்போதும் ஆண்டவரே வலுக்குறைந்த எமக்கு இத்தகைய உதவியாளரைத் தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.திருத்தூதருக்குரிய குருத்துவப் பணியில் எமக்கு இவர்கள் தேவைப்படுகின்றார்கள்.

(Now Priests extend their rihgt hands)

எல்லாம் வல்ல தந்தையே, உம் அடியார்களாகிய இவர்களுக்கு குருத்துவ நிலைக்குரிய மாண்பினை அளித்தருள உம்மை மன்றாடுகின்றோம். இவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் புனிதத்தின் ஆவியாரைப் புதுப்பித்தருளும். இறைவா, உமது கொடையாகக் குருத்துவத்தின் இரண்டாம் நிலைக்குரிய பொறுப்பை இவர்கள் பெற்றுக் கொள்வார்களாக. தங்கள் சிறந்த வாழ்வால் நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வார்களாக.

இறைவா, இவர்கள் எம் ஆயர் நிலைக்குத் தகுந்த உதவியாளராய் இருப்பார்களாக. இவர்கள் போதனையின் வழியாகத் தூய ஆவியாரின் அருளால், நற்செய்தியின் வார்த்தைகள் உலகின் கடை எல்லைவரை மனிதரின் உள்ளங்களில் நிறைபலன் தருவனவாக.

உம்முடைய மக்கள் மறுபிறப்பளிக்கும் திருமுழுக்கால் புதுப்பிக்கப்படவும், உமது திருப்பீடத்திலிருந்து திருவுணவு உண்டு ஊட்டம் பெறவும், பாவிகள் ஒப்புரவாக்கப்படவும், பிணியாளர்கள் வலுப்பெற்றெழவும் இவர்கள் எம்மோடு சேர்ந்து உம்முடைய மறைப்பொருள்களைப் பிரமாணிக்கமாய் வழங்குவார்களாக.

ஆண்டவரே, இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காகவும் உலகம் அனைத்திற்காகவும் உமது இரக்கப் பெருக்கத்தை இறைஞ்சி மன்றாட எம்மோடு இவர்கள் இணைந்திருப்பார்களாக. இவ்வாறு, அனைத்து நாடுகளும் கிறிஸ்துவில் ஒன்று சேர்க்கப்பட்டு உமது அரசில் ஒரே மக்கள் குலமாக மாற்றம் அடைவனவாக. 

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல். ஆமென்.

திருவுடை அணிவித்தல்

Commentary: இறைவனால், குருத்துவ வாழ்வுக்கென தேர்ந்து கொள்ளப்பட்ட நம் புதிய அருள்பணியாளர்களுக்கு குருக்கள் அணியும் திருவுடை அணிவிக்கப்படுகின்றது.

(After the prayer of consecration the Bishop sits with his mitre on)

கைகளில் திரு எண்ணெய் பூசுதல்

Commentary : இப்பொழுது ஆயர், புதிய அருள்பணியாளர்களின் கரங்களில் கிறிஸ்மா என்னும் திருத்தைலத்தை பூசுகின்றார். நம் புதிய அருள்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவாக்கினர்களைப்போல, நீதித்தலைவர்களைப்போல, திருத்தூதர்களைப்போல பணி செய்ய, தேவையான உடல் உள்ள நலமும், ஆவியாரின் வரமும் பெறுகின்றார்கள்.

(Next the Bishop puts on the linen gremial, and anoints with holy chrism the palms of each new priest who kneels before him. He says:

ஆயர்:  தூய ஆவியாரினாலும், அருளாற்றலினாலும, தந்தையாம் இறைவன, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் திருநிலைப்படுத்தினார். இறைவனுக்குப் பலி செலுத்தவும, கிறிஸ்துவ மக்களை புனிதப்படுத்தவும் வேண்டிய அருளை அதே இயேசு கிறிஸ்து உமக்கு வழங்கி, உம்மைக் காப்பாராக.

இரசப்பாத்திரமும் அப்பத்தட்டும் வழங்குதல்

Commentary: இப்போது அருள்பணியாளரின் பெற்றோர் திருப்பலி நிறைவேற்ற பயன்படத்தப்படும் அப்பமும், இரசமும் உள்ள திருக்கிண்ணத்தை ஆயர் அவர்களிடம் அர்ப்பணிக்கின்றார்கள். அதனை ஆயர் அவர்கள் புதிய அருள்பணியாளர்களிடம் கொடுத்து அமைதியின் முத்தம் வழங்கி வாழ்த்துகின்றார். 

(Meanwhile the deacon prepares the bread on the paten and the wine and water in the chalice for the celebration of Mass. He brings the paten and chalice to the Bishop, who presents them to each of the new priests as he kneels before the Bishop)

ஆயர்:  இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க, இறைமக்கள் கொண்டுவந்த இக்காணிக்கையைப் பெற்றுக் கொள்ளும். நீர் நிகழ்த்தும் திருச்சடங்கிற்கு ஏற்றபடி, புனிதராயிரும். திருச்சிலுவையின் மறையுண்மைக்கு ஏற்ப உமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்.

அமைதியின் முத்தம்

(Lastly the Bishop gives the kiss of peace to each of the new Priests, saying)

ஆயர்:  இறை அமைதி உம்மோடு இருப்பதாக.
பதில்: உம்மோடும் இருப்பதாக.


Commentary : இப்பொழுது காணிக்கை பவனி நடைபெறும்.

காணிக்கை மன்றாட்டு

தூயவரான தந்தாய், எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க உம் திருமகன் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். உம்முடைய ஊழியர்களின் காணிக்கையை ஏற்றருளும். இதனால் ஆன்மீகப்பலியாக எங்களையே உமக்கு நேர்ந்தளித்து, நாங்கள் தாழ்ச்சியும் அன்புமிகு மனப்பான்மையும் நிறைவாகப் பெற்று மகிழ்வோமாக.  எங்கள்…

நன்றி மன்றாட்டு

மன்றாடுவோமாக: ஊழியர்க்கு உறுதியளிக்கும் இறைவா, விண்ணக உணவையும், பானத்தையும் நிறைவாக அருந்தியுள்ளோம். உமது மகிமைக்காகவும் விசுவாசிகளின் மீட்புக்காகவும் நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதிலும் திருவருள்சாதனங்களை வழங்குவதிலும் பிறரன்பு தொண்டாற்றுவதிலும் உண்மையுள்ள ஊழியராய் இருக்கச் செய்தருளும். எங்கள்…

ஆயரின் சிறப்பு ஆசீர்
  1. இறைவனுக்கும் மக்களுக்கும் தம்மையே முழுதும் அர்ப்பணிக்க முன்வந்த உங்களை இன்று குருக்களாக திருநிலைப்படுத்திய நமது வானகத் தந்தை பணிவாழ்வில் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தந்து ஆசிர்வதிப்பாராக…
  2. தமது கல்வாரிப் பலியில் பங்கு கொடுத்து பலி நிறைவேற்ற அழைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் அருள்சாதனங்களை தகுந்த முறையில் நிறைவேற்ற மனத்தூய்மையும், அருளையும் பொழிவாராக…
  3. துணையாளராகிய தூய ஆவியார் தேவையான ஆற்றலையும், அருளையும், ஞானத்தையும், விவேகத்தையும், திடனையும் அளித்து உடல், உள்ள நலத்தோடு உங்களை காப்பாராக…
எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


Commentary: (திருப்பலி இறுதியில் ஆயரின் சிறப்பு ஆசீருக்குப் பிறகு) இப்பொழுது புதிய அருள்பணியாளர்கள் அருள்பொழிவு செய்யப்பட்ட தமது திருக்கரங்களால் ஆசீர் அளிக்கின்றார்கள்.

திருப்பலி முடிவில் Commentary: 
  • இப்போது ஆயரும் மேடையில் இருக்கின்ற அருள்தந்தையரும் புதிய குருக்களை வாழ்த்துவார்கள். அதன் பிறகு புதிய குருக்கள் ஆயருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். 
  • புகைப்படம் எடுத்த பிறகு அனைத்து குருக்களும் மேடைக்கு வந்து புதிய குருக்களை வாழ்த்துவார்கள். 
  • நிறைவாக புதிய குருக்கள் மேடையிலிருந்து கீலே வருவார்கள் அப்போது இறைமக்கள் அனைவரும் அமைதியாக வந்து புதிய குருக்களின் அர்ச்சிக்கப்பட்ட புனித கரங்களை திருச்சபையின் பாரம்பரிய விசுவாசத்தின்படி பரிசுத்த முத்தம் செய்து அருளை நிறைவாக பெற்றுச்செல்லுங்கள்.

