மாதா பாடல் - உம்மைத் தேடி வந்தேன்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாருமம்மா-2


1
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் மீது தவித்த கப்பலை காத்தாய்-2
பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்ததாய்(2)- உம்மை
2
கடல் நீரும் போல உன் கோயில் காண‌
அலையாக வந்து உன் பாதம் சேரும்-2
உலகாளும் தாயே உனை பாடி வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா(2)- உம்மை
3
மலடான மங்கை மடிமீது மகனை
மகிழ்ந்தாடச் செய்த மகிமையின் தாயே-2
குருடானேன் உன்னை கரங்கூப்பி நின்றால்
அருளாகி எனக்கு ஒளி தாரும் தாயே(2)- உம்மை

Diaconate Ordination Kumbakonam Diocese

Priestly Ordination Procession, Kumbakonam

November 2008 Rain at Kumbakonam

On Changing the World

"When I was a young man, I wanted to change the world. I found it was difficult to change the world, so I tried to change my nation. When I found I couldn't change the nation, I began to focus on my town. I couldn't change the town and as an older man, I tried to change my family. Now, as an old man, I realize the only thing I can change is myself, and suddenly I realize that if long ago I had changed myself, I could have made an impact on my family. My family and I could have made an impact on our town. Their impact could have changed the nation and I could indeed have changed the world."
- Author Unknown on Changing the World

உன்னை அறிந்தால்...Know Thyself

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா

(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்