புதுநன்மை பெருவிழா – மரியன்னை பேராலயம், குடந்தை

வருகைப்பாடல்
மங்கள நாளில் தலைவனே எம் மனக்கோயிலின் இறைவனே
அன்பு நிறைந்த தந்தையே என்றும் ஆராதிப்போம் துதிப்போம்
அல்லேலுயா-4
|
நீர் தந்த நாளெல்லாம் திருநாளே பேரானந்த்த் திருநாளே
நீர் செய்த செயலெல்லாம் வெளிப்பாடே
உம் நேசத்தின் வெளிப்பாடே-2

உண்மையிலும் ஆவியிலும் உம்மை
தொழுதேத்தும் இந்த நாள் நல்ல நாளே
உண்மையிலும் ஆவியிலும் உம்மை
தொழுதேத்தும் இந்த நாள் நல்ல நாளே
||
உம் கோயில் பறவைகள் சரணாலயம்
என்றும் வாழ்கின்ற சரணாலயம்
உம் பார்வைபட்டாலே வளமாகும்
உம் பயிர்கள் வளமாகும் -2
பறவையிலும் பயுர்களிலும்
பெரிதாகும் உமதன்பு உமக்கின்பம்-2

தியானப் பாடல் 
தொகையறா..
தாயாக அன்பு செய்யும் இறைவா என் வாழ்விலே
ஒளியேற்றவா

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
கொஞ்சும் தமிழ் மொழி பேசி எனைத்தேற்றவே -2
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா

1.
உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
2.
உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் மிட்டிவேன்
உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீதானே இறைவா என் உள்ள தினைவாக நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

காணிக்கைப்பாடல்
நிலத்தின் விளையும் மனித உழைப்பும்
சேரும் நேரம் இது
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்
|
அப்பமும் இரசமும் மாறும் வளே
உமது பிரசன்னம் ஆகுமே
அமைதி இழந்த எனது வாழ்வில்
அதிசயங்கள் காணுமே
உம்மையே அறிந்தேன் என்னையே இழந்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்
||
உடலும் உள்ளமும்உயர்ந்த பலியாய்
உமது பாதம் படைக்கின்றேன்
உமது வழியில் உவகை காண
உள்ளது அனைத்தும் இழக்கின்றேன்
உம்மையே அறிந்தேன் உன்னையே இழந்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்

திருவிருந்து பாடல்
என் இயேசு தந்த இந்த அன்பான விருந்து
என் வாழ்வின் அருமருந்து-2
இதை என் நினைவாக செய்யுங்கள்
என்றார் இயேசு-2 இயேசு
|
உயிரினை அளித்திடும் திரு உடலாம்
உறவினை வளர்த்திடும் இறை உடலாம்
பிணிகளை நீக்கிடும் கனிகளை கொடுத்திடும்
மாபரன் இயேசுவின் உயிருடலாமை
அனைவரும் இதைவாங்கி உண்ணுங்ஙகள் என்றே
அன்புடன் அழைக்கிறார் இயேசு இயேசு
||
பாவங்கள் கழுவிடும் திரு இரத்தமாம்
பரகதி சேர்த்திடும் இறை இரத்தமாம்
அன்பிலும் பண்பிலும் அருளிலும் வளர்த்திடும்
ஆண்டவர் இயேசுவின் திரு இரத்தமாம்
அனைவரும் இதை வாங்கி பருகுங்கள் என்றே
அன்புடன் அழைக்கிறார் இயேசு இயேசு

நன்றி பாடல்
நன்றியால் துதிப்பாடு நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உணமையுள்ளவர்
|
எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்-2
கலங்ஙிடதே திகைத்திடதே
துதியினால் இடுந்து விழும்-2
||
செங்கடல் நம்மைச் சுழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு-2
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்-2

