இயேசுவின் நாமம்


  இயேசுவின் நாமம் இனிதான நாமம்
  இணையில்லா நாமம் இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
  பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்.

2. பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்
  பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம்

3. வானிலும் புவியிலும் மேலான நாமம்
  வானாதி வானவர் இயேசுவின் நாமம்

4. முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
  மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்

5. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
  சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்

இயேசுவின் பின்னால்


 இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
 திரும்பிப் பார்க்க மாட்டேன்- 2
 சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
 இயேசு சிந்திய குருதியினாலே
 விடுதலை அடைந்தேனே

1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை
  அடியேன் உள்ளத்திலே
  ஆண்டவர் இயேசு அடைக்கல மன்றோ
  ஆதலில் குறையில்லை
  ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்
  அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே
  விடுதலை அடைந்தேனே

2. தாயும் அவரே தந்தையும் அவரே
  தரணியர் நமக்கெல்லாம்
  சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும்
  தெய்வம் அவரன்றோ
  ஆயனே முன்னால் அனைத்துமே பின்னால்
  அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே
  ஆறுதல் அடைந்தேனே

இயேசுவே என்னுடன் நீ பேசு


  இயேசுவே என்னுடன் நீ பேசு என்னிதயம்
  கூறுவதைக் கேளு நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
  நாள் முழுதும் என்னை வழி நடத்து

1.உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்
  உன் திரு இதயம் பேரானந்தம்
  உன்திரு வாழ்வெனக்கருளும் இறைவா இறைவா
  உன் திரு நிழலில் நான் குடிகொள்ள
  என்றும் என்னுடன் இருப்பாய்

2.இயேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
  இணையடி பணிந்து தலை வணங்கிடுமே
  இயேசுவே உன்பெயர் வாழ்க வாழ்க வாழ்க
  இயேசுவே உன் புகழ் வாழ்க
  இயேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
  என்னைத் தள்ளி விடாதே

இயேசுவே உந்தன் வார்த்தையால்


இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அந்தப் பாதையில்
கால்கள் நடத்திடுமே
தேவனே உந்தன் பார்வையால்
என் உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே
உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே
 - இயேசுவே

1.
தீமைகள் தகர்ந்தொழிந்திடும் - உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் - இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் நல் நேர்மையும்
பொங்கி நிறைந்திடுதே
 - இயேசுவே என்...

2.
நன்மையில் இனி நிலைவுறும் - என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலை வருமே
எங்கிலும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுமே
- இயேசுவே என்...

தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா - வரம்
தருவாயே உருவானவா

எனை ஆழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாக எனையாள்பவா
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு
குணமாக்க வருவாயப்பா - எனை
உனதாக்கி அருள்வாயப்பா

உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே
நாதா உன் புகைழ் பாடுவேன் - எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்

அழகோவிமே


அழகோவிமே எங்கள் அன்னை மரியே
உயிரோவியமே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே
உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும்
அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே
கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே
அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே
ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே
யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே
உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம்
உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே
உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே

ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு
எல்லாம் ஆதரவு தருபவளே அன்னை தாய்மரியே
அம்மா உன் காட்சிகளெல்லாம் ஏழைகளின் பாக்கியமே
எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் திருக்கரமே
கண்ணின் மணியைப் போல
என்னைக் காத்திடும் தெய்வத் தாயே
மண்ணின் மைந்தர்கள் நாங்கள்
உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம்
இன்னும் ஒருமுறை என் தாயே
இனி இந்த உலகினில் பிறந்தால்
ஏழை எளியவர் முன்னாடி இங்கு புது உலகம் படைப்பாய்

அம்மா மரியே வாழ்க


அம்மா மரியே வாழ்க
மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க
எங்கள் மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க

அறியாத மாந்தருக்கு அறியவைத்தாய் – உனை
ஆரோக்கியத் தாயாக உணர வைத்தாய் (2)
மறையாத வான் நிலவாய் மாறாத வான் மழையாய் – 2
திகழ்கின்ற திருமரியே நீ வாழ்க – 3

உருகாத நெஞ்சமெல்லாம் உருகுதம்மா – உன்
அருகாமை காண இருள் விலகுதம்மா (2)
உலகங்கள் கூறுகின்ற உன் அன்புப் பெருமைகளை -2
உம் சன்னிதியில் உணர்ந்து கொண்டோம் ஒரு நாளில் – 3