என் சுவாசக்காற்றே


என் சுவாசக்காற்றே என்வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என் உயிரியின் உணவே
என்வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய்
என்வாழ்வும் என்வளமும் எல்லாமும் நீதானே
நிறைவாய் தலைவாய் அன்பினை பொழிவாய்


1.
என்சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2.
எழில்வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப்போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் துணைவேண்டுமே - 2
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்.

அர்ப்பண மலராய்


அர்ப்பண மலராய் வந்தேன் அர்ச்சனையாக்கினேன் என்னை -21
மனமில்லாத மலர் ஆனாலும் இதழ்வாடியே போனாலும் - 2
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் அந்த ஜோதியில் நிறைவு கொள்வேன் - 2
ஆ…ஆ…ஆ…ஆ…


1.
கோதுமை மணியாய் மடிந்து – எனை
வெண்ணிற அப்பமாய் தந்தேன் - 2
என்னுடல் உன்னுடல் ஆகிடவே
உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே – எனை
கனிவுடன் ஏற்பாயே ஆ..ஆ..ஆ..

2.
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன்
புவி அதிபதி உன் திட்டம் மறந்தேன்
மதியில்லாதவன் ஆனாலும் விழி
இழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய்
நான் கவியுடன் பாட்டிசைப்பேன். ஆ..ஆ..ஆ..

ஒரு வரம் நான் கேட்கிறேன்

ஒரு வரம் நான் கேட்கிறேன்
திருபதம் நான் பணிகின்றேன்
மனிதனாக முழு மனிதனாக
வாழும் வரம் நான் கேட்கிறேன்


(1)
நிறைவுண்டு என்னில் குறையுண்டு
நிலவின் ஒளியிலும் இருளுண்டு
புகழுண்டு என்றும் இகழ்வுண்டு
இமய உயர்விலும் தாழ்வுண்டு
மாற்ற இயல்வதை மாற்றவும்
அதற்குமேல் அதை ஏற்கவும்
உனது அருள் தந்து மனித நிலை நின்று
வாழ வரம் தருவாய்
(2)
உறவுண்டு அதில் உயர்வுண்டு
இணைந்த தோள்களில் உரமுண்டு
இல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டு
இணைந்த தோள்களில் உறமுண்டு
மகிழ்வாரோடு நான் மகிழ்வும்
வருந்துவோருடன் வருந்தவும்
உனது அருள் தந்து மனித நிலை நின்று
வாழ வரம் தருவாய்

வலைவாசல்:ஊடகப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 22-01-2012


முன்னுரை:  எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவே என் ஆண்டவர் என்று அறிக்கையிட்டு அவரை வழிபட இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம். இயேசு அழைத்தபோது படகையும், வலைகளையும் விட்டுவிட்டு அவரை பின்தொடர்ந்தனர் சீடர்கள். இனி அவர்களின் நிறைவு கடல் அல்ல கடவுளே. இன்றைய திருவழிபாட்டின் வழியாக இயேசு நம்மையும் அழைக்கின்றார். பணம், பட்டம், பதவி, பேர், புகழ் இவைகளை விட்டுவிட்டு அவரை பின்தொடர விரும்புகின்றோமா? நாம் எதில் நிறைவு காண்கின்றோம்? உலகச் செல்வத்திலா? இயேசுவிலா? உலகச் செல்வத்தில் கவனம் செலுத்திய நேரங்களுக்காக மனம் வருந்துவோம். இயேசுவில் நிறைவுக்கான வரம்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:  நினிவே நகரத்து மக்கள் யோனாவின் வழியாக இறைவன் கூறிய வார்த்தைகளை கேட்டு உடனே மனம் வருந்தினார்கள், மனமாற்றம் அடைந்தார்கள். இறைவனும் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு அவர்களை மன்னித்து அன்பு செய்தார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. ஓவ்வொரு நாளும் இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்முடன் பேசுகின்றார். அவரின் குரலுக்கு நம்முடைய பதில் என்ன என்பதை சிந்தித்தவர்களாக இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

யோனா நூலிலிருந்து வாசகம் (யோனா 3:1-5,10)

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி ' என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உலத்த குரலில், ' இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் ' என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  கொரிந்து நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை மறந்துவிட்டு உலகச் செல்வங்களில் அதிகம் பற்று உடையவர்களாகவும்,  அவற்றில் கவனம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள். இதைக் கண்ட பவுலடியார் உலகச் செல்வங்களில் உங்கள் கவனத்தை செலுத்தாதீர்கள் ஏனெனில் அவை நிலையானது அல்ல மாறாக அழிந்துபோககூடியவை என்று கூறுகிறார். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கவனம் எதன் பக்கம் இருக்கின்றது என்ற சிந்தனையுடன் இப்போது வாசிக்கப்படும் வாசகத்தை கேட்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1 கொரி 7:29-31)

அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:14-20)

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
    1. ‘நல்ல ஆயன் நானே’ என்று சொன்ன இறைவா உமது அன்பு பிள்ளைகளை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும் நலமுடன் வாழவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை உம்மிடம் அழைத்து வரவும் தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    2. ‘பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே வந்தேன’ என்று திருவாய் மலர்ந்த இறைவா, எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் பணிவிடை பெறுவதை விட்டுவிட்டு பணிவிடை புரியவே தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை உணர்ந்து செயல்பட தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    3. ‘உமது நம்பிக்கை உன்னை குணமாக்கியது’ என்று கூறிய இறைவா, என் பங்கில் உள்ள நோயாளிகள் அனைவரும் உம்மையே நம்பியுள்ளனர். அவர்களை குணப்படுத்தும். அவர்கள் குணமடைந்து மீண்டும் தங்கள் பணிகளை தொடர தேவையான சக்திகளை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    4. ‘விண்ணரசு சிறுபிள்ளைகளுக்கே உரியது’ என்று உரைத்த இறைவா, சிறுவர் சிறுமிகளை உமது கரத்தில் ஒப்படைக்கின்றோம். அவர்கள் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வாழவும் ஞானத்திலும், பக்தியிலும் வளரவும் உமக்கு உகந்த பிள்ளைகளாக வாழவும் தேவையான வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    நீயே என் கோயில்

    நீயே என் கோயில் ஆண்டவனே
    உன்னில் நிலையாக வாழ்வேன் ஆசையிலே
    நீயே என் கோயில் நானோ உன் சாயல்
    உனைப்போல வாழ்வேன் ஆசையிலே
          நீயே என் கோயில் நீயே என் தெய்வம்
          நீயே என் கோயில் ஆண்டவனே-2
                    1
    வார்த்தையின் வடிவினில் உனைப்பார்க்கிறேன்
    வாழ்க்கையின் வழியெங்கும் உனைப்பார்க்கிறேன்
    செயல் உள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்
    வாழ்க்கையே வழிபாடாய் உனைப் பார்க்கின்றேன்
    புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன்
    உருவ அருவங்களில் உனைப்பார்கிறேன்
         நீயே என் கோயில் நீயே என் தெய்வம் 
         நீயே என் கோயில் ஆண்டவனே-நீயே
                   2
    பேழையின் பிரசன்னத்தில் உனைப்பார்கின்றேன்
    உயிருள்ள வசனத்தில் உனைப்பார்கிறேன்
    மண்ணில் மனிதரில் உனைப்பார்க்கிறேன்
    தாய்மையின் நேசத்திலே உனைப்பார்க்கிறேன்
    நண்பரின் தியாகத்திலே உனைப்பார்கிறேன்
    இயற்கையின் இயல்பினிலே உனைபார்க்கிறேன்
         நீயே என் கோயில் நீயே என் தெய்வம்
         நீயே என் கோயில் ஆண்டவனே – நீயே

    திருப்பலிப் பாடல்கள்

    வருகையில் 

    இறைகுலமே இறைவனிலே
    இணைந்திடும் நேரமிது
    இறையருளே இதயத்திலே
    எழுந்திடும் வேளையிது - 2
    அகமகிழ்வுடன் வருவோம் அவர் இல்லம்
    மீட்பளிக்கும் ஊற்றில் பருகிடுவோம்
    கல்வாரி பலியிது கருணையின் வழியிது
    தேவனின் பேரன்பே - நம் -2


    1.
    கருணை மழையென இதயம் இறங்கி
    காக்கும் தேவன் இங்கே
    பேரன்பிலே அன்பின் வழியில்தான்
    அன்பாய் பிறந்தோம் அன்பாய் வளர்ந்தோம்
    அவர் அன்பின் வழியில் அன்பின் ஒளியிலே
    அன்பை கொண்டாடுவோம்
    இருகரம் நீட்டி இறைவன் அழைக்கின்றார் - 2
    அவர் திமுக தரிசனம் பிறந்திடும் இதயம்
    திருப்பலியில் இணைவோம் - 2
    2.
    பாலை நிலத்திலே மன்னா பொழிந்து பாதுகாத்த
    தேவன் இந்த பாவ நிலத்திலே பாதை வகுத்திட
    பலியும் உணவும் ஆனார்
    தேவனின் அன்பு தேடும் அன்பு மீட்கும் பேரன்பு
    நம்மை தாங்கிடும் அன்பு
    தேவனிலே உறவாடும் தாயன்பு
    விண்ணகம் தேடும் தந்தையின் மந்தைகளே- 2
    விடுதலை அடைந்திட விடியலில் நடந்திட
    விரைவோம் மானிடரே - 2

    தியானிக்கையில்

    அருமை அருமை வான் படைகளின் இறைவன்
    வாழும் இல்லம் அருமை


    1.
    அழகு முற்றங்கள் அங்கு ஆயிரம் உண்டு
    அத்தனையும் காண அருமை
    தங்குது அங்கே சின்ன சின்ன குருவிகள்
    ஏங்குது மனமே அதைக் கண்டு
    எந்த நேரமும் அந்த குருவிபோல்
    உன் சன்னிதி வாழும் அருள் நிலையே வேண்டும்
    எனது ஆன்மா கொண்ட தாகம் - 2 இது
    2.
    ஆவல் கொள்கிறேன் உன் அழுகு வாயியிலில்
    காவல் காக்கவே தினமும்
    அரண்மனை வாழ்க்கை ஆயிரம் நாளானாலும்
    ஆலயத்தின் ஒரு நாள்போல் இல்லை

    எந்த நேரமும் அந்த குருவிபோல்
    உன் சன்னிதிவாழும் அருள் நிலையே வேண்டும்
    எனது ஆன்மா கொண்ட தாகம் - 2 இது

    தருகையில்

    என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்
    என்னை உனக்கு கொடுப்பதில் தானே ஆனந்தம் உன்னில் உனக்காய்
    வாழ்வது எந்தன் ஆனந்தம் - 2


    1.
    கனிகளை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
    கனிவாய் உள்ளம் வேண்டும் என்று நீர் கேட்டீர்
    மலர்களை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
    எனக்காய் மலர வேண்டும் என்று நீர் கேட்டீர்
    உன்னில் என்னை தந்து விட்டேன்
    உம் பணி செய்ய துணிந்து விட்டேன் - 2
    என்னை ஏற்று மகிழ்வாயா
    என்றும் உன்னில் வாழ்ந்திடுவேன் - 2
    2.
    கோதுமை மணிகள் கையில் ஏந்தி நான் வந்தேன்
    எனக்காய் வாழ வேண்டும் என்று நீர் கேட்டீர்
    தீபம் ஏந்தி உம் பீடம் நான் வந்தேன்
    எனக்காய் ஒளிர வேண்டும் என்று நீர் கேட்டீர்
    உன்னில் வாழ முடிவெடுத்தேன்
    உம் பணி செய்ய துணிந்து விடேன் - 2
    என்னை ஏற்று மகிழ்வாயா - 2
    என்றும் உன்னில் வாழ்ந்திடுவேன் -2

    பெறுகையில்

    நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
    கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே - 2
    தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
    பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2


    1.
    தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3
    வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3
    இமைகளில் இருந்து நீ சுமைகள்
    தாங்கும் சொந்தமாகினாய்
    அகத்தினில் அமைதிiயை தந்திடும்
    எந்தன் தந்தையாகினாய்

    உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
    உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2
    2.
    வானத்தின் மழைத்துளி மண்ணைத் தேடுதே - 3
    ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3
    மேகமாய் திரண்டு நீ
    அருளைப் பொழியும் அன்னலாகினாய்
    தேகமாய் வந்து நீ தெவிட்டா
    உணவின் சுவையாகினாய்

    உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
    உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2

    பெறுகையில் 

    வாழ்வு தரும் ஒளியும் நீயே - இயேசுவே
    வாழ்வு தரும் வழியும் நீயே - 2
    உம்மிடம் வருபவர்கள் பசியடையார்
    நம்பிக்கை வைப்பவர்கள் தாகமடையார்


    1.
    உம் வார்த்தை கேட்போரெல்லாம்
    எந்நாளும் நிலைத்திருப்பர்
    எப்பொழுதும் கனி தருவர்
    உம் நாமம் புகழ்ந்திடுவர்
    உம் அன்பில் நிலைப்போரெல்லாம்
    உம் நினைவாய் வாழ்ந்திடுவர்
    உம் விழியில் நடந்திடுவர்
    உம் பணியை தொடர்ந்திடுவர்
    வார்த்தையான இயேசுவே ஆசீர்தாருமே - 2
    உம் படைப்பாய் வாழவே எம்மைமாற்றுமே - 2
    2.
    உம்மை நம்பி வருவோரெல்லாம்
    வெருமையாய் சென்றதில்லை
    வழிதவறி நடந்ததில்லை
    வான்வெளியை கண்டிடுவர்
    உம் விருப்பம் செய்வோரெல்லாம்
    உமக்காக வாழ்ந்திடுவர்
    உம்மருளை தந்திடுவர்
    நிறைவாழ்வை பெற்றிடுவர் வார்த்தையான …..