தலைவா உனை வணங்க...


தலைவா உனை வணங்க - என்
தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க - நான்
சிரமே தாள் பணிந்தேன்.

அகல்போல் எரியும் அன்பு - அது
பகல்போல் மணம் பரவும்
நிலையாய் உனை நினைத்தால் - நான்
மலையாய் உயர்வடைவேன் - 2

நீர்போல் தூய்மையையும் - என்
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் - என்னைச்
சீக்கிரம் தூக்கிவிடும் - 2

மாதா உன் கோவிலில்

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான் தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் - மாதா

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
சரணம் 1
மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே - 2
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா - மாதா

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்

சரணம் 2
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2
தரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ - மாதா

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்

சரணம் 3
பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை...
நான் என்ன சொல்வது - மாதா

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னை தான் தாயென்று உன்னை தான்
பிள்ளைக்கு காட்டினேன் - மாதா

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்

திரைப்படம்: அச்சாணி
இயக்குனர்: காரைக்குடி நாராயணன்
பாடல்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
குரல்: ஜானகி
வெளியீடு: பெப்ரவரி 4, 1978
- Thank God for these great mystics and their collaborators.  Even stone hearts break during playback.


உன் திருயாழில் என் இறைவா...

உன் திருயாழில் என் இறைவா
பல‌பண்தரும் நரமுண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
அதில்இணைத்திட வேண்டும் இசையரசே
1.
யாழினை நீயும் மீட்டுகையில்
இந்த‌ஏழையின் இதயம் துயில் கலையும்
யாழிசை கேட்டு தனை மறந்து -உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே

2.
விண்ணக சோலையின் மலரெனவே
திகழ்எண்ணில்லா தாரகை உனக்குண்டு
உன் அருள் பேரொளி நடுவினிலே -நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்

கலைமான் நீரோடையை ..




கலைமான் நீரோடையை
ஆர்வமாய் நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை
ஏங்கியே நாடி வருகின்றது



உயிருள்ள இறைவனில்
தாகம் கொண்டலைந்தது

இறைவா உன்னை என்று நான் காண்பேன்
கண்ணீரே எந்தன் உணவானது



மக்களின் கூட்டத்தோடு
விழாவில் கலந்தேனே

அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க
என் உள்ளம் பாகாய் வடிகின்றது

ஒரு நிமிடம் உன்னருகினில் இருக்க


ஒரு நிமிடம் உன்னருகினில் இருக்க
அருவாயோ என் இறைவா
அந்தச் சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் தலைவா- ஒரு நிமிடம்
1.
விழிகளை மூடி உனை நினைக்கையிலே
விந்தைகள் நிகழ்வதும் ஏன் இறைவா _ 2
மொழியினைத் தாண்டி மனம் உறவாட
மகிழ்வினில் மிதப்பதும் ஏன் இறைவா?
ஏன் இறைவா ஆ..ஆ...ஒரு நிமிடம்
2.
சோதரர் மானிடர் அழுகுரல் கேட்க
கேள்விகள் பிறப்பதும் ஏன் இறைவா_2
வேதனை கண்டும் நீர் காத்திடும் மௌனம்
விளங்கவில்லை அது ஏன் இறைவா?
ஏன் இறைவா ஆ...ஆ... ஒரு நிமிடம்
3.
அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதன் நியாயமென்ன_2
தொழுதுனை வணங்கி கவலைகள் கூற
கண்ணீர் மறைந்திடும் மாயமென்ன?
மாயமென்ன ஆ...ஆ....ஒரு நிமிடம்

இயேசுவின் திரு இருதய மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும்
விண்ணகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா
தூய ஆவியாராகிய இறைவா
என்றும் வாழும் பிதாவின் திருச்சுதனாகிய
இயேசுவின் திருஇதயமே
புனித கன்னித்தாயின் வயிற்றில் தூய ஆவியாரால் உருவான இயேசுவின் திருஇதயமே
தேவவார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திருஇதயமே
அளவற்ற மருத்துவப் பிரதாபம் நிறைந்த
இயேசுவின் திருஇதயமே
இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய
இயேசுவின் திருஇதயமே
அதிஉன்னத ஆண்டவரின் உறைவிடமான
இயேசுவின் திருஇதயமே
இறைவனின் இல்லமும் விண்ணகவாசலுமான
இயேசுவின் திருஇதயமே
அன்புத்தீ சுவாசித்து எரியும் சூளையான
இயேசுவின் திருஇதயமே
தயாளமும் சிநேகமும் நிறைந்த இயேசுவின் திருஇதயமே
சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப்பெற்ற
இயேசுவின் திருஇதயமே
எல்லா ஆராதனைப் புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய
இயேசுவின் திருஇதயமே
இதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மையஇடமுமான இயேசுவின் திருஇதயமே
ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான
இயேசுவின் திருஇதயமே
இறைத்தன்மை முழுமையாகத் தங்கிவழியும்
இயேசுவின் திருஇதயமே
உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திருஇதயமே
உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் இயேசுவின் திருஇதயமே
நித்திய சிகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திருஇதயமே
பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள
இயேசுவின் திருஇதயமே
உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவையளிக்கும் தாராளமான இயேசுவின் திருஇதயமே
வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான
இயேசுவின் திருஇதயமே
மரணம் வரையும் கீழ்ப்படிந்திருந்த இயேசுவின் திருஇதயமே
ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திருஇதயமே
ஆறுதல் அனைத்தின் ஊற்றான இயேசுவின் திருஇதயமே
எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திருஇதயமே
பாவங்களின் பலியான இயேசுவின் திருஇதயமே
உம்மிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மீட்பான இயேசுவின் திருஇதயமே
உம்மில் இறப்பவர்களின் நம்பிக்கையான
இயேசுவின் திருஇதயமே
எல்லாப் புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திருஇதயமே
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே – 3
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்களைத் தயை செய்து மீட்டருளும்
இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள இயேசுவே
எங்கள் இதயம் உமது இதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்

மன்றாடுவோமாக
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகனின் இதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி மன்னிப்பளித்தருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இயேசுவின் திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்

இயேசுவின் திருஇதயமே
எங்கள் குடும்பங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்
நன்றி கூறுகின்றோம்
எங்களை ஆசீர்வதியும்
எப்பொழுதும் இறைப்பிரசன்னத்தை உணர்ந்து வாழ வரம் தாரும்
பலவீனர்களுக்கு பலத்தையும் செல்வம் உடையவர்கள் பிறருக்கு உதவிசெய்யும் நல்ல மனத்தையும் தந்தருளும்
விதவைகளுக்கும், அநாதைபிள்ளைகளுக்கும் நாங்கள் உதவியாய் இருக்கச் செய்தருளும்
சிறையில், தனிமையில், நோயில், துன்பத்தில் இருக்கின்றவர்களை ஆசீர்வதியும்
உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும், நல்ல ஒழுக்கத்தையும், பணிவையும், அறிவையும், தந்தருளும்
மரண தருவாயில் இருக்கிறவர்களை நாள்தோறும் சந்தித்தருளும்
ஆன்மாக்களை விண்ணகத்தில் சேர்த்தருளும் எங்கள் அனைவருக்கும் அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் சாகும் தருவாயில் உதவியாகவும் இருந்தருளும் - ஆமென்