அமைதி தேடி அலையும் நெஞ்ச‌மே

அமைதி தேடி அலையும் நெஞ்ச‌மே
அனைத்தும் இங்கு அவ‌ரில் த‌ஞ்ச‌மே
நிலையான‌ சொந்த‌ம் நீங்காத‌ ப‌ந்த‌ம்
அவ‌ரின்றி வேறில்லையே 2

1.
போற்றுவேன் என் தேவ‌னே ப‌றை சாற்றுவேன் என் நாத‌னே
என் நாளுமே என் வாழ்விலே காடு மேடு ப‌ள்ள‌மென்று
கால்க‌ள் சோர்ந்து அலைந்த‌ ஆடு
நாடுதே அது தேடுதே

2.
இறைவ‌னே! என் இத‌ய‌மே! இந்த‌
இய‌ற்கையின் ந‌ல் இய‌க்க‌மே
என் தேவ‌னே என் த‌லைவ‌னே
ப‌ர‌ந்து விரிந்த‌ உல‌க‌ம் ப‌டைத்து
சிற‌ந்த‌ ப‌டைப்பாய் என்னைப்
ப‌டைத்த‌ தேவ‌னே என் ஜீவ‌னே

சிகரம் நீ!

இளைஞனே வெளியே வா
தரையில் கிடக்கும் தகரம் அல்ல
சிரம் நிமிர்ந்த சிகரம் நீ
உன் வருங்காலம் வெறும் காலம் அல்ல
முயன்றால் உன் பிற்காலம்
பொற்காலமாகும்
- சகோதரர் A. வில்லியம்
இறையியல் இரண்டாம் ஆண்டு 2005

புனிதர்களின் பிராத்தனை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்

புனித மரியாயே, இறைவனின் தாயே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேலே,
இறைவனின் புனித தூதர்களே,
புனித சூசையப்பரே,
புனித ஸ்நானக அருளப்பரே,
புனித இராயப்பரே, சின்னப்பரே,
புனித பெலவேந்திரரே,
புனித அருளப்பரே,
புனித மரிய மதலேனம்மாளே,
புனித முடியப்பரே,
புனித லவுரேஞ்சியாரே,
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே,
புனித அஞ்ஞேசம்மாளே,
புனித பெர்பேத்துவா, பெலிசித்தம்மாளே,
புனித கிரகோரியாரே,
புனித அகுஸ்தீனாரே,
புனித அத்தனாசியாரே,
புனித பசிலியாரே,
புனித மார்த்தீனாரே,
புனித ஆசீர்வாதப்பரே,
புனித பிராஞ்சீஸ்குவே, சாமிநாதரே,
புனித பிராஞ்சீஸ்கு சவேரியாரே,
புனித வியான்னி மரிய அருளப்பரே,
புனித தெரேசம்மாளே,
புனித சீயன்னா கத்தரீனம்மாளே,
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே,

கருணைகூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
தீமை அனைத்திலுமிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
பாவம் அனைத்திலுமிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
நித்திய மரணத்திலிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது மனிதவதாரத்தினாலே, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது மரணத்தினாலும் உயிர்ப்பினாலும், எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
பரிசுத்த ஆவியின் வருகையினாலே, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது பரிசுத்த திருச்சபையை, ஆண்டு காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். . . எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருச்சபைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும்,
திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்யவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
அனைத்துலக மக்களுக்கும், சமாதானமும் மெய்யான ஒற்றுமையும்
தந்தருளவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
உமது புனித ஊழியத்தில், எங்களை உறுதிபடுத்திக் காத்தருள வேண்டுமென்று,
உம்மை மன்றாடுகிறோம்… .
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவர்களை, ஆசீர்வதிக்க வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம்…
தேர்ந்துகொள்ளப் பெற்ற இவர்களை ஆசீர்வதித்து, புனிதப்படுத்த வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம்…
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவர்களை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி,
அர்ச்சிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்…
உயிர் வாழும் கடவுளின் திருமகனாகிய யேசுவே, உம்மை மன்றாடுகிறோம்...

கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும்

கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும்
கிறிஸ்துவே, தயவாய் செவி சாய்த்தருளும்
கிறிஸ்துவே, தயவாய் செவி சாய்த்தருளும்.

