TRUTH

It is a very good habit.  Every body wants to live a truthful life but their circumstance makes them to go against it. We are saying lie very often. Each time our behaviour is damage by saying lies unconsciously. Whenever we spoke about the truth surely the important person reminds in our mind is none other than "ARICHANDRAN". He was a man of truth. He was a truthful king, He spoke always truth. So, God began to tempt him. He lost his kingdom and become poor. He sold his wife and son. Till the final movement he didn't speak lie. Like him lot of leaders lived for truth today.  

In the same thing happened for job too. We are all very familiar about this story. He lost his fields, workers, animals etc. Though he was refused by his wife yet he had a strong faith in God. So in any way we ought to be a truthful person.

Let me explain a beautiful story for you. One day the king changed his costume and he was walking on the road. At that time, a thief went to him asked who are you? He replied, I am also a thief like you. They both joined to gather and went king's palace. They had promised each other to get 50% equally. With this commitment you went further. The thief saw three emerald stone. He took only two because it is easy to distribute. The thief gave one emerald to king and he got another. The next day, the king called his ministers and orders them to search what was missing in the palace. One of the ministers saw an emerald and put it in his packet. He said that here three emeralds are missing. The king called the minister and makes him as a minister and dismissed the minister who said lie. So, we need to respect the truthful person and have a habit of truth.

- C. Alwin Joseph, B.Sc. I Year Physics. 

அன்னையின் விண்ணேற்பு விழா - சுதந்தர தின விழா 15.08.2011

திருப்பலி முன்னுரை
சுதந்தரம் என்பதுத மனம் போன படி வாழ்வதில் அங்கிவிடுவதில்லை. மாறாக இறைவிருப்படி செயல்படுவதில் தான் அடங்கியுள்ளது. இந்த விதத்தில் நமக்கு முன்னோடியாக இருப்பது விடுதலை வீராங்கனையாய் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நம் தாய் மரியா.
இவள் மறைநூல் படித்ததில்லை ஆனால்
இவளைப் பற்றி பேசாது மறைநூல் விடுவதில்லை..
மொழிகள் பல இவள் கற்றதில்லை- ஆனால்
புரியாத மொழிகள் என இவளுக்க ஏதுமில்லை
இவள் செல்வ செழிப்பை நாடியதில்லை ஆனால்
இவள் பெற்ற செல்வத்திற்கு இணை ஏதுமில்லை...
தன் துன்பம் பகிர யாரையும் இவள் அழைத்ததில்லை
ஆனால் தன் மைந்தர்கள் துன்பம் சுமக்க
இவள் விடுவதில்லை....
இவள் பேசிய வார்த்தைகள் வெகுவில் ஆனால்
அதன் அர்த்தங்களின் தேடல் இன்னுமும் முடிந்ததில்லை ஆனால்
நீங்கள் இடத்தை வரலாற்றில் பெற்றவள்...
இத்தகைய சிறப்புகள் மிக்க அன்னை மரியாளின் விண்ணேற்புத் தினத்தையும் கொண்டாடி மகிழும் நாம், பெற்ற சுதந்தரத்தைப் பேணிக்காத்திடவும், பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், ஒற்றுமையுடன் வாழவும், நம் தாய் நாட்டிற்காக செபிக்கும் படியாகவும் நம் அன்னையிடம் தொடரும் இப்பலியின் வழியாக வேண்டுவோம்.

பாவ மன்னிப்பு வழிபாடு
நான் பாவி இயேசுவே (பாடல்)
என் வாழ்வை மாற்றுமே....

அன்புமிக்க சகோதர சகோதரிகளே!
சுதந்தரம் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு மாபெரும் கொடை. அதை பொறுப்புடன் பயன்படுத்துவது, நாட்டின் முன்னேற்றம் குலைந்து போக காரணமாயிருந்திருக்கின்றோம். இதை நினைத்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம்.

சிவப்பு
தியாகத்தை குறிக்கின்ற நிறம் சிவப்பு
இறைவா! நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் தேவையான தியாகத்தை மேற்கொள்ள தயங்கியமைக்காக நாங்கள் மனம் வருந்துகின்றோம்.

வெள்ளை
தூய்மையைக் குறித்துக்காட்டுகின்ற நிறம் வெள்ளை
இறைவா! தீய எண்ணங்களுக்கு இடம் கொடுத்து, நேர்மையான உள்ளத்தோடு வாழ மறந்த தருணங்களுக்காக, நாங்கள் மனம் வருந்துகிறோம்.

