அறிவியல் வளர்ச்சியும் ஆபத்தும்


படைக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தும் விடுதலைக்கான ஏக்கத்தோடு காத்திருக்கும் நேரம் தான் இந்த 21 ஆம் நூற்றாண்டு.  என்ன செய்து விட்டது இந்த அறிவியல்?  நோய்களுக்கு காரணம் என்னவென்று அறிவதற்கு முன்னாலே கொத்து கொத்தாய் மாண்டுபோன காலம் மாறிவிட்டது.   இன்று... 
  • ஒரு மனிதன் உடலில் 103689 முறை இதயம் துடிக்கின்றது.  
  • 168 மில்லியன் மைல்கள் இரத்தம் பயணம் செய்கிறது.  
  • 23000 முறை அவன் சுவாசிக்கிறான். 
  • மேலும் ஒரு மனிதன் வாழ்நாளில் 35000 கிலோ உணவு உண்ணுகின்றான்.  அதாவது, எடையில் 7 இந்திய யானைகளை உண்ணுகின்றான்.
இவ்வாறு மிகச்சரியாக புள்ளிவிவரம் காட்டும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ளது.  இந்த அறிவியல், உலகினை மாற்றியதோடு மட்டும் நில்லாமல் மனிதர்களையும் சற்று மாற்றிவிட்டது.  இது தான் அது செய்த தவறு.

முன்பெல்லாம் பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்யும்போது பொழுதுபோக்கிற்காக அருகில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு போவார்கள.; இதனால் நல்ல உறவுகள் வளர்ந்தது.  ஆனால் இன்றோ பேருந்தில் ஏறிய உடனே கைபேசியை தன் காதில் மாட்டிவிட்டு உல்லாசமாக தனிமையில் பயணம் செய்கிறார்கள்.  அழகாக ஒரு கவிஞர் கூறுவார், “இன்று அறிவியல் சுருக்கிப்போட்டது உலகை மட்டும் அல்ல நல்ல உறவினையும் தான்.

இன்றைய அறிவியல் இந்த உலகை ஒரு வியாபார உலகமாகவும் விளம்பர உலகமாகவும் மாற்றிப்போட்டது.  முன்பெல்லாம் குழந்தை பிறந்த ஒரு ஆண்டு வரைக்கும் அதற்கு 30 முதல் 40 வகையான மூலிகை உணவுகள் கொடுக்கப்பட்டு வந்தது.  ஆனால் இன்றோ!
“என்ன ஆச்சு?
குழந்தை அழுவுது”
Woodwards கொடுக்கச் சொல்லு நீ குழந்தையாய் இருக்கும்போது அதுதான் கொடுத்தேன்”,
என்று ஒரு பாட்டி அழகு தமிழ் பேசுகிறாள்.

குறைந்த பரப்பில் அதிகம் வண்ணம் பூசப்படும் இடம் எது தெரியுமா?  அதுதான் பெண்களின் முகம்.  ஒரே வாரத்தில் இயற்கை அழகினை மாற்றி செயற்கை அழகினை பெற துடிக்கிறார்கள் இந்த கருப்பு தேவதைகள்.  இன்று நாம் அறிவியல் வளர்ச்சி என்று கூறிவிட்டு வீண் செலவு செய்கின்றோம்.
  • ஒரு AK47 ரக துப்பாக்கி வாங்கும் பணத்தில் 3000 குழந்தைகளுக்கு பார்வையின்மையை தடுக்கும் Vitamin A மாத்திரை வாங்க முடியும். 
  • ஒரு கோடி கண்ணி வெடிகள் வாங்கும் பணத்தில் 77 லட்சம் குழந்தைகளுக்கு நம்மால் தடுப்பூசி போடமுடியும்.
  • ஒரு நவீன ரக குண்டு வீசும் விமானம் வாங்கும் பணத்தில் 1350 கோடி குழந்தைகளுக்கு நான்கு ஆண்டுகள் நல்ல ஆரம்பக்கல்வியை அளிக்கலாம்.  

ஆனால் நாம் இவற்றை செய்ய மறுக்கின்றோம்.  காரணம் அறிவியல் வளர்ச்சியே அவசியம் என்ற எண்ணம். 20.9.2011 அன்று தினகரன் செய்திதாளில் வந்த கணக்கின்படி 5.1 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாகதான் இருக்கிறார்கள்.  8.5 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன?  அறிவியலின் வளர்ச்சி.
ஆனால் நம் நாட்டின் முந்தைய நிலை இப்படி இல்லை. அது ஒரு வசந்த காலம்.

“ஏர் இழுத்து நீர் இறைத்து தென்றல் சுகத்தில் தெம்மாங்கு பாடிய காலம் மின்சாரம் இல்லாமல் மனிதர்கள் மின்மினியாய் மின்னி திரிந்த காலம். பள்ளிகள் இல்லாமல் பாடங்கள் தெரியாமல் பண்போடு பண்பாட்டை நெஞ்சில் சுமந்த காலம் அது அந்த காலம் நாம் மனிதனாய் வாழ்ந்தகாலம்”. ஒரு கைவினை கலைஞன் கடவுளுக்கு இவ்வாறு கடிதம் எழுதுகிறான்.
கடவுளே, நான் நலமா? என்று நீ ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால் நான் சொல்கிறேன் நான் நலமில்லை. தேடினேன் தேடுகிறேன் ஆனால் வேலை கிடைக்கவில்லை கிடைத்த வேலையையும் கணினி களவாடிவிட்டான். உயிரையும் கொடுத்து உணவை வாங்கிய நிலை மாறி இன்று உணவை கொடுத்து உயிரை வாங்குகின்றான்.  வியாதிகள் விற்கப்படுகின்றன. உணவில் கலப்படம.; மனசுக்கு சுகமில்லை, பிழைப்புக்கு வழியில்லை. விரைவில் வந்து உன்னை நேரில் சந்திக்கிறேன்.  இப்படிக்கு, கலைஞன்.
இது கடிதமில்லை. அறிவியல் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளியின் இதய குமுறல். அறிவியல் வளர்ச்சி என்பது நன்கு கருக்கு தீட்டப்பட்ட கத்தியைப் போன்றது. அதை நாம் நன்கு பயன்படுத்தினால் நாம் காய்கறி அரியலாம். ஆனால் கவனம் குறைந்தால் நம் கரம் காயப்படும்.  

எனவே அறிவியல் வளர்ச்சியை நன்கு பயன்படுத்தி நாமும் வளர்ந்து நாட்டையும் வளர்ப்போம்.

- M. ARULRAJ, II B.Sc. Chemistry, 2011

11 கருத்துகள்:

  1. dont waste your time to degrade the science invention. try to learn the science and try to teach the technical facts in that to the people in proper way.

    பதிலளிநீக்கு
  2. nice try ......good message.....but can u find a solution for that if, can means just try it............

    பதிலளிநீக்கு
  3. nalla karuthu kuuriya nanbanuku
    en manamaarndha salyuuuuuuuuuut

    பதிலளிநீக்கு
  4. Remember! you have presented your ideas with the help of science

    பதிலளிநீக்கு