கொடிய நேய்வாய் பட்ட காலத்தில் சொல்லத்தக்க செபம்

ஓ இயேசுவே ! திவ்விய மீட்பரே, எங்கள் பேரிலும், உலகினர் பேரிலும் இரக்கமாய் இரும் !
ஓ வல்லபக் கடவுளே ! ஓ பரம தேவனே ! என்றும் வாழும் இறைவா, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர்பேரிலும் தயையாயிரும்.

என் இயேசுவே ! எங்களுக்குப் பொறுத்தலும் இரக்கமும் அளித்து, இந்த ஆபத்தான காலத்தில் உமது விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை எங்கள் பேரில் தெளித்தருளும். என்றென்றும் வாழும் தந்தையே ! உமது ஒரே பேறான இயேசுகிறிஸ்துவின் திரு இருதயத்தைப் பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிற எங்கள் பேரில் இரக்கமாயிரும். -ஆமென்.

நோய்ப்பட்ட கால்நடைகளுக்கான செபம்

ஆண்டவரே ! மிகுந்த தாழ்ச்சியோடே வணங்கி உம்முடைய இரக்கத்தைக் கேட்கிறோம். கடின நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிற இந்த மிருகம் உம்முடைய ஆசீரினால் சுகம் அடைந்து, இனி யாதொரு நோய் படாதபடி எல்லாத் தொந்தரைகளும் விலகிப்போகச் செய்யும். நீரே அவைகளுக்குச் சீவனும் ஆரோக்கியமுமாயிரும். இரக்கம் மிகுந்த இறைவா, தேவரீர் தாமே இத்தகைய வாயில்லா ஜீவன்களை மனிதரின் நன்மைக்காக அளித்திருப்பதால், எங்கள் பிழைப்புக்கு வேண்டியிருக்கின்ற அவைகளுடைய உபகாரம் எங்களுக்கு இல்லாமல் போகாதபடிக்குக் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

பெற்றோரின் செபம்:

மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே. இந்தப் புனித ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற உனக்கு உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும். நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய் இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதாலும், அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும் இருந்து என்னை விடுவித்தருளும். சொல்லாலும் செயலாலும் அவர்களை ஞானத்திலும், பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும். அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப அரசில் நாங்கள் அளவறுக்கப்படாத நித்திய பேற்றினை அனுபவிக்கச் சேர்த்துக் கொள்ளும்.

ஓ ! விண்ணுலகத் தந்தையே ! என் பிள்ளைகளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீரே அவர்களுடைய கடவுளாகவும், தகப்பனாகவும் இரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களை தந்தருளுவதுடன் என் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில் சாதுரியமாய் நடந்து, சோதனைகளை வெல்லவும் பசாசின் கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும். அவர்கள் இதயத்தில் உமது அருளைப் பொழிந்து பரிசுத்த ஆவியாரின் கொடைகளைப் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள் ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து, விசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் அரசு செய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து வழியாக உமது சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள். -ஆமென்.

தேர்வு எழுதுவோருக்காக செபம்

ஞானத்தின் ஊற்றே இறைவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
- ஆமென்.

திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
 கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய்க் கேட்டருளும்

விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா,
 - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
 ஊலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா – எங்கள்...
 தூய ஆவியாகிய இறiவா - எங்கள்...
 மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள்...

 அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
 மண்ணுலகில் அதி புனித திருத்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
 பரம தேவ பிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
 அனைத்து அருளாலும் நிறைந்து அலங்கரிக்கப் பட்ட திருக்குடும்பமே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
 எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான திருக்குடும்பமே,
 எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே,
 விண்ணுலகிற்குத் தேர்ந்தெக்கப்பட்டவரின் ஞானக் கருவூலமாகிய திருக்குடும்பமே,
 விண்ணுலகின் பேரின்பமாகிய திருக்குடும்பமே,
 அனைத்து வானதூதர்களாலும் வணங்கப்பட்ட திருக்குடும்பமே,
மனிதர்களால் நிந்திகரிக்கப்பட்டிருந்தாலும் தேவ சமூகத்தில் உன்னத மாட்சிமை பொருந்திய திருக்குடும்பமே,
பெத்லகேம் ஊரார்களால் புரக்கணிக்கப்பட்டு ஒரு மாட்டுக் கொட்டிலில் ஒடுங்கிப்போக அவசரப்பட்ட திருக்குடும்பமே,
திவ்விய இரடசகர் பிறந்த சமயத்தில் இடையர்களால் சந்திக்கப்பட்ட திருக்குடும்பமே,
பிறந்த திவ்விய குழுந்தைக்குத் தோத்திரமாக வானதூதர்கள் இசைத்த கீதங்களைக் கேட்ட திருக்குடும்பமே,
மூன்று அறிஞர்களால் வணங்கிப் பாதகாணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருக்குடும்பமே,
ஆலயத்தில் திவ்விய பாலனை ஏந்தின சிமியோன் அவரைக் குறித்துச் சொல்லிய துதிகளையும் இறைவாக்குகளையும் கேட்டு மகிழ்ச்சியும் துயரமும் கொண்ட திருக்குடும்பமே,
எண்ணிறந்த ஆபத்துக்குள்ளே எகிப்து தேசத்துக்கு ஓடிப்போக கட்டளையிட்ட வானதூதரின் வாக்குக்கு தாமதமின்றி கீழ்ப்படிந்த திருக்குடும்பமே,
ஏரோது அரசனின் கொடுமைக்குத் தப்பித்துக் கொள்ள அத்தேசத்துக்கு கட்டாயப்பட்ட திருக்குடும்பமே,
அந்நிய தேசத்தில் பரதேசியான திருக்குடும்பமே,
மண்ணுலகம் அறிந்து கொள்ளாமல் மறைந்த தன்மையாய் வாழ்ந்து வந்த திருக்குடும்பமே,
ஏழ்மையும் உழைப்பும் தவமுமுள்ள சீவியமாய் சீவித்த திருக்குடும்பமே,
நெற்றி வியர்வை நிலத்தில் விழ, அன்றாட உணவைத் தேடிகொண்ட திருக்குடும்பமே,
மண்ணுலக வறுமையும் விண்ணுலக நன்மையும் மிகுதியும் கொண்டிருந்த திருக்குடும்பமே,
பிறர்சிநேகத்துக்கும் சமாதான ஒற்றுமைக்கும் மாதிரிகையான திருக்குடும்பமே,
நினைவிலும் மனப்பற்றுதலினாலும் முழுவதும் விண்ணுலகில் சஞ்சரித்திருந்த திருக்குடும்பமே,
உமது ஆயுள் முழுமையும் இடைவிடாது செபமும் ஞானயோகமுமாயிருந்த திருக்குடும்பமே,
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலும் உம்மை மன்றாடுகிறவர்களின் நம்பிக்கையும் எல்லாக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்குச் சுகிர்த மாதிரிகையுமாகிய திருக்குடும்பமே,

உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
 உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்; சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மு. – இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
து. – இயேசுவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.

செபிப்போமாக
 இறைவா, திருக்குடும்பத்தின் சிறப்புமிக்க முன்மாதிரியை எங்களுக்கு அளித்தீரே, எம்மீது இரங்கி, இல்லறத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் அக்குடும்பத்தை நாங்கள் பின்னற்றி, உமது முடிவற்ற சம்பாவனையைப் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.

திருப்பலி செபங்கள்

Abbreviations:
அப: அருள்பணியாளர்
எல்: எல்லாரும்

தொடக்கச் சடங்குகள்:
அப : தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல் : ஆமென்.
அப : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல் :  உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

பாவத்துயர் செயல்:
அப : சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும், நான் பாவி என ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில், என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும், பாவங்கள் பல செய்தேன்.
(மார்பில் தட்டிக் கொண்டு)
என் பாவமே! என் பாவமே! என் பெரும் பாவமே! ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும், நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

அப : எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல் : ஆமென்.

மன்னிப்பு வேண்டல்:
அப : ஆண்டவரே இரக்கமாயிரும்.
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்.

அப : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

அப : ஆண்டவரே இரக்கமாயிரும்.
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்.

உன்னதங்களிலே (பாடல்):
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக. புகழ்கின்றோம் யாம் உம்மையே, வாழ்த்துகின்றோம் இறைவனே. உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம். உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே, இணையில்லாத விண்ணரசே. ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே. ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துஇறைவனே. ஆண்டவராகிய இறைவனே, இறைவனின் திருச் செம்மறியே. தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே, நீர் எம் மீது இரங்குவீர். உலகின் பாவம் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர். தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்! நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்! தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.

சபை மன்றாட்டு
மன்றாடுவோமாக:  ………. உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

வார்த்தை வழிபாடு:
அப : ஆண்டவரின் அருள்வாக்கு.
எல் : இறைவனுக்கு நன்றி.

நற்செய்தி:
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப : மத்தேயு / மாற்கு / லூக்கா / யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.
எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே.

அப : கிறிஸ்துவின் நற்செய்தி.
எல் : கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.

நம்பிக்கை அறிக்கை (செபம்):
ஒரே கடவுளை நம்புகிறேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துதுவை நம்புகிறேன்.

இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.

தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இரங்கினார்.
(“மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம்  வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்கு முடிவு இராது. தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதணையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.

ஒரே புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக் கொள்கிறேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.

நம்பிக்கை அறிக்கைப் (பாடல்):
விண்ணையும் மண்ணையும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார். தந்தை, மகன்,தூய ஆவியராய் ஒன்றாய் வாழ்வாரை நம்புகிறேன். தூய ஆவியின் வல்லமையால் இறை மகன் நமக்காய் மனிதரானார். கன்னி மரியிடம் பிறந்தவராம் இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்.

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார். சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார். மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இறப்பின் மீதே வெற்றி கொண்டார். விண்ணகம் வாழும் தந்தையிடம் அரியணைக் கொண்டு இருக்கின்றார்.

உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார். தூய ஆவியாரை நம்புகிறேன். பாரினில் அவர் துணை வேண்டுகிறேன். பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.

திரு அவை உரைப்பதை நம்புகிறேன். புனிதர்கள் உறவை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை உறுதியுடனே நம்புகிறேன்.

ஆமென்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
அப : ---------அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

எல் : எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நற்கருணை வழிபாடு:
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக.
ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தை பெற்றுள்ளோம்.  நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.

இறைவன் என்றென்றும் வாழ்த்துப்பெறுவாராக!
(கிறிஸ்துநம் மனித இயல்பில் பங்கு கொள்ளத் திருவுளமானார்.  இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா,நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளமையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தை பெற்றுள்ளோ. திராட்சை கொடியும் மனித உழைப்பின் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக!
(குரு தலை குனிந்து அமைதியாகச் சொல்வார்):
ஆண்டவரே,  தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவரே இறiவா, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி  உமக்கு உகந்தது ஆவதாக.
ஆண்டவரே, என் குற்றம் நீங்க என்னைக் கழுவிய. பாவத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும்.
அப : சகோதரர் சகோதரரிகளே,என்னுடையதும் உங்களுடையதுமான இபலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல். ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும் மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும்,புனிதத் திருஅவை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மன்றாட்டு
ஆண்டவரே,... எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.                 ஆமென்

நற்கருணை மன்றாட்டு:
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

அப : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது  மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும். எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும். ............

ஆகவே,ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி முடிவின்றி ஆர்ப்பரித்துச் பாடுவதாவது.

தூயவர் பாடல்:
தூயவர், தூயவர், தூயவர்! வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர். விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஓசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர். உன்னதங்களிலே ஓசன்னா! உன்னதங்களிலே ஓசன்னா!

நற்கருணை மன்றாட்டு:
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்
உம்முடைய படைப்புகள் எல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே.
ஏனெனில் உம் திருமகனாகிய
எங்கள் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவழியாக
தூய ஆவியாரின் செயலாற்றலால்
ஆனைத்தையும் உய்வித்துத் தூய்மைப்படுத்துகின்றீர்.
கதிரவன் தோன்றி மறையும் வரை
உமது பெயருக்குத் தூய காணிக்கையை ஒப்புக் கொடுக்குமாறு உமக்கன மக்களை இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.

எனவே ஆண்டவரே
உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே ஆவியால் றீய்மைப்படுத்த
உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
இவ்வாறு, உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமுமாகவும் இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இம்மறைநிகழ்வுகளைக் கொண்டாடுகின்றோம்.

ஏனெனில் அவர் காட்டிகொடுக்கப்பட்ட இரவில்,
அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி, அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் அவர் கூறியதாவது

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள் : ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.

அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்,
கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி
அதைத் தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது

அனைவரும்  இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள் : ஏனெனில், இது புதிய, நிலையான உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம். இது பாவமன்னிப்புக்கென்று  உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

அப : நம்பிக்கையின் மறைபொருள்!
எல் : ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.
(அல்லது)
ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அப : ஆகவே ஆண்டவரே
உமது திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளையும்,
வியப்புக்கு உரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும்
நாங்கள் நினைவுகூர்கின்றோம்.  இவர் மீண்டும் வருவார் என எதிபார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை
நன்றி செலுத்தி உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திருஅவையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள
உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர்.  இவ்வாறு உம்முடைய திருமகனின் திருவுடல் திரு இரத்தத்தால் ஊட்டம் பெறும் நாங்கள், அவருடைய தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே உள்ளமும் உடையவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு, உம்மால தேர்ந்துகொள்ளப்பட்வர்களோடு, முதன்முதலாக புனிதமிக்க கன்னியும்,கடவுளின் தாயுமான மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு,
புனித திருத்துதர்கள்,மாட்சிமிகு மறை சாட்சியர்
இன்று நாங்கள் கொண்டாடும் புனித ..............
மற்றும் புனிதாக அனைவரோடும்
நாங்கள் உரிமைப் பேற்றுக்கு தகுதியுடைவோர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் என்றும்
உமது உதவியைப் பெறுவோம் என உறுதியோடு இருக்கின்றோம்.

ஆண்டவரே, உங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி
உலகுகெல்லாம் அமைதியும் மீட்பும்
தரவேண்டும் என மன்றாடுகிறோம்.
இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருஅவையை

சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ்;...எங்கள் ஆயர் .......; ஏனைய ஆயர்கள், திருநிலையினர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரையும் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற
இக்குடும்பத்தின் வேண்டல்களுக்கு கனிவாய்ச் செவிசாய்த்தருயும்.

கனிவுள்ள தந்தையே,
எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைத்
கனிவுடன் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.


இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும்
உமக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து
இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும்
உமது அரசில் கனிவுடன் ஏற்றருளும்.
நாங்களும் அங்கு வந்து சேர்ந்து
அவர்களோடு உமது மாட்சியால்
என்றும் மனநிறைவு அடைவோம் என
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக எதிர்நோக்கியிருக்கின்றோம்.

இவர் வழியாகவே நீர் உலகுக்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

இவர் வழியாக,
இவரோடு,
இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
துய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும்
என்றென்றும் உமக்கு உரியதே  - ஆமென்.

அப : மீட்பரின்கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

எல் : விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

அப : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து.
எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள
உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
உங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்திற்காகவும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல் : ஏனெனில், ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

அப : ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்,
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன் என்று உம் திருத்துதர்களுக்கு மொழிந்தீரே. ஏங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருஅவையின் நம்பிக்கையை கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல் : ஆமென்.

அப : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப : ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு உடவும் திரு இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு நிலைவாழ்வு அளிப்பதாக.

மன்னிப்பு மன்றாட்டு (பாடல்):

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எம் மேல் இரக்கம் வையும். - 2 உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எமக்கு அமைதி அருளும்.

அப : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்!

எல் : ஆண்டவரே! நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா நலம் அடையும்.

(குரு தலை வணங்கி-ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீர்ப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)

(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)

நற்கருணை விருந்து

நன்றி மன்றாட்டு
அப :மன்றாடுவோமாக. ஆண்டவரே,…. . .
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல் :   ஆமென்..

இறுதி ஆசீர்
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப : எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன்,தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல் : ஆமென்.

அப : சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று
எல் : இறைவனுக்கு நன்றி.

Meaning and Objectives of Business Communication


Meaning of communication
The word “communication” is derived from the Latin word “communico” which means “To share”. It is the act of sharing thought, opinion, and ideas.
It is the two-way process
1. Speaker
2. Listener

Definition
“Communication is the action of conveying or exchanging information and ideas”. This is very simple definition.

Objectives of communication
Communication can be used for following objectives
1. Information
2. Advice
3. Order
4. Suggestion
5. Persuasion
6. Education
7. Warning
8. Motivation
9. Counselling
10 .Morale boosting

1. Information
One of the important objectives of communication is passing or receiving information about a particular fact. If large groups have to be informed, a meeting may be called.

2. Advice
Advice is a kind of information. It means opinion given as to the action to be taken. Advice should be related to a specific piece of work.

3.0rder
Order is an authoritative communication. It should be clear and complete. Its execution should be possible.

4. Suggestion
Suggestion means proposing something for acceptance or rejection. Subordinates normally give suggestion.

5. Persuasion
Promoting a person to act mostly in a positive way is known as persuasion. Persuasion is an important objective of communication.

6. Education
Education involves imparting instruction, character, building, enriching mental faculties, giving training to human being etc. it aims the knowledge and improving skills.

7. Warning
Warning is forceful means of communication. It gives oral or written.
Example; no smoking, beware of dogs, dangers.

8. Motivation
Interest ion job in the minds of employees is known as motivation. A motivated worker does not need much supervision.

9. Counseling
Counseling is objective and impersonal, whereas advice is a personal touch. Counseling is almost professional, whereas advice is not so.

10. Morale boosting
It refers to team spirit and co-operation of people for a common purpose. If the workers are highly motivated, morale is also said to be high.

(Excerpts from the Business Communication )
- summarized by Bro. Bruceline Binith, II Year B.B.A.