காணிக்கைப் பாடல் - பொன்னும் பொருளும் இல்லை
பொன்னும் பொருளும் இல்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் சொந்தம் பந்தமுமெல்லாம்
நீயென சொல்லி வந்தேன் எந்தையும் என்தாயும் நீயன்றோ - நீயே
என்னை ஆளும் மன்னவனன்றோ.
1.
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ
என் நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழிவினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரை பலியென தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்
இன்று உனக்கு நான் எனையளிப்பேன்
2.
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உனதருள் கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன்
என்றும் உன்னிலே வாழ்ந்திடுவேன்
பொன்னும் பொருளும் இல்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
பதிலளிநீக்குஉன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
I love Jesus he's always with me i trust you dad
பதிலளிநீக்குஏங்க, இந்த பொய். அதுவும் இறைவன் கிட்டேயே!!! அதுவும் திருப்பலில நடு பூசைல பொய் சொல்லி பாடல் பாட வைக்கிறீங்க என்னிடத்தில் ஒன்றுமில்லைனு!!!!.
பதிலளிநீக்குகொஞ்சம் யோசிச்சி பாருங்க.... ஆலயத்தில வந்திருக்குறவங்களுக்கு ஆண்டவர் குறைந்தது அன்றாடம் உணவு, இருப்பிடம், ஆடை, சிறிது வருமானம் குடுத்துருக்காரா இல்லையா? அதெப்படி என்னிடத்தில் ஒன்றுமில்லைனு எல்லாரையும் பாட வைக்கிறீங்க???🤔
This lyrics is written by fathers.
பதிலளிநீக்குThey dont keep much gold and money like a family man so he wrote like this.
Also ,
We have to think like the money and gold we have with us is not ours, its given by god
தாயதாய் இறைவனுக்கு கொடுப்பதற்காக என்னிடத்தில் ஒன்றுமில்லை என்று பொருள் கொள்ளவேண்டும்.நாம் அனைவரும் பாவிகள்தான். எப்போதும் நாம் எவ்விதத்திலும் தாயவர்கள் அல்ல.
பதிலளிநீக்கு