Xmas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Xmas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கிறிஸ்துமஸ் பாடல் - பெத்தலையிலே சின்னப் பாலன்

பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார்
இறைவன் நம்மோடு கொண்டாடுவோம் (2)
தனை வழங்கும் தலைவன் இவரே – 2
உள்ளக்குடிலில் பிறந்து வந்த ஒளியே
பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார்
இறைவன் நம்மோடு கொண்டாடுவோம்
ஏழைகள் வாழ்வினிலே – புது நற்செய்தி ஒளியாகினாய்
சிறை உழன்றோரெல்லாம் விடுதலை – என்றும்
அடைந்திட உழைக்க வந்தாய் (2)
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினைக் கொணர்ந்தாய்-2
உலக இருளகற்றும் ஒளி விளக்கே

விழிகளை இழந்தவரின் புதுப்பார்வைகள் நீயாகினாய்
ஒடுக்கப்பட்டோரெல்லாம் உரிமைகள் – பெற்று
மகிழ்ந்திட மலர்ந்து வந்தாய் (2)
ஆண்டவர் அருள்தரும் ஆவியைப் பொழிந்தாய் -2
அன்பின் வழி நடக்க எமைப் பணித்தாய்

பாலகா உனக்கொரு பாட்டு

பாலகா உனக்கொரு பாட்டு தூங்கிடு நீ அதை கேட்டு
ஏழை எந்தன் தாலாட்டு உனக்கு
ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் எனக்கு (2)
அகயிருள் நீக்கிடும் ஒளியாய் என்னில்
ஆறுதல் தந்திடும் மொழியாய் (2)
விண்ணில் வந்த நிலவே என்னில் வந்த உறவே – 2
நீ வருவாய் இதயம் தருவேன் – 2

வாழ்வினை வழங்கிடும் உணவாய் – என்னில்
தாழ்வினைக் களைந்திடும் உணவாய் (2)
மண்ணில் வந்த இறையே என்னில் வந்த உறவே – 2
நீ வருவாய் இதயம் தருவேன் – 2

கிறிஸ்துமஸ் பாடல் - எந்தன் நெஞ்சுக்குள்ளே

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா – இனி
அச்சமென்ப தெனக்கில்லை

வழியெங்கும் தடையில்லை தலைவா
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்கவா
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்க வா

வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ
உந்தன் உறவானது உயிர்த் துணையானது
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா

கிறிஸ்துமஸ் பாடல் - இன்று நமக்காக மீட்பர்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா – 2 (2)

ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2)
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)
அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்
புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்
மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு
செயல்களைக் கூறங்கள் (2)
வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூறட்டும் -2
கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும்

கிறிஸ்துமஸ் பாடல் - அன்பின் ராஜாங்கம்

அன்பின் ராஜாங்கம் அறிவின் தெய்வீகம்
மனிதராய்ப் பிறந்தாரே 2
ஆஹா Happy Happy Christmas – 2

பன்னீர் பூக்கள் மலர்ந்தன பாலன் பெயராலே
கண்ணீர் கனலும் அணைந்தது கடவுள் பெயராலே
கடலும் கூட சிரித்தது கண்ணே உன்னாலே எங்கள்
கவலையெல்லாம் மறைந்தது கருணையின் பெயராலே
நஞ்சும் கூட இனித்தது நாதன் பெயராலே எங்கும்
நீதி விளக்கு எரிந்தது நாதன் அன்பாலே
பஞ்ச பூதம் பயந்தது பாலன் பெயராலே எங்கும்
கொஞ்சும் மழலைப் பிறந்தது கோடி நெஞ்சாலே

ஹாப்பி கிறிஸ்துமஸ் Cini song

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்...........

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது

Film : Kanne Pappa
Song: Thdralil Adai Pinna
Singer : P Suseela
Lyric : Kannadasan
Music : MSV
Star cast : Muthuraman, K.R.Vijaya

தங்கச்சுடரே வா

தங்கச்சுடரே வா எங்கள் உயிரே வா
மரியின் மகனே வா மண்ணில் வாழவா

பேரின்ப நாள் இந்த நாள் விண்ணிலே
இயேசு தெய்வம் வந்த நாள் மண்ணிலே

பாலைவனப் பறவைகள் போல்
மக்கள் வாடி நிற்கும் வேளையிலே
ஒளியாக வந்தாய் வரம் கோடி தந்தாய்
விண் வார்த்தை நீயல்லவோ
அருள் வெள்ளம் சுரந்தோட
பூபாளங்கள் முழங்கிடுதே

- Tribute to Fr. Venantius, our Theology professor, St. Peter's, Bangalore

கிறிஸ்துமஸ் பாடல் - மார்கழி குளிரினில் மன்னவனே

மார்கழி குளிரினில் மன்னவனே
பார்முகம் வந்தாயோ என் சொந்தமே.
தேனிசைப் பாடல் இசைக்கின்றேன் - உன்
குடிலினில் காணிக்கை படைக்கின்றேன் (2)
எல்லாமும் நீயென்று தெரிந்திருந்தும்
எதுவும் இல்லாது ஏன் வந்தாய்
முழுமையின் நிறைவே நீயென்றால்
வெறுமையை பூண்டு ஏன் பிறந்தாய்
என்னிடம் உள்ளதை எல்லாமும்
நீ ஏற்றிடு காணிக்கையாக்குகிறேன்
-- மார்கழி
சொந்தமே நீயென்று தெரிந்திருந்தும்
உறவுகள் இல்லாது நான் வாழ்ந்தேன்
வெறுமையின் நிறைவே நீயென்றால்
வறுமையின் கோலம் ஏன் படைத்தீர்
உள்ளதை எல்லாம் தருகின்றேன்
அந்த வெற்றிடம் நீ வந்து நிறைந்துவிடு

கிறிஸ்துமஸ் பாடல் - கன்னி ஈன்ற செல்வமே


கன்னி ஈன்ற செல்வமே இம்
மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
எம்பொன்னே தேனே இன்பமே
எண்ண வேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததே! கன்னி

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தையே

வல்ல தேவன் வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னைத் துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்?

Joy to the world

Joy to the world, the Lord is come!
Let earth receive her King;
Let every heart prepare Him room,
And heaven and nature sing,
And heaven and nature sing,
And heaven, and heaven, and nature sing.

Joy to the world, the Savior reigns!
Let men their songs employ;
While fields and floods, rocks, hills and plains
Repeat the sounding joy,
Repeat the sounding joy,
Repeat, repeat, the sounding joy.

No more let sins and sorrows grow,
Nor thorns infest the ground;
He comes to make His blessings flow
Far as the curse is found,
Far as the curse is found,
Far as, far as, the curse is found.

He rules the world with truth and grace,
And makes the nations prove
The glories of His righteousness,
And wonders of His love,
And wonders of His love,
And wonders, wonders, of His love.

(Air: Joy to the World)
-Same tune in Tamil
ஆனந்தமே! ஓர் கானந்தனில்
நம் மன்னர் வந்துள்ளார்!
விண்ணாளும் மன்னர் சொன்னது
மண்ணாளும் மன்னர் மன்னனாய்
விண்ணோர் பாடிடவே – மண்
ணோர் கொண்டாடிடவே - இறை
மன்னன்னே மீட்பராய்ப் பிறந்துள்ளார்

ஆனந்தமே! மா விந்தையிதே!
தெய்வம் மனிதன் ஆனார்
மண்ணோரின் பாவம் தீர்க்கவே
விண்ணோரின் வீடு சேர்க்கவே - பவ
இருள் மறைந்திடுதே – அவர்
அருளும் நிறைந்திடுதே - இறை
சொல்லும் இன்றிங்கு நிறைவேறவே

ஆனந்தமே! பேரின்பம் இதே
மரி கன்னி அன்னையாய்
நம் மீட்பரைப் பெற்றாள் அவள் - விண்
உயர்த்த பெற்றாள் அவள்
மங்கள மனமுடனே - இசை
பொங்கும் பொலிவுடனே - இவண்
எங்கும் எல்லோரும் புகழ் பாடிடவே

இயேசு ராஜா ஓடி வந்தாராம்

இயேசு ராஜா ஓடி வந்தாராம்
நம்ம ஏழைகளை தேடி வந்தாராம்
நாட்டுபுற வீட்டில மாட்டு கொட்ட வூடுல
பாலகனா பொறந்துபுட்டாராம் - ஆகா
பாலகனா பொறந்துபுட்டாராம்

ஊருலேதான் யாரும் இல்லேங்க
நம்ம சேரி பக்கம் ஆடு மாடுங்க
துன்பத்திலே பருங்க
இயேசுநாதர் பேருங்க
அருளை வாரி வழங்குவாருங்க

இருதயராஜ்
மொன்ட்போர்ட் மறைபரப்பு பணியாளர்

அன்பென்ற மழையிலே


அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே......
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே.........
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.... அதிரூபன் தோன்றினானே..
போர்க்கொண்ட பூமியில் பூக்காடு காணவே....
புகழ் மைந்தன் தோன்றினானே.....

[1]
கல்வாரி மலையிலே கல்லொன்றி பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே....
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே......
இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே
நிறைபாலன் தோன்றினானே.....
முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவி ராஜன் தோன்றினானே.....

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........[2]

  • இயற்றியவர்: வைரமுத்து 
  • இசை: A.R.ரஹ்மான் 
  • குரல்: அனுராதா ஸ்ரீராம்

கிறிஸ்மஸ் செய்தி

மலர் மணத்தைச் சந்திப்பதுண்டு
வானம் நிலவைச் சந்திப்பதுண்டு
நிலம் நீரைச் சந்திப்பதுண்டு
கடல் கரையைச் சந்திப்பதுண்டு
மயில் மழையைச் சந்திப்பதுண்டு
குயில் சோலையைச் சந்திப்பதுண்டு
இவையாவும் அழகான சந்திப்புகள்தான். ஆனால் இவற்றைவிட ஓர் அற்புதமான சந்திப்பு ஒன்று நம் நடுவே நிகழப்போகிறது. விண்ணகம் மண்ணகத்தை சந்திக்கப்போகிறது. பாசம் பகையைச் சந்திக்கப்போகிறது. ஆம்! கடவுள் மனிதனை சந்திக்கப் போகிறார். கிறிஸ்து பிறப்பிற்காக நம்மையே தயாரிக்கும் காலம் முடிந்து, காத்திருக்கும் கண்களுக்கு விருந்து படைக்க, இதோ மீட்பர் இயேசு பிறந்துவிட்டார்… வாருங்கள்.

மனித வாழ்விலே சந்திப்புகள் பலவிதம். சில சந்திப்புகள் சந்தோசத்தை கொடுக்கின்றன. சில சந்திப்புகள் சங்கடங்களை கொடுக்கின்றன. கண்களால் காண இயலாத கடவுள் கண்களால் காணும் வகையில் மனிதனாக, இயேசு பாலனாக மண்ணில் பிறந்த வரலாற்று நிகழ்வுதான் கிறிஸ்துமஸ் விழா. 

இறைவன் ஏன் மனிதனாக பிறக்க வேண்டும்?

ஆதியிலே இறைவன் உலகைப்படைத்தார்,உயிர்களைப் படைத்தார்.  அவற்றோடு உறவாட தன் சாயலாக மனிதனைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனை படைத்து, அவனுக்கு தன் சாயலைத் தந்து (ஆதி. 1:27) மற்றப் படைப்புகளிடம் இல்லாத அன்பு பாசம் பரிவு போன்றவற்றை தந்து உயர்த்தினார் கடவுள். ஆனால் மனிதனோ இறைஉறவில் நிறைவு பெறாமல், அழிவுக்குறிய உறவைத் தேடினான். தனி வாழ்விலிருந்து குழுவாழ்விற்கு மாறினான்.  கூடிவாழ்ந்தான் கோடி இன்பம் கண்டான். காயின் ஆபேலைக் கொன்றான். கடவுளின் அன்பை இழந்தான். கடவுளுக்கு இணையாக வேண்டுமென்று எண்ணி பாபேல் கோபுரம் கட்டினார்கள். நோவாவின் காலத்தில் மக்கள் கடவுளை மறந்து பாவத்தில் மூழ்கினர். இஸ்ராயேல் மக்களை கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர்களோ திரும்ப திரும்ப பாவச்சேற்றிலேயே விழுந்தார்கள். பல இறைவாக்கினர்கள் வந்தும், அம்மக்கள் மனமாற்றம் அடையவில்லை. எனவே தான் கடவுள் தன் ஒரே பேரான மகனையே உலகிற்கு அனுப்பினார். கடவுள் மனிதனாக பிறந்து மனிதனை சந்திக்க வந்த நிகழ்வைதான் கிறிஸ்து பிறப்பு விழாவாக சிறப்பிக்கின்றோம். இறைவனுக்கு எதிராக மனிதன் இழைத்த குற்றத்தை இறைவன் ஒருவித பரிகாரம் செய்து அவனை மீட்கிறார். அவர் மனிதராகவும் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அப்பரிகாரம் மனிதன் சார்பாக செலுத்தப்பட்டதாக இருக்கும்.  எனவேதான் கிறிஸ்து தம்மையே சிலுவையில் நமக்காக கையளித்தார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது ஏழைகளோடும், சமுதாயத்;தால் ஒதுக்கப்பட்ட மக்களோடும் குழந்தைகளோடும் அன்பு கொண்டிருந்தார். இதன் மூலமாக மறைந்து போன மனிதத்தை மண்ணில் நிலைநாட்டினார். புதைக்கப்பட்டிருந்த மனிதத்தை இயேசு உயிர்ப்பித்தார்.  சிதைக்கப்பட்டிருந்த மனிதனை மாண்புறச் செய்தார். இயேசு இந்த மண்ணில் பிறந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக மரியாளுக்குக் காட்சி கொடுத்த போது கபிரியேல் தூதர் “இதோ கருவுற்று ஒரு மகனை பெறுவீர், அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்” (லூக். 1:30,31) என்று சொன்னார். இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் அல்லது மீட்பர் என்று பொருள். அவர் நம்மை மீட்பதற்காகவே வந்தார்.  இரண்டாவதாக எசாயா இறைவாக்கினர் உரைத்தபடி, “இதோ கன்னி கருத்தாங்கி ஓர் ஆண்மகவை பெற்றெடுப்பார்.  அக்குழந்தைக்கு ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவர் என்று முன்னுரைத்தார். இம்மானுவேல் என்பதற்கு ‘கடவுள் நம்மோடு’ என்று அர்த்தமாகும். இந்த இரண்டு செய்தியும் நமக்கு சொல்லுவது இதுதான், இயேசு நம்மை இரட்சிக்க வந்தார்.  நம்மோடு குடியிருக்க வந்தார். 

இறைமகன் இயேசு அன்று மட்டும் பிறந்திருக்கவில்லை, இன்றும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார். எப்படி? ஏழை, எளியோர், அனாதைகள், நோயாளிகள், முதியோர் என ஒவ்வொருவரையும் அன்பு செய்யும் போது அங்கே இயேசு பிறக்கிறார்.

இன்று மனிதநேயமிக்க இதயங்களிலே இயேசு பிறக்கிறார். மனிதம் மதிக்கப்படுகிற இடமே இயேசு தங்குமிடம்.  வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை – அன்னை தெரசாள். 

வாழ்வது ஒருமுறைதான் அவ்வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். பொன் வேண்டாம், பொருள் வேண்டாம். மண் வேண்டாம், சுகம் வேண்டாம். மாந்தருக்கு உதவிட நல்மனதை தாரும் பாலன் இயேசுவே.  இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து வாழுவோம்.  உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, உறைய உறைவிடம் இன்றி வாடுவோருக்கு நம்மிடம் உள்ளதையும், உள்ளத்தையும் பகிர்வோம்.  பரமனின் அருள் பெறுவோம் எங்கே பகிர்வு உள்ளதோ அங்கே மகிழ்ச்சி பிறக்கிறது. எங்கே மகிழ்ச்சியுள்ளதோ அங்கே பாலன் இயேசு பிறக்கிறார்.  எனவே பகிர்வோம், மகிழ்வோம்.

பிறந்திருக்கும் பாலன் இயேசு உங்களையும், என்னையும் ஆசீரால் நிரப்பிட தொடரும் கல்வாரிப் பலியில் ஜெபிப்போம். 

சிந்தனைக்கு: 
ஆயிரம் முறை இயேசு பெத்லேகமில் பிறந்தாலும் நம் இதயத்தில் பிறக்காவிடில் என்ன பயன்? - ஏஞ்சலுஸ் சிஸ்லெசியுஸ்
திருத்தொண்டர் பர்னபாஸ்

விண்ணக வேந்தன் என் அகம் இங்கே வருகின்றார்


விண்ணக வேந்தன் என் அகம் இங்கே வருகின்றார் வருக வருகவே 
என் நிலை மாற என்னிலே வாழ எழுகின்றார் எழுக எழுகவே 
விடியலின் கீதங்கள் பாடி விருந்துக்கு வாருங்கள் 
வியாதிகள் குணமாகும் நமது வாழ்வே சுகமாகும் 
அன்பாலே நமை ஆளும் இறைவன் இருப்பே இனிதாகும் 
எந்நாளும் (விண்ணக....) 

விடியலில் வானம் தெளிகிறதே புதிதாய் மன்னா பொழிகிறதே 
ஏதோ மாற்றம் நிகழ்கிறதே இதை மனமே இதயம் கமழ்கிறதே 
விதையாய் இதயம் விழுகிறதே நூறு மடங்கு பலன் தரவே
உறவில் விருந்து தொடர்கிறதே புது நிறைவில் இதயம் மகிழ்கிறதே 
கல்லான மனதெல்லாம் கனி இல்லா மரமாகும் 
கனிவான மனமெல்லாம் கனிகள் தரும் நிலமாகும்
மனமாய் வா வளமே வா ஒளியே அருளே இதயம் வா (இசை) எந்நாளும் (விண்ணக....) 

அன்னை தந்த அமுதல்லவா அழகாய் கரத்தில் தவழ்கிறதே 
உயிருள்ள உணவு இது அல்லவோ? அந்த வானக விருந்து மருந்தல்லவா அப்பம் என்பது அன்பல்லவா? 
அப்பாவின் நேசம் பெரிதல்லவா 
உள்ளம் என்பது குடில் அல்லவா? அதில் வாழ்ந்திட வருவது இறை அல்லவா 
இதை வாங்கி உண்ணுங்கள் இனிமையெல்லாம் இதிலேதான் 
இதை வாங்கி பருகுங்கள் நிலை வாழ்வு இதிலேதான்
அழியாத உணவே வா அருகில் நடக்கும் உறவே வா (இசை) எப்போதும் (விண்ணக....)