காணிக்கை பாடல் - உறவு பூக்கள் என்னில் மலர


உறவு பூக்கள் என்னில் மலர
உகந்த பலியாய் என்னையே ஏற்பாய்
இயேசுவின் பலியே என் வாழ்வின் வழியே -2
என்னையே தருவேன் காணிக்கையாக
அர்பணித்தேன் என்னை அர்பணித்தேன்
அன்பின் பலியாய் அர்ப்பணித்தேன் -2

1.
அப்பமும் இரசமும் கொண்டுவந்தேன் - இது
அன்பின் பலியென கண்டுகொண்டேன்
தந்து வாழும் தியாக பலியாய்
எந்தன் வாழ்வு உம்மில் மலர
என்னையே தருவேன் காணிக்கையாக -2
அர்பணித்தேன் என்னை அர்பணித்தேன்
அன்பின் பலியாய் அர்ப்பணித்தேன்  -2
2.
உடலும் உயிரும் உனது பரிசு - உம்
பலியில் இணைந்தால் புதிய படைப்பு -2
துயரம் துடைக்கும் தூய பணியில்
பலியின் பயனாய் என்வாழ்வு மலர
என்னயே தருவேன் காணிக்கையாக -2
அர்ப்பணித்தேன் என்னை அர்பணித்தேன்
அன்பின் பலியாய் அர்ப்பணித்தேன் -2

தூய ஆவியார் பாடல்


தூய ஆவியே துணையாய் நீர் வருவீர்
இறைவல்லமையும் இறைஞானத்தையும்
நிறைவாய் என்னில் பொழிந்தருள்வீர்
வாரும்-2 வாருமே
என்னில் நிறையாய் வாருமே

1.
பகைமையை நான் அழிக்க - நல்
அன்பை தாருமே
மன்னிப்பில் தினம் வளர - நல்
மனதை தாருமே
நீதி நேர்மை உண்மை வழியில்
நடத்திட வாருமே
வாரும்-2 வாருமே...

2.
அமைதியில் நான் வாழ - உம்
கனிகளால் நிரப்புமே
மகிழ்வுடன் பணிசெய்ய
உமதாற்றலை தாருமே
தாழும் போதும் வீழும் போதும்
தாங்கிட வாருமே-2

திருவிருந்துப் பாடல்


வா மன்னவா இதயம் எழுந்து வா...
என்னுள்ளம் மலர வா
அன்பு பாதையில் கால்கள் நடந்திட
என் வாழ்வின் தீபம் ஏற்றிட

1.
வாழ்வில் இன்னல்கள் எத்துனை வந்தாலும்
உன் அன்பு என்றும் மாறாதையா
ஒளி வெள்ளமாய் நீ உதித்தாய் -2
என் இயேசுவே நீ எழுந்து வா...

2.
சொந்தங்கள் பந்தங்கள் விலகிடும் நேரம்
உன் துணை என்றும் மாறாதயா
உன் கையில் என் பெயர்பொறித்து வைத்தாய்-2
என் தெய்வமே எழுந்து வா.....

தியானப்பாடல் - நீ என் மகனல்லவா


நீ என் மகனல்லவா
உன்னை அழைத்ததும் நானல்லவா
நீ என் மகனல்லவா
உன்னை அழைத்ததும் நானல்லவா
கலக்கம் வேண்டாம் கவலை வேண்டாம்
காலமுழுவதும் உடனிருப்பேன்
நீ என் மகனல்லவா
ஆண்டவரின் ஆவி என்மேலே
ஏனெனில் என்னை அருட்பொழிவு செய்தார்
ஆண்டவர் வாழ்க

1
அருட்மிகு பலியாய் அரவணைத்து
நலிவுற்ற நெஞ்சத்திற்கு உறுதியூட்டு
மேடு பள்ளங்களை சமன்செய்ய
ஏற்றத் தாழ்வுகளை வேரறுக்க
உன்னைத் தேர்ந்துள்ளேன்
அழிக்கவே ஆக்கவே உன்னை அனுப்புகிறேன்
ஆண்டவரின்....

2
இடிந்து கிடப்பதை சீர்படுத்த
அழிந்து போனதை உருவாக்க -2
வாழ்வை அழந்தோர் வாழ்வு பெற-2
சிறையில் வாடுவோர் விடுதலையாய்
உன்னை தேர்ந்துள்ளேன்
படைக்கவே வளர்க்கவே
உன்னை அனுப்புகிறேன்
ஆண்டவரின்.......

வருகைப்பாடல் - உமது அரசு வருக


உமது அரசு வருக
எங்கள் இதயமே மகிழ
மக்கள் வாழ்வெல்லாம் மலர
மனித மாண்பு உயர்ந்திட இறைவன்
ஆட்சி துலங்கிட
உமது அரசு வருக வருக

1
மாந்தர் தம்மை வாட்டும் வருமை
ஒழிய வேண்டுமே
மகிழ்வு தென்றல் எங்கும் என்றும் வீச வேண்டுமே
ஏற்ற தாழ்வு என்னும் நோயும்
நீங்க வேண்டுமே
ஏங்கி தேடும் ஒருமைப்பாடு
விடிய வேண்டுமே
வேதங்கள் எல்லாம் வாழ்வாக மாறிட
பேதங்கள் எல்லாம் இல்லாமல் ஓடிட
உலகமெல்லாம் ஒரே குடும்பம் ஆகிட
ஏழை வாழ்வு மலரட்டும் ஏங்கும் நெஞ்சம் மகிழட்டும்-2
இயேசுவின கனவெல்லாம் நனவாகட்டும்-2
2
கடவுள் தாமே எல்லோருக்கும் தாயும் தந்தையுமாம்
கவி உலகின் மாந்தர் எல்லாம் உடன் பிறந்தவராம்
படைப்பெல்லாம் எல்லோருக்கும் பொது உடைமைதான்
பகிர்ந்து வாழ்தல் நமது வாழ்வின் பெரும் கடமைதான்
நண்பர்களாயினும் அந்நியராயினும்
துன்பங்கள் சேரினும் இன்பங்கள் கூடினும்
அன்பில் வாழும் இறைசமூகமாகனும்
எங்கும் துன்பம் விலகட்டும்
தங்கும் இன்பம் பறவட்டும்
இயேசுவின கனவெல்லாம் நனவாகட்டும்-2