The Instability of Youth

"இனி நினைந்து இரக்கம் ஆகின்று! திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறை உறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிரக்
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை!
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ,
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெரு மூதாளரோம் ஆகிய எமக்கே?"
(தொடித்தலை விழுத்தண்டினார், புற நானூறு, 243 )

The Instability of Youth

"I muse of YOUTH! the tender sadness still
returns! In sport I moulded shapes of river sand,
plucked flowers to wreathe around the mimic forms:
in the cool tank I bathed, hand linked in hand,
with little maidens, dancing as they danced!
A band of innocents, we knew no guile.
I plunged beneath th' o'erspreading myrtle's shade,
where trees that wafted fragrance lined the shore;
then I climbed the branch that overhung the stream
while those upon the bank stood wondering;
I threw the waters round, and headlong plunged
dived deep beneath the stream, and rose,
my hands filled with the sand that lay beneath!
Such was my youth unlesson'd. 'Tis too sad!
Those days of youth, ah! whither have they fled?
I now with trembling hands, grasping my staff,
panting for breath, gasp few and feeble words.
And I am worn and OLD!"

-Thodithalai Vizhuthandinar, Purananuru - 243
(Translated by G.U.Pope)

To us all towns are one, all men our kin

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
புறநானூறு. 192 - பாடியவர்: கணியன் பூங்குன்றன்

To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill.
Man's pains and pains' relief are from within.
Death’s no new thing, nor do our blossoms thrill
When joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much-praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o’er huge boulders roaring seeks the plain
Tho’ storms with lightning’s flash from darkened skies.
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise !
We marvel not at the greatness of the great;
Still less despise we men of low estate.
~ Kaniyan Poongundran
(Translated by George Uglow Pope (1820 – 1908) popularly known as Rev. G.U. Pope)



Every town our home town 
every man, a kinsman 
Good and evil do not come from others 
Pain and relief of pain come of themselves 
Dying is nothing new 
We do not rejoice that life is sweet 
nor in anger 
call it bitter 
Our lives, however dear, 
follow their own course, 
rafts drifting 
in the rapids of a great river 
sounding and dashing over rocks 
after a down pour 
from skies slashed by lightnings - 
We know this from the vision 
of men who see, 
So, 
We are not amazed by the great 
and we do not scorn the little

_ A.K. Ramanujam

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
என் சகோதரன் என் சகோதரன்

1.
வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்ததில் இருப்பவன் சகோதரன் (2)
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன் (2)

2.
பிறகுலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிறஇனம் சேர்ந்தாலும் சகோதரன் - 2
பிறமொழி பேசினாலும் என் நண்பன்
பிறமதம் சார்ந்தாலும் சகோதரன்
காரணம் அவனும் மனிதன் - 2

3.
அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன் - 2
ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன்
ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன் - 2

மாண்புயர் இந்த அனுமானத்தை

மாண்புயர் இந்த அனுமானத்தைத்
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக

பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றி ஆர்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சமபுகழ்ச்சி
என்றுமே உண்டாகுக - ஆமென்

தேன் இனிமையிலும்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே
அதை தேடிய நாடி ஓடியே வருவேன்
திருச்சபை ஆனோரே - தேன்

காசினி தனிலே நேசமாய் தாக
கஷ்டத்தை உத்தரித்தேன்- 2
பாவ கசடத்தை அறுத்து சாபத்தை தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே - தேன்

பாவியை மீட்க தாவிய உயிரை
தாமே ஈந்தவராம் - பின்னும் - 2
நேமியாம் கருணை நிலை வரம் உண்டு
நிதம் துதி என் மனமே - தேன்

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கி விடும் - 2
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே - தேன்

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீ - 2
அன்பதாய் சேர்ந்தால் அணைத்துன்ணை காப்பார்
ஆசைக்கொள் நீ மனமே - தேன்

பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து
போற்று நாமம் - அதை - 2
பிடித்துக்கொண்டால் பேரின்ப வாழ்வை
பெறுவாய் நீ மனமே - தேன்

அன்பும் நட்பும் எங்குள்ளதோ

அன்பும் நட்பும் எங்குள்ளதோ
அங்கே இறைவன் இருக்கின்றார்

கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம்
ஒன்றாய் கூடிச் சேர்த்ததுவே
அவரில் அக்களிப்போம் யாம்
அவ‌ரில் ம‌கிழ்ச்சி கொள்வோமே
ஜீவிய‌ தேவ‌னுக்கஞ்சிடுவோம்
நேரிய‌ உள்ள‌த்துட‌னே யாம்
ஒருவ‌ரை ஒருவ‌ர் நேசிப்போம்

என‌வே ஒன்றாய் நாமெல்லாம்
வந்து கூடும் பொழுதினிலே
ம‌ன‌தில் வேற்றுமை கொள்ளாம‌ல்
விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய‌ ச‌ச்ச‌ர‌வு ஒழிந்திடுக
பிண‌க்குக‌ள் எல்லாம் போய் ஒழிக‌
ந‌ம‌து ம‌த்தியில் ந‌ம் இறைவ‌ன்
கிறிஸ்து நாத‌ர் இருந்திடுக.

முக்தி அடைந்தோர் கூட்ட‌த்தில்
நாமும் ஒன்றாய் சேர்ந்து ம‌ன‌ம்
ம‌கிழ்ந்து கிறிஸ்து இறைவா நின்
ம‌கிழை வ‌த‌ன‌ம் காண்போமே
முடிவில்லாம‌ல் என்றென்றும்
நித்ய‌ கால‌ம் அனைத்திற்கும்
அள‌வில்லாத‌ மாண்புடைய‌
பேரானந்த‌ம் இதுவேயாம்