யாயும் ஞாயும்
யாயும் ஞாயும்
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை - 40)
பொருள் விளக்கம்:
- யாய்=தாய்
- ஞாய்=தாய்
- எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்
- செம்புலம்=செம்மண் நிலம்
- பெயல்நீர்=மழை
"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".
my mom and your mom
how are they related?
my dad and your dad,
how are they friends?
me and you,
how did we know each other?
nevermind, but now,
like the pouring rain and the red earth,
our loving hearts are dissolved together.
(Kuruntokai - 40)
Nice
பதிலளிநீக்குlove this linesss
பதிலளிநீக்குஅழகிய தமிழ்
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குதமிழர்கள் இனம்,சாதி பார்த்து திருமணம் செய்ததில்லை அதற்கு இது ஒரு சாட்ச்சி,
பதிலளிநீக்கு"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
இதுவும் ஒரு சாட்ச்சி