நிலையான புகழுக்குரிய

நிலையான புகழுக்குரிய 

தூய இறை நன்மைக்கே,

எல்லா காலமும், 

தொழுகையும் புகழும் 

போற்றியும் மாட்சிமையும்

உண்டாகக் கடவது

வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்

 வங்கக் கடலலைகள் வந்து தாலாட்டும்

எங்கள் ஆரோக்கியத் தாய்மரியே நீ வாழ்க

எங்கும் புகழ் மணக்க விளங்கும் பேரணங்கே

எங்கள் தாயாக என்றும் இருப்பவளே


1. முடமாய் இருந்தவனை முழுவதும் குணமாக்கி

நடமாடச் செய்தவளே நாயகியே தாயே

குறைந்திட்ட பால் பெருக்கி குன்றாத நலம் புரிந்து

நிறைவு அடைந்திடச் செய்த எம் தாய்மரியே


2. செவ்வாய் இதழ்விரித்து செங்காந்தள் கரமுயர்த்தி

ஒவ்வாத பிணியெல்லாம் நொடியில் தீர்ப்பாய்

கத்தும் கடல் புயலடக்கி காற்றை நெறிப்படுத்தி

தரையில் அமைதியைத் தந்தவள் நீ தாயே

என் ஜீவன் தேடும் தெய்வம்

 என் ஜீவன் தேடும் தெய்வம் 

என் நெஞ்சில் வரும் நேரம்

என் உள்ளம் எங்கும் பூப்பூக்குதே

புது சந்தோஷங்கள் எனில் தோன்றுதே

வாரும் தேவா வாரும் 

புதுவாழ்வு என்னில் தாரும்

உன் ஆசீர் பொங்க நான் வாழுவேன்


1. எனைத் தேற்றும் உன் வார்த்தை

உயிரானது - நான்

உனக்காக உயிர் வாழ உரமாகுது

எனையாளும் நினைவெல்லாம் 

நீயல்லவா - நிதம்

துணையாகும் என் வாழ்வின் வரமல்லவா

2. எனைத் தாங்கும் உன் அன்பு மாறாதது - அது

என் வாழ்வின் செல்வத்துள் மேலானது

என் சொந்தம் இனி என்றும் நீயல்லவா - நிதம்

என் வாழ்வின் பொருள் தேடும் உறவல்லவா

அம்மா உந்தன் அன்பினிலே

அம்மா உந்தன் அன்பினிலே

அருள்வாய் எமக்கு அடைக்கலமே


1. இறைவன் படைத்த எழிலே எழிலே

இயேசுவைத் தந்த முகிலே முகிலே

தூய்மை பொழியும் நிலவே நிலவே

துணையே வாழ்வில் நீயே


2. புவியோர் எங்கள் புகழே புகழே

புனிதம் பொங்கும் அழகே அழகே

உம் மகன் புதிய உறவில் உறவில்

எம்மையும் வதியச் செய்வாய்


நிலையான புகழுக்குரிய 

தூய இறை நன்மைக்கே,

எல்லா காலமும், 

தொழுகையும் புகழும் 

போற்றியும் மாட்சிமையும்

உண்டாகக் கடவது

உன் புகழைப் பாடுவது

 உன் புகழைப் பாடுவது 

என் வாழ்வின் இன்பமைய்யா

உன் அருளைப் போற்றுவது 

என் வாழ்வின் செல்வமைய்யா (2)


1. துன்பத்திலும் இன்பத்திலும்

நல் தந்தையாய் நீ இருப்பாய்

கண்ணயரக் காத்திருக்கும் 

நல் அன்னையாய் அருகிருப்பாய் (2)

அன்பு எனும் அமுதத்தினை 

நான் அருந்திட எனக்களிப்பாய்

உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2


2. பல்லுயிரைப் படைத்திருப்பாய்

நீ என்னையும் ஏன் படைத்தாய்

பாவத்திலே வாழ்ந்திருந்தும் 

நீ என்னையும் ஏன் அழைத்தாய் (2)

அன்பினுக்கு அடைக்கும் தாழ் 

ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்

உன் அன்பை மறவாமல்

நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2

என் சுவாசக் காற்றே

என் சுவாசக் காற்றே 

என் வாழ்வின் ஊற்றே

இறைவா என் உள்ளம் வருவாய்

என்னுயிரின் உணவே 

என் வாழ்வின் வழியே

தலைவா நீ உன்னைத் தருவாய்

என் வாழ்வும் என் வளமும் 

எல்லாமும் நீதானே

இறைவா தலைவா 

அன்பினைப் பொழிவாய்


1. என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்

நீதானே நீதானே இறைவா

என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்

தருவாயே தருவாயே தலைவா

வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே

வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே (2)

வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்


2. எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை

அறிவேனே அறிவேனே இறைவா

உனைப்போல நானும் பிறரன்பில் வளர

அருள்வாயே அருள்வாயே தலைவா

மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே

ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே (2)

நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்

என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்

என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்

உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன்

காற்றும் நீயே கடலும் நீயே

கருணை நீயே கனிவும் நீயே

அன்பெனும் சங்கமத்தின் நன்றி காணிக்கை

எந்தன் அன்பு காணிக்கை எந்தன் நன்றி காணிக்கை


1. 

உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்

உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும்

கனவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை

வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன்


2.
நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்

நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும்

நினைவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு நிறைவும் இல்லை

வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன்