உலகினைப் படைத்த ஆண்டவரே

உலகினைப் படைத்த ஆண்டவரே
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை
ஏற்றிட வேண்டுகிறேன் -2
கருணையின் இறைவா ஏற்பாயே
காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே -2
1.
விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுமையாய் தந்தேன் -2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் -2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என் பிழையாவும் பொறுத்தருள் செய்வாய்

2.
கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ -2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம் பெற கையளித்தேன் -2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய்

தாயாக அன்பு செய்யும்

தொகையறா..
தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலே
ஒளியேற்றவா

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா
1.
உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்
இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்
விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே
உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

2.
உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
சுகராகம் மிட்டிவேன்
உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும்
யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீ பானே இறைவா
என் உள்ள தினைவாக நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

ஆயனைத் தேடும் ஆடுகளே

ஆயனைத் தேடும் ஆடுகளே
ஆயன் நம்மை தேடுகிறார் -2
சிதறிய சிறுமந்தை நாமே -2
சேர்ந்தே அவரிடம் செல்வோம்

சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2
1.
பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாற செய்வேன்
பாயும் நீர் அருவிக்கு நடத்தி செல்வேன் -2
நலிவுற்றதும் வலுவற்றதும்
களைப்புற்றதும் சோர்வுற்றதும்
நிலை வாழ்விலே நிலைபெற செய்வேன்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2

2.
பெரும்சுமை சுமர்ந்து சோர்ந்திருப்போரே
பணிவும் கனிவும் எனக்குண்டு -2
என சுமையோ எளிதானது என் நுகமும் எளிதானது
என்னிடம் பகின்று இளைப்பாற்றி காண்பீர்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2

உலகினைப் படைத்த ஆண்டவரே

உலகினைப் படைத்த ஆண்டவரே
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை
ஏற்றிட வேண்டுகிறேன் -2
கருணையின் இறைவா ஏற்பாயே
காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே -2
1.
விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுமையாய் தந்தேன் -2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் -2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என் பிழையாவும் பொறுத்தருள் செய்வாய்

2.
கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ -2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம் பெற கையளித்தேன் -2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய்

லல்லா..லாலா லாலா Happy happy Christmas

லல்லா..லாலா லாலா
Happy happy Christmas
Merry merry Christmas

பாலன் இயேசு பிறந்துள்ளார் பூவுலகம் மகிழுதே -2
இறையாட்சி மலரட்டும் - நம்மில்
விடுதலை விடியட்டும் -2

1.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார்
மனித உள்ளத்தில் மலர்ந்துள்ளார் -2
மனிதம் மலரட்டும் நம்மில் அமைதி பரவட்டும்
நீதி நிலைக்கட்டும் மனித ஒற்றுமை ஓங்கட்டும் -2
(லல்லா...)

2.
ஏழை மனித மனங்களில்
பாமரன் இயேசு பிறந்துள்ளார் -2
வறுமை அழியட்டும்
உணமை செழிக்கட்டும்
புது வாழ்வு பிறக்கட்டும்
புது உறவுகள் வளரட்டும் -2
(லல்லா...)