Novena to the Sacred Heart


In this Novena to the Sacred Heart, we pray for nine days in trust and confidence in the mercy and love of Christ, that He might grant our request. At each point where the prayer indicates that you should state your request, mention the same request, and use the same request for each of the nine days.
While this novena is appropriate to pray around the Feast of the Sacred Heart, we can (and should) pray it throughout the year, as needs arise.
Novena to the Sacred Heart

O my Jesus, Thou has said: "Truly I say to you, ask and it will be given you, seek and you will find, knock and it will be opened to you." Behold I knock, I seek, and I ask for the grace of [state your request here].

  • Our Father, Hail Mary, Glory be

Sacred Heart of Jesus, I place all my trust in Thee.
O my Jesus, Thou hast said: "Truly, I say to you, if you ask anything of the Father in My name, He will give it to you." Behold, in Thy name, I ask the Father for the grace of [request].

  • Our Father, Hail Mary, Glory be

Sacred Heart of Jesus, I place all my trust in Thee.
O my Jesus, thou has said: "Truly I say to you, Heaven and earth shall pass away, but my words shall not pass away." Encouraged by Thy infallible words, I now ask for the grace of [request].

  • Our Father, Hail Mary, Glory be

Sacred Heart of Jesus, I place all my trust in Thee.
Let us pray.
O Sacred Heart of Jesus, for Whom it is impossible not to have compassion on the afflicted, have mercy on us miserable sinners and grant us the grace which we ask of Thee, through the Sorrowful and Immaculate Heart of Mary, thy tender Mother and ours.

  • Hail, Holy Queen, etc.

St. Joseph, foster father of Jesus, pray for us.

இறையழைத்தல் பெருக ஜெபம்


எல்லாம் வல்ல இறைவா இவ்வுலகில் உமது திருப்பணியை தொடர்ந்து ஆற்றி; அவரது அன்பின் சாட்சிகளாய் விளங்கவும் இருளில் இருப்போரை அருள் வாழ்வுக்கு கொண்டு வரவும் துன்படுவோரின் துயர்துடைக்கவும் இளைஞர் இளம் பெண்கள் பலர் உமது அழைப்பை பணிவன்புடன் ஏற்றுக்கொள்ள உமது அருளைத்தாரும் அறுவடைக்கு தேவையான பணி ஆட்களை அனுப்ப வேண்டுமாறு கட்டளை இட்ட உம் அன்பு திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக எம் வேண்டுதலை ஏற்றருலும்.          ஆமென்.

ஓ மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே


ஓ மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே அடியேன் சாஷ்டாங்கமாய் விழுந்து என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலுமபுகளை  எண்ணினார்கள் என்று தேவரீரை பற்றி முன்னால் தாவீது தீர்க்க தரிசி உமது  வாயின் வாக்கியமாக வாசித்ததை என் கண் முன்பாக கண்டு தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மன வருத்ததேடும் துக்கத்தோடும் என் உளளத்தில்; தியானிக்கும் இன்நேரத்தில் திடமான விசுவாசம் நம்பிக்கை தேவசிநேகம் ஆகியவற்றையும் என் ஆத்மத்திற்கு மேலான மனஸ்தாபத்தையும் அவற்றிற்கு மேலான பிரதிக்கினைகளையும் என் உள்ளத்;தில் பதிய செய்தருள வேண்டுமென்று எம் திருமகனாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை பார்த்து மன்றாடுகின்றோம்.        ஆமென்;;. 

என் ஆண்டவரே என் முமு சுதந்தரத்தை ஏற்றுக்கொள்ளும் என் ஞானம் புத்தி சுயம் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளும், ஏனெனில் அவை யாவும் நீர் எமக்கு அழித்தவையே இவற்றை எல்லாம் நான் உமக்கே திருப்பி கொடுத்து விடுகிறேன். உமது திருவுலப்படி என்னை நடத்தியருளும் அப்போது நான் செல்வந்தனாய் இருப்பேன்; வேரொன்றையும் விரும்பமாட்டேன்.......               ஆமென்.

செபமாலை செபிப்பது எப்படி?


பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.  ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக -ஆமென்.
அளவில்லாத சகல நன்மையும், சுரூபியுமாய் இருக்கிற எங்கள் சர்வேசுராசாமி நீச மனுசருமாய் நன்றியறியாத பாவிகளுமாய் இருக்கிற, அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச் சந்நிதியில் ஜெபம் பண்ணப் பாத்திரவான் ஆகாதவனாய் இருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக்கொண்டு தேவரீர்க்குத் ஸ்துதி வணக்கமாகவும் அர்ச்சிஸ்ட தேவ மாதாவிற்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி ஜெபம் செய்ய ஆசையாய் இருக்கிறோம். இந்த ஜெபத்தை பக்தியோடு செய்து, பராக்கில்லாமல் முடிக்க தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளுங்கள் சுவாமி.

சகல புண்ணியங்களுக்குள் விசுவாசம் என்கின்ற புண்ணியம் அஸ்திவாரமாய் இருக்கிறபடியினாலே முந்த முந்த விசுவாசப்பிரமானம் சொல்லுகிறது~

1. விசுவாச அறிக்கை:

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

2.பெரிய மணி:

மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசுநாதர்சுவாமி படிப்பித்த செபத்தை சொல்லுவோம்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.
 3.மூன்று சிறிய மணிகள்:

(1) பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக திரு மைந்தனை மன்றாடுவோம்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
(2) திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறைன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும். 
அருள் நிறைந்த....

(3) தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும். அருள் நிறைந்த....

4.மூன்று சிறிய மணிகளுக்குப் பின் (திரித்துவ துதி):
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்.
5.ஒவ்வொரு மறை நிகழ்ச்சியாகச் சொல்லித் தியானிப்போம்.

ஒரு பர. 10 அருள். ஒரு திரி. சொல்வோம்.