திருமுழுக்கு


திருமுழுக்கு மறையறிவு:

திருமுழுக்கு என்னும் திருவருள்சாதனம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக அமைகிறது. கத்தோலிக் திருமறையின் மற்ற அருள்சாதனங்களைப் பெற நுழைவாயிலாகவும் அமைகிறது. திருமுழுக்கின் வழியாக ஜென்மப்பாவம்,கர்ம பாவம் நீக்கப் பட்டு நாம் கடவுளுடைய பிள்ளைகள் ஆகிறோம். மேலும் தூய ஆவியில் நாம் புதுப்பிறப்படைந்து கடவுளின் உரிமைப்பேறாகும் பேற்றினைப் பெறுகிறோம். கத்தோலிக்கத் திருமறையின் அங்கத்தினர் ஆகிறோம்.
திருமுழுக்கின் வழியாக நாம் புதுப்பிறப்படைவதோடு நாம் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை மனிதர்முன் வெளிப்படையாக அறிக்கையிட கடமைப்பட்டவர்களாகிறோம். நாம் ‘கிறிஸ்தவனாக’ ‘கிறிஸ்தவளாக’ வாழ அழைக்கப்படுகிறோம்.

தண்ணீர்:  தண்ணீர் பொதுவாக நாம் வாழ்வின் இன்றியமையாத பொருளாக அமைகிறது. தண்ணீரானது அனேக வேளைகளில்; சுத்தப்படுத்தப் பயன்படுத்துகிறோம். திருமுழுக்கில் தண்ணீரானது முக்கிய இடம் பெறுகிறது. தண்ணீர் பாவங்களை கழுவி கிறிஸ்துவில் நாம் மறுபிறப்படைந்துள்ளதையும் கிறிஸ்துவில் புதுவாழ்வு பெற்று அவரது உயிர்பிலும் பங்கு பெறுவோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். உரோமையர் 6:4-5

ஆயத்த எண்ணை பூசுதல்: திருமுழுக்குப் பெறுவோர் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாற்ற வேண்டி இப் புனித தைலம் பூசப்படுகிறது. 

வாக்குறுதிகளும் விசுவாச பிரமாணமும்: சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டுவிடுவதாகவும் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதாகவும் பெற்றோரும் ஞானத் தாய் தந்தையரும் வாக்குறுதி கொடுக்கின்றனர்.

திருத்தைலம் பூசுதல்: திருமுழுக்குப் பெற்றவர் புதுப்பிறப்படைந்த கிறிஸ்துவில் பெற்ற புதுவாழ்வில் கடைசிவரை நிலைத்து நிற்க வேண்டி ‘கிறிஸ்மா’ தைலம் பூசப்படுகிறது.

வெண்ணிற ஆடை: புதுப்படைப்பாக மாறியதையயும் அம்மாசற்ற வாழ்வை உங்கள் உறவினரின் சொல்லாலும் முன்மாதிரியாலும் மாசுபடாமல் முடிவில்லா வாழ்வுக்கு கொண்டுபோய் கொண்டுபோய் சேர்க்க அருள் வேண்டப்படுகிறது.

எரியும் திரி: பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று திருமுழுக்குப் பெற்றவர் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. விசுவாசத்தில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

எப்பேத்தா (திறக்கப்படு): 
குரு : செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.

தங்கள் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெறவேண்டும் பெற்றோர்களிடம் திருச்சபை எதிர்பார்ப்பவை:
  1. திருமுழுக்கு அருள்சாதனத்தின் போது பெற்றோரும் ஞானத் தாய், தந்தையும் கொடுத்த வாக்குறுதிகளின் படி அவர்கள் விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க முயற்சி செய்யவேண்டும். 
  2. பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கு கத்தோலிக்க விசுவாசத்தை கற்றுக்கொடுக்க போதிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதும், பிள்ளைகளை கத்தோலிக்க பள்ளிகளில் சேரச் செய்யவும், போதிய மறைக்கல்வியை கற்றுக் கொடுப்பதும் அல்லது கற்றுக்கொடுக்க வழிசெய்வதும் முக்கிய கடமையாகும்.
  3. குடும்பமாக ஜெபிப்பதும், சிறு பக்தி முயற்சிகளை சொல்லிக் கொடுப்பதும் எல்லாவற்றிகும் மேலாக கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகளான அன்பு, மகிழ்சி, சமாதானம், மன்னித்தல், பொறுமை, தாழ்ச்சி, நம்பிக்கை, விசுவாசம் ஆகிய புண்ணியங்களை பெற்றோர் பின்பற்றுவதும் பிள்ளைகளை அவ்வாறு வளர்பதும் பெற்றோரின் கடமையாகும். 
  4. ஞானப் பெற்றோர்கள் நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக தேர்ந்தெடுப்பது பெற்றோரின் கடமை. ஞானப் பெற்றோர்களும் தங்களின் ஞான்ப பிள்ளைகளுக்கு சிறந்த முன் மாதிரியாய் இருப்பதும் ஞான காரியங்களில் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கிய கடமையாகும்.

திருமுழுக்குச் சடங்குமுறை


குரு : உங்கள் குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்கள்?
பெற் : ............................... என்ற பெயரிட விரும்புகிறோம்.

குரு : (பெயர்)க்காக நீங்கள் இறைவனின் திருச்சபையிடம் கேட்பது என்ன?
பெற் : திருமுழுக்கு (அல்லது ஞானஸ்தானம்)

குரு : உங்கள் குழந்தை(களு)க்கு திருமுழுக்குக் கேட்கிறீர்கள். உங்கள் குழந்தை(கள்) கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து, கிறிஸ்து நமக்கு கற்பித்தது போல், இறைவனுக்கும், தங்கள் அயலாருக்கும் அன்பு செய்து வாழ அவர்களை விசுவாசத்தில் வளர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு; இதை உணர்ந்திருக்கிறீர்களா?
பெற் : உணர்ந்திருக்கிறோம்.

குரு : ஞானத்தாய் தந்தையரே, இக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் உதவி புரிவீர்களா?

குரு : (பெயர் ...................) (அல்லது குழந்தைகளே) கிறிஸ்தவ சமூகம் உங்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கின்றது. இந்த சமூகத்தின் பெயரால் நான் உங்கள் மீது சிலுவை அடையாளம் வரைகிறேன். பின்னர் உங்கள் பெற்றோரும், ஞானத்தாய் தந்தையரும் மீட்பராம் கிறிஸ்துவின் அடையாளத்தை உங்கள் மீது வரைவார்கள்.

(குரு மௌனமாக குழந்தையின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைய, தொடர்ந்து பெற்றோரும், ஞானப் பெற்றோரும் அவ்வாறே செய்கின்றனர்)

விசுவாசிகளின் மன்றாட்டு

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கின் அருளைப் பெறஇருக்கும் இக்குழந்தை(களு)க்காகவும், இவர்களுடைய பெற்றோர், ஞானத்தாய் தந்தையருக்காகவும் திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவருக்காகவும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை இறைஞ்சுவோமாக!

குரு : உம்முடைய இறப்பு, உயிர்ப்பு என்னும் ஒளிவீசும் தெய்வீக மறைபொருளால் திருமுழுக்கின் வழியாக இக்குழந்தைகள் மறுபிறப்பு அடைந்து திருச்சபையில் சேர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு : திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் வழியாக இவர்கள் விசுவாசமுள்ள சீடர்களாகவும், உமது நற்செய்தியின் சாட்சிகளாகவும், விளங்கச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : தூய ஆவியின் வழியாக இவர்களை விண்ணரசின் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : பெற்றோரும் ஞானப்பெற்றோரும் இக் குழந்தைகளுக்கு விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒரு : இவர்களுடைய குடும்பங்களை உமது அன்பில் என்றும் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஒரு : எங்கள் அனைவரிடமும் திருமுழுக்கின் அருளைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
புனிதர்களை நோக்கி மன்றாட்டு

குரு : 1. இறைவனின் அன்னையாம் புனித மரியாயே, 
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
2. புனித சூசையப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
3. புனித ஸ்நானக அருளப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
4. புனித இராயப்பரே, சின்னப்பரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 
5. புனித தோமையாரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 
6. புனித சவேரியாரே,
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

(கடைசியாக ) இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே.
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ங்கள்

பேய் ஓட்டும் செபம்

குரு : நித்தியரான எல்லாம் வல்ல இறைவா, தீமையின் ஆவியான சாத்தானின் ஆதிக்கத்தை எங்களிடமிருந்து அகற்றவும், இருளிலிருந்து மனிதனை விடுவித்து, உமது ஒளியின் வியத்தகு அரசில் கொண்டுவந்து சேர்க்கவும், உம் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினீர். இக்குழந்தைகளை சென்மப் பாவத்திலிருந்து மீட்டு உமது மாட்சியின் ஆலயமாக்கி, இவர்களில் தூய ஆவி குடிகொள்ளச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
எல் : ஆமென்.

ஆயத்த எண்ணெய் பூசுதல்

குரு : உங்கள் மீது கிறிஸ்து இரட்சகரின் அடையாளம் வரைந்து மீட்பின் எண்ணெய் பூசுகின்றோம். நம் ஆண்டவராகிய அதே கிறிஸ்துவின் ஆற்றல் உங்களைத் திடப்படுத்துவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் அவரே.

திருமுழுக்கு விழா முன்னுரை

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர், இக்குழந்தைகளுக்கு நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் புதுவாழ்வு அளித்தருளுமாறு செபிப்போமாக.

