அன்னையின் விண்ணேற்பு விழா - சுதந்தர தின விழா 15.08.2011

திருப்பலி முன்னுரை
சுதந்தரம் என்பதுத மனம் போன படி வாழ்வதில் அங்கிவிடுவதில்லை. மாறாக இறைவிருப்படி செயல்படுவதில் தான் அடங்கியுள்ளது. இந்த விதத்தில் நமக்கு முன்னோடியாக இருப்பது விடுதலை வீராங்கனையாய் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நம் தாய் மரியா.
இவள் மறைநூல் படித்ததில்லை ஆனால்
இவளைப் பற்றி பேசாது மறைநூல் விடுவதில்லை..
மொழிகள் பல இவள் கற்றதில்லை- ஆனால்
புரியாத மொழிகள் என இவளுக்க ஏதுமில்லை
இவள் செல்வ செழிப்பை நாடியதில்லை ஆனால்
இவள் பெற்ற செல்வத்திற்கு இணை ஏதுமில்லை...
தன் துன்பம் பகிர யாரையும் இவள் அழைத்ததில்லை
ஆனால் தன் மைந்தர்கள் துன்பம் சுமக்க
இவள் விடுவதில்லை....
இவள் பேசிய வார்த்தைகள் வெகுவில் ஆனால்
அதன் அர்த்தங்களின் தேடல் இன்னுமும் முடிந்ததில்லை ஆனால்
நீங்கள் இடத்தை வரலாற்றில் பெற்றவள்...
இத்தகைய சிறப்புகள் மிக்க அன்னை மரியாளின் விண்ணேற்புத் தினத்தையும் கொண்டாடி மகிழும் நாம், பெற்ற சுதந்தரத்தைப் பேணிக்காத்திடவும், பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், ஒற்றுமையுடன் வாழவும், நம் தாய் நாட்டிற்காக செபிக்கும் படியாகவும் நம் அன்னையிடம் தொடரும் இப்பலியின் வழியாக வேண்டுவோம்.

பாவ மன்னிப்பு வழிபாடு
நான் பாவி இயேசுவே (பாடல்)
என் வாழ்வை மாற்றுமே....

அன்புமிக்க சகோதர சகோதரிகளே!
சுதந்தரம் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாபெரும் கொடை. அதை பொறுப்புடன் பயன்படுத்துவது, நாட்டின் முன்னேற்றம் குலைந்து போக காரணமாயிருந்திருக்கின்றோம். இதை நினைத்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம்.

சிவப்பு
தியாகத்தை குறிக்கின்ற நிறம் சிவப்பு
இறைவா! நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் தேவையான தியாகத்தை மேற்கொள்ள தயங்கியமைக்காக நாங்கள் மனம் வருந்துகின்றோம்.

வெள்ளை
தூய்மையைக் குறித்துக்காட்டுகின்ற நிறம் வெள்ளை
இறைவா! தீய எண்ணங்களுக்கு இடம் கொடுத்து, நேர்மையான உள்ளத்தோடு வாழ மறந்த தருணங்களுக்காக, நாங்கள் மனம் வருந்துகிறோம்.

பச்சை
வளமையைக் குறிக்கும் நிறம் பச்சை.
இயற்கையை உருவாக்கிய இறைவா!
உமது படைப்புகளுக்கு நாங்கள் ஊறு விளைவித்த தருணங்களை நினைத்துப் பார்த்து, சிறப்பாக சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்தியதற்காக, மனம் வருந்துகிறோம்.

சக்கரம்
ஒற்றுமையைக் குறிக்கும் சின்னம் சக்கரம்.
பல வேளைகளில் நாங்கள் நாட்டின் ஒற்றுமை உணர்வை மறந்தவர்களாய் இனம், மொழி, மதம், கட்சி, சாதியின் பெயரால் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டதை நினைத்து மனம் வருந்துகிறோம்.

உண்மையான சுதந்தரத்தின் ஊற்றாகிய இறைவன், நம் வேண்டுதல்களைக் கனிவோடு கேட்டு, நம்மீது மனம் இரங்கி, பாவத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவித்து, நம்மை முடிவில்லா சுதந்தர வாழ்வுக்கு அழைப்பதை வெளிப்படுத்தும் பொருட்டு குருவானவர் நம்மீது தீர்த்தம் தெளிப்பார்.. 
(தீர்த்தம் தெளித்தப் பின்....)

சகோதர சகோதரிகளே பாவ இருள் நம்மை விட்டு அகன்றது. விடுதலையின் ஆண்டவர் நமது மனச்சுமைகளை நீக்கி உண்மையான சுதந்தரத்தைக் கொடுத்தார். ஒளியாம் இறைவன் நம்மீது இறங்கி வந்துள்ளார்.நமதுஉள்ளத்திலும் இல்லத்திலும் குடிகொள்கிறார் என்ற சிந்தனையுடன் குத்து விளக்கை ஏற்றுவோம்.

குருவானவர் குத்து விளக்கை ஏற்றியபின், குத்துவிளக்கிலிருந்து பீடத்தின் திரிகள் ஏற்றப்படுகின்றன. பிறகு மணிகள் முழங்க உன்னதங்களிலே பாடப்படுகிறது.