6.ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும்:

மகிழ்ச்சி மறைபொருள்கள் (திங்கள், சனி)
  1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்குத் தூதுரைத்ததைத் தியானித்து, தாழச்சியுடன் வாழ வரம் கேட்போமாக.
  2. இறையன்னை எலிசபெத்தைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பில் வளர்ச்சிக்காக செபிப்போமாக.
  3.  இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமையை விரும்பி ஏற்று வாழும் வரம் கேட்போமாக.
  4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்க வரம் கேட்போமாக !
  5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடி நிற்கச் செபிப்போமாக.
ஒளியின் மறைபொருள் (வியாழக் கிழமை)
  1. இயேசு யோர்தான ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக !
  2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக !
  3. இயேசு விண்ணரசை பறைசாற்றியதை தியானிப்போமாக !
  4. தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக !
  5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக !
துயர மறைபொருள்கள் ( செவ்வாய், வெள்ளி)
  1. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
  2. இயேசு கற்றூணில் கடடுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
  3. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒறுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
  4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
  5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக! 
மகிமை மறைபொருள்கள் ( புதன், ஞாயிறு )
  1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசததுடன் வாழ செபிப்போமாக!
  2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ளக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
  3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
  4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
  5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக ! 
கிருபை தயாபத்து மந்திரம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள். உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!

- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

ஜெபிப்போமாக
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

 புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதில்லை என்று உலகில் ஒருபொழுதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்செரிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாற்றைப் புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்

ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை)

சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, 
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபிப்போமாக 
இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக

ஒரு பர, ஒரு அருள், ஒரு திரி.
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.

ஊற்றுத் தண்ணீரே

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா - 2
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே - ஊற்றுத்

ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட - ஊற்றுத்

திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமூகத்தில் ஜெயம் பெற்றிட - ஊற்றுத்

கிருபையின் ஊற்றுக்கள் பெருகிடவே
புதுபெலன் அடைந்து நான் மகிழ்ந்திடவே
பரிசுத்தத்தை பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே - ஊற்றுத்

எந்தன் நாவில் புதுப்பாட்டு


எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் - 2

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் - 2 - எந்தன்

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்

வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் - ஆனந்தம்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்

தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்

இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன - ஆனந்தம்

எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்


எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்
தொல்லைமிகு இவ்வுலகில் துணை யேசுவே

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்

தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும்

கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்

போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

எந்தக் காலத்திலும்


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் (2)

ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே
தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே
(எந்தக் காலத்திலும் எந்த.......)

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே
(எந்தக் காலத்திலும் எந்த.......)

துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே
இன்னல் வேளையில் - மாறாதவர்;; நீரே
தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஐ ராஐனும் - என் சர்வமும் நீரே
(எந்தக் காலத்திலும் எந்த.......)

உன் திருயாழில்


உன் திருயாழில் என் இறைவா- பல
பண் தரு நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திட வேண்டும் இசையரசே
                                       (உன் திருயாழில்)
1
யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் கலையும்(2)
யாழிசை கேட்டு தனை மறந்து   (2) உந்தன் ஏழிசையோடு
இணைந்திடுமே இணைந்திடுமே
                                       (உன் திருயாழில்)
2
விண்ணகச் சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணில்லாத் தாரகை உனக்குண்டு (2)
உன்னருட் பேரொளி நடுவினிலே  (2)
நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்
                                       (உன் திருயாழில்)

ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்

ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்
அதை பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன்- (2)
உந்தன் புகழ்பாடி புகழ்பாடி நான் மாழுவேன-ஒருகோடி

1
மணவீணை தனை இன்று நீP மீட்டினாய்
அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய்-(2)
என்வாழ்வும் ஒருபாடல் இசை வேந்தனே
அதில் எழும் இராகம் எல்லாம்
உன் புகழ் பாடுதே- (2)

2
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகின்றேன் உனை யேசுவே- (2)
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகின்றேன் உனை யேசுவே- (2)

நல்ல இதயம் ஒன்று தா


நல்ல இதயம் ஒன்று தா
என் யேசுவே எனக்குத்தா( 2 )- அதில்
அன்பை விதைத்துத் தா
அனைவருக்கும் நான் அளிக்கத் தா
நல்ல இதயம் ஒன்று தா
என் யேசுவே எனக்குத்தா

1
எனக்கெதிராய் பகைமை செய்வோரை
மன்னிக்கும் மனத்தைத் தா -2  
அந்தப் பகைமையை மீள நினையாமல்
நான் மறக்கும் மனத்தைத் தா
                     ( நல்ல )
2
உன்னாலடைந்த நன்மை மறவாத
உள்ளம் ஒன்று தா -2
என்நாழும் உந்தன் நினைவால் வாழும்
உள்ளத்தை எனக்குத் தா
                    ( நல்ல )

பயன்படுத்தும் இறைவா


பயன்படுத்தும் இறைவா
பதரான என்னை பயனுள்ள கருவியாய்
பயன்படுத்தும் இறைவா

1
எனது கரங்கள் உம் பணி புரிய
எனது கால்கள் உம் வழி செல்ல
எனது கண்கள் உம்மைப்போல் பார்க்க -2
எனது நாவும் உம்புகழ் பாட

2
எனது செவிகள் உம் மொழி கேட்க
எனது மனமும் உம்மையே காட்ட
எனது மனமும் உம்மையே நினைக்க -2
எனது இதயம் உம்மில் அக்களிக்க

3
எனது இன்பம்; பிறர்க்கு நிறைவாய்
எனது வாழ்வு பிறர்க்கு ஒளியாய்
எனது சாவு பிறர்க்கு வாழ்வாய் -2
எனது சாவு பிறர்க்கு வாழ்வாய்

பார்வை பெற வேண்டும் - நான்


பார்வை பெற வேண்டும் - நான்
பார்வை பெறவேண்டும் - என்
உள்ளம் உன்னொளி பெறவேண்டும்
புதுப் பார்வை பெறவேண்டும் - ( 2 )
நான் பார்வை பெறவேண்டும்

1
வாழ்வின் தடைகளைத்தாண்டியெழும்
புதுப்பார்வை பெறவேண்டும்
நாளும் பிறக்கும் உன்வழியை
காணும் பார்வை தரவேண்டும்  -2
உன்னாலே எல்லாமே
ஆகும் நிலை வேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்

2
நீதி நேர்மை உணர்வுகளை நான்
பார்க்கும் வரம் வேண்;டும்
உண்மை அன்பு உயர்ந்திடவே
உழைக்கும் உறுதி தரவேண்டும்  -( 2 )
எல்லாமும் ஒன்றாகவே
வாழ வழிவேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்;

யேசுவே என்னுடன் நீ பேசு


யேசுவே என்னுடன் நீ பேசு
என்னிதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து


1
உன் திருப் பெயர் நான் பாடிடும் கீதம்
உம் திரு இதயம் பேரானந்தம் (2)
உம் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உம் திரு வாழ்வெனக்கருளும்
உம் திரு நிழலில் நான் குடி கொள்ள
என்றும் என்னுடன் இருப்பாய்


2
யேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
இணையடி பணிந்து தலை வணங்கிடுமே(2)
யேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
யேசுவே உம் புகழ் வாழ்க
யேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
என்னைத் தள்ளி விடாதீர்

யேசுவின் அன்பை மறந்திடுவாயோ


யேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதபண்பிருந்தால்
மறந்திடாதிருக்க நீர் சிலுவையிலே அவர்
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ
யேசுவின் அன்பை…

1
அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு
கல்வாரி மலைக் கண்ணீர் ததும்பும் அவரன்பு

2
அலைகடலைவிடப் பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் வளர்ந்தென்னை வளைத்திடுமன்பு
சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு

3
எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காகத் தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காகப் பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவனன்பு

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே


சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
என்னிடம் எல்லோரும் வாருங்கள்( 2 )

1)
உங்களை நான் இளைப்பாற்றுவேன்
உங்களை நான் காப்பாற்றுவேன்( 2 )
உங்களை நான் தேற்றிடுவேன்
உங்களை நான் ஏற்றிடுவேன்

2)
உங்களை நான் நடத்திச் செல்வேன்
உங்களை நான் அன்பு செய்வேன் ( 2 )
உங்களை நான் அரவணைப்பேன்
உங்களை நான் வாழச்செய்வேன்

3)
உங்களை நான் வளரச்செய்வேன்
உங்களை நான் ஒளிரச்செய்வேன்( 2 )
உங்களை நான் மலரச்செய்வேன்
உங்களை நான் மிளிரச்செய்வேன்

தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா  
வரம் தருவாயே உருவானவா ( 2 )

1
எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்பவா( 2 )
மனநோயில் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதிங்கு ( 2 )
குணமாக்க வருவாயப்பா
எனை உனதாக்கி அருள்வாயப்பா
2
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா ( 2 )
நீதானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீ தானே ( 2 )
நாதா உன் புகழ்பாடுவேன்
எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்

தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா  
வரம் தருவாயே உருவானவா ( 2 )

1
எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்;பவா ( 2 )
மனநோயில் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதிங்கு ( 2 )
குணமாக்க வருவாயப்பா
எனை உனதாக்கி அருள்வாயப்பா
2
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா ( 2 )
நீதானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீ தானே ( 2 )
நாதா உன் புகழ்பாடுவேன்
எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்

தூய தேவ அன்னையின் (மன்றாட்டு மாலை) பிராத்தனை


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சருவேசுரா
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா .
அர்ச்சியசிஸ்ட தம திரித்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா

அர்ச்சியசிஸ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சருவேசுரனுடைய அர்ச்சியசிஸ்ட மாதாவே
கன்னியாஸ்திரிகளுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஸ்ட மாதாவே
கிறிஸ்துவினுடைய மாதாவே
தேவப்பிரசாதத்தின் மாதாவே
மகா பரிசுத்த மாதாவே
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே
பழுதற்ற கன்னியாஸ்திரியாயிருக்கிற மாதாவே
கன்னி சுத்தங் கெடாத மாதாவே
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே
ஆச்சரியத்துக்கு உரிய மாதாவே
நல்ல ஆலோசனை மாதாவே
சிருஸ்டிகருடைய மாதாவே
இரட்சகருடைய மாதாவே
மகா புத்தி உடைத்தான கன்னிகையே
மகா வணக்கத்துக்கு உரிய கன்னிகையே
பிரகாசமாய் இஸ்துதிக்கப்படயோக்கியமாயிருக்கிற கன்னிகையே
சக்தி உடையவளாயிருக்கிற கன்னிகையே
தயையுள்ள கன்னிகையே
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே
தருமத்தினுடைய கண்ணாடியே
ஞானத்துக்கு இருப்பிடமே
எங்கள் சந்தோசத்தின் காரணமே
ஞான பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
அத்தியந்த பக்தி உடைத்தான பாத்திரமே
தேவ இரகசியத்தைக்கொண்டிருக்கிற ரோசா என்கிற புஸ்பமே
தாவீது இராசாவினுடைய உப்பரிகையே
தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே
வாக்குத் தத்தத்தின் பெட்டகமே
பரலோகத்தினுடைய வாசலே
விடியற் காலத்தின் நட்சத்திரமே
வியாதிக் காரருக்கு ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
கஸ்திப் படுகிறவர்களுக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
சம்மனசுகளுடைய இராக்கினியே
பிதாப் பிதாக்களுடைய இராக்கினியே
தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே
வேத சாட்சிகளுடைய இராக்கினியே
இஸ்துதியருடைய இராக்கினியே
சென்ம பாவம் இல்லாமல் உற்பவித்த இராக்கினியே
பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே
பரிசுத்த செபமாலை இராக்கினியே
சமாதானத்தின் இராக்கினியே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

முதல்வர்: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
அனைவரும்: சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக

சருவேசுரா சுவாமி! முழுமனதுடனே தண்டணாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையான முத்திப் பேறுபெற்ற மரியாயினுடைய வேண்டுதலினாற் சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்நாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.

புனித அருளானந்தர் நவநாள் செபம்


செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும்
மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். – ஆமென். (தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)

புனித அருளானந்தருக்குச் செபம்
கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்.
புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர்.
ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக!
இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். – ஆமென். 

புனித அருளானந்தரின் மன்றாட்டுமாலை
சுவாமி கிருபையாயிரும் 
கிறிஸ்துவே கிருபையாயிரும் 
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் 
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி 
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
மறைச்சாட்சியரின் மாண்புமிகு அரசியாகிய மரியாவே. மறைசாட்சியான புனித அருளானந்தரே. 
போர்த்துக்கல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே 1647 இல் உதித்தவரான புனித அருளானந்தரே. 
அரசவையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையிலாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும் “வானத்தூதர்” என்றும், “மறைச்சாட்சி” என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே. 
இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே. 
புதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே. 
உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே. 
பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும், அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோப் பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே. 
1673-ல் பாய்மரக் கப்பலில் பயணமாகி பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும் புன்முறுவல் மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே. 
கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே. 
14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து நாடுகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே. 
தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே. 
வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே. 
பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே. 
கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும், துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றிய புனித அருளானந்தரே. 
குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே. 
துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு. துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே. 
தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணியாற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே. 
பகைவர் உம்மைக் கொல்லப் பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே. 
மறைச்சாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே. 
சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில் பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே. 
உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே.
உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே. 
உயர் பொறுப்பிற்காக 1686 ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே. 
எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயணமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690 இல் வந்தவரான புனித அருளானந்தரே. 
சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே. 
புகழ் பெற்ற் தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே.
மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே. 
இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே. 
கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே. 
மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே. 
ஓரியூரிலே, 1693 பெப்ருவரி 4-ம் தேதி. புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே. 
எங்களை விசுவாசத்தில் வளர்க்க உமது இரத்தத்தையே சிந்தியவரான புனித அருளானந்தரே 
மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே. 
அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே. 
தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே. தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான் டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே.
விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே. 
உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே. 
ஆன்மப் பிணிகளையும், உடல் நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே. 
மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே. 
உலகின் பாவங்களைப் போக்குகிற…… மற்றதும்
மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி. 
து. – புனித அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக: மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறiவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடு அறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.

அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்


எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப் போதிக்க வரம் பெற்ற் புனித தோமையாரே, நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே! காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும், சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும், எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக் கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில் எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ் வருவது எப்போது? விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, எங்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த விடுதலையையும் அமைதியையும் பெற்று அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து நிற்கும்படியாக இறைவனை மன்றாட உம்மை வேண்டுகிறோம். ஆமென். 

புனித தோமையார் மன்றாட்டுமாலை

சுவாமி கிருபையாயிரும் 
கிறிஸ்துவே கிருபையாயிரும் 
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் 
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி 
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
  • இறையன்னையை மிகவும் அன்பு செய்த அப்போஸ்தலரான புனித தோமையயாரே,  - - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 
  • கலிலேயா நாட்டில் பிறந்த புனித தோமையாரே.
  • முடிவில்லா அமைதி தரும் நற்செய்தியைப் போதித்த புனித தோமையாரே.
  • தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 
  • இளம் வயதிலேயே தந்தையின் சொற்படி அவர் தொழிலை நடத்திக் கொண்டு வந்த புனித தோமையாரே. 
  • இயேசு மெய்யாகவே உலக மீட்பரென்று விசுவாசம் கொண்ட புனித தோமையாரே. 
  • இயேசு தம்முடைய சீடர்களுக்குள்ளே ஒருவராகத் தெரிந்து கொண்ட புனித தோமையாரே. 
  • இயேசுவின் மீது கொண்டிருக்கும் பற்றுதலால் “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்!” என்று கூறிய புனித தோமையாரே.
  • ஆண்டவரே, நீர் போகிறதற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்ற வினாவை எழுப்பி, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே!” என்ற இயேசுவின் பதிலைப் பெற்ற புனித தோமையாரே. 
  • இயேசு உயிர்த்த பிறகு “நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்!” என்ற புனித தோமையாரே 
  • அவர் உமக்குத் தோன்றியதும் அவரைக் கண்டு மகிழ்ந்து “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்!” என்று சொன்ன புனித தோமையாரே. இயேசு, “தோமா, நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்!” என்று சொல்லக் கேட்ட புனித தோமையாரே. 
  • தூய ஆவியாரால் ஏவப்பட்டு இறையன்னையும் அப்போஸ்தலர்களும் கூடிய சபையிலே மேதியா முதலான நாடுகளில் நற்செய்தியைப் போதிக்கக் குறிப்பிடப்பட்ட புனித தோமையாரே. 
  • இறையன்னையின் அடக்கத்துக்கு மிகவும் ஆவலுடனே ஓடி வந்த புனித தோமையாரே. 
  • மாபெரும் மகிழ்ச்சியோடே இயேசுவுக்கு உயிரை ஒப்புக் கொடுத்து பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டவர் போல உமது இரத்தத்தைச் சிந்தி திருமறைக்காக உயிரைக் கொடுக்க விரும்பிய புனித தோமையாரே. 
  • மண்ணுலகில் உள்ள எல்லா பொருள்களையும் உம்மையும் விட இறைவனை அதிகமாக அன்பு செய்த புனித தோமையாரே. 
  • வேற்று நாடுகளிலே உமக்கு வரப்போகிற வேதனைகளையும் தடைகளையும் எண்ணி மகிழ்ச்சி கொண்ட புனித தோமையாரே. 
  • இயேசுவையும் இறையன்னையையும் நினைத்து இரவும் பகலும் விண்ணகத்தை நோக்கிக் கையேந்திக் கொண்டு இடைவிடாமல் செபித்த புனித தோமையாரே. 
  • தூய ஆவியாரால் ஏவப்பட்டு மக்களுக்குத் திருவுரையாற்றும்போது வானத்தூதர் போல காணப்பட்ட புனித தோமையாரே. 
  • உயிரையும் உடலையும் தத்தம் செய்து, படாத பாடுபட்டு, மக்களை மெய்மறையில் சேர்க்க ஆவல்கொண்ட புனித தோமையாரே. 
  • விண்ணுல வரங்களைத் தாங்கிய உன்னத மரக்கலமாகிய புனித தோமையாரே. 
  • மூன்று அறிஞர்களுக்கு திருமுழுக்கு அளித்து அவர்களை மெய்மறையில் சேர்த்த புனித தோமையாரே. 
  • பார்த்தியா நாட்டிலே மக்கள் மெய்மறையைக் கண்டடையச் செய்த புனித தோமையாரே. 
  • மேதியா நாட்டிலேயும் பெர்சியா நாட்டிலேயும் வெகு துன்பப்பட்டு ஈடேற்றத்தின் வழியிலே திருப்பிக் கொண்டு வந்த புனித தோமையாரே. 
  • ஈக்கானியா நாட்டிலே வந்த சோதனைகளை எல்லாம், அன்பினாலும், செபத்தினாலும் வென்று, அஞ்சா நெஞ்சத்தவராய் திருமறையை அவர்களுக்குப் போதித்த புனித தோமையாரே. 
  • எத்தியோப்பியா நாட்டுக்கு ஒளியாக நின்ற புனித தோமையாரே. 
  • சிந்து தேசத்தில் கந்தபோரஸ் அரச குடும்பத்துக்குத திருமுழுக்குக் கொடுத்து ஞான ஒளி பெருகச் செய்த புனித தோமையாரே. 
  • கடலில் சுற்றி வந்த பிரமாண்டமான மரத்தை உமது இடுப்பில் இருந்த கயிற்றினாலே கட்டித் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்து இழுந்துக் கொண்டு வந்து கரையிற் சேர்ந்த புனித தோமையாரே. 
  • இறந்த குழந்தையை இறைவனுடைய அருளாலே உயிர்ப்பித்தவரான புனித தோமையாரே 
  • இயேசுவுக்கான பணிகளை எல்லாம் மகா அன்போடும் தாழ்ச்சியோடும் செய்த புனித தோமையாரே. 
  • உமக்குப் பின் புனித சவேரியார் பாரத நாட்டுக்கு வரப்போகிறதை தொலைப் பார்வையால் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்தின புனித தோமையாரே. 
  • ஈட்டியால் குத்தப்பட்டு பெருமகிழ்வோடே மறைச்சாட்சி முடி பெற்று முடிவில்லாக் காலம் வாழ விண்ணுலகிற்குச் சென்ற புனித தோமையாரே 
  • கிறிஸ்துவில் நாங்கள் உறுதியான விசுவாசம் கொள்ளும்படியாக, புனித தோமையாரே.
  • கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங்கும் பரவும் படியாக, புனித தோமையாரே. 
  • உமது திருவடியைத் தாங்கிய பாரதநாடு மனம் திரும்பும்படியாக, புனித தோமையாரே.
  • உலகின் பாவங்களைப் போக்குகிற………மற்றதும், மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக. து. – புனித தோமையாரே,