குரு : அன்பார்ந்த பெற்றோரே, ஞானத்தாய் தந்தையரே, ஞானஸ்நானம் எனும் திருவருள்சாதனம் வழியாக நீங்கள் ஒப்புக்கொடுத்த இக்குழந்தைகள் அன்புள்ள இறைவனிடமிருந்து நீரினாலும், ஆவியினாலும் புதுவாழ்வு பெறப்போகின்றார்கள். இவர்களில் இந்த இறைவாழ்வு பாவநோயிலிருந்து பாதுகாக்கப் பெற்று நாளுக்கு நாள் வளர்ச்சியடையுமாறு இவர்களை நீங்கள் விசுவாசத்தில் வளர்க்க முயல வேண்டும்.

ஆகவே. உங்கள் விசுவாசத்தினால் தூண்டப்பெற்று, இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் உங்கள் ஞானஸ்நானத்தை நினைவில்கொண்டு பாவத்தை விட்டு விடுங்கள்; இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிடுங்கள். அதுவே திருச்சபையின் விசுவாசம்; அதிலேதான் குழந்தைகள் ஞானஸ்நானம் பெறுகின்றனர்.
குரு : இறைமக்களுக்குரிய சுதந்தரத்துடன் வாழ, நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா?
எல் : விட்டுவிடுகிறேன்

குரு : பாவம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலிருக்க நீங்கள் பாவத்தின் மாயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகிறீர்களா?
எல் : விட்டுவிடுகிறேன்

குரு : பாவத்திற்குக் காரணனும், தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?
எல் : விட்டுவிடுகிறேன்

விசுவாசப் பிரமாணம்

குரு : வானமும், வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறோம்

குரு : அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் விற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறேன்

குரு : பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதர்களின் சமூக உறவையும், பாவமன்னிப்பையும் உடலின் உயிர்ப்பையும், நித்திய வாழ்வையும் விசுவசிக்கிறீர்களா?
எல் : விசுவசிக்கிறேன்

குரு : இதுவே நமது விசுவாசம். இதுவே திருச்சபையின் விசுவாசம். இதை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அறிக்கையிடுவதில் பெருமை கொள்கிறோம்.
எல் : ஆமென்.

திருமுழுக்கு அளித்தல்

குரு : ஆகவே உங்களோடு சேர்ந்து இப்பொழுது நாமெல்லாரும் அறிக்கையிட்ட திருச்சபையின்; விசுவாசத்தில் (பெயர் அல்லது இவர்கள்) திருமுழுக்குப் பெறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?
பெற். ஞானப்.: விரும்புகிறேன்

குரு : (மும்முறை தண்ணீர் ஊற்றி) பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்.

திருத்தைலம் பூசுதல்

குரு : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் உங்களைப் பாவத்திலிருந்து விடுவித்து, நீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் உங்களுக்கு மறுபிறப்பு அளித்துள்ளார். இப்பொழுது அதே கிறிஸ்து உங்கள் மீது மீட்பின் தைலம் பூசுகிறார். எனவே, நீங்கள் இறைமக்களோடு இணைக்கப்பெற்று, குருவும், ஆசிரியரும் அரசருமாகிய கிறிஸ்துவின் உறுப்புக்களாய் நிலைத்திருந்தது, நித்திய வாழ்வு பெறுவீர்களாக.

(பிறகு குரு கிறிஸ்மா (ஊhசளைஅய) எனும் திருத்தலத்தை திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவரின் உச்சந்தலையில் மௌனமாகப் பூசுகிறார்.)

வெண்ணிற ஆடை அணிவித்தல்

குரு : (திருமுழுக்கு வெண்ணிற ஆடையை ஒவ்வொருவருக்கும் கொடுத்து) நீங்கள் புதுப்படையாக மாறி, கிறிஸ்துவை அணிந்திருக்கிறீர்கள். இந்த வெண்ணிற ஆடை உங்களது மேன்மையின் அடையாளமாய் இருப்பதாக. உங்கள் உறவினரின் சொல்லாலும், முன்மாதிரிகையாலும் நீங்கள் உதவிபெற்று, இதை மாசுபடாமல் நித்திய வாழ்வுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பீர்களாக.
எல் : ஆமென்.

எரியும் திரி கொடுத்தல்

குரு : (பாஸ்கா திரியை கையில் தொட்டவாறு) கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
(குழந்தை(களி)ன் தந்தை(யர்) பாஸ்கா திரியிலிருந்து (தத்) தம் குழந்தையின் சார்பில் திரியைப் பற்ற வைக்கின்றனர்)

குரு : பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று இக்குழந்தைகள் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. விசுவாசத்தில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

எப்பேத்தா (திறக்கப்படு)

குரு : செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.
எல் : ஆமென்.

(திருப்பலியில் பெற்றோர், ஞானப்பெற்றோர் காணிக்கைப் பொருள்கள் எடுத்துச்சென்று குருவிடம் அளிக்கலாம்)

கிறிஸ்து கற்பித்த செபம்

குரு : அன்பார்ந்த சகோதரர்களே, திருமுழுக்கினால் மறுபிறப்பு அடைந்து இறைவனின் மக்களாகவே இருக்கும் இக்குழந்தைகள் உறுதிபூசுதலால் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெறுவார்கள். ஆண்டவரின் பீடத்தை அணுகி வந்து, அவரது திருப்பலி விருந்தில் பங்குகொள்வார்கள். திருச்சபையில் இறைவனைத் தந்தையென அழைப்பார்கள். நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உணர்வுடன், ஆண்டவர் நமக்குக் கற்பித்தது போல் இக்குழந்தைகளின் பெயரால் இப்போது ஒன்றாய்ச் சேர்ந்து செபிப்போம்.
எல் : பரலோகத்தில் இருக்கிற ....................

ஆசியுரை

குரு : எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் கன்னிமரியிடமிருந்து பிறந்த தம் திருமகன் வழியாக குழந்தைகள் மீது ஒளிரும் நித்திய வாழ்வின் நம்பிக்கையால் கிறிஸ்தவத் தாய்மார்களை மகிழ்விக்கின்றார். அவரே, இக்குழந்தைகளின் தாய்மார்களை ஆசீர்வதிப்பாராக. தாங்கள் பெற்றெடுத்த மக்களுக்காக இப்பொழுது நன்றிசெலுத்தும் இத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் எக்காலமும் நன்றி செலுத்துவார்களாக.
எல் : ஆமென்.

குரு : மண்ணக வாழ்வையும், விண்ணக வாழ்வையும் வழங்கும் எல்லாம் எல்ல இறைவனாகிய ஆண்டவர் இக்குழந்தைகளின் தந்தையரை ஆசீர்வதிப்பாராக. இதனால் இவர்கள் தத்தம் மனைவியருடன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தம் மக்கள் முன் சொல்லாலும், முன்மாதிரியாலும் விசுவாசத்தின் முதற்சாட்சிகளாய் விளங்குவார்களாக. 
எல் : ஆமென்.

குரு : நாம் நித்திய வாழ்வுபெற நீரினாலும், தூய ஆவியினாலும் நமக்கு மறுபிறப்பளித்த எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர் தம் விசுவாசிகளாகிய இந்த ஞானப் பெற்றோர்க்கு (இவர்களுக்கு) நிறை ஆசீர் அளிப்பாராக. இதனால், இறைமக்களிடையே இவர்கள் என்றும் எங்கும் உயிராற்றல்மிக்க உறுப்பினர்களாய்த் திகழ்வார்களாக. இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இறைவன் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் தமது சமாதானத்தை வழங்குவாராக. 
எல் : ஆமென்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.

அடக்கச் சடங்குமுறை


இறந்தவர் இல்லத்தில்

குரு: பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே.
எல்: ஆமென்.
குரு: நம் ஆண்டவரர் இயேசுகிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று, அவரைப் போற்றுவோம்.

(தீர்த்தம் தெளித்தபின், 130-ம் திருப்பாடல்)
குரு: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

1.ஒருவர்: ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
2.ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர், மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பவர்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
3.ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கிறேன், என் நெஞ்சம் காத்திருக்கின்றது, அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
4.விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, ஆம்,விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞசம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
5. இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு. பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலை மீட்பவர் அவரே.
எல்: ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: செபிப்போமாக.
ஆண்டவரே, உமது இரக்கத்தை கெஞ்சி மன்றாடும் எங்களுக்குச் செவிசாய்த்தருளும். உமது கட்டளைப்படி இவ்வுலகை விட்டகன்ற உம் அடியார் (பெயர்) உடைய ஆன்மாவை அமைதியும் ஒளியும் நிறைந்த இடத்தில் வரவேற்று, உம் புனிதருடைய தோழமையில் சேர்த்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

ஆலயத்துக்குப் பவனி

(இத்திருப்பலியில் பங்கேற்பவர் ஏற்கெனவே வேறொரு திருப்பலியில் நன்மை வாங்கிருப்பினும், மறுமுறையும் இத்திருப்பலியில் நன்மை உட்கொள்ளலாம். நன்றி மன்றாட்டு முடிந்ததும், தொடர்ந்து குருவும் பணியாளரும் சவப் பெட்டி அருகே சென்று மக்களை நோக்கி நிற்கின்றனர்.)

