நினைவாக செய்யுங்கள்
நினைவாக செய்யுங்கள்
நினைவாக செய்யுங்கள், நிறைவாக வாழுங்கள்
நிலையான என் அன்பிலே
உறவாக மலருங்கள் உருமாற்றம் காணுங்கள்
இறையரசின் சாட்சியாகவே
பகிர்வதே ஆனந்தம் பகிர்வதே பேரின்பம் - 2
நினைவாக செய்யுங்கள்...
I
ஐந்து அப்பம் இரண்டு மீனை அதிசயமாய் பழுகச் செய்து
பகிர்ந்து அளித்து பசித்தீர்த்தாரே
வாழ்வு தரும் உணவு என்றார் வற்றாத ஊற்று என்றார்
வான் சேர்க்கும் அப்பம் என்றாரே
ஓருடலாய் மாற திருக்கிண்ணம் நாம் பகிர்வோம்
ஓர்குலமாய் வாழ வேற்றுமைகள் களைவோம்
மனிதம் மலர அன்பில் வாழுவோம்
நினைவாக செய்யுங்கள் ...
II
சமபந்தி விருந்துக்கென எளியோரை வரவழைத்து
சமத்துவத்தை வாழச் செய்தாரே
நீதியின் பால் பசித்தாகம் கொண்டவர்கள் நிறைவடைவார்
நீதி நெறியில் நிலைத்திருப்போமே
தன்னுயிரை தந்து நாம் வாழ்ந்திட செய்தார்
தன்னுடலை ஈந்து நாம் வளர்ந்திட வைத்தார்
தியாக வாழ்வில் நாமும் வளரவே - 2
நினைவாக செய்யுங்கள் ...
வை தேடி / மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக / ஒருபோதும் உலகில் சொல்லக் கேட்டதில்லை / என்பதை நினைத்தருளும். / கன்னியர்களுக்கு அரசியான கன்னியே / நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை / என்னைத்