ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
தூய்மை நிறை மூவொரு இறைவா
புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இறைவனின் புனித அன்னையே
கன்னியருள் சிறந்த கன்னியே
கிறிஸ்துவின் அன்னையே
இறையருளின் அன்னையே
தூய்மைமிகு அன்னையே
கன்னிமை குன்றா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
வியப்புக்குரிய அன்னையே
நல்ல ஆலோசனை அன்னையே
மீட்பரின் அன்னையே
திருச்சபையின் அன்னையே
அறிவுமிகு அன்னையே
போற்றுதற்குரிய அன்னையே
வல்லமையுள்ள அன்னையே
தயையுள்ள அன்னையே
நம்பிக்கைக்குரிய அன்னையே
நீதியின் கண்ணாடியே
ஞானத்திற்கு உறைவிடமே
எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே
ஞானப் பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
பக்தி நிறை பாத்திரமே
மறைபொருளின் நறுமலரே
தாவீது அரசரின் கோபுரமே
தந்த மயமான கோபுரமே
பொன் மயமான ஆலயமே
உடன்படிக்கையின் பேழையே
விண்ணகத்தின் வாயிலே
விடியற்காலையின் விண்மீனே
நோயுற்றோரின் ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
துயருறுவோருக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
வானதூதர்களின் அரசியே
முதுபெரும் தந்தையரின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைசாட்சிகளின் அரசியே
இறையடியார்களின் அரசியே
கன்னியரின் அரசியே
அனைத்துப் புனிதர்களின் அரசியே
அமல உற்பவியான அரசியே
விண்ணேற்பு பெற்ற அரசியே
திருச்சபையின் அரசியே
குருக்களின் அரசியே
குடும்பங்களின் அரசியே
அமைதியின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே-3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்.
இறைவனுடைய புனித அன்னையே, இதோ உம்மிடம் சரணடைய ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும்போது நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப் பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும். இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மன்றாடுவோமாக
இறைவா, முழுமனதுடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைப் பார்த்து, எப்பொழுதும் கன்னியான புனித மரியாவுடைய வேண்டுதலினாலே, பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.