நீயாக நான் மாறனும்
நீயாக நான் மாறனும்
நிஜமாக நான் வாழனும்
எனக்காக பலியானதால்
உனக்காக நான் வாழனும்
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...
1.
உயர்தவன் தாழ்ந்தவன் நிலையிங்கு மாறிட
நான் மாறனும் நீயாகவே
மனிதமும் புனிதமும் இணைந்திடவே
நான் மாறனும் நீயாகவே
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...
2.
பாவமும் சாபமும் மறையந்திடவே
நான் மாறனும் நீயாகவே
பரிவையும் கனிவையும் வளர்த்திடவே
நான் மாறனும் நீயாகவே
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...