உன் கையில் என் பெயரெழுதி


உன் கையில் என் பெயரெழுதி இறைவா
உன் நெஞ்சில் என் நினைவெழுதி-2
என்றென்றும் என்னை
நிலைக்க செய்தாய்-2
உன் நெஞ்சில் என் நினைவெழுதி இறைவா
என்னை நீ நிலைக்க செய்தாய்

1
என் கண்ணில் உந்தன் வடிவெழுதி
இம் மண்ணில் உந்தன் அடிதொழுது-
பித்தனாய் என்னை அலையவிட்டாய்
உன் பக்தனாய்
என்றும் தொடரவிட்டாய்

2
என் கண்ணீரில் உந்தன் பாதம்
கழுவி உம் மலர் பதத்தில்
என் இதழ் பதித்து-2
உள்ளத்தை உடைத்துவிட்டேன்
உன் உள்ளத்தை அடைந்து
உயர்ந்துவிட்டேன் -2

தூய ஆவியே

தூய ஆவியே
துணையாய் நீர் வருவீர்
இறை வல்லமையும்
இறை ஞானத்தையும்
நிறைவாய் என்னில்
பொழிந்தருள்வீர் -2
வாரும் வாருமே என்னில்
நிறைவாய் வாருமே -2

1
பகைமையை நான் அழிக்க
நல் அன்பை தாருமே
மன்னிப்பில் தினம் வளர
நல்ல மனதினை தாருமே
நீதி நேர்மை உண்மை வழியில்
நடந்திட வாருமே -2
வாரும் வாருமே என்னில்
நிறைவாய் வாருமே-2

2
அமைதியில் நான் வாழ
உம் கனிகளால் நிரப்புமே
மகிழ்வுடன் பணிசெய்ய
உமதாற்றலை தாருமே
தாழும் போதும் வீழும் போதும்
தாங்கிட வாருமே -2
வாரும் வாருமே என்னில்
நிறைவாய் வாருமே

தூய ஆவியே உந்தன்

தூய ஆவியே உந்தன்
அருளை பொழிவாயே - 2
1
அன்பின் சாட்சியாய்
அமைதியின் தூதனாய் -2
வாழ்ந்திட பணிபுரிந்திட உம்
கனிகளால் என்னை நிரப்பும்மையா
உம் கனிகளால் என்னை
நிரப்பும்மையா
உந்தன் வல்லமையால்
என்னை நிரப்பும் -2
இறங்கி வாரும் -4

2
ஞானத்தில் வளரவும்
துணிவில் நிலைக்கவும் -2
ஆற்றலே தூய ஆவியே
உம் வரங்களால்
என்னை நிரப்பும்மையா
உம் வரங்களால்
என்னை நிரப்பும்மையா
உம் வல்லமையால்
என்னை நிரப்பும்மையா

நானே உன் கடவுள்

1
நானே உன் கடவுள்
முதலும் முடிவுமாய் நானே இருக்கிறேன்
என் மக்களின் துன்பங்கள் கண்டேன்
அவர் மனம்படும் வேதனை உணர்ந்தேன்
அவர் அழுகுரல் நான் கேட்டேன்
நாடும் நலமும் வாழ்வும் வளமும்
வழங்கிட மனமுவந்தேன்
யாரை நான் அனுப்புவேன் - 2

Chorus
எனை அனுப்பும்
எனை அனுப்பும் -2
இதோ நான் இருக்கிறேன்
உலகம் அறியா எளியவன்
வாழ்மொழி பேசா சிறியவன்
உன் துணை இருந்தால்
என்னுடன் நடந்தால்
துணிவுடன் நான் செல்வேன்
எனை அனுப்பும்
எனை அனுப்பும்
இதோ நான் இருக்கிறேன்

2
நானே உன் கடவுள்
வான் படைகளின் இறைவனாய்
நானே இருக்கிறேன்
என் பெயரால் செல்பவர் யாரோ
என் செய்தியை சொல்பவர் எவரோ
என் பணியினை செய்வாரே
அன்பும் அறமும் நீதியும் நேர்மையும்
நிலை நிறுத்திடுவாரோ
யாரை நான் அனுப்புவேன்