நீ ஒளியாகும்


நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே
இறைவனும் நீயே


1.
நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம்விலகும் - உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையாய் சாய்வதில்லை
என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் - 2
2.
விடியலைத் தேடிடும் விழிகளிலே புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால்நினைந்தூட்டும் தாயும் என்
பால்வழி பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ
என் மீட்பரும் நேசரும் நீயாகும் -2

பொன்மாலை நேரம்

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவ ராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்ப மேகம் கரைந்தோடுதே
உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்.

1.
நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான்
காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே
என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே
ஆ..ஆ..ம்..ம்..

2.
ஒருகணம் என் அருகினில் அமரும்போது ஒருயுகம்
உனைதினம் நான் புகழ்கையில் எனக்குள்
தோன்றும் புது யுகம்
முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப்பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னை சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு வானம் எல்லை
அன்பின் நிழலில் நின்ற இதயம் உன் அன்பை பாடுதே
ஆ..ஆ..ம்..ம்..

அஞ்சலி


என் தெய்வமே உனக்காகும் அஞ்சலி – 2
தீபாஞ்சலி, மலரஞ்சலி தூபாஞ்சலி


தீமையினை எரிக்கின்ற நெருப்பே
இருளினை அழிக்கின்ற விளக்கே
பொய்மையை ஒழிக்கின்ற வாய்மையே
மெய்மையில் நடத்துவாய் தீபாஞ்சலி

நிதம் காலை மலர்கின்ற மலரே
நுகர்வோரை மகிழ்விக்கும் மணமே
நிலையற்ற வாழ்வுக்கு சாட்சியே
நிறைவினை அருள்வாயே மலரஞ்சலி

நறுமணம் தருகின்ற தூபமே
நாதனின் பூஜைக்கு உதவும்
நலம் பல வழங்கும் நல்தேவன்
பணிக்காக வருகின்றோம் தூபாஞ்சலி

ஒளியானவா உயிரானவா


ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒன்றானவா உருவானவா நின் மலர் பாதத்திலே
எனைமறந்து உனையடைந்து எழிலடைந்திட பாடுகின்றேன்


1.
உனக்காக என் ஜீவன் உயிர்வாழுது
உலகில் நான் உனைக்காண துடிக்கின்றது.
உன்பார்வை நிதம் காண மனம் ஏங்குது – 2
நாளும் பொழும் நீ எனில் வளர
நானிலமெங்கும் நின் மனம் கமழ
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனைமறந்து பாடுகின்றேன்

2.
உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது
உறவில் உன் உறவே சுகமானது
உன்நெஞ்சம் எனக்கென்றும் மடியானது - 2
நீயேதானே நினைவினில் மலர
நின் உயிர்தானே எனில் என்றும் வளர

உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனைமறந்து பாடுகின்றேன்

நன்றியால் துதி பாடு


நன்றியால் துதி பாடு - நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு


வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தயில் உண்மை உள்ளவர்

எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்துவிழும்

செங்கடல் நம்மை எதிர்த்து வந்தாலும்
சிலுவையின் நிழல் உண்டு
பாடிடுவோம் துதித்துடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்

என் சுவாசக்காற்றே


என் சுவாசக்காற்றே என்வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என் உயிரியின் உணவே
என்வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய்
என்வாழ்வும் என்வளமும் எல்லாமும் நீதானே
நிறைவாய் தலைவாய் அன்பினை பொழிவாய்


1.
என்சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2.
எழில்வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப்போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் துணைவேண்டுமே - 2
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்.

அர்ப்பண மலராய்


அர்ப்பண மலராய் வந்தேன் அர்ச்சனையாக்கினேன் என்னை -21
மனமில்லாத மலர் ஆனாலும் இதழ்வாடியே போனாலும் - 2
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் அந்த ஜோதியில் நிறைவு கொள்வேன் - 2
ஆ…ஆ…ஆ…ஆ…


1.
கோதுமை மணியாய் மடிந்து – எனை
வெண்ணிற அப்பமாய் தந்தேன் - 2
என்னுடல் உன்னுடல் ஆகிடவே
உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே – எனை
கனிவுடன் ஏற்பாயே ஆ..ஆ..ஆ..

2.
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன்
புவி அதிபதி உன் திட்டம் மறந்தேன்
மதியில்லாதவன் ஆனாலும் விழி
இழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய்
நான் கவியுடன் பாட்டிசைப்பேன். ஆ..ஆ..ஆ..