குரு: விசுவாசிகளின் வழக்கப்படி, இறந்தோரை நல்லடக்கம் செய்யும் கடமையை நிறைவேற்றக் கூடியிருக்கும் நாம், இறைவனைப் பக்தியுடன் மன்றாடுவோம். அனைத்தும் அவருக்கென்றே, உயிர் வாழ்கின்றன. நம் சகோதரரின் (சகோதரியின்) உடலை நலுவுற்ற நிலையில் நாம் அடக்கம் செய்வதாலும், புனிதரின் வரிசையில் இது வல்லமையுள்ளதாக உயிர்த்தெழச்செய்வாராக. இவரது ஆன்ம புனிதரின் கூட்டத்திலே இடம்பெறக் கட்டளையிடுவாராக. தீர்ப்பிடும்போது இறைவன் இவருக்கு இரக்கம் காட்டுவதால் சாவே இவருக்கு மீட்பு அளிப்பதாகி, பாவக்கடன் ஒழிவதாக. பிதாவிடம் இவர் அன்புறவு கொள்ள நல்லாயன் இவரை அழைத்துச் செல்வாராக. இவர் என்றென்றும் வாழும் மன்னரின் பரிவாரத்தில் முடிவற்ற இன்பமும் புனிதரின் தோழமையும் பெற்று மகிழ்வாராக.

பிரியாவிடை எதிர் பாடல்....
இறைவனின் புனிதரே, துணை நிற்க வருவீர்,
தேவனின் தூதரே, எதிர் கொண்டு வருவீர்!
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
எல்: உம்மைத் தம்மிடம் அழைத்த கிறிஸ்து
உம்மை ஏற்றுக் கொள்வாராக.
தூதரும் உம்மை ஆபிரகாமின்
மடியில் கொண்டு சேர்ப்பாராக!
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.
எல்: நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே,
இவருக் கின்று அளித்திடுவீரே,
முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிர்க.
குரு: இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

(அல்லது கீழ்கண்ட பாடல்)

சென்று வா கிறிஸ்தவனே உலகை
வென்றுவிட்டாய் நீ விசுவாசத்தால்!
சரணங்கள்
உற்றார் உறவினர் நண்பரெல்லாம்
சுற்றி நின்று வழியனுப்ப,
உற்ற துன்பத்தில் ஆறுதலாய்,
உதவும் திருச்சபை அருகிருக்க!
இறைவனின் புனிதரே துணைவருவீர்!
தேவனின் தூதரே வந்தழைப்பீர்!
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்!
ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்!
படைத்த தந்தை உனை ஏற்பார்!
மீட்ட திருமகன் உனைக் காப்பார்!
அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார்!
அனைத்து புனிதரும் உனைச் சேர்வார்!
(பாடல் முடிந்ததும் குரு தொடர்ந்து செபிப்பார்.)

குரு: கிறிஸ்துவுக்குள் இறந்த அனைவரோடும் இவரும் இறுதி நாளில் உயிர்த் தெழுவார் என்னும் உறுதியான நம்பிக்கையுடன், இரக்கம் மிகுந்த தந்தையே, உம்முடைய கைகளில் எம் சகோதரரின் (சகோதரியின்) ஆன்மாவை ஒப்படைக்கிறோம்.
எனவே, ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுக்குத் தயவாய் செவி சாய்த்து, உம் அடியாருக்குப் பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்தருளும். மேலும், இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் கிறிஸ்துவை சந்தித்து, உம்மோடும் உம் சகோதரரோடும் (சகோதரியோடும்) எந்நாளும் ஒன்று சேர்ந்திருக்குமட்டும் விசுவாசம் நிறைந்த சொற்களால் ஒருவரையொருவர் தேற்றிக் கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(பிரியாவிடைச் சடங்கு முடித்து இறந்தவர் உடலைக் கல்லறைத் தோட்டத்திற்குத் தூக்கி செல்கையில் கீழ்வரும் பாடல் இடம்பெறலாம்.) 



இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக

1. நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்
நிதம் அவர் நினைவு நிலைத்திடுக (2)
தீயவை யாவும் விலகிடுக - 2 - அவர்
தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக

2. விண்ணக சீயோன் நகரினிலே நிதம்
மண்ணால் உம் புகழ் அவர் இசைக்க (2)
புனிதர் வான தூதருடன் - 2 - உம்மை
புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக
கல்லறைத் தோட்டத்திற்குப் பவனி

இறைவா இவரது திருப்பயணம் 
இனிதே அமைந்திட இறைஞ்சுகிறோம்!
சரணங்கள்
பாஸ்காப் பயணம் இதுவே தான்.
கிறிஸ்தவர் செல்லும் வழி இது தான்,
இறப்பைக் கடந்து உயிர்ப்பிற்கு,
இசைந்து செல்லும் வழி இது தான்.
அடிமைத் தலையை அறுத்தெரிந்து,
ஆண்டவன் மக்கள் அன்றொரு நாள்,
உரிமை நாடு கடந்து சென்றார்,
உண்மை இங்கு நடப்பது தான்!
சிலுவை சுமந்த வழியினிலே,
சீர்மிகு உயிர்ப்பும் பிறந்ததுவே!
சிலுவை பதித்த சுவடுகளில்
சீடர் இருவரும் செல்கின்றார்!
துன்பத்தின் வழியாய் திருச்சபையும்,
தூரப் பயணம் போவது போல்,
பயணத்தின் முடிவில் இவ்வடியார்
பரகதி சேர்ந்திட இறைஞ்சிடுவோம்!
விண்ணக விருந்து உண்டிடவே,
விரைந்து செல்லும் இவ்வடியார்,
திருமகன் வந்து பார்க்கையிலே,
திருமண உடையுடன் திகழ்ந்திடவே!
ஆண்டவர் அழைத்த நேரத்திலே,
அணையா விளக்குடன் ஆயத்தமாய்,
உடனே செல்லும் ஊழியராம்,
உண்மையில் பேறுபெற்றவரே!
அந்நிய நாட்டின் எல்லைதனை,
அடியார் இவரும் கடந்துவிட்டார்.
தாயகம் திரும்பும் பயணியிவர்,
தவறாது தன்வீடு சேர்ந்திடவே!
எனக்கு வாழ்வு கிறிஸ்துவே தான்!
என்றும் அவரோ டிருப்பதுதான்!
இழப்பு அனைத்தும் அவரின்றி
இறப்பு ஆதலின் ஆதாயம்!

கல்லறைத் தோட்டத்தில்

குரு: செபிப்போமாக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் கல்லறையில் மூன்று நாள் துயில் கொண்டதால், உம்மீது விசுவாசம் கொண்ட அனைவரின் கல்லறைகளையும் அர்ச்சிக்கின்றீர். எனவே, உடல் அடக்கத்திற்குப் பயன்படும் இக்கல்லறைகள் உயிர்த்தெழும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. நீர் உம் அடியாரை உயிர்ப்பித்து இவருக்குப் பேரொளி தரும் அந்த நாள் மட்டும் இவர் கல்றையில் அமைதியுடன் துயில் கொண்டு இளைப்பாறச் செய்தருள்வீராக. உயிர்ப்பும் உயிரும் நீரேயாதலால் இவர் உயிர்த்தெழுந்த பின் உம் திருமுக ஒளியில் விண்ணகத்தின் நித்திய ஒளியைக் காண்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே. உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

(குரு கல்லறைக் குழியின் மீது தீர்த்தம் தெளித்து, தூபம்காட்டுவார்) 

குரு: நம் சகோதரரை (சகோதரியை) இவ்வுலக வாழ்வினின்றும் தம்மிடம் அழைத்துக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் திருவுளம் கொண்டதால், இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும் படி இவர் உடலை நிலத்திற்கு கையளிக்கிறோம். ஆவியினும், இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார். ஆதலால் நம் சகோதரரை (சகோதரியை) ஆண்டவரிடம் ஒப்படைப்போம். ஆண்டவர் இவரைத் தம் அமைதியினுள் ஏற்றுக்கொள்வாராக, இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வாராக.

விசுவாசிகள் மன்றாட்டு

உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான். உயிர் வாழ்க்கையில் விசுவாசம் கொள்பவன் எவனும் ஒருபோதும் சாகான் என்று உரைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம் சகோதரருக்காக (சகோதரிக்காக) மன்றாடுகிறோம். 
- இறந்து போன லாசருக்காக கண்ணீர் சிந்தினீரே, எங்கள் கண்ணீரையும் துடைக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- இறந்தோர் உயிர் பெற்றெழச் செய்தீரே, எங்கள் சகோதரருக்கு (சகோதரிக்கு) நித்திய வாழ்வளிக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- மனந்திரும்பிய கள்ளனுக்கு நீர் வானகம் தருவதாய் உறுதியளித்தீரே, எங்கள் சகோதரரையும் (சகோதரியையும்) வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எங்கள் சகோதர ( சகோதரியை ) ஞானஸ்நான நீரினால் கழுவி, திருப்பூசுதலால் முத்திரையிட்டீரே, இவரை வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எம் சகோதரருக்கு (சகோதரிக்கு) உம் உடலையும் இரத்தத்தையும் திரு விருந்தாக அளித்தீரே, வானரவின் விருந்திலும் இவரை அமரச் செய்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
- எம் சகோதரரின் (சகோதரியின்) பிரிவாற்றமையால் துயருரும் நாங்கள் விசுவாசத்திலும், நித்திய வாழ்வின் நம்பிக்கையினாலும் ஆறுதல் பெற உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(அனைவரும் சேர்ந்து கர்த்தர் கற்பித்த செபம் சொல்ல, குரு இறந்தவரின் உடல்மீது தீர்த்தம் தெளித்து, தூபம் காட்டுகிறார்.)

செபிப்போமாக
ஆண்டவரே, உமது திருவுளப்படி வாழ்ந்து இறந்த உம் அடியார் தம் தீய செயல்களுக்குத் தண்டனை பெறாதபடி இரக்கம் காட்டியருளும். இவரது மெய்யான விசுவாசம் இவ்வுலகில் இவருக்கு விசுவாசிகளின் கூட்டத்தில் இடம் அளித்தது போல், உமது இரக்கம் இவரை மறுவுலகில் வானதூதரின் கூட்டத்திலும் சேர்க்க வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

முதல்: ஆண்டவரே, நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்.
துணை: முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக.
(இறந்தவரின் உடலை கல்லறையில் வைக்கும் போது அல்லது குழியை மூடும் போது கீழ்வரும் பாடல் பாடலாம்)

இறுதிப் பாடல்

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோருக்கு ஓயாத்
தஞ்சமும் ஆதரவும் நீயே - 2

1. தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து
தூய வளன் கதியினில் சேர்ந்து - உன்னை
துதித்திட அருள் செய்வாய் புரிந்து

2. உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள்
உடலுக்கும் ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக்
கரையினால் துறை சேரார் இன்னும்

நோயில் பூசுதல்


நோயில் பூசுதல் - மறையறிவு

நோயில் பூசுதல் என்னும் திருவருள்சாதனமானது குணப்படுத்தும் திருவருள்சாதனம். மனிதனின் நோயும் இறப்பும் கடவுளின் திட்டத்தில் இருந்ததில்லை. இயேசுவே பல முறைகளில் நோயுற்றவர்களை குணமாக்குவதையும், இறந்தோரை உயிர்ப்பிப்பதையும் நற்செய்தியில் நாம் காண்கிறோம்.

தாய் திருச்சபையும் நோயுற்றோருக்கு சிறப்பான பணியைச் செய்யக் காத்திருக்கின்றது. நோயுற்றோர்க்கு நற்கருணை வழங்குவதிலும், நோயுற்றோரை மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ சென்று பார்த்து வருவது குருக்களின் முக்கிய கடமையாகும். உடலும் ஆன்மாவும் சேர்ந்ததுதான் மனிதன். மனிதனின் உடல்நலத்திலும் ஆன்மீகநலத்திலும் நலம் பெற்று வாழ திருச்சபை பல்வேறு வகைகளில் உதவிசெய்கிறது.

நாம் சுகவீனமுற்றிருக்கும் போது பயப்படுகிறவர்களாகவும் மனத்தளவில் சோர்வுற்றவர்களாகவும் காணப்படுகிறோம். பலவேளைகளில் கடவுள் நம்மோடிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். நமது சுகவீனத்தில் இயேசுவே நமக்கு துணையாய் இருந்து நமக்கு பலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதுவும் நோயில் பூசுதல் என்னும் திருவருள்சாதனத்தின் வழியாக நமக்கு நற்சுகத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கிறார்.
இயேசு தம் பன்னிரு சீடர்களைச் சுற்றிலுமுள்ள ஊர்களுக்கு அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுச் சென்று, மக்கள் மனம் மாற வேண்டும் என்று பறைசாற்றினார்கள். பல பேய்களை ஓட்டினார்கள். உடல் நலமந்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள் (மாற்கு6 : 12, 13)
இவ்விதம், நோயில் பூசுதல் திருவருள்சாதனத்தை இயேசு நிறுவினார் என்று அறிகிறோம்.

புனித யாகப்பரும் இதை உறுதிபடுத்தி, பரிந்துரைக்கிறார்: உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவர். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். (யாக்.5 : 14, 15) சாவின் ஆபத்தில் இருக்கத் தொடங்கும் போதே அத்தருணம் இந்த அருள்சாதனத்தைப் பெறும் சரியான நேரம் என உறுதியாகச் சொல்லலாம் (திருவழிபாடு 73)

இந்த அருள்சாதனத்தால் இறை நம்பிக்கை வளர்கிறது, இறப்பின் போது ஏற்படும் கவலைகளையும் சோதனைகளையும் தாங்க உறுதியான அருள், இறைவனின் திருவுளமாயின் நோயினின்று விடுதலை, பாவமன்னிப்பு, கழுவாய் கிடைக்கின்றன.



தொடக்க சடங்கு

குரு: ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக.
எல்: உம்மோடும் இருப்பதாக.

குரு: (நோயாளியின் மீதும் அறையிலும் தீர்த்தம் தெளித்துக் கொண்டு) இத்தீர்த்தம் நாம் பெற்ற திருமுழுக்கை நினைவூட்டுவதாக, தம் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட கிறிஸ்துவையும் நமக்கு நினைவுப்படுத்துவதாக.
அன்புள்ள சகோதரர்களே, நோயுற்றோர் உடல் நலம் தேடி ஆண்டவரிடம் வந்தார்கள் என்று நற்செய்தி கூறுகிறது. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்காக கொடிய பாடுபட்ட எம்பெருமான், இதோ, தம் பெயரால் கூடியிருக்கும் நம் மத்தியில் எழுந்தருளியிருக்கிறார்.
உங்களுள் யாரேனும் நோயிற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர் மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும் போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார் என்று அப்போஸ்தலரான புனித யாகப்பர் வழியாக நமக்குக் கட்டளை தருபவரும் அவரே.
எனவே, நோயிற்றிருக்கும் நம் சகோதரர் (சகோதரி) மீது கிறிஸ்து பெருமானின் அருளும் வல்லமையும் இறங்கி இவரது வேதனையைத் தணித்து, உடல் நலம் அருளுமாறு உருக்கமாக மன்றாடுவோம்.

மன்னிப்பு

குரு: சகோதரரே இத்திருச்சடங்கில் நாம் தகுதியுடன் பங்கு பெற, நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

எல்: எல்லாம் வல்ல இறைவனிடமும்...

குரு: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

மக்.: ஆமென்.

இறைவாக்கு

சகோதரரே, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் கேட்போம்
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்,.. (மத். 8 ~ 5 - 13)

மன்றாட்டுக்கள்

குரு: சகோதரரே, நம் சகோதரர் (சகோதரி) ....க்காக இறைவனைத் தாழ்ந்து பணிந்து விசுவாசத்தோடு வேண்டிக் கொள்வோம்.
  1. ஆண்டவரே, இத்திருப்புசுதல் வழியாகத் தேவரீர் பரிவன்புடன் இவரைச் சந்தித்துத் தேற்றியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.
  2. தீமை அனைத்திலுமிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. இங்குள்ள நோயாளிகள் அனைவருடைய வேதனைகளையும் நீர் தணித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் நீர் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. இவரைப் பாவத்திலிருந்தும், சோதனை அனைத்திலுமிருந்தும் விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குரு: உமது பெயரால் நாம் இவர் தலைமீது கைகளை வைப்பதால், இவருக்கு நல் வாழ்வும், உடல் நலமும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

திரு எண்ணெய் மீது நன்றி மன்றாட்டு

குரு: எங்களுக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் உம் திருமகனை உலகிற்கு அனுப்பிய எல்லாம் வல்ல தந்தையாம் இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: எங்கள் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்து, எங்கள் பிணிகளைப் போக்கத் திருவுளமான ஒரே திருமகனான இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: உமது நிலையான வல்லமையால் எங்கள் உடலின் சோர்வினைப் போக்கி, திடப்படுத்தி எங்களுக்குத் துணை நிற்கும் தூய ஆவியாம் இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: அன்புத் தந்தையே, உம் அடியார் மீது திரு எண்ணெய் பூசுகிறோம். இதனால் இவர் வேதனை தணிந்து, ஆறுதல் பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

திரு எண்ணெய் பூசுதல்
(குரு நோயாளியின் நெற்றியிலும் கைகளிலும் திரு எண்ணெய் பூசி கூறுவதாவது)
இப்புனித பூசுதலினாலும், தம் அன்பு மிகுந்த இரக்கத்தாலும், ஆண்டவர் தூய ஆவியின் அருளைப் பொழிந்து உமக்குத் துணை புரிவாராக.

எல்: ஆமென்.