செபிப்போமாக தந்தையே, எங்கள் பாரத நாட்டிற்கு உமது நற்செய்தியை முதன்முதல் கொணர்ந்த புனித தோமையார் எங்கள் நாட்டிலே மறைபரப்பி, இரத்தம் சிந்தி, அடக்கமானார் என்பதைப் பெருமையுடன் கொண்டாடி உம்மைப் புகழ்கின்றோம். குhலங்காலமாக உண்மைக் கடவைள பல்வேறு வகைகளில் தேடியலைந்து கொண்டிருக்கும் இந்தியராகிய நாங்கள், புனித தோமையாரின் வேண்டுதலால் இயேசுவே எங்கள் ஆண்டவர் என்று கண்டு. “நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்!” என்று அறிக்கையிட்டு அவர் திருவடிகளில் சரணடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.

குழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்:


அற்புத குழந்தை சேசுவே! அமைதி அற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.
(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)
எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும், நீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உம் ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக! குழந்தை சேசுவே! என் செபத்தை ஏற்றருளும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - ஆமென்.
தேர்வு எழுதுவோருக்காக ஜெபம் ஞானத்தின் ஊற்றே இறiவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு


எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.
புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.
எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.

வேளாங்கன்னி மாதாவுக்கு நவநாள் செபம்


மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! குடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேச உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.
(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
(இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.
நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு
மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.

ஆபத்தான வேளையில்அன்னையை நோக்கி ஜெபம்


நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.

தவக்கால ஆரதனை வழிபாட்டுக்குரியவைகள்


பிழை தீர்க்கிற மந்திரம்

சர்வ தயாபர இயேசுவே! பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

மண்ணால் மனுசனை உண்டாக்கி
திவ்விய கருணையால் வல்லவனாக்கி
அவன் கையாற் பாடுபடத் திருவுளமான
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

துஸ்டயூதர் கையிற் சிறைப்பட்டு
திருக்கண்டத்தில் கரத்திற் கயிறிட்டு
செம்மறி போலப் பலிக்கேகப்பட்ட
என் தயாபர இயேசுவே -தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

அந்நீத குருச்சபையிலமைந்து
பொய்ச் சாட்சிகளுக்குப் பணிந்து
தேவ பழிகாரணாகக் கூறப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

திருக் கண்ணத்தில் அறையுண்டு
திரு விழிகள் மறைக்கப்பட்டு
இரா முழுவதும் கோறணி வாதைகள் அனுபவித்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

பிலாத்திட்ட துஸ்ட தீர்வையாற் கற்றுணில் கட்டுண்டு
நிஸ்டுரமாக ஐயாயிரத்துக்கு அதிகமாக அடிபட்டு
சர்வாங்கமும் இரத்தவாறாக்கப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

திருச்சிரசில் முள்முடி தரித்து
பீற்றற் சகலாத்தை மேலிற் போர்த்து
பரிகாச ராசனாக நிந்திக்கப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

பாரதுரச் சிலுவை தோளிற் சுமந்து
கபால மலைமட்டும் தொய்வோடே நடந்து
பெலவீனமாகத் தரையிலே விழுந்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

திருத் துகிலைக் கடுரமாயுரிந்து
சர்வாங்க காயங்கள் விரிவாய் மிகுந்து
சபை முன்பாக நாணித்து வாதிக்கப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

சிலுவை மரத்தின் மீதே சயனித்து
திருப்பாத கரங்களில் ஆணிகளால் அறைந்து
இரு கள்வருக்கு நடுவே நிறுத்தப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

சிலுவையிலேறிச் சுகிர்தம் மொழிந்து
வாதிக்கிற சத்துராதிகளுக்குப் பாவம் பொறுத்து
அனைவருக்கும் தயவு காண்பித்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

சகல வாதைகளையுந் தீர அனுபவித்து
பாவிகள் இடேற்றம் முகிய முகித்து
சீவ பலியாகப் பிராணனைக் கொடுத்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

திரு முக மலர்வு மடிந்து
திரு விழிகள் மறைந்து
திருத் தலை கவிழ்ந்து மரணித்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

எனக்காக இத்தனை பாடுகளைப் பட்டீரே
என் பாவம் உத்தரிக்க உமது உதிரம் சிந்தினீரே
எனது ஆத்துமத்துக்காக உமது ஆத்துமத்தைக் கொடுத்த
என் தயாபர இயேசுவே -    தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

இந்த நன்றிகளை யெல்லாம் அடியேன் பாராமல்
எனக்காகப் பாடுபட்டதையும் எண்ணாமல்
மகா துட்ட துரோகத்தைச் செய்தேனே
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

