சந்தோசம் பொங்குதே

சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே
சந்தோசம் என்னில் பொங்குதே
அல்லேலுயா இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் என்னில் பொங்குதே
1.
வழி தப்பி நான் திரிந்தேன் - பாவ
வழி அதை சுமந்தழைந்தேன்
அவர் அன்பு குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே.

2.
சாத்தான் சோதித்திட - தேவ
உத்தர வுடன் வருவார்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சோந்த மானாரே.

தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் - தந்

1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் - தந்

2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே - தந்

3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் - தந்

4. தூரம் திரிந்த சீயோனே - உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் ப+ட்டி அலங்கரித்து நினை
அத்தனை மணவாட்டி யாக்கினது என்னை! - தந்

5. சிங்காரக் கன்னிமாரே, - உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் -
தந்தானை

எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது, – எந்நா

1. பாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி. – எந்நா

2. எத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே,
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால். – எந்நா

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை@
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால். – எந்நா

எல்லாம் இயேசுவே,

எல்லாம் இயேசுவே, -
எனக்கெல்லாமேசுவே.

தொல்லைமிகு மிவ்வுலகில் -
துணை இயேசுவே

1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்,

2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்,

3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்,

4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்,

5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்.

ஆணி கொண்ட உன் காயங்களை

ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மைக் கொன்றேனே
ஆயனே என்னை மன்னியும்

1.
வலது கரத்தின் காயமே-2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
2.
இடது கரத்தின் காயமே-2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3.
வலது பாதக் காயமே
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

4.
இடது பாதக் காயமே-2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

5.
திருவிலாவின் காயமே-2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்