பச்சை
வளமையைக் குறிக்கும் நிறம் பச்சை.
இயற்கையை உருவாக்கிய இறைவா!
உமது படைப்புகளுக்கு நாங்கள் ஊறு விளைவித்த தருணங்களை நினைத்துப் பார்த்து, சிறப்பாக சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்தியதற்காக, மனம் வருந்துகிறோம்.

சக்கரம்
ஒற்றுமையைக் குறிக்கும் சின்னம் சக்கரம்.
பல வேளைகளில் நாங்கள் நாட்டின் ஒற்றுமை உணர்வை மறந்தவர்களாய் இனம், மொழி, மதம், கட்சி, சாதியின் பெயரால் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டதை நினைத்து மனம் வருந்துகிறோம்.

உண்மையான சுதந்தரத்தின் ஊற்றாகிய இறைவன், நம் வேண்டுதல்களைக் கனிவோடு கேட்டு, நம்மீது மனம் இரங்கி, பாவத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவித்து, நம்மை முடிவில்லா சுதந்தர வாழ்வுக்கு அழைப்பதை வெளிப்படுத்தும் பொருட்டு குருவானவர் நம்மீது தீர்த்தம் தெளிப்பார்.. 
(தீர்த்தம் தெளித்தப் பின்....)

சகோதர சகோதரிகளே பாவ இருள் நம்மை விட்டு அகன்றது. விடுதலையின் ஆண்டவர் நமது மனச்சுமைகளை நீக்கி உண்மையான சுதந்தரத்தைக் கொடுத்தார். ஒளியாம் இறைவன் நம்மீது இறங்கி வந்துள்ளார்.நமதுஉள்ளத்திலும் இல்லத்திலும் குடிகொள்கிறார் என்ற சிந்தனையுடன் குத்து விளக்கை ஏற்றுவோம்.

குருவானவர் குத்து விளக்கை ஏற்றியபின், குத்துவிளக்கிலிருந்து பீடத்தின் திரிகள் ஏற்றப்படுகின்றன. பிறகு மணிகள் முழங்க உன்னதங்களிலே பாடப்படுகிறது.

விசுவாசிகளின் மன்றாட்டு
(அனைவரும் சொல்ல வேண்டியது)
எங்கள் தாய்மரியின் வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

தேசியக்கொடி
அன்பின் இறைவா! சுதந்தர விழாவைச் சிறப்பிக்கின்ற இந்த புனிதமான நாளில், எங்களது தேசியக் கொடியை அர்ப்பணிப்பதன் மூலம் எம் நாட்டையே உமக்க அர்ப்பணிக்கிறோம். சுதந்தரக் காற்றைக் சுவாசிக்கும் நாங்கள், எம் நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும், முழு ஒத்துழைப்பைக் கொடுத்து, அதன் வளர்ச்சிப் பாதையிலே நாங்கள் கைகோர்த்து உழைக்க அருள் புரிய வேண்டுமென்று....
பாடப்புத்தகங்கள்
ஞானத்தின் இருப்பிடமே இறைவா!
வளமான இந்தியாவுக்கு வித்திடும் பள்ளி மாணவர்களை ஆசிர்வதிக்க இந்த பாடப்புத்தகங்களை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். உயர்வான எண்ணங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும் வளர்த்துக் கொண்டு, எதிர்கால இந்தியாவின் உண்மை குடிமக்களாக உருவாகிட வேண்டுமென்று.....
உலக உருண்டை உலக வரைப்படம்
பரம்பொருளே இறைவா! உலக நாடுகள் எல்லாம் உமக்கு ஒப்புக்கொடுப்பதன் அடையாளமாக இதை உமக்கு அளிக்கிறோம். அறிவியல் வளர்ச்சியை ஆக்க சக்திகளுக்குப் பயன்படுத்தவும் அனைத்து நாடுகளும் அன்பு, அமைதி, சமாதானம், ஒற்றுமை ஆகிய மதிப்பீடுகளைக் கருத்தில் கொண்டு, போட்டி மனப்பான்மைகளைத் தவிர்த்து, அன்போடு வாழ அருள்புரிய வேண்டுமென்று....
இனிப்பு மிட்டாய்
நன்மையின் நாயகனே இறைவா! இனிமையான சுதந்தரத்தைச் சுவைக்கின்ற நாங்கள், நன்றி பெருக்கோடு இந்த இனிப்பைக் காணிக்கையாக்குகிறோம். இதனது இனிமையான சுவையினால், சுவைப்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது போல, பெற்றுக் கொண்ட சுதந்தரத்கை நாங்களும் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் சுதந்தரத்தை மதிக்கவும், அதனால் பிறரை மகிழ்ச்சிப்படுத்தவும் அருள் புரிய வேண்டுமென்று...
(யோவா 14: 14) நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.
ஆகவே நம் நாட்டின் சுதந்தரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்காவும், நாட்டின் தலைவர்களுக்காவும் இராணுவ வீரர்களின் குடும்பத்திற்காகவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காவும் இறைவன் கற்றுக் கொடுத்த செபத்தின் வழியாக செபிப்போம்.

நன்றி மன்றாட்டு
உம்மை போற்றுகின்றோம் (பாடல்)
உம்மை புகழுகின்றோம்
நன்றி கூறுகின்றோம்
  • வாழ்வளிப்பவரான இறைவா!  அன்னை மரியாவைப் பாவத்திலிருந்தும், சாவின் பிடியில் இருந்தும் விடுவித்து விண்ணகத்திற்கு எடுத்துக் கொண்டதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  • விடுதலையின் இறைவா!  என் தாய்த் திருநாட்டை அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, சுதந்தர நாடாகத் திகழச் செய்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  • வாழ்வளிக்கும் வள்ளலாகிய இறைவா!  நாங்கள் மனித மாண்புடன் தலைநிமிர்ந்து வாழ எங்களுக்கு நீர் தந்துள்ள அறிவு, ஆற்றல், சூழ்நிலைகளுக்காவும், இயற்கை வளங்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம்.

நன்மைகளின் ஊற்றான அன்புத் தெய்வம் நம் திருச்சபைக்கும், நமது நாட்டிற்கும் நமக்கும் செய்துள்ள நலன்களை எண்ணி நன்றி கூறிய நாம் ஒருமித்த உள்ளத்துடன் இணைந்து, பின்வரும் செபத்தினை நான் வாசிக்க நீங்களும் சொல்லி உங்களை அழைக்கிறேன்.

(அனைவரும் முழங்கால் படி இடவும்.)
அன்பார்ந்தவர்களே.....
நம் நாட்டின் சுதந்தர போராட்ட தியாகிகளுக்காவும், உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காவும் ஒரு நிமிடம் மெளவுன அஞ்சலி செய்வோம்.

செபம்
அன்புத் தந்தையே இறைவா!
எங்கள் நாட்டின் விடுதலைக்காக உழைத்த தியாக உள்ளங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் நீத்த வீரர்கள், எம் பாரத நாட்டின் வளஙகள் கலைச்செல்வங்கள், எம் முன்னேற்றத் திட்டங்கள், எங்களை வாட்டும் துன்பங்கள், எங்களின் ஏக்கங்கள், எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் உமக்குப் ஒப்புக் கொடுக்கிறோம்.

இந்தியா என் தாய் நாடு. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர் என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து ஒன்றுப்பட்டு ஒரே இறைக்குடும்பமாய், வாழவும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடவும் அருள் தாரும்.        
ஆமென்.

இயற்கை மருத்துவம்




குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.
கலைஞர் உரை: வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
மு.வ உரை:  மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:  மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
Translation:
The learned books count three, with wind as first; of these, 
As any one prevail, or fail; 'twill cause disease.
Explanation:  If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
கலைஞர் உரை: உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
மு.வ உரை:  முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை: ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
Translation:
No need of medicine to heal your body's pain, 
If, what you ate before digested well, you eat again.
Explanation:  No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
கலைஞர் உரை: உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.
மு.வ உரை:  முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை: முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
Translation:
Who has a body gained may long the gift retain, 
If, food digested well, in measure due he eat again.
Explanation:  If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.

குறள் 944:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
கலைஞர் உரை: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
மு.வ உரை:  முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:  முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.
Translation:
With self-denial take the well-selected meal; 
So shall thy frame no sudden sickness feel.
Explanation:  There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.

குறள் 945:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
கலைஞர் உரை: உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
மு.வ உரை:  மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:  ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
Translation:
With self-denial take the well-selected meal; 
So shall thy frame no sudden sickness feel.
Explanation:  There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable.

குறள் 946:
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
கலைஞர் உரை:  அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.
மு.வ உரை:  குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:  குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.
Translation:
On modest temperance as pleasures pure, 
So pain attends the greedy epicure.
Explanation:  As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.

குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
கலைஞர் உரை: பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
மு.வ உரை:  பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
சாலமன் பாப்பையா உரை:  தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
Translation:
Who largely feeds, nor measure of the fire within maintains, 
That thoughtless man shall feel unmeasured pains.
Explanation:  He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
கலைஞர் உரை:  நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
மு.வ உரை:  நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:  நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
Translation:
Disease, its cause, what may abate the ill: 
Let leech examine these, then use his skill.
Explanation:  Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).

குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
கலைஞர் உரை: நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.
மு.வ உரை:  மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:  மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
Translation:
The habitudes of patient and disease, the crises of the ill 
These must the learned leech think over well, then use his skill.
Explanation: The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
கலைஞர் உரை: நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
மு.வ உரை:  நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா உரை:  நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
Translation:
For patient, leech, and remedies, and him who waits by patient's side, 
The art of medicine must fourfold code of laws provide.
Explanation: Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.

கடலைப் போற்றுவோம்


அனைவருக்கும் என் வணக்கம். உலகின் முதல் அதிசயம், சத்தமிடும் ரகசியம், காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப்பள்ளம் வாசிக்க கிடைக்காத வரலாற்றுகளைத் தின்று சிரிக்கும் நிஜம் ஆம், கடல். அந்த கடலின் பெருமைகளைப் போற்றவே நான் இங்கு வந்துள்ளேன்.

196 1\2 கோடி ஆண்டிகளுக்கு முன் இவ்வுலகில் தோன்றியது என்ன மனிதனா?மிருகமா? இல்லை கடல் மட்டும்தான். அந்த கடலில்தான் முதல் உயிரினமும் தோன்றியிருக்கும் நீரில் தான் சுவாசித்திருக்கும். இதன் மரபுரிமை தொடர்ச்சிதான் கருவில் உள்ள திசு தண்ணீர்க் குடத்தில் சுவாசிக்கிறது.

கடல் 85000 உயிர்கள் கொண்டு அமைக்கப்பட்ட தன் அரசாங்கம் இங்கு பிரிவில்லை எங்கும் பேதமில்லை பல கோடி வருடங்களுக்கு முன் துப்பிய இந்நிலவுலகில் பிரிவினை, பிரிவினை முற்றிய மனிதன் பொதுவுடமை கூறும் கடலையும் பெயர்வைத்து பிரித்தான். தன் நாட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள கடல் நாட்டை சார்ந்த்து என்றும் வகுத்து கொண்டான்.
தமிழர்கள் இந்த கடலின் பரப்பை கண்டு வியந்து 'பரவை' என்றும் ஆழம் கண்டு மலைத்து'ஆழி' என்றும் அழைத்தார்கள். குறுந்தொகை 45வது பாடலில் மேகங்கள் முகந்தபோதும் கடல் குறையவில்லை, புனல்கள் பல கலந்தபோதும் கடல் உயரவில்லை என்று கடலின் தாழ்ச்சியைப் புகழ்ந்துள்ளனர். 


கடல் மீனவர்களுக்கு மட்டுமல்ல நம் உலகின் எல்லா கண்டங்களுக்கும் கருணை பொழிகிறது.கடலடியில் குளிர் மற்றும் வெப்பம் என் 2 நீரோட்டங்கள் உண்டு. வெப்ப நீரோட்டம் தான் நார்வே மற்றும் ஸ்வீடன் நாடுகளை குளிரிளிருந்து பாதுகாக்கிறது. கடலின் முக்கிய பணியே பூமத்தியரேகைப் பகுதியின் வெப்பத்தை குளிர்பிரதேசங்களுக்கும், குளிர்பிரதேச குளிர்ச்சியை பூமத்திரேகைப்பகுதிக்கும் கடத்துவதுதான்.
குளிர்ச்சி பொழியும் நிலவும் நம் கடல்தாயின் மகளே, பூமி தோன்றி சில காலத்திற்கு பிறகு சூரியனின் சில பௌதிகமாற்றத்தால் பசுபிக்கடலில் உள்ள ஒருபகுதி பேரலை ஒன்றால் தூக்கி வீசப்பட்டது. அந்த பகுதி தனக்கென ஒரு சுற்றுப்பாதை அமைத்து சுழல ஆரம்பித்து. இதுவே நிலவு. ஆதரமாக நிலவில் உள்ள 'பாசல்' என்ற பாறை பசுபிக் பெருங்கடலில் உள்ள அந்த பெரும்பள்ளத்தில் காணப்படுகிறது.

இன்னொரு சுவையான செய்தி, கடல் நீரின் பரப்பில் 3.6% உப்பு உள்ளது. இதன் ஒவ்வொரு டன் நீரிலும் 0.000004கிராம் தங்கம் உள்ளது. கடல் பூமாதேவியின் திரவசீலை,மாறிவரும் சூழலில் மனிதன் விவசாயம் செய்ய மறந்து போகிறான். அப்போது நூற்றாண்டிற்கான உணவுத் தேவை? ‘நான் இருக்கிறேன்’ என்கிறது கடல்.ஆம் அடுத்த நூற்றாண்டின் உணவுத் தேவையின் அமுதசுரபியே கடல் தான்.
கடல் முத்துக்களின் கர்ப்பப்பை, பவளங்களின் தொட்டில், மங்கனீஷ் பாறைகளின் உலோக உலகம்,பெடரோலின் ஊற்று, கவிஞர்களின் கனா, ஞானிகளின் தத்துவம் விஞ்ஞானிகளின் ஆய்வு கூடம் எனவே கடலின் பெருமைகளை தொடர்ந்து போற்றி பிறவிப் பெருங்கடலை நீந்துவோம். நன்றி...
காட்சி வழித்தொடர்பியலில் இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் சகோதரர் வளனரசு பாரதிதாசன் பல்கலைகழகத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 'கடலைப் போற்றுவோம்' என்ற தலைப்பில் பேசியதன் சுருக்கம். 
-Points are taken from the book ‘Thannier dhesam’ written by the poet Vairamuthu

தொழிலாளிகளின் செபம்

அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே ! நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.
தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே ! உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடனம் மன்றாடுவீராக. -ஆமென்


-----------------
நல்ல இயேசுவே, என் இரட்சகரே! தேவரீர் ஒரு தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால், என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.

நாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை, மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில் முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது. கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும், கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர்.

ஓ இயேசுவே ! தெய்வீகத் தொழிலாளியே, நானும் இப்படி இருக்க எனக்கு வரமருளும்.

உம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள், தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவ தாயார், சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும் இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து, உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய இளைப்பாற்றியை எனக்குக்குக் கட்டளையிட்டருளும். -ஆமென்.

தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கணவன் மனைவியரின் செபம்

கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள நேச ஐக்கியத்தை குறிக்கவும், உலக பரம்புதலுக்காகவும், நெருங்கிய அன்புக்காகவும் புனித திருமணவாழ்வை அர்ச்சித்தருளின இறைவா, அதன் ஆசீர்வாதத்தை இருவரும் வணக்கத்தோடு ஏற்றுக் கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபைபுரியும். எங்களுடைய ஒன்றிப்பை இடைவிடாமல் ஆசீர்வதிக்கவும், அதனால் நாங்கள் இருவரும் எல்லா கடமைகளையும் சமாதானத்தோடும் அன்போடும் நிறைவேற்றவும், பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக்கொருவர் நடக்கவும் உம்மை மன்றாடுகிறேன். பிரிபடக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் புனித பந்தத்தை பலவீனப்படுத்தக்கூடிய எவ்விதக் கெட்ட குணத்திலும் பாவச் செயலிலும் இருந்து என்னை விடுவித்தருளும். தன்னலத்தை மறந்து, தியாக உள்ளத்தோடு வாழ்ந்து நான் உமக்குப் பிரியப்பட நடக்க சுறுசுறுப்புள்ளவனாகவும் ஆசையுள்ளவனாகவும் செய்தருளும். இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முறுமுறுத்து எல்லாவற்றிற்கும் காரணரும் ஈகிறவருமாயிருக்கிற உம்மை உலக வாழ்வின் நிறைவால் மறந்து விடாமலிருக்கச் செய்தருளும். பொறுமையாலும் கடன் சாந்த குணத்தாலும், செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்படிந்திருக்க என்னை ஆசீர்வதித்து உமக்குத் தகுந்தவனாகவும் செய்தருளும். -ஆமென்.