யாரைத்தேடி வந்தீர்கள் (யோவான் 18:4)
இயேசுவின் பிரியமானவர்களே,
ஆத்திகன் முதல் நாத்திகன் வரை, அமெரிக்கா முதல் அண்டை வீட்டு மனிதன் வரை படித்தவன் முதல் படிக்காதவன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, பெரியவர் முதல் சிறியவர் வரை. . . ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒன்றை தன் வாழ் நாளில் தேடிக்கொண்டிருக்கிறான். சிலர் பொன்னையும் பொருளையும், பலர் மண்ணையும்-மனிதத்தையும் , அநேகர் பணத்தையும் பதவியையும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் நீங்களும்-நானும் எதைத் தேடி? யாரைத் தேடி? இந்த தேவாலாயத்திற்க்கு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் அனைவரும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தேடித்தான் வந்திருப்போம். அப்படி என்றால் எந்த நோக்கத்திற்க்காக இயேசுவைத் தேடி குடும்பமாக கணவன்-மனைவியாக, பெற்றோர்-பிள்ளையாக, தனிமனிதனாக வந்திருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க இன்றைய வாசகமும் வழிபாடு தமக்கு அழைப்பு விடுக்கின்றது.
விவிலியத்தில் பக்கங்களை புரட்டிப்பாருங்கள் ஒவ்வொரு மனிதனும் இயேசுவைத் தேடி இருக்கின்றார்கள். ஆனால் அந்த தேடுதலின் நோக்கம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது.
- மத்தேயு 2:13 பெத்தலகேமில் பிறந்த குழந்தை இயேசுவை மன்னன் ஏரோது தேடுகிறான் அந்த குழந்தையை கொன்று விட வேண்டும் என்பதற்காக மெத்த படித்த பரிசேயரும் சதுசேயரும் இயேசுவை தேடுகிறார்கள் எப்படி சூழ்ச்சியின் வலையில் சிக்க வைக்கலாம் என்று.
- மத்தேயு 20:20 தனது இரு பிள்ளைகளையும் இயேசுவின் வலமும் இடமும் அமர வைத்துவிட செபதேயுவின் மணைவி இயேசுவை தேடி செல்கிறாள்.
- யோவான் 18:4 கெத்சமணி தோட்டத்திலே தன் தலைவரை தேடிச்சென்றான் யூதாசு 30 வெள்ளி காசுக்கு காட்டிக்கொடுப்பதற்காக.
இன்றைய நற்செய்தியிலும் மக்கள் கூட்டம் இயேசுவைத் தேடி கப்பர்நாகுமுக்கு வருகின்றன. காரணம் இயேசுவை பிடித்து தங்களது அரசனாக அமைத்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலே. எதற்க்காக இயேசுவை தங்கள் சொந்த அரசனாக ஆக்கிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்? ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலா அல்லது ஆண்டவர் தாம் எங்களது பாவ வாழ்வுக்கு ஒளியும் வழியும் அவரே எங்களது கற்பாறை அரணும் என்பதை உணர்ந்து கொண்டதாலா? இல்லை. அன்பார்ந்தவர்களே, அவர்களுடைய ஒரே நோக்கம் எல்லாம் இயேசுவை அரசனாக ஆக்கிவிட்டால் அன்றாட நாம் கஷ்டப்படாமல் உணவு உண்ணலாம் என்று தான் அவரைத்தேடி வந்து அரசராக்க விரும்புகிறார்கள். இதை அறிந்துதான் இயேசு இன்றைய நற்செய்தியில் நீங்கள் நான் செய்த அரும் அடையாளங்களை கண்டதால் அல்ல, மாறாக அப்பங்களை வயிறாற உண்டதால்தான் என்னை தேடி வந்தீர்கள் என்கிறார்.
ஆம்! ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் ஐந்தாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்த இயேசுவை ''அன்றாட உணவு கொடுக்கும் மனிதனாக எண்ணி தேடி வந்தார்களே ஒழிய, வாழ்வு தரும் உணவை கொடுக்க கூடிய மனிதன் தம்மிடையே இருக்கிறார்:அவர் தருகின்ற ஆன்மீக உணவு என்றென்றும் அழியவே அழியாது'', என்ற எண்ணத்திலே இயேசுவைத்தளடி வரவில்லை. ஆகவேதான் வசனம் 27-ல் தொடர்ந்து சொல்லுகிறார் அழிந்து போக்க்கூடிய அப்பத்திற்க்காகவும் மீனுக்காகவும் நீங்கள் உழைக்க வேண்டாம் அழியாத நிலைவாழ்வு தரக்கூடிய உணவுக்காக உழையுங்கள். இத்தகைய உணவுக்காக தேடுங்கள் என்று சொல்லுகின்றார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அவர்களின் மூதாயரின் வாழ்க்கை சுவடுகளை சுட்டிக்காட்டுகின்றார். அதாவது இஸ்ராயல் மக்கள் பாலைவனத்தில் பயணித்த போது உணவு கொடுத்தவர் என் தந்தையே என்று, இதைதான் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துரைக்கின்றது. யோசேப்பின் கலத்திலே இஸ்ராயல் மக்கள் கல்லாம் எகிப்தில் ஏகபோக வாழக்கை வாழ்ந்தார்கள். ஆனால் எப்போது யேசேப்பு இறந்தாரோ அப்போது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையிலே இழப்பு ஏற்ப்படுகின்றது. விடிதலை பயணம் 1:8-ல் வாசிக்கிறோம். யோசேப்பு இறந்த பிறகு, அறியந்திராத புதிய மன்னன் எகிப்தில் தோன்றுகிறான். அவன் இஸ்ரயேல் இனம் பெருகுவதைப் பார்த்து அவர்கள் மேல் பொறாமை கொண்டு அடிமையாக மாற்றுகிறான். 3. 3 என்று இருந்த இனம் இயல்பு இழந்து போய் இன்னலுருகிதே என்று கடவுளுக்கு கத்திராக ஒப்பாறி வைக்கின்றார்கள். அப்போது தான் ஆண்டவர் மோயிசன், ஆரோன் வழியாக அவர்களை எகிப்திலிருந்து கூட்டி பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்க்கு அவர்களை அழைத்து செல்கின்றார்.
இவ்வாறு செல்லுகின்ற வழியிலே தான் இஸ்ரயேல் மக்கள் மொயிசனையும், ஆரோனையும் பர்த்து ''பசியால் மாண்டு போகவா எங்களை அழைத்து வந்தீர்'' எகிப்தில் நாங்கள் இறைச்சில் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து அப்பம் உண்டு நிறைவடைந்து சந்தோசமாக இருந்திருப்போமே! என்று தங்களது அடிமை வாழ்விலே தான் ஆனந்தம் கொள்ள நினைத்து அதையே மீண்டும் தேடினார்களே ஒழிய, தன்னை சுதந்தர மனிதனாக மாற்றி, தனகென ஒரு நாட்டை எடவுள் ஒடுத்திருக்கிறார் என்று அதை தேடி போகாமல், போக விருப்பம் இல்லாமல் இங்கே முணுமுணுக்கின்றார்கள். இருந்தபோதும் கடவுள் மன்னாவையும், காடையையும் கொடுக்கின்றார். உணர்கிறார்களு ஆனால் நிலைவாழ்வு பெறாமல், கானான் தேசத்தை தன் கண்களாலே காணாமலே பலர் வழியிலே இறந்து போயினார்கள். ஆம்! உணவு உண்பதற்க்கு தேடிய மக்கள் அந்த உணவையும், நிறை வாழ்வையும் தர வல்ல இறைவனை தேட மறந்தார்களே, வாழ்வை இழந்தார்கள்.
இதுதகைய நிலமை தன்னை தேடி வந்த மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத் நான் ''வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவர்க்கு பசியே இராது, என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவர்க்கு தாகமே இராது'' என்று சொல்லி அத்தகைய உணவிற்க்காக என்னைத் தேடுங்கள் என்கிறார். இன்று நீங்களும் நானும் ஆண்டவரைதேடி ஆலயத்திற்க்கு வந்திருக்கின்றோம். எதற்க்காக? எத்தகைய நோக்கத்திற்க்காக?
அருள்பணி ஆரோக்கியதாசு
திரு இருதய குருமடம்
கும்பகோணம்
அருள்பணி ஆரோக்கியதாசு
திரு இருதய குருமடம்
கும்பகோணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக