வழிகாட்டும் என் தெய்வமே
வழிகாட்டும் என் தெய்வமே
துணையாக எனில் வாருமே (2)
நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியேதும் தெரியாமலே
நான் தடுமாறும் நிலை பாருமே
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி
எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே
1. எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்
உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே - எந்நாளும் ...
எனைக்காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே
நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது
துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது
பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா
2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
உன் பார்வைகள் என் வழியாகுமோ - என் பாதை...
இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா
ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே
விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காண வா