இதோ என்னிருதயஞ் சகலமும் உதிர்ந்து
விதனத்தாற் பொடிப் பொடியாகப் பிளந்து
கண்களால் கண்ணீர் சொரிந்தழுது நிற்கிறேன்
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

என் பாவத்தின் அதிகத்தையும் கொடுமையையும் பாராமல்
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

உம்முடைய கிருபையையும் மகிமையின் மிகுதியையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

உம்முடைய கசையடிகளையும் முள்முடியையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

உம்முடைய சிலுவையையும் திருமரணத்தையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

உம்முடைய சர்வாங்க காயங்களையும் திரு உதிரத்தையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

சர்வ தயாபர இயேசுவே பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்
தயவாயிரும் சுவாமி தயவாயிரும் - 3 முறை
(மூன்று பரலோக மந்திரம் சொல்லி முடிக்கவும்)

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்


இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவ குடும்பங்களிலே தேவரீர் இராசாவாக இருந்து ஆண்டருள வேண்டுமென்ற ஆசையை புனித மார்க்கரீத் மரியம்மாளுக்கு வெளிப்படுத்தினீரே! இந்தக்குடும்பத்தின் மேலே உமக்கு மாத்திரமே உள்ள முழுஅதிகாரத்தையும் அறிக்கையிட இங்கு கூடியிருக்கிறோம். 

உம்முடைய சீவிய மாதிரிகையாக நாங்களும் சீவிக்க விரும்புகிறோம். எந்தெந்தப் புண்ணியத்தினால் உலகத்துக்குச் சமாதானம் உண்டாகுமென்று தேவரீர் ஏலவே வாக்குப்பண்ணி இருக்கிறீரே! அந்தப் புண்ணியம் இந்தக் குடும்பத்தில் செழித்து வளரவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். தேவரீர் சபித்துத் தள்ளிவிட்ட உலகப்பற்றுதல்களை எங்கள் மத்தியிலிருந்து புறக்கணித்து அகற்றிவிட ஆசிக்கிறோம். கபடற்ற விசுவாசத்தைத் தந்தருளிஇ எங்கள் புத்தியின்மேல் தேவரீர் உமது அரசாட்சியைச் செலுத்தியருளும். சிநே அக்கினியால் மூண்டெரிந்து உம்மையே முற்றாக நேசிக்கும் அன்பைத்தந்துஇ எங்கள் இருதயங்களிலே உமது அரசாட்சியைச் செலுத்தியருளும். அடிக்கடி தேவநற்கருணை உட்கொள்ளுவதனால் இந்த நேச அக்கினிச்சுவாலை வளர்க்கப்பட்டு வருவதாக. 


இயேசுவின் திவ்விய இருதயமே! நாங்கள் ஒன்றுகூடும் வேளைகளில் தேவரீரே எங்கள் கூட்டங்களக்குத் தலைவராக இருந்தருளும். எங்கள் ஞான அலுவல்களையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் கவலைகள் எல்லாவற்றையும் நீக்கியருளும். எங்கள் சந்தோ~ங்களைப் பரிசுத்தமாக்கியருளும். எங்களது துன்ப துரிதங்களில் எங்களுக்குத் தேற்றரவாயிருந்தருளும்.

எப்போதாவது எங்களில் எவரேனும் தேவரீரைப் பிரியவீனப் படுத்தும் நிர்ப்பாக்கியத்திற்கு உள்ளாக நேரிடுமானால் மகா பரிசுத்தமுள்ள இருதயமே! நீர் மனந்திரும்பும் பாவிகள் மட்டில் நல்லவரும் இரக்கமும் உள்ளவராய் இருக்கிறீர் என்பதனை அப்படிப்பட்டவர்களுக்கு நினைவு படுத்தியருளும். நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியும் நேரம் வரும்போதும் மரணமானது எங்களது மத்தியில் துக்கங்களை உண்டுபண்ணும் போதும் பிரிகிறவர்களும் பிரியாதிருப்பவர்களுமாகிய நாங்கள் எல்லோரும் உம்முடைய நித்திய ஏற்பாடுகளுக்குப் பணிவான மனதுடன் இருக்கக் கிருபை செய்தருளும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் எல்லோரும் பரலோகத்தில் ஒருமித்துச் சேர்ந்து தேவரீருடைய மகிமைகளையும் நீர் எங்களுக்குச் செய்த உபகாரங்களையும் நித்தியமாய்ப் புகழ்ந்து பாடும் ஒரு நாள் வருமென்ற எண்ணம் எங்கள் எல்லோருக்கும் ஆறுதல் தருவதாக. 

மாசற்ற இருதய நாயகியும் மகத்துவம் பொருந்திய அதி பிதாவாகிய புனித சூசையப்பரும் இந்தக் காணிக்கையை உமக்கு ஒப்புக்கொடுத்து எங்கள் உயிருள்ளளவும் எங்களுக்கு இதனை நினைவ+ட்டுவார்களாக. எங்கள் அரசரும் தந்தையுமாகிய இயேசுவின் திரு இருதயம் துதிக்கப்படுவதாக. 

(இறந்து போன உறவினர்களுக்காக வேண்டிக்கொள்வோமாக. இவ்வேளையில் சிறிது நேரம் குடும்பங்களில் இறந்து போனவர்களை மௌனமாக நினைவு கூரவும்)

இரக்கத்தின் இறைவா! எமதுகுடும்பத்தில் இறந்துபோன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் இவ்வேண்டுதல் இறந்துபோன உமது அடியார்கள் அனைவருடைய ஆன்மாக்களுக்கும் பயன்படுவதாக. பாவம் அனைத்திலிமிருந்து அவர்களை விடுவித்து அவர்கள் உமது மீட்பில் பங்குபெற அருள்புரிவீராக. ஏன்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அதே கிறிஸ்து இயேசு வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.

(1பரமண்டலம் 1அருள்நிறை மரியே சொல்லவும்)

இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குறுதிகளுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக.

