அன்பின் தேவ நற்கருணையிலே

அன்பின் தேவநற் கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
1.
அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப ரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவா நீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்


2.
கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நல் கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்.

இயேசுவே உன் வார்த்தை ஒன்றே ஆறுதல்

இயேசுவே உன் வார்த்தை ஒன்றே ஆறுதல்-2
இயேசுவே என் வாழ்க்கை காணும் தேறுதல்-2
பாசமே உன் நாமம் வாழ்வின் ஆனந்தம்-2
நேசமே உன் பார்வை நாறும் பேரின்பம்-2
ஆசையாய் நான் பாடுவேன் புது கீர்த்தனம்-2
துதிகளின் தேவனின் திருப்பெயர் பாடி
புகழ்வோம் மானிடரே
நல்லவர் தேவனின் வல்லமை பாடி
புகழ்வோம் மானிடரே
ஆறுதல் தேறுதல் இயேசுவே உன் வார்த்தை

I
வாய்மையும் நேர்மையும் எனக்கரணாகும்
என்னோடு நீ இருக்க 2
வாழ்விலும் தாழ்விலும் நம்பிக்கை ஆளும்
உன்னோடு நான் நடக்க
ஆழ்கடல் கடந்தேன் பாழ்வெளி நடந்தேன்
தோள்களில் சுமந்து சென்றீர் 2
பேரிடர் நேரம் பெருமழை காலம்
உயிரினைக் காத்து நின்றீர்-2
ஆண்டவரே என் ஒளியாகும் அவரே எனது மீட்பாகும்-2
உயிருக்கு அடைக்கலம் அவரிருக்க
யாருக்கு அஞ்சி நான் நடுங்க வேண்டும் 2
II
தீயோர் வளமுடன் வாழ்வதை கண்டு தினம்
மனம் வெதும்ப மாட்டேன்
காலடி சுவடுகள் கவனித்துக் கொள்வார்
கலக்கங்கள் கொள்ளமாட்டேன்
நன்மைகள் நிறைத்து தீமைகள் தகர்த்து
புகலிடம் அளித்திடுவார்-2
வாழ்வோரின் மொழியில் கடவுளின் திருமுன்
நாள்தோறும் நடத்திருவார்-2

புது வாழ்வுக்குப் புறப்படுவோம்

புது வாழ்வுக்குப் புறப்படுவோம்- இறை
ஆவியில் உயிர்ப்படைவோம்
ஆன்பும் நீதியும் ஆறாய்ப் பெருகும்
ஆனந்த அரசமைப்போம்
ஆனந்த இறையரசமைப்போம் - புதுவாழ்வுக்கு
ஆனந்தம் ஆஹா ஆனந்தம்
இயேசுவின் அன்பில் பேரானந்தம்-2
I
மாண்புறு தேவனின் மன்றத்திலே
பணிவோம் அவரை பணிவோம்-2
வான் படையாவும் வணங்கும் அவரை
தொழுவோம் நாளும் தொழுவோம்
வேந்தனவர் தரும் விடுதலை வாழ்வின்
நற்செய்திக்காய் நன்றி கூறிடுவோம்.
II
வானகத் தந்தையின் பிள்ளைகள் நாம்
தூய்மையில் அவர்போல் வாழ்வோம்-2
காணும் மாந்தர் யாவரும் நமது
சோதரர் என்றே அறிவோம்-2
அயலார்க்குத் தரும் இரக்கமும் அன்பும்
எந்நாளும் உயர் புகழ் பலியாம்

சக்தியானவா ஜீவநாயகா

சக்தியானவா ஜீவநாயகா
அன்பாலே வாழும் தேவா
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா-2

I
மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்கவா
அக்களிக்க வா அன்பில் அக்களிக்கவா
அச்சமின்றே வாழ்வில் ஒத்துழைக்கவா
திக்கனைத்துமே உண்மை எதிரொலிக்கவா
எதிரொலிக்கவா உண்மை எதிரொலிக்கவா
யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்யவா
உதிக்க செய்ய வா அமைதி உதிக்கச் செய்யவா
பூமி எங்கும் நெஞ்சம் யாவும் தங்கியே அன்பாலே வாழும் தேவா

II
வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்கவா
மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்கவா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்தவா
மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்தவா
ஆணவத்தையே வென்று பணிவைக்கவா
பணிவைக்கவா வென்று பணிவைக்கவா
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே
அன்பாலே வாழும் தேவா

அலங்காரத்தாயே அமலோற்ப மரியே

அலங்காரத்தாயே அமலோற்ப மரியே
ஆரோக்கியம் நீயே அம்மா
உம்மை அண்டி வந்தோர்க்கு அடைக்கலமே
ஆறுதல் நீயெ அம்மா
அம்மா மரியே நீர் வாழ்க அலங்காரத்தாயே நீர் வாழ்க
அருளின் நிறைவே நீர் வாழ்க
ஆவியின் ஓவியமே வாழ்க-2

வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

குழந்தையின் ஆழுகுரல் கேட்டிடும் தாயைப் போல்-உம்
குடந்தை மக்களின் வேண்டுதலைக் கேளும் தாயே
ஆயர் குருக்கள் துறவியர் மாந்தர்
இயேசுவின் தலைமையில் இணைந்தே வாழ்ந்திட
பரிந்துரை செய்திடுவாய்

வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2