புது வாழ்வுக்குப் புறப்படுவோம்

புது வாழ்வுக்குப் புறப்படுவோம்- இறை
ஆவியில் உயிர்ப்படைவோம்
ஆன்பும் நீதியும் ஆறாய்ப் பெருகும்
ஆனந்த அரசமைப்போம்
ஆனந்த இறையரசமைப்போம் - புதுவாழ்வுக்கு
ஆனந்தம் ஆஹா ஆனந்தம்
இயேசுவின் அன்பில் பேரானந்தம்-2
I
மாண்புறு தேவனின் மன்றத்திலே
பணிவோம் அவரை பணிவோம்-2
வான் படையாவும் வணங்கும் அவரை
தொழுவோம் நாளும் தொழுவோம்
வேந்தனவர் தரும் விடுதலை வாழ்வின்
நற்செய்திக்காய் நன்றி கூறிடுவோம்.
II
வானகத் தந்தையின் பிள்ளைகள் நாம்
தூய்மையில் அவர்போல் வாழ்வோம்-2
காணும் மாந்தர் யாவரும் நமது
சோதரர் என்றே அறிவோம்-2
அயலார்க்குத் தரும் இரக்கமும் அன்பும்
எந்நாளும் உயர் புகழ் பலியாம்

சக்தியானவா ஜீவநாயகா

சக்தியானவா ஜீவநாயகா
அன்பாலே வாழும் தேவா
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா-2

I
மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்கவா
அக்களிக்க வா அன்பில் அக்களிக்கவா
அச்சமின்றே வாழ்வில் ஒத்துழைக்கவா
திக்கனைத்துமே உண்மை எதிரொலிக்கவா
எதிரொலிக்கவா உண்மை எதிரொலிக்கவா
யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்யவா
உதிக்க செய்ய வா அமைதி உதிக்கச் செய்யவா
பூமி எங்கும் நெஞ்சம் யாவும் தங்கியே அன்பாலே வாழும் தேவா

II
வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்கவா
மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்கவா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்தவா
மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்தவா
ஆணவத்தையே வென்று பணிவைக்கவா
பணிவைக்கவா வென்று பணிவைக்கவா
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே
அன்பாலே வாழும் தேவா

அலங்காரத்தாயே அமலோற்ப மரியே

அலங்காரத்தாயே அமலோற்ப மரியே
ஆரோக்கியம் நீயே அம்மா
உம்மை அண்டி வந்தோர்க்கு அடைக்கலமே
ஆறுதல் நீயெ அம்மா
அம்மா மரியே நீர் வாழ்க அலங்காரத்தாயே நீர் வாழ்க
அருளின் நிறைவே நீர் வாழ்க
ஆவியின் ஓவியமே வாழ்க-2

வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

குழந்தையின் ஆழுகுரல் கேட்டிடும் தாயைப் போல்-உம்
குடந்தை மக்களின் வேண்டுதலைக் கேளும் தாயே
ஆயர் குருக்கள் துறவியர் மாந்தர்
இயேசுவின் தலைமையில் இணைந்தே வாழ்ந்திட
பரிந்துரை செய்திடுவாய்

வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

Every tongue will acknowledge God - (Romans 14:11)
Latin EnglishTamilNew Tamil
In nomine Patris, et Filii, et Spiritus Sancti. AmenIn the name of the Father, and of the Son and of the Holy Spirit. Amen
சிலுவை அடையாளம்
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, - ஆமென்.
தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே - ஆமென்.
Credo in Deum Patrem omnipotentem, Creatorem caeli et terrae. Et in Iesum Christum, Filium eius unicum, Dominum nostrum, qui conceptus est de Spiritu Sancto, natus ex Maria Virgine, passus sub Pontio Pilato, crucifixus, mortuus, et sepultus, descendit ad infernos, tertia die resurrexit a mortuis, ascendit ad caelos, sedet ad dexteram Dei Patris omnipotentis, inde venturus est iudicare vivos et mortuos. Credo in Spiritum Sanctum, sanctam Ecclesiam catholicam, sanctorum communionem, remissionem peccatorum, carnis resurrectionem, vitam aeternam. Amen.I believe in God, the Father Almighty, Creator of Heaven and Earth, and in Jesus Christ His only Son, Our Lord, who was conceived of the Holy Spirit, born of the Virgin Mary, suffered under Pontius Pilate, was crucified, died and was buried. On the third day, he rose again. He ascended into Heaven and is seated at the right hand of God, the Father Almighty. He will come again to judge the living and the dead. I believe in the Holy Spirit, the Holy Catholic Church, the Communion of Saints, the forgiveness of sins, the resurrection of the body, and life everlasting. Amen.ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்பக்காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்,) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் பறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும்விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதணையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்பக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென்.
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த / எல்லாம் வல்ல
தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய / இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியாரால் கருவுற்று / தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில்
அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி / மூன்றாம்
நாள் / இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல
தந்தையாகிய / கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து /
வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் / தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். தூய ஆவி
யாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் / புனிதர்களுடைய
சமூக உறவையும் நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை
நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன் - ஆமென்.
PATER NOSTER, qui es in caelis, sanctificetur nomen tuum. Adveniat regnum tuum. Fiat voluntas tua, sicut in caelo et in terra. Panem nostrum quotidianum da nobis hodie, et dimitte nobis debita nostra sicut et nos dimittimus debitoribus nostris. Et ne nos inducas in tentationem, sed libera nos a malo. Amen.Our Father, who art in Heaven,
hallowed be Thy name,
Thy kingdom come, Thy will be done
on earth as it is in Heaven.
Give us this day our daily bread,
and forgive us our trespasses
as we forgive those who trespass against us.
And lead us not into temptation but deliver us from evil. Amen
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;
உம்முடைய இராச்சியம் வருக;
உம்முடைய சித்தம் பரலோகத்தில்
செய்யப்படுவது போல பூலோகத்திலும்
செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு
இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை
செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
ஆமென்.
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் - ஆமென்.
AVE MARIA, gratia plena, Dominus tecum. Benedicta tu in mulieribus, et benedictus fructus ventris tui, Iesus. Sancta Maria, Mater Dei, ora pro nobis peccatoribus, nunc, et in hora mortis nostrae. Amen.Hail Mary, full of grace, the Lord is with thee, blessed art thou amongst women and blessed is the fruit of thy womb, Jesus.
Holy Mary Mother of God, pray for us sinners now and at the hour of our death. Amen
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே;
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே;
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே,
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்.
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! / ஆண்டவர் உம்முடனே. / பெண்களுக்குள்
ஆசி பெற்றவர் நீரே. / உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் / ஆசி
பெற்றவரே./
தூய மரியே / இறைவனின் தாயே / பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக /
இப்பொழுதும் / எங்கள் இறப்பின் வேளையிலும் / வேண்டிக்கொள்ளும் - ஆமென்.
GLORIA PATRI, et Filio, et Spiritui Sancto. Sicut erat in principio, et nunc, et semper, et in saecula saeculorum. Amen.Glory be to the Father and to the Son and to the Holy Spirit. As it was in the beginning is now, and ever shall be, world without end. Amen
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும்
என்றென்றும் இருப்பதாக - ஆமென்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.
தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும்
இருப்பதாக - ஆமென்.

திருக்குறள் - அறத்துப்பால்: துறவு

Renunciation according to Thirukkural

குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.
கலைஞர் உரை:  ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.
மு.வ உரை:  ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:  எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

Translation:
From whatever, aye, whatever, man gets free, 
From what, aye, from that, no more of pain hath he!.
Explanation:  Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

குறள் 342:
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டுஇயற் பால பல.
கலைஞர் உரை:  ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
மு.வ உரை:  துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
சாலமன் பாப்பையா உரை:  பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

Translation:
'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 
'Renounce' while time is yet, if to those pleasures you aspire.
Explanation:  After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).

குறள் 343:
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
கலைஞர் உரை:  ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
மு.வ உரை:  ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:  ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.

Translation:
'Perceptions of the five' must all expire;- 
Relinquished in its order each desire.
Explanation:  Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.

குறள் 344:
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை 
மயலாகும் மற்றும் பெயர்த்து.
கலைஞர் உரை:  ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.
மு.வ உரை:  தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:  உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

Translation:
'Privation absolute' is penance true; 
'Possession' brings bewilderment anew.
Explanation:  To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.

குறள் 345:
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் 
உற்றார்க்கு உடம்பும் மிகை.
கலைஞர் உரை:  பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.
மு.வ உரை:  பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.
சாலமன் பாப்பையா உரை:  இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.

Translation:
To those who sev'rance seek from being's varied strife, 
Flesh is burthen sore; what then other bonds of life?.
Explanation:  What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).

குறள் 346:
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

கலைஞர் உரை:  யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
மு.வ உரை:  உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
சாலமன் பாப்பையா உரை:  உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

Translation:
Who kills conceit that utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine.
Explanation: He who destroys the pride which says "I", "mine" will enter a world which is difficult even to the Gods to attain.

குறள் 347:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
கலைஞர் உரை:  பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
மு.வ உரை:  யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
சாலமன் பாப்பையா உரை:  ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.

Translation:
Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp.
Explanation:  Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.

குறள் 348:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
கலைஞர் உரை:  அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.
மு.வ உரை:  முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:  ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.

Translation:
Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.
Explanation:  Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.

குறள் 349:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
கலைஞர் உரை:  பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.
மு.வ உரை:  இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:  ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

Translation:
When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability.
Explanation:
At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

குறள் 350:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
கலைஞர் உரை:  எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
மு.வ உரை:  பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:  ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

Translation:
Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
Cling to that bond, to get thee free from every clinging thing.
Explanation:  Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.

O give thanks to the Lord

O give thanks to the Lord for he is good (3)
yes, eternal is his love

I will sing to my God never ceasing
All my life I will tell of his wonders
He is the maker of all earth and heaven
Of the ocean the seas and all they hold

The almighty is faithful forever
He is just to the poor and the outraged
It is he who gives bread to the hungry
Who delivers the captives form their chains

There shall be showers of blessing

There shall be showers of blessing
This is the promise of love
There shall be seasons refreshing
Sent from the saviour above

Showers of blessing
Showers of blessing we need
Mercy drops round us are falling
But for the showers we plead

There shall be showers of blessing
Send them upon us o lord
Grant to us now a refreshing
Come and now honour thy word

There shall be showers of blessing
O that today they might fall
Now as to God we’re confessing
Now as on Jesus we call