மகா பரிசுத்த இயேசுவின் திவ்விய இருதயமே எங்கள் பேரில் இரக்கமாயிரும் 

(3முறை)

மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


புனித மார்க்கரீத்து மரியம்மாளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 
(பொருத்தமான பாடல் பாடலாம். பின்னர் குருவானவர் அனைவரையும் ஆசீர்வதிப்பார்)

விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்

விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்
முழங்கிடவாருங்களே
புது உலகமைத்திட புது வழி படைத்திட அன்புடன்வாருங்களே
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே...  அனைவரும் வாருங்களே


1
அன்புக்காகவும் அமைதிக்காகவும்
யேசு மனுவானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும்
அவரே பலியானார் ( 2 )
ஒன்று கூடுவோம்... உணர்ந்து வாழுவோம் (2)
சுயநலம் நீக்கி பிறநலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம்
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே.. அனைவரும் வாருங்களே

2
ஏழை எளியவர் வாழும் இடங்களே
இறைவனின் வீடாகும்
வறுமைப் பிடியிலே அலறும் குடிகளே
இறைவனின் ஒளியாகும் ( 2 )
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம்(2)
இறைவனின் அரசில் இனிமையைக் காண
இன்றே முயன்றிடுவோம்
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே.. அனைவரும் வாருங்களே

யேசுவே என்னுடன் நீ பேசு


யேசுவே என்னுடன் நீ பேசு
என்னிதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

1
உன் திருப் பெயர் நான் பாடிடும் கீதம்
உம் திரு இதயம் பேரானந்தம் (2)
உம் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உம் திரு வாழ்வெனக்கருளும்
உம் திரு நிழலில் நான் குடி கொள்ள
என்றும் என்னுடன் இருப்பாய்

2
யேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
இணையடி பணிந்து தலை வணங்கிடுமே(2)
யேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
யேசுவே உம் புகழ் வாழ்க
யேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
என்னைத் தள்ளி விடாதீர்

மகிழ்வோம் மகிழ்வோம்


1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்
  இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
  இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
  எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
  ஆ...ஆ...ஆனந்தமே
  பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே - இந்த

2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
  தூரம் போயினும் கண்டு கொண்டார்
  தமது ஜீவனை எனக்கும் அளித்து
  ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்


3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
  என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
  என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
  அவர் வரும்வரை காத்துக் கொள்வேன்

4. அவர் வரும் நாளில் என்னைக் கரம் அசைத்து
  அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்
  அவர் சமூகமதில் அங்கே அவருடனே
  ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

பலி பீடத்தில் வைத்தேன்


   பலி பீடத்தில் வைத்தேன் என்னை
   பாவி என்னை ஏற்றுக்கொள்ளும்

1. நிலையில்லா இந்த ப10வுலகில்
  நித்தம் உம் பாதையிலே
  நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
  நித்தம் வழி நடத்தும் - 2
                     - பலிபீடத்தில்

2. பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
  பரிசுத்தமாய் ஜீவிக்க
  பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2
  பரிசுத்தமாக்கி விடும் - 2
                     - பலிபீடத்தில்

3. வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
  வந்தேன் உன் திருப்பாதம்
  வாருமையா வந்து என்னை - 2
  வல்லமையால் நிரப்பும் - 2
                     - பலிபீடத்தில்

நீர் ஒருவர் மட்டும்


  நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
  என்னைவிட்டு நீங்காதிருப்பது ஏனோ?
  தெய்வீக அன்பால் தானோ?

1. என்னை பாடி மகிழ்வித்த புல்லினங்கள்
  தங்கள் கூடுகள் தேடி பறந்த பின்னும்  - 2
  நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம்
  நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்
                           - நீர்

2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
  சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் - 2
  எந்தன் பாதையின் விளக்காய் பகலவனும்
  வந்து காரிருள் மாயையாய் பிரிந்த பின்னும்
                           - நீர்

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


  நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
  இயேசு வருகின்றார்
  நொறுங்குண்ட நெஞ்சத்தையே
  இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம் - நம்மை
  கொடிய இருளில் சேர்க்கும்
  செய்த பாவம் இனி போதும்
  அவர் பாதம் வந்து சேரும்

2. குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மை
  கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
  அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
  அவர் பாதம் வந்து சேரும் - 2

3. மாய லோக வாழ்வு - உன்னில்
  கோடி இன்பம் காட்டும் - 2
  என்னில் வாழும் அன்பர் இயேசு
  உன்னில் வாழ இடம் வேண்டும் - 2

தொடும் என் கண்களையே


  தொடும் என் கண்களையே
  உம்மை நான் காண வேண்டுமே
  இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே

1. தொடும் என் காதுகளை
  உம் குரல் கேட்க வேண்டுமே
                       இயேசுவே - 2
  தொடும் என் நாவினையே
  உம் புகழ் பாட வேண்டுமே
                       இயேசுவே - 2
2. தொடும் என் கைகளையே
  உம் பணி செய்ய வேண்டுமே
                       இயேசுவே - 2
  தொடும் என் மனதினையே
  மனப்புண்கள் ஆற வேண்டுமே
                       இயேசுவே - 2
3. தொடும் என் உடலினையே
  உடல் நோய்கள் தீர வேண்டுமே
                       இயேசுவே - 2
  தொடும் என் ஆன்மாவையே
  என் பாவம் போக வேண்டுமே
                       இயேசுவே - 2
4. தொடும் என் இருதயத்தையே
  உம் அன்பு பெருக வேண்டுமே
                       இயேசுவே - 2

தேடிவந்த தெய்வம்



  தேடி வந்த தெய்வம் இயேசு என்னைத்
  தேடி வந்த தெய்வம் இயேசு
  வாடி நின்ற என்னையே வாழவைத்திட
  தேடி வந்த தெய்வம் இயேசு
  ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ - 2

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கினார்
  ஆவி பொழிந்து என்னையே தாவி
  அணைத்திட்டார் - 2
  அன்பே அவர் பெயராம் 2
  அருளே அவரின் மொழியாம்
  இருளே போக்கும் ஒளியாம் - 2

2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம்
  இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ - 2
  இறைவா இயேசு தேவா - 2
  இதயம் மகிழ்ந்து பாடும்
  என்றும் உம்மை நாடும் - 2

என் ஆயனாய் இறைவன்


  என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது
  என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
  எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2
  என்றும் இன்பம் ஆ ... ஆ என்றும் இன்பம்
  ஆ... ஆ என்றென்றும் இன்பமல்லவா!

2. என்னோடவர் வாழ்ந்திடும் போதினிலே
  எங்கே இருள் படர்ந்திரும் பாதையிலே - 2
  எங்கும் ஒளி ஆ... ஆ எங்கும் ஒளி
  ஆ... ஆ எங்கெங்கும் ஒளி அல்லவா!

3. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
  எல்லோர்க்குமே நண்பனாய் ஆக்கியதால் - 2
  என்னுள்ளமே ஆ... ஆ - என் தேவனை
  ஆ... ஆ எந்நாளும் புகழ்ந்திடுமே

இறைவனைத் தேடும் இதயங்களே


  இறைவனைத் தேடும் இதயங்களே
  வாருங்கள் என் இறைவன் யார்
  என்று சொல்வேன் கேளுங்கள்

1. பாடும் குயிலுக்கு பாடச் சொல்லி தந்தவர் யார்?
  ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லி தந்தவர் யார்?
  அவரே என் இயேசு
  அவர் தாழ் நான் பணிவேன்
  அவர் தாழ் நான் பணிந்தால்
  அகமே மகிழ்ந்திடுமே

2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?
  வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவன் யார்?
  என்னென்ன விந்தைகள்
  எங்கெங்கே காண்கின்றோம்
  அனைத்திற்கும் அடிப்படையாம்
  இயேசுவே காரணம்

இயேசுவின் திருநாமக் கீதம்


  இயேசுவின் திருநாமக் கீதம்
  என் நெஞ்சிலே என் நாளுமே
  சங்காக முழங்கிட வேண்டும்

1. நான் பாடும் பாடல் நாளிலமெங்கும்
  எதிரொலித்திட வேண்டும்
  ஆ...ஆ...ஆ ஆ... (நான் பாடும்)
  உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
  உணர்வுப் பெற வேண்டும்
  உவகை பெற வேண்டும் -2

2. பலகோடி புதுமைகள் செய்தது இயேசுவின்
  இணையில்லா திருநாமம்
  ஆ...ஆ...ஆ ஆ... (பல கோடி)
  வாழவைப்பதும் வாழ்விக்கப்போவதும்
  அருள் தரும் ஒரு நாமம்
  இயேசுவின் திருநாமம் -2

இயேசுவின் நாமத்தினால்


இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2

1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2
  மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2

2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2
  துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2

3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
  அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2

இயேசுவின் நாமம்


  இயேசுவின் நாமம் இனிதான நாமம்
  இணையில்லா நாமம் இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
  பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்.

2. பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்
  பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம்

3. வானிலும் புவியிலும் மேலான நாமம்
  வானாதி வானவர் இயேசுவின் நாமம்

4. முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
  மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்

5. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
  சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்

இயேசுவின் பின்னால்


 இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
 திரும்பிப் பார்க்க மாட்டேன்- 2
 சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
 இயேசு சிந்திய குருதியினாலே
 விடுதலை அடைந்தேனே

1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை
  அடியேன் உள்ளத்திலே
  ஆண்டவர் இயேசு அடைக்கல மன்றோ
  ஆதலில் குறையில்லை
  ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்
  அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே
  விடுதலை அடைந்தேனே

2. தாயும் அவரே தந்தையும் அவரே
  தரணியர் நமக்கெல்லாம்
  சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும்
  தெய்வம் அவரன்றோ
  ஆயனே முன்னால் அனைத்துமே பின்னால்
  அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே
  ஆறுதல் அடைந்தேனே

இயேசுவே என்னுடன் நீ பேசு


  இயேசுவே என்னுடன் நீ பேசு என்னிதயம்
  கூறுவதைக் கேளு நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
  நாள் முழுதும் என்னை வழி நடத்து

1.உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்
  உன் திரு இதயம் பேரானந்தம்
  உன்திரு வாழ்வெனக்கருளும் இறைவா இறைவா
  உன் திரு நிழலில் நான் குடிகொள்ள
  என்றும் என்னுடன் இருப்பாய்

2.இயேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
  இணையடி பணிந்து தலை வணங்கிடுமே
  இயேசுவே உன்பெயர் வாழ்க வாழ்க வாழ்க
  இயேசுவே உன் புகழ் வாழ்க
  இயேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
  என்னைத் தள்ளி விடாதே

இயேசுவே உந்தன் வார்த்தையால்


இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அந்தப் பாதையில்
கால்கள் நடத்திடுமே
தேவனே உந்தன் பார்வையால்
என் உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே
உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே
 - இயேசுவே

1.
தீமைகள் தகர்ந்தொழிந்திடும் - உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் - இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் நல் நேர்மையும்
பொங்கி நிறைந்திடுதே
 - இயேசுவே என்...

2.
நன்மையில் இனி நிலைவுறும் - என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலை வருமே
எங்கிலும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுமே
- இயேசுவே என்...

தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா - வரம்
தருவாயே உருவானவா

எனை ஆழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாக எனையாள்பவா
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு
குணமாக்க வருவாயப்பா - எனை
உனதாக்கி அருள்வாயப்பா

உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே
நாதா உன் புகைழ் பாடுவேன் - எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்

அழகோவிமே


அழகோவிமே எங்கள் அன்னை மரியே
உயிரோவியமே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே
உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும்
அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே
கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே
அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே
ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே
யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே
உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம்
உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே
உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே

ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு
எல்லாம் ஆதரவு தருபவளே அன்னை தாய்மரியே
அம்மா உன் காட்சிகளெல்லாம் ஏழைகளின் பாக்கியமே
எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் திருக்கரமே
கண்ணின் மணியைப் போல
என்னைக் காத்திடும் தெய்வத் தாயே
மண்ணின் மைந்தர்கள் நாங்கள்
உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம்
இன்னும் ஒருமுறை என் தாயே
இனி இந்த உலகினில் பிறந்தால்
ஏழை எளியவர் முன்னாடி இங்கு புது உலகம் படைப்பாய்

அம்மா மரியே வாழ்க


அம்மா மரியே வாழ்க
மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க
எங்கள் மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க

அறியாத மாந்தருக்கு அறியவைத்தாய் – உனை
ஆரோக்கியத் தாயாக உணர வைத்தாய் (2)
மறையாத வான் நிலவாய் மாறாத வான் மழையாய் – 2
திகழ்கின்ற திருமரியே நீ வாழ்க – 3

உருகாத நெஞ்சமெல்லாம் உருகுதம்மா – உன்
அருகாமை காண இருள் விலகுதம்மா (2)
உலகங்கள் கூறுகின்ற உன் அன்புப் பெருமைகளை -2
உம் சன்னிதியில் உணர்ந்து கொண்டோம் ஒரு நாளில் – 3