ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்

ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன் - 2 ஆ...
இறைவா உந்தன் பேரன்பை என்றென்றும் நினைந்து நான் பாடுவேன் - 2
நீரே உண்மை என உணர்ந்து உள்ளம் மகிழந்து போற்றுவேன் - 2
இறைவா உந்தன் ...
I
என் ஊழியன் தாவீதை கண்டுப்பிடித்தேன்
என் திருத்தைலத்தால் அவனுக்கு திருப்பொழிவு செய்தேன்
என் கை எப்பொழுதும் அவனோடிருக்கும்
என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்
ஆண்டவரே போற்றிப்பாடுங்கள் அவர் பெயரை என்றும் வாழத்துங்கள்
அவரது மாட்சியை எடுத்துக்கூறுங்கள்
II
என் வாக்கு பிறழாமை அவனோடிருக்கும்
என் பெயரால் அவன் வலிமை உயர்திடப்படும்
நீரே என் தந்தை நீரே இறைவன்
என் மீட்பின் பாறை என்று அவன் என்னை அழைத்திடுவான்
விண்ணுலகம் மகிழ்வதாக மண்ணுலகம் களிக்கூறுக
கடலும் அதில் நிறைந்த யாவும் உறங்கட்டும் - 2
இறைவா உந்தன்...

Deacon Arokiadoss on Worldly Titles,Matthew 23:1-12

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு

மிகவும் இரக்கமுள்ள தாயே / உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து /
ஆதரவை தேடி / மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக / ஒருபோதும் உலகில் சொல்லக் கேட்டதில்லை / என்பதை நினைத்தருளும். / கன்னியர்களுக்கு அரசியான கன்னியே / நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை / என்னைத்
தூண்டுவதால் / நான் உமது திருவடியை நாடி வருகிறேன். / பாவியாகிய நான் / உமது இரக்கத்திற்காக / துயரத்தோடு உம் திருமுன் காத்து நிற்கிறேன். / மனிதராகப் பிறந்த வார்த்தையின் தாயே / என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கேட்டருளும்.

பிறப்புநிலைப் பாவம் இன்றிக் கருவுற்ற தூய மரியே / பாவிகளுக்குஅடைக்கலமே / இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஒடி வந்தோம். /
எங்கள்மீது இரக்கம் கொண்டு / எங்களுக்காக உம்முடைய திருமகனிடம்
வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.

பத்துக் கட்டளைகள்

1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். / எம்மைத் தவிர வேறு தெய்வங்கள்
உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆன்டவரின் பெயரை / வீணாகப் பயன்படுத்தாதே.
3. μய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் / கருத்தாய் இரு.
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபச்சாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.

இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்:

முதலாவது / எல்லாவற்றிற்கும் மேலாக / கடவுளை அன்பு செய்வது.
இரண்டாவது / தன்னை அன்பு செய்வது போல / பிறரையும் அன்பு செய்வது.

பாஸ்கா கால மூவேளை மன்றாட்டு

விண்ணக அரசியே மனம் களிகூறும். - அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர். - அல்லேலூயா.
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்.- அல்லேலூயா.
எங்களுககாக இறைவனை மன்றாடும். - அல்லேலூயா.
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர்.- அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். - அல்லேலூயா.

மன்றாடுவோமாக
இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின்
உயிர்த்தெழுதலால் / உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! /அவருடைய
அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் / நாங்கள் நிலை வாழ்வின் பெரு
மகிழ்வில் பங்கு பெற / அருள் புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்

மூவேளை மன்றாட்டு

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூது உரைத்தார் - மரியா தூய ஆவியாரால் கருவுற்றார்
இதோ ஆண்டவரின் அடிமை. - உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்.
வாக்கு மனிதர் ஆனார். - நம்மிடையே குடிகொண்டார்.
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி / இறைவனின் தூய
அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மன்றாடுவோமாக
இறைவா / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழி
யாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் /
நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக. / எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.

மனத்துயர் செபம்


சுருக்கமான மனத்துயர் செபம்
என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர்; எனவே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறேன். ஆமென்.


ஒப்புரவில் சொல்லத்தகும் மனத்துயர் செபம்
என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர்,
அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே,
என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்து விட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும்,
நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.
உமது அருள் துணையால் நான் மனம்திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன்.
எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.