இயேசுநாதருடைய திருஇருதயத்தின் செபமாலை
கிறிஸ்துவின் திருஆத்துமமே, என்னைப் பரிசுத்தமாக்கும்.
கிறிஸ்துவின் திருச்சரீரமே என்னை இரட்சித்தருளும்.
கிறிஸ்துவின் திருஇரத்தமே, என்னை நிறைவித்தருளும்.
கிறிஸ்துவின் திருவிலாவிலிருந்து வந்த திருநீரே, என்னைக் கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் தேற்றுங்கள்.ஓ நல்ல இயேசுவே, எனக்கு செவிசாய்த்தருளும்.
உமது திருக்காயங்களுக்குள்ளே என்னை மறைத்தருளும்.
உம்மைவிட்டு என்னைப் பிரியவிடாதேயும்.
தீய எதிரியிடமிருந்து என்னைக் காத்தருளும்.
என் மரணநேரத்தில் என்னை அழைத்து,
உமது புனிதர்களோடு எக்காலமும்
உம்மைப் புகழ எனக்கு கற்பித்தருளும். -ஆமென்
பெரிய மணியில் :
இருதயத்தில் தாழ்ச்சியும் மனதில் சாந்தமும் நிறைந்த
ஆண்டவராகிய இயேசுவே/ என் இருதயத்தை தேவரீருடைய
திருஇருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்.
சிறியமணியில் :
இயேசுவின் மதுரமான திருஇருதயமே! என் சிநேகமாயிரும்.
பத்துமணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே! என் இரட்சணியமாயிரும்.
ஒவ்வொரு பத்து மணிச் செபமும், கீழ்க்கண்ட கருத்துக்களுக்காகச் சொல்லப்பட வேண்டும்.
1-ம் பத்துமணி - பிற சமயத்தினரும், பிரிந்துபோன சகோதரர்களுமான மக்களால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
2-ம் பத்துமணி - பொல்லாத கிறிஸ்தவர்களால் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
3-ம் பத்துமணி - நாம்தாமே அவருக்கு உண்டாக்கும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
4-ம் பத்துமணி - சகல மனிதராலும் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த தேவமாதா சகல புனிதர்களுடைய சிநேகப் பற்றுதலோடு நாமும் நம்முடைய இருதயத்தை ஒப்புக்கொடுப்போம்.
5-ம் பத்துமணி - இயேசுவின் திருஇருதயமே! நாங்களும் மற்றவர்களும் சிநேகிக்கும்படி அநுக்கிரகம் செய்தருளும்.
ஐம்பது மணி முடிந்தபின் :
இயேசுவின் திருஇருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
ஜென்ம மாசின்றி உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுநாதருடைய திருஇருதயம், எங்கும் சிநேகிக்கப் படுவதாக.
என் இயேசுவே! இரக்கமாயிரும்.
திருஇருதயத்தின் சிநேகிதராகிய புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக்
கொள்ளும். - ஆமென்.