குரு: இவ்வாறு, உம் பாவங்களைப் போக்கி, உமக்கு நலம் அளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக.

எல்: ஆமென்.

குரு: செபிப்போமாக. இரக்கமுள்ள எங்கள் மீட்பரே, தூய ஆவியின் அருளால், இந்த நோயாளியின் சோர்வையும் பிணிகளையும் தணித்து, இவருடைய புண்களை ஆற்றி பாவங்களைப் போக்கி, உள்ளத்திலும் உடலிலும் இவர் படும் வேதனைகளை அகற்றி, உள்ளும் புறமும் இவர் முழுமையாக நலம்பெறத் தயைபுரியும். இவ்வாறு இவர் உமது பரிவன்பினால் நலமடைந்து, பழைய நிலை பெற்று, தம் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு கற்பித்தபடியே நாம் ஒருமித்து இறைவனை வேண்டுவோம்.
எல்: பரலோகத்தில் இருக்கிற....
(தேவைப்படின், இங்கு இறுதி வழியுணவு வழங்கலாம்.)

ஆசீர்..........

குரு: தந்தையாகிய இறைவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: இறைவனின் திருமகன் உம்மைக் குணப்படுத்துவாராக.

எல்: ஆமென்.

குரு: தூய ஆவி உம்மீது ஒளிவீசுவாராக.

எல்: ஆமென்.

குரு: உமது உடலைக் காத்து ஆன்மாவை மீட்பாராக.

எல்: ஆமென்.

குரு: உமது உள்ளத்துக்கு ஒளிதந்து உம்மை வானக வாழ்வுக்கு வழி நடத்துவாராக.

எல்: ஆமென்.

குரு: இங்கிருக்கும் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

திருமணம்


திருமணம் - மறையறிவு

முன்னுரை:  அன்பும் பிணைப்பும்: கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்குகிறார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்பு@ பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களையே முழுமையாக தன்னலமற்ற அர்ப்பணிப்பால் ஒரு குடும்பமாக வாழ அழைக்கப்படுகிறார்கள்.

உடன்படிக்கை: கத்தோலிக்க திருமண அருள்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவனும் மனைவியும் எந்தவித வறுப்புறுத்தலுமன்றி, எவ்வித வெளி அச்சுறுச்துதலுமின்றி முழுமனதுடன் பரிமாறிக்கொள்ளும்

வாக்குறுதி: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருள்சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. குருவும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளளே. இவ்வாக்குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது. 

கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் இப் புது நிலமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்கு இந்த அருள்சாதனத்தின் வழியாக வலுப் பெறுகின்றனர். ஒருநிலையில் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இந்த திருவருள்சாதனத்தின் ஆற்றலால் அவர்கள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர், விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்கள் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர், அவ்விதமே ஒருவர் ஒருவரைப் புனிதப்படுத்துகின்றனர், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகிறார்கள்.

திருச்சபையின் வழிகாட்டுதல்: குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர் என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் புனிதமடையத் தங்களுக்குரிய வகையில் உதவுகிறார்கள். (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை: 48) 
திருமண அன்பு திருமணத்திற்கே உரிய செயலாகிய தாம்பத்திய உறவில் வெளிப்படுத்தப்படுகிறது, முழுமையடைகிறது. ஆகையால் எச்செயல்கள் வழியாக மணமக்கள் தூய்மையான முறையில் தமக்குள் நெருங்கி ஒன்றிக்கிறார்களோ, அச்செயல்கள் நேர்மையானவை, மாண்பு பெற்றவை.... மணமக்கள், புனித வாழ்வு நடத்துவதற்குரிய அருளால் வலுப்பெற்று, அன்பின் உறுதி,பெருந்தன்மையுடைய உள்ளம்,தியாக உணர்வு ஆகியவற்றை விடாமுயற்சியடன் கடைப்பிடித்து அவற்றை அடைந்திட செபத்தில் வேண்டுதல் தேவை. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:49)

குழந்தைகள் திருமணத்தில் மிகச் சிறந்த கொடையாக இருப்பதுடன், பெற்றோரின் நலனுக்கும் அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். (2 வத். சங்க ஏடு:இன்றைய உலகில் திருச்சபை:50)

மணமக்களே தங்களுக்குள் ஒரே அன்பாலும் மன ஒற்றுமையாலும் ஒருவர் ஒருவரை புனிதப்படுத்துவதாலும் இணைந்திருப்பார்களாக. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:52)

தயாரிப்பு: இத்திருவருள்சாதனத்தைப் பெறுவதற்கு தக்க தயாரிப்பு தேவை. இத்தயாரிப்புக்காக ஒவ்வொறு பங்கிலுமோ அல்லது மறைவட்ட அளவிலோ அல்லது மறைமாவட்ட அளவிலோ பயிற்சி வகுப்புகள் அல்லது கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இப் பயிற்சி வகுப்புகள், திருமணம் முடிக்க இருக்கும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமண வயது வந்த ஆண், பெண் யாரும் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கு கொள்ளாம். 

ஆலோசனைகள்:  ஆன்மீக தயாரிப்பு: திருமணம் என்பது வாழ்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி. என்றும் நினைவில் நிற்கக்கூடியது. இதற்கு நல்ல தயாரிப்புடன் பெற்றோரும் மணமக்களும் ஆயத்தம் செய்யவேண்டும். மணமகனும் மணமகளும் ஆன்மீக தயாரிப்பாக நல்ல பாவசங்கீத்தனம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் மணமக்கள் இதைச்செய்ய பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மணமக்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் வாய்ப்பு இருந்தால் அவர்களும் இந்திருவருள்சாதனத்தைப பெறுவது நல்ல காரியம். தங்கள் இல்வாழ்வு நன்றாக அமைய மணமக்கள் வேண்டுவதோடு இரு குடும்பங்களும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். மற்ற எல்லா ஏற்பாடுகளை திட்டமிட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்வது போல் திருப்பலிக்கும் செய்ய முன் வரவேண்டும்.

திருப்பலி தயாரிப்பு: முதன்முதலாக சரியான நேரத்திற்கோ அதற்கு முன்னதாகவோ மணமக்கள் ஆலயதிற்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும். குருக்களையும் மற்றவர்களையும் நமது சௌகரியத்திற்காக காக்க வைப்பதை தவிற்க வேண்டும். அதற்காக பெற்றோர்கள் - சடங்குகள்,அழகு படுத்துதல், ஆசி பெறுதல், வாகன ஏற்பாடு, இசை முழக்குவோர், எல்லவற்றையும் தக்க நேரத்தில் தயாராக்க கவனமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலயத்தையும் அலங்காரம் செய்ய தகுந்த உறவினர்களையோ முடியாத பட்சத்தில் பூக்களை கொண்டாவது பீட அலங்காரங்களைச் செய்யலாம். வாசகங்களை மணமக்களே வாசிக்க முன்வரவேண்டும். அல்லது மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் வாசிக்க முன்வரலாம். அதை முன்னரே பங்குத் தந்தையிடம் ஆலோசனை செய்து வாசகங்களை வாசித்துப் பழகி வரலாம். சிறப்பான விசுவாசிகள் மன்றாட்டை குடும்பத்தாரே தயார் செய்து பாடலாம் அல்லது வாசிக்கலாம்.(இந்த இணையத்தளத்தில் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது). மணமக்களும் அவர்களின் குடும்பத்தாரும் காணிக்கைப் பவனியில் கலந்து கொள்ளாம். மனக்கலக்கத்தோடும் சோகமான முகத்துடனும் வருவதை தவிற்க முயலவேண்டும். மகிழ்ச்சியோடு புதிய வாழ்கையை இறைவனின் திருமுன்னிலையில் ஆரம்பிக்க போகிறோம் என்ற உணர்வுடன் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வரமுற்படவேண்டும். பராக்கைத் தவிர்த்து திருப்பலியில் அனைவரும் பக்தியோடு மணமக்களுக்காக ஜெபிப்பது மிக மிக முக்கியம். 

சம்பிரதாயச் சடங்குகள்: சடங்குகள் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் சிறுபிழைகள், எதிர்பாராத அசௌகரியங்கள், குறைகள் ஏற்படும போது அதை பெரிது படுத்தாமல், பெருந்தன்மையுடனும் விட்டுகொடுத்தும், நான் பெரியவன் நீ பெரியவன் என்று பெருமை பாராட்டாமல் இரு குடும்பத்தாரும் இணங்கிய முறையில் நடந்துகொள்வது மணமக்களுக்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதை நினைவில் இருத்தி திருமணவிழாவினை இரு குடும்பத்தாரும் அனைவரும் போற்றும் படியாக நடத்திக்காட்ட முன்வரவேண்டும்.