மாதப்பாடல்
அலங்காரத் தாயே அமலோற்ப மரியே ஆரோக்கியம் நீயே அம்மா
உம்மை அண்டி வந்தோர்க்கு அடைக்கலமே ஆறுதல் நீயே அம்மா
அம்மா மரியே நீ வாழ்க அலங்காரத் தாயே நீ வாழ்க
அருளின் நிறைவே நீ வாழ்க ஆவியின் ஓவியமே வாழ்க
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

|
குழந்தையின் அழுகுரல் கேட்டிடும் தாயைப்போல் -எம்
குடந்தை மக்களின் வேண்டுதலைக் கேளும் தாயே
ஆயர் குருக்கள் துறவியர் மாந்தர்
இயேசுவின் தலைமையில் இணைந்தே வாழ்ந்திட
பரிந்துரை செய்திடுவாய்
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2
||
வார்த்தை நீ கேட்டாய் இதயத்தாலே சுமர்ந்தாய் -இறை
வார்த்தையைக் கேட்கும் மாந்தருக்கு மாதிரியாய் ஆனாய்
வாரத்தையை ஏற்று இயேசுவை சுமர்ந்து
உலகிலே வார்த்தைக்கு சாட்சியாய் வாழ்ந்திட
பரிந்துரை செய்திடுவாய்
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

புதுநன்மை பெருவிழா – மரியன்னை பேராலயம், குடந்தை


திருப்பலி முன்னுரை

இயேசுவின் பிரியமான சகோதர, சகோதரிகளே! மிக புனிதமான ''நற்கருணை'' திருச்சபையின் ஒட்டு மொத்த ஆன்மிக நலனை உள்ளடக்கியது என்று இரண்டாம் வத்திகான் சங்கம் கூறுகின்றது. இயேசுவை வழங்கும் அருள் அடையாளம் நற்கருணை. இந்த மாபெரும் மறைபொருளுக்கு இயேசு பெயர் கொடுக்கவில்லை. எம்மாவுஸ் சீடர்களிடமிருந்து நாம் அறிவது அப்பம் பிடுதல் என்ற குறிப்பு. நற்செய்தியின் பிண்ணனியில் இயேசு தன்னை அப்பத்தோடு ஒப்பிட்டு கொண்டார் என்பது தெளிவாகிறது. ''விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இதை யாரவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்''. ''எனது சதையை உணவாக கொடுக்கிறேன் அதை உலகம் வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்'' இதுவே இயேசுவினுடைய வார்த்தைகள். உலக மீட்பர்இயேசு கிறிஸ்து உலகம் புதிய வாழ்வு பெறுவதற்க்காக உணவாகின்றார்.இந்த உணவு உண்ணப்படும் போதெல்லாம் புதிய வாழ்வு பிறக்கின்றது. புதிய வாழ்விற்கான ஏக்கம் பிறக்கின்றது. இதை உண்போர் என்றுமே நிலையான வாழ்வைப பெறுவர்.இதை தான் இயேசுவின் சீடர்கள் தங்களின் வாழ்வினில் உணர்ந்தனர். இன்று புதிதாக இயேசுவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உண்ணப் பொகும் நம்முடைய பிள்ளைகள் மறு கிறிஸ்துவாக மாறவும் புதிய வாழ்வு இவர்களில் பிறக்கவும் இவர்களுக்காக இத்திருப்பலியில் நாம் அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம்.

 முதல் வாசக முன்னுரை: கடவுளாகிய ஆண்டவர் பாலை நிலத்தில் உங்களை கூட்டி சென்ற வழிகளை நினைவில் கொள்ளுங்கள் எனறும், மனிதர் அப்பத்தினால் மட்டும் அன்று மாறாக கடவுளின் வாய்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கிறார் என்றும், உங்களுக்கும் உங்களுடைய முதாதையர்க்கும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். கொடிய பாலை நிலத்தில் இறைவன் வழி நடத்தினார் என்றும் மோயீசன் இஸராயல் மக்களை நோக்கி கூறிய இறைவார்த்தைக்கு நாம் அனைவரும் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை : கடவுளை புகழ்ந்து நாம் அனைவரும் கிண்ணத்தில் பருகிறோம். அப்பத்தை பிட்டு உண்ணுகிறோம். ஆகையால் கிறிஸ்துவின் இரத்தத்தில்,கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்கிறோம் என்றும், அப்பம் ஒன்றே, ஆகையால் நாம் பலராகினும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்றும் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இறைவார்த்தைக்கு நாம் அனைவரும் செவிமெடுப்போம்.
மன்றாட்டுகள் 
1. அன்பின் இறைவா! திருச்சபையை வழி நடத்தும் திருத் தந்தை,ஆயர்கள்,குருக்கள்,துறவறத்தார் அனைவரும் எழைகளுக்கு நற்செய்தியும், சிறைப்பட்டோர்க்கு விடுதலை வாழ்வு வழங்கவும், நலிவுற்றோர்க்கு நல்வாழ்வு வழங்கவும், கிறிஸ்துவின் திரு உடலும் திரு இரத்தமும்போதுமான ஆசீர்வாத்த்தையும் திடத்தையும் இவர்களுக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் இறைவா! திருப்பலியில் பங்கேற்க்கும் அனைவரையும் இவர்களுடைய குடும்பங்களையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்.இவர்கள் கும்பத்தில் அன்பும்,சமதானம் நிலவவும், ஒருவரை ஒருவர் புரிந்து வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
3. வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவருக்கு பசியே இராது என்றுசொன்ன இயேசுவே! இன்று உம்முடைய திரு உடலையையும், திரு இரத்தத்தையும் உண்ணப் போகும் எங்களுக்கு நீர் ஒருவரே பசியையும், தாகத்தையும் போக்க்கூடியவர் என்றும், நீரே ஆன்மீக உணவு என்றும், உன்மேல் நம்பிக்கையும் அன்பையும் எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின் இறைவா! திரு உடலையையும், திரு இரத்தத்தையும் உண்ணப் போகும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரம்ப பெற்று கிறிஸ்துவின் ஒரே உடலும் ஒரே மனமும் உள்ளவராக மாறவும் அவருடைய அன்பில் நிலைத்திருக்கவும் புதிய வாழ்வு எங்களில் பிறக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கை மன்றாட்டு
ஒளி : மெழுகுவர்த்தி எவ்வாறு தன்னை அளித்து பிறருக்கு ஒளி தருகிறதோ அதை போல் திரு உடலையையும், திரு இரத்தத்தையும் உண்ணப் போகும் நாங்கள் பிறருக்கு வழிகாட்டியாக வாழ ஒளியுட்டும் மெழுகு திரிகளை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்.

மலர்: மலர் எவ்வாறு பிறருக்கு மணங்களையும் மகிழ்ச்சியும் தருகிறதோ அதைபோல் நாங்கள் தூய உள்ளத்தோடு பிறரை மகிழ்ச்சி படுத்தும் வகையில் வாழ இந்த மலர்களை உமக்கு அரபணிக்கின்றோம்.

செடி: நாளருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பிறருக்கு உதவும் இந்த செடியை போல நாங்களும் பிறருக்கு உதவும் மன நிலையை கொண்டிருக்க இந்த செடியை அர்பணிக்கின்றோம்.

அப்ப இரசம்: மாபரன் இயேசு கிறிஸ்து இந்த அப்பத்திலும் இரசத்திலும் திரு உடலாவும் திரு இரத்தமாகவும் எழுந்து எவ்வாறு தன்னையே பகிர்ந்து பிறருக்கு கொடுக்கிறாறோ அதைப் போல நாங்களும் சுயநலம் மறந்து பிறர் நலம் காண இறைவா இந்த அபத்தையும் இரசத்தையும் அர்பணிக்கின்றோம்.