கடலைப் போற்றுவோம்
அனைவருக்கும் என் வணக்கம். உலகின் முதல் அதிசயம், சத்தமிடும் ரகசியம், காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப்பள்ளம் வாசிக்க கிடைக்காத வரலாற்றுகளைத் தின்று சிரிக்கும் நிஜம் ஆம், கடல். அந்த கடலின் பெருமைகளைப் போற்றவே நான் இங்கு வந்துள்ளேன்.
196 1\2 கோடி ஆண்டிகளுக்கு முன் இவ்வுலகில் தோன்றியது என்ன மனிதனா?மிருகமா? இல்லை கடல் மட்டும்தான். அந்த கடலில்தான் முதல் உயிரினமும் தோன்றியிருக்கும் நீரில் தான் சுவாசித்திருக்கும். இதன் மரபுரிமை தொடர்ச்சிதான் கருவில் உள்ள திசு தண்ணீர்க் குடத்தில் சுவாசிக்கிறது.
கடல் 85000 உயிர்கள் கொண்டு அமைக்கப்பட்ட தன் அரசாங்கம் இங்கு பிரிவில்லை எங்கும் பேதமில்லை பல கோடி வருடங்களுக்கு முன் துப்பிய இந்நிலவுலகில் பிரிவினை, பிரிவினை முற்றிய மனிதன் பொதுவுடமை கூறும் கடலையும் பெயர்வைத்து பிரித்தான். தன் நாட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள கடல் நாட்டை சார்ந்த்து என்றும் வகுத்து கொண்டான்.
தமிழர்கள் இந்த கடலின் பரப்பை கண்டு வியந்து 'பரவை' என்றும் ஆழம் கண்டு மலைத்து'ஆழி' என்றும் அழைத்தார்கள். குறுந்தொகை 45வது பாடலில் மேகங்கள் முகந்தபோதும் கடல் குறையவில்லை, புனல்கள் பல கலந்தபோதும் கடல் உயரவில்லை என்று கடலின் தாழ்ச்சியைப் புகழ்ந்துள்ளனர்.
கடல் மீனவர்களுக்கு மட்டுமல்ல நம் உலகின் எல்லா கண்டங்களுக்கும் கருணை பொழிகிறது.கடலடியில் குளிர் மற்றும் வெப்பம் என் 2 நீரோட்டங்கள் உண்டு. வெப்ப நீரோட்டம் தான் நார்வே மற்றும் ஸ்வீடன் நாடுகளை குளிரிளிருந்து பாதுகாக்கிறது. கடலின் முக்கிய பணியே பூமத்தியரேகைப் பகுதியின் வெப்பத்தை குளிர்பிரதேசங்களுக்கும், குளிர்பிரதேச குளிர்ச்சியை பூமத்திரேகைப்பகுதிக்கும் கடத்துவதுதான்.
குளிர்ச்சி பொழியும் நிலவும் நம் கடல்தாயின் மகளே, பூமி தோன்றி சில காலத்திற்கு பிறகு சூரியனின் சில பௌதிகமாற்றத்தால் பசுபிக்கடலில் உள்ள ஒருபகுதி பேரலை ஒன்றால் தூக்கி வீசப்பட்டது. அந்த பகுதி தனக்கென ஒரு சுற்றுப்பாதை அமைத்து சுழல ஆரம்பித்து. இதுவே நிலவு. ஆதரமாக நிலவில் உள்ள 'பாசல்' என்ற பாறை பசுபிக் பெருங்கடலில் உள்ள அந்த பெரும்பள்ளத்தில் காணப்படுகிறது.
இன்னொரு சுவையான செய்தி, கடல் நீரின் பரப்பில் 3.6% உப்பு உள்ளது. இதன் ஒவ்வொரு டன் நீரிலும் 0.000004கிராம் தங்கம் உள்ளது. கடல் பூமாதேவியின் திரவசீலை,மாறிவரும் சூழலில் மனிதன் விவசாயம் செய்ய மறந்து போகிறான். அப்போது நூற்றாண்டிற்கான உணவுத் தேவை? ‘நான் இருக்கிறேன்’ என்கிறது கடல்.ஆம் அடுத்த நூற்றாண்டின் உணவுத் தேவையின் அமுதசுரபியே கடல் தான்.
கடல் முத்துக்களின் கர்ப்பப்பை, பவளங்களின் தொட்டில், மங்கனீஷ் பாறைகளின் உலோக உலகம்,பெடரோலின் ஊற்று, கவிஞர்களின் கனா, ஞானிகளின் தத்துவம் விஞ்ஞானிகளின் ஆய்வு கூடம் எனவே கடலின் பெருமைகளை தொடர்ந்து போற்றி பிறவிப் பெருங்கடலை நீந்துவோம். நன்றி...
காட்சி வழித்தொடர்பியலில் இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் சகோதரர் வளனரசு பாரதிதாசன் பல்கலைகழகத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 'கடலைப் போற்றுவோம்' என்ற தலைப்பில் பேசியதன் சுருக்கம்.
-Points are taken from the book ‘Thannier dhesam’ written by the poet Vairamuthu