திரு இருதய ஆண்டவர் மருத்துவமனை - நல்ல சாமாரியனாக...
இரண்டு நாள் கருத்தருங்கில் கும்பகோணம் மறைமாவட்டம் திருத்தொண்டர்கள் பெற்ற அனுபவம் - 24-25 January 2011
முதல் நாள்
அருட்தந்தை மரியபிரான்சிஸ் (இயக்குனர்) அவர்கள் நோயாளிகளை எப்படி அணுக வேண்டும், தேவையில் வாடுவோருக்கு எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்று விவிலிய பின்னணியிலும், செப உதவியுடனும் எடுக்கப்பட்டது. எங்களுடைய Special Charism என்ன என்பதை உணரவைத்தார்கள். டாக்டர். சுப்ரமணியன் அவர்கள்: தொழுநோய் தொற்று நோய் அல்ல என்ற கருத்தை எங்கள் மனதிலே ஆழமாக விதைத்து, தொழுநோயைப் பற்றிய பயத்தையும், அருவருப்பையும் போக்கி, கனிவான பரிவான இதயத்தோடு பார்க்க வைத்தார்.
மாலையில் தொழுநோளிகளை சந்திக்க சென்றபோது, சிலரின் வாழ்க்கை பகிர்வு எங்கள் மனதை மிகவும் பாதித்தது. அவர்கள் எவ்வாறு சமுதாயத்திலும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள், சொந்தபந்தங்களாலே எப்படி ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களே கூறியபோது மிகவும் வேதனையாகவும், வருத்தமாவும் இருந்தது. எங்கள் வாழ்க்கை பணியைப் பற்றி சிந்திக்க வைத்தது.
மருத்துவமனையை பற்றி சி.டி ஒன்றைப் பார்த்தபோது, தொழுநோளிகளின் புண்களை மருத்துவர்கள் சுத்தம் செய்து மருந்து போடுவதை பார்த்து மனதுக்கு கஷ்டமாக இருந்தது. எங்களுக்கு பார்க்கவே அருவருப்பாக இருக்கிற புண்களை, எவ்வளவு ஒரு தியாக மனப்பான்மையோடு செய்கிறார்கள் என்பதை பார்த்து மனம் நெகிழ்ந்து போனோம். முதல் நாள் அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இரண்டாம் நாள்
நோயாளிகளை தனியாக சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பல நோயாளிகள் எப்படி சமுதாயத்தால், குறிப்பாக தங்களின் சொந்த வீட்டாரால், உறவினரர்களால் ஒதுக்கப்பட்டார்கள் என்று மனவேதனையோடு பகிர்ந்து கொண்டார்கள். எங்களில் பலருக்கு இயேசுவின் முதன்மையான பணிகளிலே ஒன்றான இந்த பணியினையும் எங்களது வாழ்க்கையிலே செய்யவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
திருத்தொண்டர்கள் (2010-2011)
- Bastin Britto J.
- Joseph Raj M.
- Joseph Michaelraj E.
- John Bosco B.
- Chinnapparaj S.
- Mark Marceline A.
- Benedict Diraviam A.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக