அர்ப்பண மலராய்
அர்ப்பண மலராய் வந்தேன் அர்ச்சனையாக்கினேன் என்னை -21
மனமில்லாத மலர் ஆனாலும் இதழ்வாடியே போனாலும் - 2
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் அந்த ஜோதியில் நிறைவு கொள்வேன் - 2
ஆ…ஆ…ஆ…ஆ…
1.
கோதுமை மணியாய் மடிந்து – எனை
வெண்ணிற அப்பமாய் தந்தேன் - 2
என்னுடல் உன்னுடல் ஆகிடவே
உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே – எனை
கனிவுடன் ஏற்பாயே ஆ..ஆ..ஆ..
2.
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன்
புவி அதிபதி உன் திட்டம் மறந்தேன்
மதியில்லாதவன் ஆனாலும் விழி
இழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய்
நான் கவியுடன் பாட்டிசைப்பேன். ஆ..ஆ..ஆ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக