இயேசுவே உந்தன் வார்த்தையால்


இயேசுவே உந்தன் வார்த்தையால்
வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அந்தப் பாதையில்
கால்கள் நடத்திடுமே
தேவனே உந்தன் பார்வையால்
என் உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே
உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே
 - இயேசுவே

1.
தீமைகள் தகர்ந்தொழிந்திடும் - உன்
வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுய நலன்களும் - இங்கு
வீழ்ந்து ஒழிந்திடுமே
நீதியும் நல் நேர்மையும்
பொங்கி நிறைந்திடுதே
 - இயேசுவே என்...

2.
நன்மையில் இனி நிலைவுறும் - என்
சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும்
ஒன்றாகும் நிலை வருமே
எங்கிலும் புது விந்தைகள்
உன்னைப் புகழ்ந்திடுமே
- இயேசுவே என்...

தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா - வரம்
தருவாயே உருவானவா

எனை ஆழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாக எனையாள்பவா
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு
குணமாக்க வருவாயப்பா - எனை
உனதாக்கி அருள்வாயப்பா

உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே
நாதா உன் புகைழ் பாடுவேன் - எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்

அழகோவிமே


அழகோவிமே எங்கள் அன்னை மரியே
உயிரோவியமே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே
உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும்
அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே
கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே
அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே
ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே
யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே
உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம்
உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே
உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே

ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு
எல்லாம் ஆதரவு தருபவளே அன்னை தாய்மரியே
அம்மா உன் காட்சிகளெல்லாம் ஏழைகளின் பாக்கியமே
எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் திருக்கரமே
கண்ணின் மணியைப் போல
என்னைக் காத்திடும் தெய்வத் தாயே
மண்ணின் மைந்தர்கள் நாங்கள்
உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம்
இன்னும் ஒருமுறை என் தாயே
இனி இந்த உலகினில் பிறந்தால்
ஏழை எளியவர் முன்னாடி இங்கு புது உலகம் படைப்பாய்

அம்மா மரியே வாழ்க


அம்மா மரியே வாழ்க
மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க
எங்கள் மரியே வாழ்க மரியே வாழ்க மாதா நீ வாழ்க

அறியாத மாந்தருக்கு அறியவைத்தாய் – உனை
ஆரோக்கியத் தாயாக உணர வைத்தாய் (2)
மறையாத வான் நிலவாய் மாறாத வான் மழையாய் – 2
திகழ்கின்ற திருமரியே நீ வாழ்க – 3

உருகாத நெஞ்சமெல்லாம் உருகுதம்மா – உன்
அருகாமை காண இருள் விலகுதம்மா (2)
உலகங்கள் கூறுகின்ற உன் அன்புப் பெருமைகளை -2
உம் சன்னிதியில் உணர்ந்து கொண்டோம் ஒரு நாளில் – 3

அன்பென்ற மழையிலே


அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே......
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே.........
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.... அதிரூபன் தோன்றினானே..
போர்க்கொண்ட பூமியில் பூக்காடு காணவே....
புகழ் மைந்தன் தோன்றினானே.....

[1]
கல்வாரி மலையிலே கல்லொன்றி பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே....
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே......
இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே
நிறைபாலன் தோன்றினானே.....
முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவி ராஜன் தோன்றினானே.....

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........[2]

  • இயற்றியவர்: வைரமுத்து 
  • இசை: A.R.ரஹ்மான் 
  • குரல்: அனுராதா ஸ்ரீராம்

கேளுங்கள் தரப்படும்


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 )

பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா....
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......)

ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாறையும் ஐயம் தீர உணர்ந்தார்.
இயற்க்கை உலகமே தூய்மையானது என
இயேசு நினைத்தாரே....
எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...)

எருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 )
பன்னிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசு கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தமானாரே....
இளமையில் செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 )
இளமை பருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே......
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2))

தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 )
நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உழுங்கள் என்று
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாளர்
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார்
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார்.....

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்
இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்..
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே......

துன்பத்தை அகற்​ற இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 )
இயேசு நண்பனாம் யூதாசு நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தனே
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே
செனெடீரின் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 )
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)

யாயும் ஞாயும்


யாயும் ஞாயும்
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை - 40)


பொருள் விளக்கம்: 

  1. யாய்=தாய்
  2. ஞாய்=தாய்
  3. எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்
  4. செம்புலம்=செம்மண் நிலம்
  5. பெயல்நீர்=மழை 

"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".


my mom and your mom
how are they related?
my dad and your dad, 
how are they friends?
me and you,
how did we know each other?
nevermind, but now,
like the pouring rain and the red earth,
our loving hearts are dissolved together.


(Kuruntokai - 40)