உன் திருயாழில்


உன் திருயாழில் என் இறைவா- பல
பண் தரு நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திட வேண்டும் இசையரசே
                                       (உன் திருயாழில்)
1
யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் கலையும்(2)
யாழிசை கேட்டு தனை மறந்து   (2) உந்தன் ஏழிசையோடு
இணைந்திடுமே இணைந்திடுமே
                                       (உன் திருயாழில்)
2
விண்ணகச் சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணில்லாத் தாரகை உனக்குண்டு (2)
உன்னருட் பேரொளி நடுவினிலே  (2)
நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்
                                       (உன் திருயாழில்)

ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்

ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்
அதை பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன்- (2)
உந்தன் புகழ்பாடி புகழ்பாடி நான் மாழுவேன-ஒருகோடி

1
மணவீணை தனை இன்று நீP மீட்டினாய்
அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய்-(2)
என்வாழ்வும் ஒருபாடல் இசை வேந்தனே
அதில் எழும் இராகம் எல்லாம்
உன் புகழ் பாடுதே- (2)

2
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகின்றேன் உனை யேசுவே- (2)
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகின்றேன் உனை யேசுவே- (2)

நல்ல இதயம் ஒன்று தா


நல்ல இதயம் ஒன்று தா
என் யேசுவே எனக்குத்தா( 2 )- அதில்
அன்பை விதைத்துத் தா
அனைவருக்கும் நான் அளிக்கத் தா
நல்ல இதயம் ஒன்று தா
என் யேசுவே எனக்குத்தா

1
எனக்கெதிராய் பகைமை செய்வோரை
மன்னிக்கும் மனத்தைத் தா -2  
அந்தப் பகைமையை மீள நினையாமல்
நான் மறக்கும் மனத்தைத் தா
                     ( நல்ல )
2
உன்னாலடைந்த நன்மை மறவாத
உள்ளம் ஒன்று தா -2
என்நாழும் உந்தன் நினைவால் வாழும்
உள்ளத்தை எனக்குத் தா
                    ( நல்ல )

பயன்படுத்தும் இறைவா


பயன்படுத்தும் இறைவா
பதரான என்னை பயனுள்ள கருவியாய்
பயன்படுத்தும் இறைவா

1
எனது கரங்கள் உம் பணி புரிய
எனது கால்கள் உம் வழி செல்ல
எனது கண்கள் உம்மைப்போல் பார்க்க -2
எனது நாவும் உம்புகழ் பாட

2
எனது செவிகள் உம் மொழி கேட்க
எனது மனமும் உம்மையே காட்ட
எனது மனமும் உம்மையே நினைக்க -2
எனது இதயம் உம்மில் அக்களிக்க

3
எனது இன்பம்; பிறர்க்கு நிறைவாய்
எனது வாழ்வு பிறர்க்கு ஒளியாய்
எனது சாவு பிறர்க்கு வாழ்வாய் -2
எனது சாவு பிறர்க்கு வாழ்வாய்

பார்வை பெற வேண்டும் - நான்


பார்வை பெற வேண்டும் - நான்
பார்வை பெறவேண்டும் - என்
உள்ளம் உன்னொளி பெறவேண்டும்
புதுப் பார்வை பெறவேண்டும் - ( 2 )
நான் பார்வை பெறவேண்டும்

1
வாழ்வின் தடைகளைத்தாண்டியெழும்
புதுப்பார்வை பெறவேண்டும்
நாளும் பிறக்கும் உன்வழியை
காணும் பார்வை தரவேண்டும்  -2
உன்னாலே எல்லாமே
ஆகும் நிலை வேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்

2
நீதி நேர்மை உணர்வுகளை நான்
பார்க்கும் வரம் வேண்;டும்
உண்மை அன்பு உயர்ந்திடவே
உழைக்கும் உறுதி தரவேண்டும்  -( 2 )
எல்லாமும் ஒன்றாகவே
வாழ வழிவேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்;

யேசுவே என்னுடன் நீ பேசு


யேசுவே என்னுடன் நீ பேசு
என்னிதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து


1
உன் திருப் பெயர் நான் பாடிடும் கீதம்
உம் திரு இதயம் பேரானந்தம் (2)
உம் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உம் திரு வாழ்வெனக்கருளும்
உம் திரு நிழலில் நான் குடி கொள்ள
என்றும் என்னுடன் இருப்பாய்


2
யேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
இணையடி பணிந்து தலை வணங்கிடுமே(2)
யேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
யேசுவே உம் புகழ் வாழ்க
யேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
என்னைத் தள்ளி விடாதீர்

யேசுவின் அன்பை மறந்திடுவாயோ


யேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதபண்பிருந்தால்
மறந்திடாதிருக்க நீர் சிலுவையிலே அவர்
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ
யேசுவின் அன்பை…

1
அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு
கல்வாரி மலைக் கண்ணீர் ததும்பும் அவரன்பு

2
அலைகடலைவிடப் பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் வளர்ந்தென்னை வளைத்திடுமன்பு
சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு

3
எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காகத் தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காகப் பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவனன்பு