உன் புகழை பாடுவது

உன் புகழை பாடுவது
என் வாழ்வின் இன்பமய்யா
உன் அருளை போற்றுவது
என் வாழ்வின் செல்வமய்யா

துன்பத்திலும் இன்பத்திலும் -நல்
தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயர காத்திருக்கும்- நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு என்னும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன் நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய்-2

பல்லுயிரை படைத்திருப்பாய்
நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும்
நீ என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்கும் தாழ்
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

இயேசுவே என்னுடன் நீ பேசு

இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதை கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்
உன் திரு இதயம் பேரானந்தம்
உன் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உன் திரு வாழ்வெனக்கருளும்
உன் திரு நிழ‌லில் நான் குடி கொள்ள
என்று என்னுட‌ன் இருப்பாய்

இயேசுவின் பெய‌ருக்கு மூவுல‌கென்றும்
இணைய‌டி ப‌ணிந்து த‌லை வ‌ண‌ங்கிடுமே
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌ வாழ்க‌ வாழ்க‌
இயேசுவே உன் பெய‌ர் வாழ்க‌
இயேசுவே நீ என் இத‌ய‌த்தின் வேந்த‌ன்
என்னைத் த‌ள்ளி விடாதே

ஒரு போதும் உனைப் பிரியா

ஒரு போதும் உனைப் பிரியா
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல் கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நினைவாக வா இறைவா

உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்
ஏன் என்னை நீ தெரிந்தாய்
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் தாய்
உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்
உன்னோ நான் வாழுவேன்

நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்
என்னுள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசுவே என்னுள்ளம் நின்றாய் நிதம்
என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னைவிட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?

1.
என்னை பாடி மகிழ்வித்த புல்லினங்கள்
தங்கள் கூடுகள் தேடி பறந்த பின்னும் - 2
நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும் - நீர்

2.
எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் - 2
எந்தன் பாதையின் விளக்காய் பகலவனும்
வந்து காரிருள் மாயையாய் பிரிந்த பின்னும் - நீர்

என் வாழ்வில் இயேசுவே ...

என் வாழ்வில் இயேசுவே என் நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும் எந்தன்
எல்லாமும் நீயாக வேண்டும்
சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
ஓடங்கள் நீயாக வேண்டும் – 2

2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும் போது
பாலங்கள் நீயாக வேண்டும் – இணைப் 2
தீராத ஆர்வத்தில் நான் தேடி பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும் – மறை – 2

அன்பே கடவுள் என்றால் ...

அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்

மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா-2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா

இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா-2
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா

அளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா-2
மலைபெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமா

உள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா-2
என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமா

நம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும்-2
நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா

திருப்பலிக்கு செல்லும்போது நாம் தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்..!!!

பெண்கள் கவனத்திற்கு :
****  *****
⭐லெக்கின்ஸ் போன்ற ஆபாச உடைகள் அணிந்து செல்வது...
⭐அடுத்தவரை ஈர்க்கும் ஆடைகள் அணிவது...
⭐ஆடம்பரமான ஆடைகள் அணிவது...
⭐மேக்கப் மற்றும் அழகு சாதனங்களுடன் தலைக்கு முக்காடிடாமல் 
திருப்பலியில் பங்கேற்பது...

ஆண்கள் கவனத்திற்கு :
****  ******
⭐காலர் இல்லாத டீ சர்ட் அணிவது...
⭐ஸ்போர்ட் சட்டைகள் மற்றும் பேண்ட் அணிதல்...
⭐முக்கால் பேண்ட் அணிதல், மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் ஆடைகள் அணிவது...
⭐நடிகர்கள் மற்றும் பேய் படம் போட்ட பனியன் அணிந்து செல்வது...
⭐ஆலயத்திற்குள் அமர்ந்து செல்போன்களை நோண்டுவது...
⭐திருப்பலி நேரத்தில் கோவிலுக்கு வெளியே அமர்ந்து அரட்டை அடிப்பது...

பொதுவானவைகள் :
********
⭐பராக்குகள் பக்தியை குறைக்கும் இடைச்செருகல்கள்...
⭐அருட்தந்தையர்கள் மிக முக்கியமான ஜெபங்களை பாடும்போது பிண்ணணி இசை கொடுப்பது....
⭐காதைப்பிளக்கும் ஸ்பீக்கர்கள் நாலாபுறமும் அலறுவது...
⭐எல்லோரும் சேர்ந்து ஜெபிக்கும் பாடல்களுக்கு அடிக்கடி டியூன் மாற்றுவது.சில நேரங்களில் பாடலையே மாற்றி விடுவது.இதனால் பாடல் குழுவினர் தவிர யாரும் வாயைக்கூட அசைக்க முடியாத நிலை ஏற்படுகிறது...

⭐எல்லாமே புதிய பாடல்களாகவே பாடுவது (எல்லோருக்கும் தெரிந்த ஒன்றிரண்டு பாடல்களையாவது பாட வேண்டும்)...
⭐அன்பியங்கள் போட்டி மனப்பான்மையில் ஆடம்பரங்களை அதிகரிப்பது...
⭐வருகைப்பாடல் நடனம், பொன்னாடை போர்த்துதல், கும்பம், கரவொலி, போன்ற ஆடம்பரங்கள். இன்னும் பல நவீனங்கள் புகுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்...

மொத்தத்தில் திவ்ய பலிப்பூசை ஆடம்பரம், உலக காரியங்கள் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு எளிமையோடும், பக்தியோடும் ஆராதனை மன நிலையோடும் நடத்தப்பட வேண்டும்..!!!

இயேசுவுக்கே புகழ்...!!!❤💚
இயேசுவுக்கே நன்றி...!!!💛💙
மரியே வாழ்க...!!!💜❤