விண்ணக வேந்தன் என் அகம் இங்கே வருகின்றார்


விண்ணக வேந்தன் என் அகம் இங்கே வருகின்றார் வருக வருகவே 
என் நிலை மாற என்னிலே வாழ எழுகின்றார் எழுக எழுகவே 
விடியலின் கீதங்கள் பாடி விருந்துக்கு வாருங்கள் 
வியாதிகள் குணமாகும் நமது வாழ்வே சுகமாகும் 
அன்பாலே நமை ஆளும் இறைவன் இருப்பே இனிதாகும் 
எந்நாளும் (விண்ணக....) 

விடியலில் வானம் தெளிகிறதே புதிதாய் மன்னா பொழிகிறதே 
ஏதோ மாற்றம் நிகழ்கிறதே இதை மனமே இதயம் கமழ்கிறதே 
விதையாய் இதயம் விழுகிறதே நூறு மடங்கு பலன் தரவே
உறவில் விருந்து தொடர்கிறதே புது நிறைவில் இதயம் மகிழ்கிறதே 
கல்லான மனதெல்லாம் கனி இல்லா மரமாகும் 
கனிவான மனமெல்லாம் கனிகள் தரும் நிலமாகும்
மனமாய் வா வளமே வா ஒளியே அருளே இதயம் வா (இசை) எந்நாளும் (விண்ணக....) 

அன்னை தந்த அமுதல்லவா அழகாய் கரத்தில் தவழ்கிறதே 
உயிருள்ள உணவு இது அல்லவோ? அந்த வானக விருந்து மருந்தல்லவா அப்பம் என்பது அன்பல்லவா? 
அப்பாவின் நேசம் பெரிதல்லவா 
உள்ளம் என்பது குடில் அல்லவா? அதில் வாழ்ந்திட வருவது இறை அல்லவா 
இதை வாங்கி உண்ணுங்கள் இனிமையெல்லாம் இதிலேதான் 
இதை வாங்கி பருகுங்கள் நிலை வாழ்வு இதிலேதான்
அழியாத உணவே வா அருகில் நடக்கும் உறவே வா (இசை) எப்போதும் (விண்ணக....) 

அன்பான தந்தை ஒருவர்

 
அன்பான தந்தை ஒருவர்
அவருக்கு பண்பான பிள்ளைகள் இருவர் (2)

ஏராள செல்வம் வீட்டிலே
தாராள விளைச்சல் காட்டிலே (2)

1.தந்தையிடம் வந்தானே இரண்டாம் மகன்
சிந்தை மாறி சொத்தை பிரி என்றான் அவன்
கேட்டபடி சொத்தை பிரித்து கொடுத்தார் தந்தை
கேட்ட விலைக்கு சொத்தை விற்று சென்றான் பிள்ளை
இப்படி தான் வாழ வேண்டும் என்பதை மறந்தான்
எப்படியும் வாழலாம் என்றே நினைத்தான்
அப்படியே ஊதாரியாய் செலவுகள் செய்தான்
கைப்பிடி செல்வம் என்று எல்லாம் இழந்தான்
பன்றி மேய்க்கும் வேளையில் சேர்ந்தான்
உணவு இன்றி அவன் வாடியே நின்றான்
அன்பான தந்தை

2.வாடியவன் செய்த குற்றம் நினைத்தே நொந்தான்
ஓடியே நான் தந்தை காலில் விழுவேன் என்றான்
மகனென்று சொல்லும் தகுதி இழந்தேன் நானே
அடிமையாக சேர்த்து கொள்ளும் என்பேன் என்றான்
தொலைவினிலே இவன் வருவதை தந்தை பார்த்தார்
அலைக்குறளுள் அன்புடனும் ஓடியே அழைத்தார்
வருந்தி அவன் நினைத்ததெல்லாம் சொல்லியே அழுதான்
விருந்துக்கு வா மகனே என் மகனே என்றார்
மனிதர்களே பாவங்களை இன்றே உணருங்கள்
மன்னிக்கின்ற தந்தையிடம் விரைந்து திரும்புங்கள்

அன்பான தந்தை
அன்பான தந்தை ஒருவர்
என்றும் மன்னிக்கும் மனம் கொண்டவர் (3)

அன்பே அன்பே உயர்ந்தது இறை

பாடலைக் கேட்க


அன்பே அன்பே உயர்ந்தது இறை

அன்பே உலகில் சிறந்தது (2)

அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தனைத் தந்த

அவர் அன்பே உலகில் சிறந்தது - 2


1. இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி

அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி (2)

அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2


2. மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து

கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே (2)

அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2