உலகினைப் படைத்த ஆண்டவரே

உலகினைப் படைத்த ஆண்டவரே
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை
ஏற்றிட வேண்டுகிறேன் -2
கருணையின் இறைவா ஏற்பாயே
காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே -2
1.
விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுமையாய் தந்தேன் -2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் -2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என் பிழையாவும் பொறுத்தருள் செய்வாய்

2.
கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ -2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம் பெற கையளித்தேன் -2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய்

லல்லா..லாலா லாலா Happy happy Christmas

லல்லா..லாலா லாலா
Happy happy Christmas
Merry merry Christmas

பாலன் இயேசு பிறந்துள்ளார் பூவுலகம் மகிழுதே -2
இறையாட்சி மலரட்டும் - நம்மில்
விடுதலை விடியட்டும் -2

1.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார்
மனித உள்ளத்தில் மலர்ந்துள்ளார் -2
மனிதம் மலரட்டும் நம்மில் அமைதி பரவட்டும்
நீதி நிலைக்கட்டும் மனித ஒற்றுமை ஓங்கட்டும் -2
(லல்லா...)

2.
ஏழை மனித மனங்களில்
பாமரன் இயேசு பிறந்துள்ளார் -2
வறுமை அழியட்டும்
உணமை செழிக்கட்டும்
புது வாழ்வு பிறக்கட்டும்
புது உறவுகள் வளரட்டும் -2
(லல்லா...)

நீயாக நான் மாறனும்

நீயாக நான் மாறனும்
நிஜமாக நான் வாழனும்
எனக்காக பலியானதால்
உனக்காக நான் வாழனும்
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...

1.
உயர்தவன் தாழ்ந்தவன் நிலையிங்கு மாறிட
நான் மாறனும் நீயாகவே
மனிதமும் புனிதமும் இணைந்திடவே
நான் மாறனும் நீயாகவே
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...
2.
பாவமும் சாபமும் மறையந்திடவே
நான் மாறனும் நீயாகவே
பரிவையும் கனிவையும் வளர்த்திடவே
நான் மாறனும் நீயாகவே
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காக தருகின்றேன் -2
மலர்களில் விழுந்து மணமேன நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பனிந்து
1.
பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன் -2
விழுந்தவரை தூக்கிடுவேன்
இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
இறைவா....

2.
இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன
கையில் இருப்பதை கொடுப்பதே இனபம் என்றாய-2
பலியை அல்ல இரக்கத்தையே
என்னில் விரும்புகின்ற இறைமகனே
உன்னைபோல் நானும் உருவாகிட
இறைவா...

வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்

வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்
வந்திவண் அன்பினை யாம் தருவோம்
வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்

1.
ஆனைத்துலகின் இறைமகனாம் அனைவருக்கும் ஆண்டவராம் -2
மாமரி மகனாக, இனைவார்த்தைநயே மனுவாக
பாருக்கு ஒளியாக பாவம் தீர்த்திட அருளாக
விண்ணவர்க்கு மகிமை தந்தார், மண்ணவர்க்கு அமைதி தந்தார் -2
2.
ஒளிர்ந்திடும் மீன் வழியே, அது விழித்திடும்
குடிலருகே
மன்னவர்கள் மூவர் சென்றர், மன்ன்னை மகிழ்வாய் வணங்கி நின்றர்
பொன்,மீரை,துபமுமாய்,பொருத்தனையாய் கவடுத்தனராம் -2

3.
ஆதியின் வினைத்திர்த்தார் நமை அறநெறியில் சேர்த்தார்
அன்புக்கு அருள் தருவார்,நம்மை அழித்திடும் இருள் மாய்ப்பார்
நாமவர்க்கு நமை அளிப்போம்,தமதமேன்?
அன்பு செய்வோம் -2