விசுவாசிகளின் மன்றாட்டு
(அனைவரும் சொல்ல வேண்டியது)
எங்கள் தாய்மரியின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

தேசியக்கொடி
அன்பின் இறைவா! சுதந்தர விழாவைச் சிறப்பிக்கின்ற இந்த புனிதமான நாளில், எங்களது தேசியக் கொடியை அர்ப்பணிப்பதன் மூலம் எம் நாட்டையே உமக்க அர்ப்பணிக்கிறோம். சுதந்தரக் காற்றைக் சுவாசிக்கும் நாங்கள், எம் நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும், முழு ஒத்துழைப்பைக் கொடுத்து, அதன் வளர்ச்சிப் பாதையிலே நாங்கள் கைகோர்த்து உழைக்க அருள் புரிய வேண்டுமென்று....
பாடப்புத்தகங்கள்
ஞானத்தின் இருப்பிடமே இறைவா!
வளமான இந்தியாவுக்கு வித்திடும் பள்ளி மாணவர்களை ஆசிர்வதிக்க இந்த பாடப்புத்தகங்களை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். உயர்வான எண்ணங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும் வளர்த்துக் கொண்டு, எதிர்கால இந்தியாவின் உண்மை குடிமக்களாக உருவாகிட வேண்டுமென்று.....
உலக உருண்டை உலக வரைப்படம்
பரம்பொருளே இறைவா! உலக நாடுகள் எல்லாம் உமக்கு ஒப்புக்கொடுப்பதன் அடையாளமாக இதை உமக்கு அளிக்கிறோம். அறிவியல் வளர்ச்சியை ஆக்க சக்திகளுக்குப் பயன்படுத்தவும் அனைத்து நாடுகளும் அன்பு, அமைதி, சமாதானம், ஒற்றுமை ஆகிய மதிப்பீடுகளைக் கருத்தில் கொண்டு, போட்டி மனப்பான்மைகளைத் தவிர்த்து, அன்போடு வாழ அருள்புரிய வேண்டுமென்று....
இனிப்பு மிட்டாய்
நன்மையின் நாயகனே இறைவா! இனிமையான சுதந்தரத்தைச் சுவைக்கின்ற நாங்கள், நன்றி பெருக்கோடு இந்த இனிப்பைக் காணிக்கையாக்குகிறோம். இதனது இனிமையான சுவையினால், சுவைப்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது போல, பெற்றுக் கொண்ட சுதந்தரத்கை நாங்களும் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் சுதந்தரத்தை மதிக்கவும், அதனால் பிறரை மகிழ்ச்சிப்படுத்தவும் அருள் புரிய வேண்டுமென்று...
(யோவா 14: 14) நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.
ஆகவே நம் நாட்டின் சுதந்தரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்காவும், நாட்டின் தலைவர்களுக்காவும் இராணுவ வீரர்களின் குடும்பத்திற்காகவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காவும் இறைவன் கற்றுக் கொடுத்த செபத்தின் வழியாக செபிப்போம்.

நன்றி மன்றாட்டு
உம்மை போற்றுகின்றோம் (பாடல்)
உம்மை புகழுகின்றோம்
நன்றி கூறுகின்றோம்
  • வாழ்வளிப்பவரான இறைவா!  அன்னை மரியாவைப் பாவத்திலிருந்தும், சாவின் பிடியில் இருந்தும் விடுவித்து விண்ணகத்திற்கு எடுத்துக் கொண்டதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  • விடுதலையின் இறைவா!  என் தாய்த் திருநாட்டை அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, சுதந்தர நாடாகத் திகழச் செய்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  • வாழ்வளிக்கும் வள்ளலாகிய இறைவா!  நாங்கள் மனித மாண்புடன் தலைநிமிர்ந்து வாழ எங்களுக்கு நீர் தந்துள்ள அறிவு, ஆற்றல், சூழ்நிலைகளுக்காவும், இயற்கை வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம்.

நன்மைகளின் ஊற்றான அன்புத் தெய்வம் நம் திருச்சபைக்கும், நமது நாட்டிற்கும் நமக்கும் செய்துள்ள நலன்களை எண்ணி நன்றி கூறிய நாம் ஒருமித்த உள்ளத்துடன் இணைந்து, பின்வரும் செபத்தினை நான் வாசிக்க நீங்களும் சொல்லி உங்களை அழைக்கிறேன்.

(அனைவரும் முழங்கால் படி இடவும்.)
அன்பார்ந்தவர்களே.....
நம் நாட்டின் சுதந்தர போராட்ட தியாகிகளுக்காவும், உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காவும் ஒரு நிமிடம் மெளவுன அஞ்சலி செய்வோம்.

செபம்
அன்புத் தந்தையே இறைவா!
எங்கள் நாட்டின் விடுதலைக்காக உழைத்த தியாக உள்ளங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் நீத்த வீரர்கள், எம் பாரத நாட்டின் வளஙகள் கலைச்செல்வங்கள், எம் முன்னேற்றத் திட்டங்கள், எங்களை வாட்டும் துன்பங்கள், எங்களின் ஏக்கங்கள், எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் உமக்குப் ஒப்புக் கொடுக்கிறோம்.

இந்தியா என் தாய் நாடு. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர் என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து ஒன்றுப்பட்டு ஒரே இறைக்குடும்பமாய், வாழவும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடவும் அருள் தாரும்.        
ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக