எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்


எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்
தொல்லைமிகு இவ்வுலகில் துணை யேசுவே

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்

தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும்

கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்

போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

எந்தக் காலத்திலும்


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் (2)

ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே
தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே
(எந்தக் காலத்திலும் எந்த.......)

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே
(எந்தக் காலத்திலும் எந்த.......)

துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே
இன்னல் வேளையில் - மாறாதவர்;; நீரே
தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஐ ராஐனும் - என் சர்வமும் நீரே
(எந்தக் காலத்திலும் எந்த.......)

உன் திருயாழில்


உன் திருயாழில் என் இறைவா- பல
பண் தரு நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திட வேண்டும் இசையரசே
                                       (உன் திருயாழில்)
1
யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் கலையும்(2)
யாழிசை கேட்டு தனை மறந்து   (2) உந்தன் ஏழிசையோடு
இணைந்திடுமே இணைந்திடுமே
                                       (உன் திருயாழில்)
2
விண்ணகச் சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணில்லாத் தாரகை உனக்குண்டு (2)
உன்னருட் பேரொளி நடுவினிலே  (2)
நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்
                                       (உன் திருயாழில்)

ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்

ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்
அதை பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன்- (2)
உந்தன் புகழ்பாடி புகழ்பாடி நான் மாழுவேன-ஒருகோடி

1
மணவீணை தனை இன்று நீP மீட்டினாய்
அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய்-(2)
என்வாழ்வும் ஒருபாடல் இசை வேந்தனே
அதில் எழும் இராகம் எல்லாம்
உன் புகழ் பாடுதே- (2)

2
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகின்றேன் உனை யேசுவே- (2)
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகின்றேன் உனை யேசுவே- (2)

நல்ல இதயம் ஒன்று தா


நல்ல இதயம் ஒன்று தா
என் யேசுவே எனக்குத்தா( 2 )- அதில்
அன்பை விதைத்துத் தா
அனைவருக்கும் நான் அளிக்கத் தா
நல்ல இதயம் ஒன்று தா
என் யேசுவே எனக்குத்தா

1
எனக்கெதிராய் பகைமை செய்வோரை
மன்னிக்கும் மனத்தைத் தா -2  
அந்தப் பகைமையை மீள நினையாமல்
நான் மறக்கும் மனத்தைத் தா
                     ( நல்ல )
2
உன்னாலடைந்த நன்மை மறவாத
உள்ளம் ஒன்று தா -2
என்நாழும் உந்தன் நினைவால் வாழும்
உள்ளத்தை எனக்குத் தா
                    ( நல்ல )

பயன்படுத்தும் இறைவா


பயன்படுத்தும் இறைவா
பதரான என்னை பயனுள்ள கருவியாய்
பயன்படுத்தும் இறைவா

1
எனது கரங்கள் உம் பணி புரிய
எனது கால்கள் உம் வழி செல்ல
எனது கண்கள் உம்மைப்போல் பார்க்க -2
எனது நாவும் உம்புகழ் பாட

2
எனது செவிகள் உம் மொழி கேட்க
எனது மனமும் உம்மையே காட்ட
எனது மனமும் உம்மையே நினைக்க -2
எனது இதயம் உம்மில் அக்களிக்க

3
எனது இன்பம்; பிறர்க்கு நிறைவாய்
எனது வாழ்வு பிறர்க்கு ஒளியாய்
எனது சாவு பிறர்க்கு வாழ்வாய் -2
எனது சாவு பிறர்க்கு வாழ்வாய்

பார்வை பெற வேண்டும் - நான்


பார்வை பெற வேண்டும் - நான்
பார்வை பெறவேண்டும் - என்
உள்ளம் உன்னொளி பெறவேண்டும்
புதுப் பார்வை பெறவேண்டும் - ( 2 )
நான் பார்வை பெறவேண்டும்

1
வாழ்வின் தடைகளைத்தாண்டியெழும்
புதுப்பார்வை பெறவேண்டும்
நாளும் பிறக்கும் உன்வழியை
காணும் பார்வை தரவேண்டும்  -2
உன்னாலே எல்லாமே
ஆகும் நிலை வேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்

2
நீதி நேர்மை உணர்வுகளை நான்
பார்க்கும் வரம் வேண்;டும்
உண்மை அன்பு உயர்ந்திடவே
உழைக்கும் உறுதி தரவேண்டும்  -( 2 )
எல்லாமும் ஒன்றாகவே
வாழ வழிவேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்;