ஹாப்பி கிறிஸ்துமஸ் Cini song

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்...........

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது

Film : Kanne Pappa
Song: Thdralil Adai Pinna
Singer : P Suseela
Lyric : Kannadasan
Music : MSV
Star cast : Muthuraman, K.R.Vijaya

இயேசுவைப் பற்றி சுப்பிரமணிய பாரதியார்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தம் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

அன்பு காண் மரியாள் மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்,
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலேனா
ஆஹா!சாலப் பெருங்களி யிஃதே.

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்,
வண்மைப் பேருயிர்- யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியாள் மக்தலேனா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.

Translation:
The Lord descended and died on the Cross;
Rose up on the third day.
Mary Magdalene witnessed in person.
People of all nations!
Listen to the implication thereof.
The Lord enters our selves
To protect us for ever from the doom,
If only we kill our ego.

Mary Magdalene is but love;
Jesus Christ is but the soul.
When first the evil is dispensed with,
Resurrection occurs on day three.
Looking at the resurrected,
On the face bright as gold,
Mary Magdalene praised the Lord.
Aha! Great indeed is the delight!

Crucify the senses on the cross of Truth
With nails of tapas.
Thence revealed is the heavenly form
Of Jesus Christ thereon.
Mary Magdalene is but womanhood.
Jesus Christ is but virtue preserved.
Such is the subtlety of the episode
As can be understood in a moment.

சி.சுப்பிரமணிய பாரதியார் பாடிய சுதேச கீதங்கள்.
(2-ம் பாகம் 153-ம் பக்கம்)

தங்கச்சுடரே வா

தங்கச்சுடரே வா எங்கள் உயிரே வா
மரியின் மகனே வா மண்ணில் வாழவா

பேரின்ப நாள் இந்த நாள் விண்ணிலே
இயேசு தெய்வம் வந்த நாள் மண்ணிலே

பாலைவனப் பறவைகள் போல்
மக்கள் வாடி நிற்கும் வேளையிலே
ஒளியாக வந்தாய் வரம் கோடி தந்தாய்
விண் வார்த்தை நீயல்லவோ
அருள் வெள்ளம் சுரந்தோட
பூபாளங்கள் முழங்கிடுதே

- Tribute to Fr. Venantius, our Theology professor, St. Peter's, Bangalore

கிறிஸ்துமஸ் பாடல் - மார்கழி குளிரினில் மன்னவனே

மார்கழி குளிரினில் மன்னவனே
பார்முகம் வந்தாயோ என் சொந்தமே.
தேனிசைப் பாடல் இசைக்கின்றேன் - உன்
குடிலினில் காணிக்கை படைக்கின்றேன் (2)
எல்லாமும் நீயென்று தெரிந்திருந்தும்
எதுவும் இல்லாது ஏன் வந்தாய்
முழுமையின் நிறைவே நீயென்றால்
வெறுமையை பூண்டு ஏன் பிறந்தாய்
என்னிடம் உள்ளதை எல்லாமும்
நீ ஏற்றிடு காணிக்கையாக்குகிறேன்
-- மார்கழி
சொந்தமே நீயென்று தெரிந்திருந்தும்
உறவுகள் இல்லாது நான் வாழ்ந்தேன்
வெறுமையின் நிறைவே நீயென்றால்
வறுமையின் கோலம் ஏன் படைத்தீர்
உள்ளதை எல்லாம் தருகின்றேன்
அந்த வெற்றிடம் நீ வந்து நிறைந்துவிடு

கிறிஸ்துமஸ் பாடல் - கன்னி ஈன்ற செல்வமே


கன்னி ஈன்ற செல்வமே இம்
மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
எம்பொன்னே தேனே இன்பமே
எண்ண வேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததே! கன்னி

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தையே

வல்ல தேவன் வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னைத் துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்?

Joy to the world

Joy to the world, the Lord is come!
Let earth receive her King;
Let every heart prepare Him room,
And heaven and nature sing,
And heaven and nature sing,
And heaven, and heaven, and nature sing.

Joy to the world, the Savior reigns!
Let men their songs employ;
While fields and floods, rocks, hills and plains
Repeat the sounding joy,
Repeat the sounding joy,
Repeat, repeat, the sounding joy.

No more let sins and sorrows grow,
Nor thorns infest the ground;
He comes to make His blessings flow
Far as the curse is found,
Far as the curse is found,
Far as, far as, the curse is found.

He rules the world with truth and grace,
And makes the nations prove
The glories of His righteousness,
And wonders of His love,
And wonders of His love,
And wonders, wonders, of His love.

(Air: Joy to the World)
-Same tune in Tamil
ஆனந்தமே! ஓர் கானந்தனில்
நம் மன்னர் வந்துள்ளார்!
விண்ணாளும் மன்னர் சொன்னது
மண்ணாளும் மன்னர் மன்னனாய்
விண்ணோர் பாடிடவே – மண்
ணோர் கொண்டாடிடவே - இறை
மன்னன்னே மீட்பராய்ப் பிறந்துள்ளார்

ஆனந்தமே! மா விந்தையிதே!
தெய்வம் மனிதன் ஆனார்
மண்ணோரின் பாவம் தீர்க்கவே
விண்ணோரின் வீடு சேர்க்கவே - பவ
இருள் மறைந்திடுதே – அவர்
அருளும் நிறைந்திடுதே - இறை
சொல்லும் இன்றிங்கு நிறைவேறவே

ஆனந்தமே! பேரின்பம் இதே
மரி கன்னி அன்னையாய்
நம் மீட்பரைப் பெற்றாள் அவள் - விண்
உயர்த்த பெற்றாள் அவள்
மங்கள மனமுடனே - இசை
பொங்கும் பொலிவுடனே - இவண்
எங்கும் எல்லோரும் புகழ் பாடிடவே

மாதா பாடல் - ஆரோக்கிய மாதாவே- உமது

ஆரோக்கிய மாதாவே- உமது
புகழ் பாடி மகிழ்ந்திடுவோம்
எந்நாளும் பாடித் துதித்திடுவோம்

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே
பலவித கலைகளும் பாரினில் சிறந்திட‌
அனைவருக்கும் துணை புரிந்தாயே-2

தேன் கமழும் சோலை தேர்ந்து விளங்கும்
வேளாங்கன்னியில் அமர்ந்தாயே
வானகமும் இந்த வையகமும்
அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே-2