வருகைச் சடங்கு :

(குரு பூசைக்குரிய திருஉடைகள் அணிந்து பணியாளரோடு ஆலய வாசலிலே அல்லது வசதியைப் பொறுத்து, பீடக்கிராதியிலே நின்று வரவேற்கிறார் )

குரு : அன்புமிக்க மணமக்களே, திருமண அருள்சாதனத்தை முறையே நிறைவேற்றி இறைவனின் அருளைப் பெற அவரது திருச்சன்னிதியை நாடி வந்திருக்கிறீர்கள். உங்களோடு இன்று திருச்சபையும் மகிழ்கிறது. பரமனின் திருமுன் பக்தியுடன் வருக! என உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

(பணியாளர் முன் செல்ல, பின்னர் குரு, மணமக்கள், பெற்றோர், சாட்சிகள் என்ற வரிசையாக பவனி பீடத்திற்கு செல்லும். அப்போது மக்கள் வருகைப் பல்லவி பாடுவர்.)

வருகைப் பல்லவி (சங். 19  3,5)

ஆண்டவர் தம் திருத்தலத்தினின்று உங்களுக்குத் துணைசெய்வாராக. சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் இதயம் விரும்புவதை அவர் உங்களுக்கு அருள்வாராக! உங்கள் கருத்தையெல்லாம் நிறைவேற்றுவாராக!

பூசையின் தொடக்கச் சடங்குகள்:

வருகைப் பாடல்
  
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே !

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம் 
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் -2
பரிவுள்ள இறைவன் திருவுளம் ஏற்போம் - அன்பினில்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்
பிறனையும் நம்மைப் போல் நினைத்திடவேண்டும் - அன்பினில்


குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
மக்கள்: ஆமென்.
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.

மன்னிப்பு வழிபாடு:

குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.
( சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதரர் சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவரியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமேஎன் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய மரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன். 
குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!

மக்கள்: ஆமென்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும்.

வானவர் கீதம்:

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.

ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.

(பாடல் திருப்பலியில்) 

உன்னதங்களிலே இறைவனுக்ககே மாட்சிமை உண்டாகுக. 
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே. 
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம். 
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். 
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே. 
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே. 
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே. 
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே. 
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர். 
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர். 
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர். 
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர். 
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர். 
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர். 
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் 
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.

சபை மன்றாட்டு :

குரு : செபிப்போமாக.
அனைத்துலகையும் ஆண்டு நடத்தும் இறைவா, திருமண இணைப்பை ஒரு மாபெரும் அன்பின் அருள்சாதனமாகவும், கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் உள்ள அன்புறவின் அடையாளமாகவும் ஏற்படுத்தியதற்காக உம்மைக் போற்றுகிறோம். உம்முடைய பிள்ளைகளாகிய... இவர்களுக்காக நாங்கள் புரியும் வேண்டுதல்களைக் கேட்டருளும். இவர்கள் உம்மீதும் ஒருவர் ஒருவர்மீதும் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையால், தங்களது அன்பை இன்று ஒருவர் ஒருவருக்காக அர்ப்பணிக்கிறார்கள். இவர்களது வாழ்வு அந்த அன்பின் பேருண்மைக்குச் சான்று பகர்வதாய் அமைவதாக. உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்- ஆமென்.

முதல் வாசகம்:

குரு: மனிதனைப் படைத்த இறைவன், அவனுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் இருக்க, அவனது விலாவெலும்பிலிருந்தே முதல் பெண்ணைப் படைத்தார். இதனால் அவர் மனிதனின் அன்புக்குரியவர் ஆகிறார் என்பதை தொடக்க நூலிலிருந்து வாசிக்க கேட்போம்.

தெடக்க நூலிலிருந்து வாசகம். அதிகாரம் 2, இறைவசனங்கள் 18 முதல் 24 வரை

பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான் தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான்.இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான் இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு
எல். -இறைவா உமக்கு நன்றி.

பதிலுரைப் பாடல் : சங். 32

ஆண்டவருடைய திருவருளால் 
அவனியெங்கும் நிறைந்துள்ளது!

அவரை இறையாய்க் கொள்ளும் மக்கள் 
அவர் பொருளாய்த் தேர்ந்தோர் பேறுபெற்றோர்,
தமக்கஞ்சிடுவோரைப் பார்க்கிறார் ஆண்டவர்
தம் அருளை நம்பினோரைக் கண்நோக்குகிறார் (ஆண்)

நம் ஆன்மா காத்திருப்ப தவர்க்காக 
நமக்குதவி கேடயமும் அவரே!
மகிழ்கின்ற தவரில் நமது உள்ளம்,
வைக்கிறோம் திருப்பெயரில் நம்பிக்கை (ஆண்)

இரண்டாம் வாசகம் இரண்டாம் வாசகம் (1 இரா 3  1-9) 
அப்போஸ்தலரான புனித பேதுரு முதல் திருமுகத்திலிருந்து வாசகம், அதிகாரம் 3 இறைவார்த்தைகள் 1 முதல் 9 வரை.

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது. முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள் தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள். அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் "தலைவர்" என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள். அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும். இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள் பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள் மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு
எல். -இறைவா உமக்கு நன்றி.

வாழ்த்தொலி:
  
அல்லேலூயா (1அரு.4  8,11) 
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். 
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! 
அனை: உம்மோடும் இருப்பாராக!

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 10:6-9
ஆண்டவரே உமக்கு மகிமை.

அக்காலத்தில் படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

குரு: இது கிறிஸ்துவின் நற்செய்தி
மக்கள்: கிறிஸ்துவே உம்மைப் புகழ்கின்றோம்.

மறையுரை :

திருமணச்சடங்கு

அறிவுரை

குரு : அன்புமிக்க மணமக்களே, திருச்சபையின் திருப்பணியாளர்கள் முன்பாகவும், இத்திருக்கூடடத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் அன்பைக் கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். ஏற்கெனவே அவர் உங்களைப் புனித திருமுழுக்கால் அர்ச்சித்துள்ளார், இப்போதோ மற்றொரு திருவருள்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள்வளம் ஈந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றார். எனவே, உங்கள் கருத்தை அறிந்து கொள்ள, திருச்சபையின் முன்னிலையில் உங்களை வினவுகிறேன்.

(மணமக்கள் இருவரும் தனித்தனியே வினாக்களுக்குப் பதில் கூற வேண்டும்)

குரு: (பெயர்...பெயர்) நீங்கள் இருவரும் முழுமனச் சதந்திரத்துடன் திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கிறீர்களா?
மணமக்கள் : ஆம் வந்திருக்கிறோம்.

குரு: நீங்கள் மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி, வாழ்நாளெல்லாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் தயாராய் இருக்கிறீர்களா?
மணமக்கள்: ஆம், தயாராய் இருக்கிறோம்.

குரு: இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடன் ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்டத்திற்கும் ஏற்றப்படி வளர்ப்பீர்களா?
மணமக்கள்: ஆம் வளர்ப்போம்.

மன ஒப்புதல்:

குரு : நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால், உங்கள் வலது கைகளைச் சேர்த்துப் பிடியுங்கள், இறைவன் திருமுன், திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.

(இருவரும் கைகளைச் சேர்த்து பிடிக்கிறார்கள்)

மணமகன் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

மணமகள் : (பெயர்) என்னும் நான், (பெயர்) என்னும் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

குரு : திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிப்படுத்தி, தம் ஆசியை உங்கள் மீது நிறைவாய் பொழிந்தருள்வாராக! இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

மக்கள்: ஆமென்.

மாங்கலியம் அணிவித்தல்:

குரு : (மாங்கலியத்தை ஆசீர்வதித்து) ஆண்டவரே, உம் அடியார் இவர்களையும் இவர்களது அன்பையும் ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தியருளும். இந்த மாங்கலியம் இவர்களுக்குப் பிரமாணிக்கத்தின் அடையாளமாய் அமைந்து, ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை ஆழந்த அன்பையும் நினைவூட்ட வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

மணமகன் : (மணமகளின் பெயரைச் சொல்லி) ... என் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கலியத்தை பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்து கொள்.
(மாலைகள் அருகிலிருந்தால் அவற்றை குரு எடுத்துத் தர, மணமக்கள் ஒருவரொருவருக்கு மாலை அணிவிக்கலாம்.)

12. விசுவாசிகளின் மன்றாட்டு 

(தொடக்கத்தையும் இறுதி செபத்தையும் குரு சொல்ல, நான்கு மன்றாட்டுக்களை சபையில் உள்ள மணமக்களின் பெற்றோரும் உறவினரும் ஆளுக்கொரு மன்றாட்டாகச் சொல்வது நல்லது.)

குரு : அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, இப்புதிய குடும்பத்தின் அன்பு எப்போதும் தொடர்ந்து வளர வேண்டுமென்று இவர்களுக்காக மன்றாடுவோம்.

1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அனை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

குரு: நமது தனிப்பட்ட தேவைகளுக்காக சற்று நேரம் மௌனமாக ஜெபிப்போம்....

