கிறிஸ்துமஸ் பாடல் - பூத்தது பார் புதுப்பொழுது

பூத்தது பார் புதுப்பொழுது பூமகன் வரவினிலே- இதை
பூமி எங்கும் முழங்கிடவே புறப்படு இறைகுலமே- நம்
இயேசுவின் பிறப்பினிலே புது வாழ்வும் மலர்ந்திடுமே
இனிஎல்லான் நலம்தானே பல வளங்களும் பெருகிடுமே
லல்லல்லா........
1
இறைமகன் யேசு பிறந்தார்- ஏழை
எளியவர் மகிழ்வு கண்டார்
மாபரன் இன்று பிறந்தார்- நம்
பாவங்கள் போக்க வந்தார்
இருளை நீக்க வந்தார்- அருள்
ஒளியை ஏற்ற விளைந்தார்
விண்ணும் மண்ணும் இணைய- அதில்
இறைவன் புனிதம் கமழ
‌பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

2
அன்புருவானவர் வந்தார்- மண்ணில்
மனிதனாகப் பிறந்தார்
அமைதியின் தூதன் பிறந்தார்- நம்
அகமதில் நிறைவு தந்தார்
பாசம் பரிவு கொண்டார்- நம்
பாவம் யாவும் சுமந்தார்
நம்மில் ஒருவரானார்- நம்
இன்பம் துன்பம் பகிர்ந்தார்
பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

No comments:

Post a Comment