அன்பான தந்தை ஒருவர்

 
அன்பான தந்தை ஒருவர்
அவருக்கு பண்பான பிள்ளைகள் இருவர் (2)

ஏராள செல்வம் வீட்டிலே
தாராள விளைச்சல் காட்டிலே (2)

1.தந்தையிடம் வந்தானே இரண்டாம் மகன்
சிந்தை மாறி சொத்தை பிரி என்றான் அவன்
கேட்டபடி சொத்தை பிரித்து கொடுத்தார் தந்தை
கேட்ட விலைக்கு சொத்தை விற்று சென்றான் பிள்ளை
இப்படி தான் வாழ வேண்டும் என்பதை மறந்தான்
எப்படியும் வாழலாம் என்றே நினைத்தான்
அப்படியே ஊதாரியாய் செலவுகள் செய்தான்
கைப்பிடி செல்வம் என்று எல்லாம் இழந்தான்
பன்றி மேய்க்கும் வேளையில் சேர்ந்தான்
உணவு இன்றி அவன் வாடியே நின்றான்
அன்பான தந்தை

2.வாடியவன் செய்த குற்றம் நினைத்தே நொந்தான்
ஓடியே நான் தந்தை காலில் விழுவேன் என்றான்
மகனென்று சொல்லும் தகுதி இழந்தேன் நானே
அடிமையாக சேர்த்து கொள்ளும் என்பேன் என்றான்
தொலைவினிலே இவன் வருவதை தந்தை பார்த்தார்
அலைக்குறளுள் அன்புடனும் ஓடியே அழைத்தார்
வருந்தி அவன் நினைத்ததெல்லாம் சொல்லியே அழுதான்
விருந்துக்கு வா மகனே என் மகனே என்றார்
மனிதர்களே பாவங்களை இன்றே உணருங்கள்
மன்னிக்கின்ற தந்தையிடம் விரைந்து திரும்புங்கள்

அன்பான தந்தை
அன்பான தந்தை ஒருவர்
என்றும் மன்னிக்கும் மனம் கொண்டவர் (3)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக