அம்மா உந்தன் அன்பினிலே

அம்மா உந்தன் அன்பினிலே

அருள்வாய் எமக்கு அடைக்கலமே


1. இறைவன் படைத்த எழிலே எழிலே

இயேசுவைத் தந்த முகிலே முகிலே

தூய்மை பொழியும் நிலவே நிலவே

துணையே வாழ்வில் நீயே


2. புவியோர் எங்கள் புகழே புகழே

புனிதம் பொங்கும் அழகே அழகே

உம் மகன் புதிய உறவில் உறவில்

எம்மையும் வதியச் செய்வாய்


நிலையான புகழுக்குரிய 

தூய இறை நன்மைக்கே,

எல்லா காலமும், 

தொழுகையும் புகழும் 

போற்றியும் மாட்சிமையும்

உண்டாகக் கடவது

உன் புகழைப் பாடுவது

 உன் புகழைப் பாடுவது 

என் வாழ்வின் இன்பமைய்யா

உன் அருளைப் போற்றுவது 

என் வாழ்வின் செல்வமைய்யா (2)


1. துன்பத்திலும் இன்பத்திலும்

நல் தந்தையாய் நீ இருப்பாய்

கண்ணயரக் காத்திருக்கும் 

நல் அன்னையாய் அருகிருப்பாய் (2)

அன்பு எனும் அமுதத்தினை 

நான் அருந்திட எனக்களிப்பாய்

உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2


2. பல்லுயிரைப் படைத்திருப்பாய்

நீ என்னையும் ஏன் படைத்தாய்

பாவத்திலே வாழ்ந்திருந்தும் 

நீ என்னையும் ஏன் அழைத்தாய் (2)

அன்பினுக்கு அடைக்கும் தாழ் 

ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்

உன் அன்பை மறவாமல்

நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2

என் சுவாசக் காற்றே

என் சுவாசக் காற்றே 

என் வாழ்வின் ஊற்றே

இறைவா என் உள்ளம் வருவாய்

என்னுயிரின் உணவே 

என் வாழ்வின் வழியே

தலைவா நீ உன்னைத் தருவாய்

என் வாழ்வும் என் வளமும் 

எல்லாமும் நீதானே

இறைவா தலைவா 

அன்பினைப் பொழிவாய்


1. என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்

நீதானே நீதானே இறைவா

என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்

தருவாயே தருவாயே தலைவா

வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே

வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே (2)

வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்


2. எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை

அறிவேனே அறிவேனே இறைவா

உனைப்போல நானும் பிறரன்பில் வளர

அருள்வாயே அருள்வாயே தலைவா

மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே

ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே (2)

நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்

என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்

என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்

உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன்

காற்றும் நீயே கடலும் நீயே

கருணை நீயே கனிவும் நீயே

அன்பெனும் சங்கமத்தின் நன்றி காணிக்கை

எந்தன் அன்பு காணிக்கை எந்தன் நன்றி காணிக்கை


1. 

உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்

உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும்

கனவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை

வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன்


2.
நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்

நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும்

நினைவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு நிறைவும் இல்லை

வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன்

புதிய பூமியே புதுப்பாட்டு பாடி வா

புதிய பூமியே புதுப்பாட்டு பாடி வா

புனித நாளிலே இறை மாட்சி காண வா (2)

வானிலே கோலமாய் வான தூதர் பாடவே

பூவிலே நாமுமே தேவன் பீடம் கூடுவோம்(2)


1. 

விண்ணோரெல்லாம் கொண்டாடவே

இந்நாளையே பொன்னாளென

மண்ணோருமே கொண்டாடுவோம்

நம் பாடலும் விண்ணேறவே

மறைவாழ்வுத் தேடும் நாமெல்லோரும் ஜீவஊற்று இயேசுபாதம்

நாடி வாழ்வைத் தியாகமாக்குவோம் (2)


2. 

சங்காகியே பண்பாடுவோம் சங்கீதத்தால் ஒன்றாகுவோம்

எந்நாளுமே அன்பானவர் பொன் தேகத்தில் பங்காகுவோம்

இறை வாக்கு கூறும் வாழ்வுத் தேடி மானிடத்தின் ஜீவ நாடி

நாதன் இயேசு பாதை செல்லுவோம் (2)

மரியன்னையே எங்கள் மாமரியே

மரியன்னையே எங்கள் மாமரியே

மாபரன் இயேசுவின் தாய்மரியே

விடிவெள்ளியே எங்கள் காவலியே

பணிவோம் புகழ்வோம் வாழியவே (2)


1. அண்ணல் இயேசுவின் மீட்புப்பணியிலே

அடித்தளமாய் அமைந்த கன்னியே

அருள் வாழ்விலே நிறைவு காணவே

அடிமை என்ற அர்ப்பணப் பூவே (2)


2. அன்புப் பலியுமே எங்கள் வாழ்விலே

அவனி மாந்தர் என்றும் காணவே

அன்னை உங்களின் ஆசீர் வேண்டியே

அர்ப்பணித்தோம் இன்று எம்மையே (2)

உள்ளம் என்னும் கோவிலிலே வாராயோ இறைவா

 என்னுள்ளம் நிதம் ஆள நீ வேண்டும் இறைவா

இயலாக இசையாக நீங்காத நினைவாக

மழையாக நதியாக கதியாக வா


உள்ளம் என்னும் கோவிலிலே வாராயோ இறைவா

இன்பம் எங்கள் வாழ்வினிலே தாராயோ தலைவா

நீயே என் தேடல் நீயே என் பாடல்

நீயே என் ராகம் தாளம் சங்கீதமாம்

மழையாக நதியாக இசையாக வா

உணவாக உறவாக உயிராக வா


1. என் வாழ்வு உனைத் தேடும் பயணம் அன்றோ

உன் அன்பு எனை மேவும் தருணம் இன்றோ

தாயன்பில் தலை சாய்க்கும் சேயாகினேன்

நானுந்தன் பேரன்பில் குயிலாகினேன்


ஆனந்தம் ஆனந்தம் - என் 

விழியிலும் மொழியிலும் ஆனந்தம்

பேரின்பம் பேரின்பம் - என் 

கனவிலும் நனவிலும் பேரின்பம்


2. உம் வாக்கு என் வாழ்வு விளக்கல்லவா

என் போக்கு தனை மாற்றும் மொழியல்லவா

உள்ளார்ந்த நலம் வேண்டி மன்றாடினேன்

உம் மார்பில் கார்மேக மயிலாகினேன்