என் ஆயனாய் இறைவன்


  என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது
  என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
  எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2
  என்றும் இன்பம் ஆ ... ஆ என்றும் இன்பம்
  ஆ... ஆ என்றென்றும் இன்பமல்லவா!

2. என்னோடவர் வாழ்ந்திடும் போதினிலே
  எங்கே இருள் படர்ந்திரும் பாதையிலே - 2
  எங்கும் ஒளி ஆ... ஆ எங்கும் ஒளி
  ஆ... ஆ எங்கெங்கும் ஒளி அல்லவா!

3. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
  எல்லோர்க்குமே நண்பனாய் ஆக்கியதால் - 2
  என்னுள்ளமே ஆ... ஆ - என் தேவனை
  ஆ... ஆ எந்நாளும் புகழ்ந்திடுமே

இறைவனைத் தேடும் இதயங்களே


  இறைவனைத் தேடும் இதயங்களே
  வாருங்கள் என் இறைவன் யார்
  என்று சொல்வேன் கேளுங்கள்

1. பாடும் குயிலுக்கு பாடச் சொல்லி தந்தவர் யார்?
  ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லி தந்தவர் யார்?
  அவரே என் இயேசு
  அவர் தாழ் நான் பணிவேன்
  அவர் தாழ் நான் பணிந்தால்
  அகமே மகிழ்ந்திடுமே

2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?
  வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவன் யார்?
  என்னென்ன விந்தைகள்
  எங்கெங்கே காண்கின்றோம்
  அனைத்திற்கும் அடிப்படையாம்
  இயேசுவே காரணம்

இயேசுவின் திருநாமக் கீதம்


  இயேசுவின் திருநாமக் கீதம்
  என் நெஞ்சிலே என் நாளுமே
  சங்காக முழங்கிட வேண்டும்

1. நான் பாடும் பாடல் நாளிலமெங்கும்
  எதிரொலித்திட வேண்டும்
  ஆ...ஆ...ஆ ஆ... (நான் பாடும்)
  உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
  உணர்வுப் பெற வேண்டும்
  உவகை பெற வேண்டும் -2

2. பலகோடி புதுமைகள் செய்தது இயேசுவின்
  இணையில்லா திருநாமம்
  ஆ...ஆ...ஆ ஆ... (பல கோடி)
  வாழவைப்பதும் வாழ்விக்கப்போவதும்
  அருள் தரும் ஒரு நாமம்
  இயேசுவின் திருநாமம் -2

இயேசுவின் நாமத்தினால்


இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2

1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2
  மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2

2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2
  துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2

3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
  அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2

இயேசுவின் நாமம்


  இயேசுவின் நாமம் இனிதான நாமம்
  இணையில்லா நாமம் இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
  பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்.

2. பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்
  பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம்

3. வானிலும் புவியிலும் மேலான நாமம்
  வானாதி வானவர் இயேசுவின் நாமம்

4. முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
  மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்

5. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
  சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்

இயேசுவின் பின்னால்


 இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
 திரும்பிப் பார்க்க மாட்டேன்- 2
 சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
 இயேசு சிந்திய குருதியினாலே
 விடுதலை அடைந்தேனே

1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை
  அடியேன் உள்ளத்திலே
  ஆண்டவர் இயேசு அடைக்கல மன்றோ
  ஆதலில் குறையில்லை
  ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்
  அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே
  விடுதலை அடைந்தேனே

2. தாயும் அவரே தந்தையும் அவரே
  தரணியர் நமக்கெல்லாம்
  சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும்
  தெய்வம் அவரன்றோ
  ஆயனே முன்னால் அனைத்துமே பின்னால்
  அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே
  ஆறுதல் அடைந்தேனே

இயேசுவே என்னுடன் நீ பேசு


  இயேசுவே என்னுடன் நீ பேசு என்னிதயம்
  கூறுவதைக் கேளு நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
  நாள் முழுதும் என்னை வழி நடத்து

1.உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்
  உன் திரு இதயம் பேரானந்தம்
  உன்திரு வாழ்வெனக்கருளும் இறைவா இறைவா
  உன் திரு நிழலில் நான் குடிகொள்ள
  என்றும் என்னுடன் இருப்பாய்

2.இயேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
  இணையடி பணிந்து தலை வணங்கிடுமே
  இயேசுவே உன்பெயர் வாழ்க வாழ்க வாழ்க
  இயேசுவே உன் புகழ் வாழ்க
  இயேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
  என்னைத் தள்ளி விடாதே