குரு : தந்தையே, உம் பிள்ளைகளாகிய இப்புதிய மணமக்களுக்கு உண்மையான அன்பை நீர் தாராளமாய் வழங்குவதால், நிறை ஒற்றுமையோடு இவர்கள் வாழச் செய்தருளும். நீர் இணைத்த இவ்விருவரையும் எதுவும் பிரிக்காதிருப்பதாக. உம் ஆசி பெற்ற இவர்களை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக.எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

நற்கருணை வழிபாடு
அனைவரும் அமர, மணமக்கள் அப்பத்தையும் இரசத்தையும் ஏந்தி பீடத்திற்கு கொண்டு செல்லலாம். வேறு காணிக்கைப் பொருள்கள் கொண்டு வந்திருந்தால், மணமக்களோடு பவனியாக எடுத்துச் செல்லவும்.(பாடல் குழுவினர் காணிக்கைப் பாடல் பாடுவர்.

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருள்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருள்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக்கள்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக்கள் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மன்றாட்டு:
குரு : (காணிக்கை மீது மன்றாட்டு)
அன்புமிக்க இறைவா, இன்று திருமணத்தால் இணைக்கப்பெற்ற ........க்காக நாங்கள் மகிழ்ச்சியுடன் அளிக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருளும். உமது அன்பினாலும் பராமரிப்பினாலும் நீர் இவர்களை இன்று ஒன்றாக இணைத்துள்ளீர். இவர்களுக்குத் தொடர்ந்து உம் ஆசியை வழங்கி, இவர்கள் தங்கள் மணவாழ்க்கை முழுவதும் மகிழ்ந்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள் : ஆமென்.

நற்கருணை மன்றாட்டு 
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 
மக்கள் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக்கள் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக்கள் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம வல்ல நித்திய இறைவா
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக 
என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது 
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.
எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.

திருமண உடன்படிக்கையை நீர் ஏற்படுத்தி, மன ஒற்றுமையின் இனிய நுகத்தாலும், 
அமைதியின் முறிவுறாத பிணைப்பாலும் மணமக்களை இணைத்தருளினீர். 
இதனால், திருமணவாழ்வு மக்கள் பேற்றினால் வளமையுற்று, 
உமக்குப் புதிய அன்பு பிள்ளைகளைத் தருவதற்கு உதவுகின்றது. 
ஏனெனில் ஆண்டவரே, உமது பராமரிப்பினாலும் அருளாலும் 
திருமணத்தின் இரு பயன்களைச் சொல்லற்கரிய முறையில் விளைவிக்கின்றீர், 
பிறப்பினால் உலகம் அணி செய்யப்படுகின்றது, 
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்மு வழியாக வரும் மறுப்பிறப்பினால் 
திருச்சபை வளர்ச்சி பெறுகிறது.

ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,
இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர். 
உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து, 
உம்மை இடையறாது புகழ்கின்றனர்;. 
அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும், 
உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :


பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன 
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா. 

தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர் 
வானமும் வையமும் யாவனும் மாட்சிமை யால்நிறைந் துள்ளன. 
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே 
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

நற்கருணை மன்றாட்டு 3

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.
இ) தூய ஆவியின் வருகைக்காக மன்றாடுதல்:

ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம்.

ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : 
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் 
ஏனெனில் இது உங்களுக்காக 
கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் 
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். 
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் 
எல்லாருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள் :ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக் கின்றோம்.

ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.

இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இககுடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய தக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.
இவர் வழியாக, இவரோடு, இவரில்
எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
தூய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக்கள் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, 
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக. 
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். 
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

சிறப்பு ஆசீர் :

அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவில் மணமுடித்த இம்மணமக்களை ஆண்டவர் தம் அருளின் ஆசியால் நிரப்பவும், திருமணத்தில் இணைந்த இவ்விருவரையும் நற்கருணை வழியாக அன்பினால் ஒன்றுபடுத்தவும் வேண்டுn;மன்று மன்றாடுவோம்.

(எல்லாரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிக்கின்றனர்.)

தூய தந்தையே, நீர் எமது சாயலாக மனிதரைப் படைத்த போது, ஆண், பெண் எனப் படைத்தீர். இவ்வாறு, கணவனும் மனைவியும் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றுபட்டு இவ்வுலகில் தங்கள் பணியை நிறைவேற்றச் செய்கின்றீர்.

இறைவா, உமது அன்பின் திட்டத்தை வெளிப்படுத்தவும், உம் மக்களோடு நீர் செய்தருளிய உடன்படிக்கையை நினைவூட்டவும், மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை ஓர் அடையாளமாகத் தந்தருளினீர், இந்த அடையாளம் திருவருள்சாதனமாக நிறைவு பெற்றதால், உம்முடைய விசுவாசிகளின் திருமண இணைப்பில் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையே உள்ள மண உறவாகிய மறைபொருள் விளங்கச் செய்கின்றீர். (;---பெயர்-- -) என்னும் உம் பிள்ளைகள் இவர்கள் மீது இரங்கி , உமது வல்லமையால் இவர்களைக் காத்தருளும்.

இறைவா, இத்திருவருள்சாதனம் அருளிய உறவினால் இவர்கள் உமது அன்பின் கொடைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்களாக, மேலும் நீர் இவர்களோடு இருக்கிறீர் என்பதற்கு ஒருவருக்கொருவர் அடையாளமாய் விளங்கி , ஒரே உள்ளமும் ஒரே உயிரும் உடையவர்களாய்த் திகழ்வார்களாக.

இறைவா, இவர்கள் இருவரும் ஒன்றாய் உருவாக்கும் குடும்பத்தை தம் உழைப்பால் பேணிக்காப்பார்களாக, தம் மக்களை நற்செய்தி நெறியில் பழக்கி, உமது வானக அரசின் குடும்பத்தில் வந்து சேர்க்க ஆவன செய்வார்களாக.

உம் மகள் (பெயர்--) மீது உமது ஆசியை நிறைவாய்ப் பொழிந்தருளும். இதனால், இவர் மனைவிக்கும் அன்னைக்குமுரிய பணிகளை நிறைவேற்றி, தூய அன்பினால் குடும்பத்தைப் பேணி, இனிய பண்பினால் அதை அணி செய்வாராக.

உம் மகன் (பெயர்--) மீது உமது ஆசியை நிறைவாய்ப் பொழிந்தருளும். இவர் உண்மையுள்ள கணவராகவும், முன்மதியுள்ள தந்தையாகவும் தம் கடமைகளை நிறைவேற்றுவாராக.

தூய தந்தையே, உம் திருமுன் மணம் புரிந்து கொண்ட இவர்கள் உமது திருப்பந்தியில் அமர விரும்புகிறார்கள், ஒரு நாள் இவர்கள் விண்ணக விருந்திலும் மகிழ்ச்சியுடன் பங்கு கொள்ளச் செய்தருளுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, |அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்| என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. 
மக்கள்: ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)

(பாடல் திருப்பலியில்)

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வைத்தருளும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வைத்தருளும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எமக்கு அமைதி அருளும்.

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக்கள்: ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.
(மணமக்களுக்கு திவ்ய நன்மை அப்ப இரச குணங்களில் வழங்கப்படலாம்.)

குரு : கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர் : ஆமென்.

திருவிருந்து பாடலைப் பாடுக.

(சிறிது நேரம் மௌனம் காத்து அல்லது நன்றி சங்கீதம் அல்லது பாடலைப் பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுக.)

குரு : ஜெபிப்போமாக ! 
வாழ்வளிக்கும் வள்ளலாகிய இறைவா, உமது பராமரிப்பினால் நடந்தேறிய இத்திருமணத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கிறோம். இம்மால் ஒரு புனித குடும்பமாக இணைக்கப்பெற்று, ஒரே அப்பத்தாலும் ஒரே பானத்தாலும் நிறைவடைந்துள்ள (பெயர்...பெயர்...) இவர்கள், அன்பினால் கருத்தொருமித்து வாழ்ந்து, உம் திருவுளத்திற்கேற்ப ஓர் இல்லத் திருச்சபையை ஏற்படுத்தி மகிழ்ந்திருக்க அருள் தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
அனை: -ஆமென்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.

குரு : என்றும் வாழும் தந்தையாகிய இறைவன், நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பினால் உங்களை ஒருமனப்படுத்தி , கிறிஸ்துவின் அமைதி உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் என்றும் குடிகொள்ளச் செய்தருள்வாராக.
எல் : ஆமென்.

இறுதி ஆசீர்

குரு : உங்கள் மக்களால் ஆசியும், நண்பர்களிடமிருந்து ஆறுதலும் பெற்று, அனைவரோடும் நல்லுரவுடன் வாழ்வீர்களாக.
எல் : ஆமென்.

குரு : உலகிலே நீங்கள் இறையன்புக்குச் சாட்சிகளாய்த் திகழுங்கள். இவ்வாறு உங்கள் தயவைப் பெற்ற துன்புற்றோரும் வறியோரும், இறைவனின் வீட்டில் உங்களை ஒருநாள் நன்றியுணர்வுடன் வரவேற்பார்களாக.
எல் : ஆமென்.

குரு: எல்லாம் வல்ல இறைவன், பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
எல் : ஆமென்.

குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று 
மக்கள்: இறைவா உமக்கு நன்றி.